30 November 2016

மீனா என்றால் பிடிக்கும்,அமீனாவைப் பிடிக்குமா :)

ஆமைப் புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாதா :)
         ''செய்ற வேலையை சொல்லிக்கக் கூட முடியலையா ,ஏன் ?''
         ''அமீனா வேலைன்னு சொன்னா , எங்க  வீட்டுப் பக்கமே வராதேன்னு எல்லோரும் சொல்றாங்களே !''
சாம்பிள் டீ கொடுத்தது ,இதற்குதானா :)
       ''வேலைக்காரி பிளாஸ்க்கில் கொண்டு வந்து கொடுத்த  டீயைக்  குடிச்சிட்டு,வேலைக்காரியை   ஏன் நிறுத்திட்டே ?''
       ''நான் எப்பவும் இப்படி ஸ்ட்ராங்கான டீயை குடிச்சுத்தான் பழக்கம்னு சொல்றாளே !''

குழியும் பறித்து தள்ளியும் விடலாமா :)
         ''உங்க மனைவி , மாவு பாக்கெட் தானே வாங்கி வரச் சொல்றாங்க ,ஏன் முடியவே முடியாதுன்னு சொல்றீங்க ?''
         ''வாங்கிட்டுப் போகலாம்  ,நீங்களா வந்து தோசை சுட்டுத் தருவீங்க ?''

இதுக்கு கொசுக்கடியே தேவலையா :)
     கடிக்கின்ற நிஜக் கொசுவை அடித்து விட முடிகிறது ...
     கடிப்பதுபோல் உணர்வு  தரும் மனக் கொசுவை எப்படி துரத்துவது ?

20 comments:

  1. ‘மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே...!’ அமீனா... இனி மீனம்மா வீட்டுக்குப் போயிட வேண்டியதுதான்...!

    என்ன மருந்து போட்டாளோ... அந்த... ஸ்ட்ராங்கான டீயைக் குடிச்சவுடனே என்ன நடந்துச்சுன்னே தெரியலை... எ பொண்டாட்டி வேற... வீட்ட விட்டுட்டுப் போயிட்டா...!

    ‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா ...?!’

    இதுதான் மனபிராந்தியா...?!






    ReplyDelete
    Replies
    1. அமீனா பாவம் ,அவரை இப்படி வெறுக்கலாமா :)

      மருந்து வச்சுதான் உங்களை மயக்கணுமா என்ன :)

      பிறகேன் தோசையை ஊற்றிக்கச் சொல்றே :)

      இந்த பிராந்தி அனுபவம் எல்லாருக்கும் உண்டே :)

      Delete
  2. அப்படி எல்லாம் வேலைக்காரியை சட்டுனு நிறுத்தினா அடுத்த ஆள் கிடைப்பது நெம்பக் கஷ்டமுங்கோ!

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக ,தன்மானத்தை விடமுடியுமா :)

      Delete
  3. Replies
    1. விடாமல் முயற்சித்து வாக்களித்தமைக்கு நன்றி :)

      Delete
  4. ரசித்தேன் நண்பரே
    ஓட்டுப் போட்டுவிட்டேன் சுற்றிக் கொண்டே இருக்கிறது
    மீண்டும் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் வந்து வாக்களித்தமைக்கு நன்றி :)

      Delete
  5. Replies
    1. அய்யா சுட்ட தோசையைத் தானே :)

      Delete
  6. எனக்கும்கூட அமீனாவை பிடிப்பதில்லை.
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. சில சொற்கள் காந்தம் போல் இழுக்கும் ,ஆனால் அமீனா என்ற சொல் நேர் எதிர் :)

      Delete
  7. மீனா...அமீனா நன்றாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. மீனாவை ரசிக்கும் நேரத்தில் அமீனா வந்தால் நல்லாவா இருக்கும் :)

      Delete
  8. அமீனா என்பவரின் தொழில் அது அவரை விரட்டலாமா
    யார் போட்ட டீ அது
    மாவு பாக்கெட்டுக்குப் பதில் தோசையாகவே வாங்கிப் போகலாமே
    இருந்தாலும் கொசு உங்களை மிகவும் தொல்லை படுத்துகிறது

    ReplyDelete
    Replies
    1. உயிர் எடுப்பது எம தர்மன் வேலை ,அவரைப் பிடிக்கிறதா :)
      வேலைக் காரிக்கு அடுத்தவர் வீட்டில் கொடுத்த டீ அது :)
      அப்படி கொண்டு போனால்,மனைவி வாயில் ஊட்டச் சொல்லக் கூடும் :)
      அதான் ,நானும் உங்களுக்கு தொல்லைக் கொடுக்கிறேன் :)

      Delete
  9. எனக்கு மீனாவையும் அமீனாவையும் பிடிக்காது...ஆனால் அமீனாவுக்கு என்னைய பிடிச்சிருப்பதான் கவலையாக இருக்கிறது......

    ReplyDelete
    Replies
    1. அடடா என்ன துரதிர்ஷ்டம் ,மீனாவுக்கு பிடிக்கவில்லையோ :)

      Delete
  10. ரசித்தேன்.... உடனே மீனாவையா என்று கேட்கக் கூடாது! :)

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. நான் கேட்கும் முன்,நீங்களே சொல்லி விட்டதால் கேட்கலே விடுங்க :)

      Delete