6 March 2017

'துணியே துணை 'ன்னு நடிகை இருக்க முடியுமா :)

 பேயானாலும் ஆசை விடாது :)              
             ''பேய்க்கு கூட ஆடம்பரமா இருக்கத்தான் பிடிக்கும் போலிருக்கா ,ஏன் ?''
              ''அது ,பாழடைஞ்ச  'பங்களா 'விலே  மட்டும்தான்  இருக்குமாமே !''

'துணியே துணை'ன்னு  நடிகை இருக்க முடியுமா :)
           '' அந்த நடிகை ,முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்குன்னு புதுமொழியில் சொல்றாரா ,எப்படி ?''                
           ''மனசிலே 'துணி'ச்சல் இருந்தா ,உடம்பிலே துணி எதுக்குன்னு கேட்கிறாரே !''
இதுக்குமா பயப்படுவது :)
          ''என்னடா சொல்றே ,கிருதாவை நீளமாய் வச்சுக்க பயமாயிருக்கா ?''
         ''வச்சுக்கிட்டா கிருபாகரன் என்கிற என் பெயரை கிருதாகரன்னு   மாத்தி வைச்சிடுவாங்க போலிருக்கே !''

ஹனீமூன் போகத் தயங்கும் கணவன் :)
          ''என் கள்ளக் காதலனோட சதித் திட்டம் ,என் புருஷனுக்குத் தெரிஞ்சுருக்கும்  போல இருக்குடி !''
         ''ஏண்டி ?''
        ''மூணாருக்கு ஹனிமூன் போகலாம்னு  சொன்னேன் ,போனா ஃசேப்ட்டியா திரும்பி வர்ற மாதிரி இடமாப் பார்த்துச் சொல்லுங்கிறாரே !''

'கட்டை ' போடுவது நம்மாளுங்களுக்கு அல்வா :)
         ''பாரதியார் இருந்தா ,அவருக்கு எதிரா போராட்டம் வெடிச்சிருக்குமா ,ஏன் ?''
         ''ஏற்கெனவே ராமர் பாலம் இருக்கும்போது 'சிங்களத் தீவினுற்கோர்  பாலம் அமைப்போம் 'னு  எப்படி எழுதலாம்னுதான் !''

மொய் ,திருமணத்திற்குப் பின்னா ,முன்னா :)
   அரசின் திருமண உதவித் திட்ட பணம் வந்து சேர்ந்தது ...
  அரசியல்வாதிக்கும் அதிகாரிக்கும் 
  'மொய் 'வைத்த பிறகு !

24 comments:

  1. ரசித்தேன் நண்பரே
    தம முயன்றுகொண்டே இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டீர்கள் போலிருக்கே :)

      Delete
  2. ''மனசிலே 'துணி'ச்சல் இருந்தா,
    உடம்பிலே துணி எதுக்குன்னு கேட்கிறாரே!''

    அதெல்லாம்
    படக்குழு கொடுக்கின்ற
    பணத்தைப் பொறுத்ததே!

    ReplyDelete
    Replies
    1. money கூடினால் உடம்பிலே துணிமணி குறையுமோ :)

      Delete
  3. ஏன், புளிய மரத்தில் கூட இருக்குமே பாஸ்? அது ஏழைப் பேயா?

    "துணி"ஞ்ச நடிகை போல!

    கிருதாகரன்! நல்லாத்தான் இருக்கு.

    அடப்பாவி.... ஜோக்குல கூட இப்படி சொல்லாதீங்க.

    ராமர் பாலத்துக்கு தண்ணீருக்குள் மூழ்கணுமே...!

    திட்ட உதவி அப்போ ஒரு மொய்க்காசு அளவு கூடத் தேறியிருக்காது!

    ReplyDelete
    Replies
    1. பங்களாவில் இருந்து விரட்டப் பட்ட பேயா இருக்கும் :)

      திரை உலகத்தில் துணிந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு :)

      இப்போ யாருமே அந்த பெயரை சூட்டுவதாக தெரியவில்லை :)

      நீங்களும் மூணார் கொலையை மறக்கலை போலிருக்கே :)

      நீரின் கீழ் இருக்கும் பாறைக்கு பெயர் பாலமாம் :)

      பலருக்கும் மொய் போக என்ன தேறும் :)

      Delete
  4. Replies
    1. துணிவே துணை என்றால் இன்னும் ரசிக்கலாம் ,இல்லையா ஜி :)

      Delete
  5. பணத்திற்க்காக எதையும் துணிச்சலா செய்வாங்கங்கிறது உண்மைதாங்க....

    ReplyDelete
    Replies
    1. பணத்தோட தங்கமும் கிடைத்தால் இன்னும் என்ன என்ன செய்வாங்களோ:)

      Delete
  6. ஊழல்பேய்தானே...! பங்களாக்கள் எல்லாம்தான் பாழாய்ப் போச்சே...!

    ஆதிமனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இதுதான்...! எனி வே துணி‘வே’ துணை...!

    ‘கிருபா’ங்கிறதுக்குப் பதிலா ‘கிருதா’ன்னு கூப்பிடப்போறாங்க...!

    ‘நாங்க சேப்டியா திரும்பி வரலாமுன்னுதா நெனைக்கிறோம்...’

    பாரதியார் இப்படியெல்லாம் கேட்பாருன்னு முன்னமே தெரியுமுல்ல ராமருக்கு... ராமரா என்ன கொக்கா...?!

    மொய் விருந்தில் கலந்து மொண்டு சாப்பிடுங்க...!

    த.ம. 4




    ReplyDelete
    Replies
    1. உழைத்த பணத்தில் கட்டியிருந்தால் பாழாய் போயிருக்காதோ :)

      எனி வே டு மணின்னு 'துணி'ந்து விட்டார்களோ :)

      பொருத்தமான பெயர்தானே :)

      கணவனை உருட்டி விட்டுட்டா :)

      4 வே டிராக் பாலம் போட்டிருந்தால் ராமரை தீர்க்க தரிசின்னு பாராட்டியிருக்கலாம்:)

      கலக்கல் சரக்கையா :)

      Delete
  7. அருமையான கதை

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்றீங்க ஜி ?மூணார் துயரம் நல்ல கதையா :)

      Delete
  8. பெண்பேய்கள் பங்களாவிலும் ஆண்பேய்கள் மரத்திலும் இருக்குமாமே
    துணியே துணை அல்லவா திரௌபதி கதை நினைவுக்கு வருகிறது
    கிருதாகிரன் நல்ல பெயர்
    யாருடைய சேஃப்டி
    இந்த ராமர் பாலம் கதைக்குத் தான் உதவும்
    மொய்யே அது பொய்யடா. திருப்பிக் கொடுக்க வேண்டிய கடனடா

    ReplyDelete
    Replies
    1. இதை எப்படி கண்டு பிடிக்கிறது ,ஆண் ,பெண் பேய்க்கு என்ன வித்தியாசம் இருக்கும் :)
      அவ்வளவு நீள சேலை உண்மையில் திரௌபதிக்கு கிடைத்து இருந்தால் கின்னஸ் சாதனைதான் :)
      கிருத் என்று வேண்டுமானால் சுருக்கமா இப்போ வைத்துக் கொள்ளலாம் :)
      நல்ல புருஷன் ஃ சேப்டிதான்:)
      நிஜத்துக்கு உதவுற பாலம் போடலாம்னா , கட்டைப் போடுவார்களே :)
      வட்டியில்லாக் கடன்னு வைச்சுக்கலாமா:

      Delete
  9. வணக்கம்
    ஜி
    இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. 'கட்டை ' போடுவது நம்மாளுங்களுக்கு அல்வாதானே :)

      Delete
  10. ''அது ,பாழடைஞ்ச 'பங்களா 'விலே மட்டும்தான் இருக்குமாமே !''//

    அரச மரத்துப் பொரச மரத்துப் பேயெல்லாம் கேள்விப்பட்டதில்லையா பகவான்ஜி?!

    ReplyDelete
    Replies
    1. கடவுள் ரேஞ்சுக்கு பேய் இல்லாத இடம் இல்லையோ :)

      Delete
  11. இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹனிமூன் சதித் திட்டம் புரிந்ததா அய்யா :)

      Delete