9 August 2015

சொல்லி(ல்) தெரியுமோ மன்மதக் கலை :)

   

கும்கி யானையின் கேள்வி !

ஏ மானிடனே ...
வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்பதை
உன்னுடனே வைத்துக் கொள்ளக் கூடாதா ?
வெந்ததை உண்டக்  கட்டியாய்  உண்ணக் கொடுத்து ..என்னையும் 

எம்மினத்தை துரத்தும் இனத்துரோகியாக்குவது நியாயமா ? 
    
 சொல்லி(ல்) தெரியுமோ மன்மதக் கலை :)    

 

             ''அந்த மந்திரவாதி பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்தினது  ,எப்படி ?''

               ''தலையணை மந்திரம் இலவசமாகத் கற்றுத் தரப்படும்னு  சொல்லித்தான் !'' 

பார்க்கவும் ,கேட்கவும் அழகா எல்லோருக்கும் அமையுமா ?

                   ''என்னங்க ,புளியந்தோப்பில்  நடந்து வரும் போது,பயம்மா இருந்தா 

ஏதாவது ஒரு பாட்டைப் பாடிக்கிட்டே வர வேண்டியதுதானே ,என்னை ஏன் பாடச் சொல்றீங்க ?''
                     
            ''காத்து கருப்பு எதுவும் இருந்தா பயந்து ஓடட்டும்னுதான் !''


உப்பு  போடத் துப்பில்லே,ஆனா வாய் ?

           " சாப்பிட்டவங்க 'உப்பில்லை ,நமக் நஹி ,நோ சால்ட்,உப்பு லேதுன்னு சொல்றாங்க,சமையலிலே கவனம் வேணாமா,மாஸ்டர் ? " 
            "நாலு பேர் நாலு விதமா சொல்லுவாங்க அதையெல்லாம் கண்டுக்காதீங்க முதலாளி ! "





  1. KILLERGEE DevakottaiSat Aug 09, 12:29:00 a.m.
    பொண்டாட்டி குரல் அவ்வளவு இனிமையாக இருக்கும் போலயே.....
    மாஸ்டருக்கு எல்லா மொழியும் தெரியணும் போலயே....
    கும்கியானை கேள்வி கும்முனுதான் இருக்கு.




    1. Bagawanjee KASat Aug 09, 08:27:00 a.m.
      பொண்ணு பார்க்கும் போதே பாடச் சொல்லி கேட்டு இருந்தால் இந்த கருப்பும் தப்பித்து இருக்கலாமே ?
      உப்பு சரியாய் போடத் தெரிந்தாலே போதுமே !
      ஒரு யானைக் கேட்கும் நிலையிலா மனித இனம் இருப்பது ?

29 comments:

  1. உங்கள் பாட்டும் நல்லா இருக்கு ஜி... ஹா... ஹா...

    ReplyDelete
  2. கும்கியின் கேள்வி நியாயமானது....

    த.ம + 1

    ReplyDelete
  3. பதிவும் மறுமொழியும் நகைதான்.

    தொடர்கிறேன் பகவானே!

    ReplyDelete
  4. //"பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்தினது எப்படி?''//
    - வக்கிரம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்குது டோலரே...!!

    ReplyDelete
  5. திண்டுக்கல் தனபாலன்Sun Aug 09, 07:48:00 a.m.
    உங்கள் பாட்டும் நல்லா இருக்கு ஜி... ஹா... ஹா...
    Reply>>>
    அள்ளிப் பார்க்க வேண்டும் என்று கவிஞர் சும்மாவா சொன்னார் :)

    ReplyDelete
  6. கரந்தை ஜெயக்குமார்Sun Aug 09, 08:09:00 a.m.
    அருமை
    தம +1
    Reply>>>
    அருமை ,மன்மதக் கலைதானே :)

    ReplyDelete
  7. இப்பத்தானே தெரியுது....இதுக்குத்தான் எம்மினத்தைத் துரத்து துரத்துன்னு துரத்துறியா...!


    பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்திறாங்கன்னு உண்மையச் சொன்னீங்க....! அந்த மந்திரவாதி நல்ல தந்திரவாதி...! ஆமா... தலையணையேதும் ஒண்ணு கிடைக்குமா...?


    “ஏங்க... நானே கருப்புதானே...நீங்களே பயந்து ஓடல...நீங்கதானே காத்து இருக்கீங்க...”
    “இப்பத்தானே பாடப் போறாய்...?!”


    “உப்பே இல்லீங்களா... மொதலாளி கல்லு உப்ப போடச்சொன்னாரு.... மொதல்ல கல்லப் போட்டேன்...உப்ப இனிதான் போடனும்“
    “உப்பிட்டவரை நா உள்ள அளவும் மறக்கமாட்டேன்”

    நன்றி.

    த.ம.6.



    ReplyDelete
  8. தங்களின் நகைச்சுவைகளுடன் இன்று ஆழப்பதிந்தது யானையின் மன வேதனை.

    ReplyDelete
  9. யானை தன் பலம் அறியாமல் மனிதனுக்குக் கட்டுப்படுகிறது. உருண்ட கவளத்துக்கு தன் இனைத்தையே கட்டுப்படுத்துகிறது/ தலையணை மந்திரம் என்பது படுக்கும்போது ஓதுவதல்லவா.?பேயையும் மனைவியையும் அறிந்த கணவன்..? உப்பிட்டால் உள்ளவரை நினைக்க வைக்குமே.

    ReplyDelete
  10. வணக்கம் ஜீ,
    காலம் கடந்து பாட சொல்லி கேட்க மறந்த ஞானம் ம்ம்ம்,,,
    அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நாலு பேர் நாலு விதமா சொல்லுவாங்க! // சிரிச்சி சிரிச்சி புண்ணாப் போச்சி! அருமை!

    ReplyDelete
  12. 01. இனி யானைகள் மட்டுமல்ல பூனைகள்கூட மனிதனை கேள்வி கேட்கும்.
    02. இலவசத்துக்குத்தான் பலன் அடைஞ்சிட்டானே....
    03. இவளோட வாழ்ந்தவனுக்கு பேய்ப் பயம் எதற்க்கு ?
    04. நல்லவேளை உங்க சோப்புல உப்பு இருக்கானு கேட்காமல் போனாங்கே....

    ReplyDelete
  13. மந்திரம் இலவசம் ஹிஹிஹி

    ReplyDelete
  14. வெங்கட் நாகராஜ்Sun Aug 09, 08:32:00 a.m.
    கும்கியின் கேள்வி நியாயமானது....
    Reply>>>
    மனசாட்சி கேட்டா அதில் நியாயம் இருக்கத்தானே செய்யும் :)

    ReplyDelete
  15. ஊமைக்கனவுகள்.Sun Aug 09, 09:19:00 a.m.
    பதிவும் மறுமொழியும் நகைதான்.

    தொடர்கிறேன் பகவானே!
    Reply>>>
    பதிவின் ருசி என்னாலும் ,மறுமொழியின் ருசி உங்களாலும் வந்தது :)

    ReplyDelete
  16. மலரின் நினைவுகள்Sun Aug 09, 09:23:00 a.m.
    //"பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்தினது எப்படி?''//
    - வக்கிரம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்குது டோலரே...!!
    Reply>>>
    நீங்க அந்த சாமியாரின் வக்கிரத்தைதானே சொல்றீங்க :)

    ReplyDelete
  17. manavai jamesSun Aug 09, 10:45:00 a.m.
    இப்பத்தானே தெரியுது....இதுக்குத்தான் எம்மினத்தைத் துரத்து துரத்துன்னு துரத்துறியா...!


    பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்திறாங்கன்னு உண்மையச் சொன்னீங்க....! அந்த மந்திரவாதி நல்ல தந்திரவாதி...! ஆமா... தலையணையேதும் ஒண்ணு கிடைக்குமா...?


    “ஏங்க... நானே கருப்புதானே...நீங்களே பயந்து ஓடல...நீங்கதானே காத்து இருக்கீங்க...”
    “இப்பத்தானே பாடப் போறாய்...?!”


    “உப்பே இல்லீங்களா... மொதலாளி கல்லு உப்ப போடச்சொன்னாரு.... மொதல்ல கல்லப் போட்டேன்...உப்ப இனிதான் போடனும்“
    “உப்பிட்டவரை நா உள்ள அளவும் மறக்கமாட்டேன்”

    நன்றி.

    த.ம.6.



    Reply>>
    யானைக்கு ஞாபக சக்தி அதிகம் என்பார்கள் :)
    தலையணை ஏதும் இல்லாமலே அவர் ஏமாற்றி விட்டாரே :)
    கருப்புதான் எனக்கு பிடிச்ச கலருன்னு பாடியிருப்பாங்களோ :)
    நல்ல வேளை,முதலாளி தலையிலே கல்லைப் போடாமல் போனானே :)

    ReplyDelete
  18. Dr B JambulingamSun Aug 09, 11:12:00 a.m.
    தங்களின் நகைச்சுவைகளுடன் இன்று ஆழப்பதிந்தது யானையின் மன வேதனை.
    Reply>>.
    தன் இனத்தை தானே அழிப்பது மனிதனின் குணமாச்சே :)

    ReplyDelete
  19. வணக்கம்
    ஜி
    சில சமயம் இப்படித்தான் ஜி... அனைத்தையும் இரசித்தேன் த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  20. G.M BalasubramaniamSun Aug 09, 12:08:00 p.m.
    யானை தன் பலம் அறியாமல் மனிதனுக்குக் கட்டுப்படுகிறது. உருண்ட கவளத்துக்கு தன் இனைத்தையே கட்டுப்படுத்துகிறது/ தலையணை மந்திரம் என்பது படுக்கும்போது ஓதுவதல்லவா.?பேயையும் மனைவியையும் அறிந்த கணவன்..? உப்பிட்டால் உள்ளவரை நினைக்க வைக்குமே.
    Reply>>>
    யானை உண்ட சோற்றுக்கு வஞ்சகமின்றி வேலை செய்கிறதே :)
    அதான் ,படுக்கிற முன்னாடி தெரிஞ்சிக்க நினைக்கிறார்களே :)
    வித்தியாசம் அறிந்த கணவனும்கூட :)
    உப்பு ,சர்வரை இப்படி நினைக்கவைக்குதே :)

    ReplyDelete
  21. mageswari balachandranSun Aug 09, 01:35:00 p.m.
    வணக்கம் ஜீ,
    காலம் கடந்து பாட சொல்லி கேட்க மறந்த ஞானம் ம்ம்ம்,,,
    அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள்.
    Reply>>>
    இப்போதாவது ஞானம் பிறந்ததே :)

    ReplyDelete
  22. ‘தளிர்’ சுரேஷ்Sun Aug 09, 03:51:00 p.m.
    நாலு பேர் நாலு விதமா சொல்லுவாங்க! // சிரிச்சி சிரிச்சி புண்ணாப் போச்சி! அருமை!
    Reply>>>
    புண்ணை ஆற்ற உப்பு தண்ணீரைக் குடிங்க :)

    ReplyDelete
  23. KILLERGEE DevakottaiSun Aug 09, 05:19:00 p.m.
    01. இனி யானைகள் மட்டுமல்ல பூனைகள்கூட மனிதனை கேள்வி கேட்கும்.
    02. இலவசத்துக்குத்தான் பலன் அடைஞ்சிட்டானே....
    03. இவளோட வாழ்ந்தவனுக்கு பேய்ப் பயம் எதற்க்கு ?
    04. நல்லவேளை உங்க சோப்புல உப்பு இருக்கானு கேட்காமல் போனாங்கே....
    Reply>>>
    பூனைக்கு சோறு வைச்சா கேட்கத்தானே செய்யும் ,கும்கி பூனை இருக்கா :)
    பலன் ,பணத்தை விட அதிகமா தெரியுதே :)
    அதானே ,காலுள்ள பேயோட வாழ்ந்து கிட்டிருக்காரே :)
    போறப்போக்கைப் பார்த்தால் உப்பு போட்டுதான் சாப்பிடுறீங்களா என்பார்களோ :)

    ReplyDelete
  24. rmnSun Aug 09, 06:54:00 p.m.
    மந்திரம் இலவசம் ஹிஹிஹி
    Reply>>
    இலவசம் என்றாலே ஏதோ வில்லங்கம் இருக்கும் ,ஆனால் இவ்வளவு பெரிய வில்லங்கமா :)

    ReplyDelete
  25. rmnSun Aug 09, 06:54:00 p.m.
    மந்திரம் இலவசம் ஹிஹிஹி
    Reply>>>
    இலவசம்னு வந்தவங்களை அவர் வசம் ஆக்கிகிட்டாரே :)

    ReplyDelete
  26. ரூபன்Sun Aug 09, 10:15:00 p.m.
    சில சமயம் இப்படித்தான் ஜி... அனைத்தையும் இரசித்தேன் த.ம 8
    Reply>>
    சாப்பாட்டில் உப்பு கூடித்தான் போகுமா :)

    ReplyDelete
  27. பரிவை சே.குமார்Sun Aug 09, 11:46:00 p.m.
    ரசித்தேன்.
    Reply>>>
    நானும் ரசிக்கும் படியா இன்னொரு காரியம் செய்யலாமே ,குமார் ஜி :)

    ReplyDelete