18 August 2015

காதலியின் அந்த காலணிக்கு,இந்த காலணி சரிதானே :)

 அப்பனுக்கு  எதிரி வேறெங்கும் இல்லே :)           

                       ''வரதட்சணையா  கார் கேட்குறீங்களே ,என்ன தைரியம் உங்களுக்கு ?''

                          ''எல்லாம் உங்க பொண்ணு கொடுக்கிற தைரியம் தான் .கேட்கச் சொன்னதே அவங்கதானே !''

காதலியின் அந்த காலணிக்கு,இந்த காலணி சரிதானே :)

           ''காதலிக்கு  கொலுசு வாங்கித் தரப்போறீயா ,ஏன் ?''

           ''தயங்கித் தயங்கி நான் காதலை அவளிடம் சொன்னப்போ ,


காலணியைக் கழட்டாம இருந்தாளே,அந்த நன்றிக்காகத்தான் !''


குடிகாரனின் சப்பைக்கட்டுக்கும் ஒரு அளவில்லை!                

             ''நீங்க மொடாக்குடியன் ஆவதற்கு  தூண்டுகோலா இருந்தது லேன்ட் லைன் போன்தான்னு எப்படி சொல்றீங்க ?''
                 ''ஓயாமே டிரிங்க் ,டிரிங்க்ன்னு மணி அடிச்சு ஞாபகப்படுத்திக்கிட்டு இருந்ததே !''

காசு பணம் துட்டு மணி இருந்தாதான் மதிப்பு !

சாமிகளிலும் டாட்டா ,பிர்லாக்கள் உண்டு ...
தரித்திர நாராயணன்களும் உண்டு !









  • உலகளந்த நம்பிMon Aug 18, 08:06:00 p.m.
    //சாமிகளிலும் டாட்டா ,பிர்லாக்கள் உண்டு ...
    தரித்திர நாராயணன்களும் உண்டு !//

    ஜம்மட்டி அடி!
  • KILLERGEE DevakottaiMon Aug 18, 08:11:00 p.m.
    நண்பா சம்மட்டியா ? ஜம்மட்டியா ? ஏன் கேட்டேன்னா ? அடிகூட ஜம்முனா ? இருக்கும் அதனால் குசம்பிட்டேன் SORRY குழம்பிட்டேன்.

  • நம்பி ஜி ,மனுசனில்தான் ஏழைப் பணக்காரன் என்றால் கடவுளிலுமா ?யாரிடம் முறை இடுவது ?

  • கில்லர்ஜி,அழகான ஜமுனா கையாலே அடிவாங்கினா கூட ஜம்முன்னு இருக்காதே !

  • 29 comments:

    1. பொண்ணு சொல்லறத தட்டாம கேக்கணுமுன்னு நீங்கதானே சொன்னீங்க மாமா! நா என்ன தட்டியா கேக்கிறேன்...! ஒங்க மக கனவ நெறவேத்தறது எ கடமையில்லமா...?


      என்ன சத்தம் இந்த நேரம்... ஓ கொலுசு சத்தமா...? நன்றிக்கடன் இப்ப... கொஞ்ச இடஞ்சலா இருக்கு...!


      இனிமே குடி குடியை கெடுக்குமுன்னு சொல்லப்படாது...டிரிங்க் ,டிரிங்க்ன்னு தொலைபேசிதான் குடிங்க...குடிங்கன்னு தொல்லைய கொடுத்ததுன்னு சொல்லனும்... என்ன புரிஞ்சதா... எனக்கும் இங்கிலீஸ் புரியுதில்ல...!


      ஓம் நமோ நாராயணா... நீதான் என்ன டாட்டா ,பிர்லா மாதரி காப்பத்தணும்... இல்லாட்டிக்கூட பரவாயில்ல... ஒரு புட்டபர்த்தி...ஒரு பிரேமா ஆனந்தம்... ஒரு நித்தியா ஆனந்தம்... எப்படியோ... நீ கொஞ்ச(ம்) மனசு வைச்சாத்தான் வாழ்க்கைய வசதியா ஓட்டமுடியும்...!


      த.ம.1


      ReplyDelete
      Replies
      1. நல்ல கடமைதான் ,இப்படி மகளை காட்டிக் கொடுப்பது :)

        கொலுசாலே என்னாங்க கஷ்டம் :)

        இங்கிலீசை நல்லாவே புரிஞ்சுகிட்டார் :)

        ஆனந்தாக்கள் வாழ்கிறார்கள் ,கடவுள்களை விட ஆனந்தமாக :)

        Delete
      2. manavai james நீங்க இங்க போட்ட பின்னூட்டத்தை உங்க வலையில ஒரு பதிவா போட்டிருக்கலாம். அருமை :)

        Delete
      3. என் பதிவுகூட இவ்வளவு நீளமில்லை .அப்படித்தானே ,மதுமதி ஜி :)

        Delete
    2. Replies
      1. முன்பு,ட்ரிங் ட்ரிங் மட்டும்தான் இப்போ ?:)

        Delete
    3. சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி!

      ReplyDelete
      Replies
      1. அப்பன் வசதி அறிந்த பொண்ணு ,அப்படித்தானே :)

        Delete
    4. 01. சகுனி வேலை பார்த்தால் கார் கிடைக்குமா ?
      02. நன்றிக்கடனை காலிலா காட்டுவது ?
      03. இதற்கெல்லாம் மூலகாரணம் கிரஹாம் பெல்தான்.
      04. அடடே நம்ம...

      ReplyDelete
      Replies
      1. கார் மட்டுமில்லே அபார்ட்மெண்ட்டும் கிடைக்கும் :)
        ஆரம்பம் காலில் இருந்து :)
        பெல்லை இப்படி வைத்தது அவர்தானா :)
        நம்ம தெரு சாமிதான் :)

        Delete
    5. Replies
      1. மாப்பிள்ளை வாங்கி வந்த வரமா :)

        Delete
    6. ஐயா..உங்க வலைப்பக்கம் இப்பத்தான் வர்றேன்.ஜோக்காளின்னதுமே நிறைய ஜோக்குகள் இருக்கும் என எதிர்பார்த்தேன்..மூணே மூணு ஜோக்கைப் போட்டு இப்படி பதிவை தேத்திப்புட்டீங்களே..ஜோக்குகளை அள்ளி விட வேண்டாமா? நண்பர் ஒருவர் 40 ஜோக்குகளைப்போட்டு அனுதினமும் பதிவிடுவார்.அதை நான் அதிகம் என்பேன்.உங்களிடத்தில் 40 ஜோக்குகள் இருந்தால் ஒரு மாதத்தை அசால்டாக ஓட்டி விடுவீர்கள் போலிருக்கிறதே! இது காமெடி நான் சிரிச்சிட்டேன்..நீங்களும் சிரிக்கணும்!?

      ReplyDelete
      Replies
      1. படித்தது ,ரசித்தது என்று அடுத்தவர்கள் ஜோக்கை நாற்பது என்ன ,நூறு கூட போடலாம் , தனி நெய்யினால் போடப்பட்ட இனிப்புகள் என்பதை போல ,இது ஜோக்காளியின் தனி மண்டையில் உருவானவை !
        இது 1525 வது பதிவு ,மற்றவைகளையும் படித்து ரசிக்கலாமே :)

        Delete
      2. 1525 ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
        உண்மையில் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள். தொடருங்கள்.

        Delete
      3. உங்களால் நம்ப முடியாதுதான் ,ஏன்னா ,என்னாலேயே நம்ப முடியலையே :)

        Delete
    7. அடடே..சென்னை பதிவர் சந்திப்புல பகவான் ஜின்னு விசிட்டிங் கார்டு கொடுத்தீங்களே அது நீங்க தானா?

      ReplyDelete
      Replies
      1. மது மதி ஜி ,உங்களுக்கு நல்ல ஞாபக மதி ....
        உங்களின் இந்த தகவலை சகோதரி .சசிகலா அவசியம் தெரிந்து கொள்ளணும்,நான் சென்னை பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டதை அவர்களால் நம்பவே முடியவில்லை :)

        Delete
      2. உண்மையாக நிச்சயமாக இப்பவும் சொல்கிறேன். நான் இவரை பதிவர் சந்திப்பில் எங்குமே பார்க்கவில்லை.

        Delete
      3. முன்னின்று நடத்திய சகோ .மதுமதியே சொன்ன பிறகுமா :)

        Delete
    8. Replies
      1. டிரிங் டிரிங்கைதானே :)

        Delete
    9. வணக்கம்
      ஜி
      நல்லது நடக்கவேண்டும் என்றால் நாலும் கொடுக்கத்தான் வேண்டும்...
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      ReplyDelete
      Replies
      1. ரூபன் ஜி ,உங்க வீட்டிலே பொண்ணு எடுக்கிறவங்க கொடுத்து வைச்சவங்க:)

        Delete
    10. ரசித்தோம் ஜி அனைத்தையும்....

      ReplyDelete
      Replies
      1. காலணி சரியாய் போச்சுதானே ஜி :)

        Delete
    11. கொலுசு என்றதும் பெண் பதிவர்களை அழைத்தீர்களோ என நினைத்தேன்.
      ஹஹ ரசிக்கும் படியாக இருந்தது.
      மதுமதி உரையும்.

      ReplyDelete
      Replies
      1. ஆணென்ன பெண்னென்ன எல்லாம் ஓரினம்தான் :)

        Delete