இப்படியும் ஒரு அப்பாவி கணவனா :)
'' உங்க பேஸ்ட்டிலே உப்பு இருக்கான்னு உங்க வீட்டுக்காரரிடம் கேட்கக் கூடாதா,ஏன் ?''
''சமையல்லே உப்பு இருக்கான்னே அவருக்குத் தெரியாதே !''
தலைவர் மப்பிலே உளறிட்டாரோ :)
''மறைந்த மேதைக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் ,தலைவர் என்ன பேசிட்டார்னு ,அவரை இப்படி கழுவி கழுவி ஊத்துறாங்க ?''
''நான் வாழும் காலத்தில் அவரும் வாழ்ந்தார் என்பது நமக்கெல்லாம் பெருமைன்னு உளறிட்டாராம்!''
ஆசை மட்டுமா நூறு வகை :)
''முழு உடல் பரிசோதனை செய்து ஒரு மாசமாச்சே , உங்களுக்கு என்ன நோய்னு இன்னுமா கண்டுபிடிக்க முடியலே ?''
''என்ன நோய் இல்லைன்னுதான் கண்டுபிடிக்க முடியலையாம் !''
துணை(வி ) இல்லாமல் போக மாட்டாரோ:)
''உங்க வீ ட்டுக்காரருக்கு வர்ற சனிக்கிழமை ஆபரேஷன் பண்ணலாம்னா , ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''
''சனிப் பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே ,டாக்டர் !''
மீண்டும் வருமா பொற்காலம் :)
முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி ...
அது அந்த காலம் !
விலைவாசி விண்ணில் பறக்க
இது வியா 'பாரி 'களின் காலம் !

|
|
Tweet |
எப்படிப் பழக்கி வச்சிருக்காங்க கணவனை!
ReplyDeleteதற்பெருமை மன்னர்!
காலத்தின் கோலம்!
முன்ஜாக்கிரதை முத்தம்மா...
ஆமாம்....
நல்லாவே டியூன் பாணி இருக்காங்களா :)
Deleteதண்ணி வண்டி இப்படி பேசலாமா :)
டாக்டர்களுக்கு வாழ்வுதான்:)
எப்பவும் 'முத்த'ம்மாவாவே இருக்க முடியுமா :)
இடைத் தரகர்கள் இவர்களுக்கும் மேல் :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம+1
பொற்காலம் இனி வராதுதானே :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன். உப்பை சற்றே அதிகமாக.
ReplyDeleteஉப்பை அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் விடுவது நல்லது தானே :)
Deleteநல்லகாலம் எப்போது வரும் ஜி...?
ReplyDeleteவராது ,நாம்தான் அமைத்துக் கொள்ளணும்:)
Deleteவீட்டுக்காரருக்கு எவ்வளவு பிரஷர் கொடுத்தாலும்... உப்பை சேர்க்கவே மாட்டேங்கிறாரு...!
ReplyDelete'நான் வாழும் காலத்தில் அவரும் வாழ்ந்தார் என்பது நமக்கெல்லாம் பெருமை’ன்னு தலைவரு அடிக்கடி பேசுவதை ஞாபகப்படுத்தலாமுன்னா விடமாட்டேங்கிறிங்களே...!
இதுக்குத்தான் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டான்னு சொன்னேன்...! இப்ப மூனுமாசம் ஆகுது... இன்னுமா கண்டுபிடிக்கலை...!
ஒன்னும் கவலைப் படாதிங்க... அந்த ‘சதி’ யெல்லாம் இப்ப இல்ல...! கட்டையில போனாலும்... உடன்கட்டை இல்லை...!
‘பாரி’ன்க(ள்)ளுக்குப் பஞ்சமில்லை...!
த.ம. ?
த.ம. ஆறு மனமே ஆறு
Deleteஅவருக்கு இருக்கிற பிரஷருக்கு உப்பை சேர்த்துக்கக் கூடாதே :)
Deleteபோய் சேர்ந்த பிறகு சொல்லிக்கலாம் :)
மாசமா இருக்கீங்கன்னு சொன்னாலும் சொல்லுவாங்க
உடன்கட்டை ஏறியது அந்தகாலம் ,பூரிக்கட்டை அடிகொடுப்பது இந்த காலம் :)
ஃபாரினில் சம்பாதித்தால் பாதகமில்லை :)
ஆறு ஆறுதலை தரும் ,ஏழு எல்லையில்லா ஆனந்தம் தரும் :)
Deleteரசித்தேன்.
ReplyDeleteஆசை நூறு வகையுமா :)
Deleteவெந்ததைப் போட்டபடி தின்னும் கண்வர் . உபில்லாதவர் ஐ மீன் சொரணை இல்லாதவர்
ReplyDeleteஅது எத்தனை துரதிர்ஷ்டம் ,,!
அவர் என்ன சோதனை எலியா
துணைவியாய் இருக்க பிடிக்கலையோ
இக்கால வியாபாரிகள் அக்காலப் பைத்தியக்கார பாரிகள் அல்ல
நிறைய சூடு வாங்கியதால் சொரணை இல்லாமல் போயிருக்குமோ :)
Deleteநல்லவேளை ,இதையெல்லாம் கேட்காமல் போயிட்டார் :)
இந்த எலிதான் பல டாக்டர்களை சோதனை செய்வதாக கேள்வி :)
இருக்கப் பிடிக்குது ,கூடப் போகத்தான் பிடிக்கலை :)
மக்களை ஏமாற்றினால் இவர்களும் பைத்தியக் காரர்களாய் அலைய வேண்டிவரும் :)
''சனிப் பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே ,டாக்டர் !''
ReplyDeleteபாவப்பட்ட மனிதர்!
எவ்வளவுதான் பாசமாய் இருந்தாலும் கொள்ளி வரைக்கும்தானே போக முடியும்:)
Deleteஎன்ன நோய் இல்லன்னு கண்டுப்பிடிக்க இம்புட்டு போராட்டமா?!
ReplyDeleteஇருக்கும் நோய் ஒண்ணுன்னா கண்டு பிடிக்கலாம் ,எப்படி உயிரோடு இருக்கிறார் என்பதே வியப்பைத் தருதே :)
Delete