நிம்மதியான தூக்கம் எப்படி வரும் :)
''உங்களுக்கு ஒரு நொடியில் தூக்கம் வந்துவிடுதே ,எனக்கு வர மாட்டேங்குதே ,ஏன் ?''
''தூக்கம்தான் எனக்கு சொத்து ,ஆனால் உங்களுக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கே !''
பதவி சுகம் கண்டவர்களின் யாகம் :)
''பதவியில் இருக்கிறவங்க யாரும் எனக்காக யாகம் வளர்க்க வேண்டாம்னு ஜெயிலில் இருந்து தலைவர் சொல்லியிருக்காரே ,ஏன் ?''
''இந்த நிலைமை மாறக்கூடாதுங்கிற வேண்டுதலோடு யாகம் வளர்த்ததா அவருக்கு தெரிய வந்திருக்காம் !''
'பார்க் 'கில் பிறர் பார்க்க'ச்' செய்யலாமா :)
''அப்பாவை 'பார்க்'கில் வாக்கிங் மட்டும் போயிட்டு,வீட்டிற்கு வந்து தியானம் பண்ணச் சொல்லும்மா !''
''ஏன் ,என்னடா ஆச்சு ?''
''கண்ணை மூடி தியானம் பண்ணினாராம் ,கண்ணை திறந்து பார்த்தா ,நிறைய சில்லறைக் காசு விழுந்து கிடந்ததாம் !''
மலையிலேயே உருண்டு 'போயிருக்க 'வேண்டியவரோ இவர் :)
''அந்த மலைக் கோவிலுக்கு போனா திருப்பம் வரும்னு சொல்லுவாங்க ,உங்களுக்கு எப்படி ?''
''மலையிலே ஏறும் போதும் இறங்கும் போதும் திருப்பம் வந்ததே !''
கொடிது கொடிது அற்பாயுளில் சாவு :)
தவணை முறையில் சிகரெட் சாம்பலை தட்டியவன் ...
மொத்தமாய் சாம்பலானான் அற்பாயுளில் !
|
|
Tweet |
"தவணை முறையில்
ReplyDeleteசிகரெட் சாம்பலை தட்டியவன் ...
மொத்தமாய் சாம்பலானான்
அற்பாயுளில்!" என்று
தெரிந்தாலும் கூட
நம்ம நாட்டில
புகை பிடிப்போர் நிறுத்தியதாக
தகவல் ஏதுமில்லையே!
அடிமைகள் என்றும் திருந்துவதே இல்லை :)
Deleteமுதல் ஜோக் ஜோக் அல்ல, முற்றிலும் உண்மை.
ReplyDeleteதலைவருக்குத் தெரியாதா தொண்டன் மனநிலை!
அடடே... நல்ல விஷயமா இருக்கே!
:)))
விழிப்புணர்வு.
உண்மையை அறிந்து திருந்துவார்களா :)
Deleteதொண்டன் சரி ,தலைவர்கள் மனநிலை :)
பாக்கெட் மணிக்கு வழியா :)
சாமிக் குற்றம் ஆகிவிடாதே :)
அசலும் கரைவது உண்மைதானே :)
பல கொடியது உள்ளது ஜி...
ReplyDeleteபுகையிலை இருந்த முதல் இடத்தை இப்போ டாஸ்மாக் பிடித்து விட்டதே :)
Deleteபரவாயில்லையே..கேட்காமல் சில்லரை கிடைக்கிறதே...சில்லரை தட்டுப்பாடு சின்னப் பையனுக்கு எங்கே தெரியப்போகுது....???
ReplyDeleteசின்ன பையனும் பக்கத்திலே வந்து உட்கார்ந்தா இன்னும் வருமானம் கூடும் :)
Deleteரசித்தேன் ஜி...
ReplyDeleteஅருமை...
விரைவில் எல்லாம் பல புத்தகங்களாக மலரட்டும்.
பல புத்தகம் போடும் எனக்கு பொருளாதாரம் இல்லையே ஜி :)
Deleteஅருமை
ReplyDeleteஅருமை தூக்கமா ,தூங்கும் பெண்ணா :)
Delete:)))
ReplyDeleteமொத்தமாய் சாம்பலானான் அற்பாயுளில் .....இதுக்கும் ஸ்மைலிதான்னா:)
Deleteஅனைத்தும் அருமை. ரசித்தேன்.
ReplyDeleteநிம்மதியான தூக்கம் அருமையோ அருமைதானே :)
Deleteரசித்தேன்
ReplyDeleteபதவி சுகம் கண்டவர்களின் யாகத்தையுமா :)
Deleteஎனக்கு வர மாட்டேங்குதே ,ஏன் ?''//
ReplyDeleteபோதும் என்ற மனம் இருந்தால் நல்ல தூக்கம் வரும். சரிதானே?
அதுதான் யாருக்கும் இல்லையே :)
Deleteமெத்தைய வாங்கினேன்... தூக்கத்த வாங்கல...! சொல்லாதே யாரும் கேட்டால்...!
ReplyDelete‘நல்ல நேரம் வந்தாச்சு... நல்ல யோகம் வந்தாச்சு...ட்ரியோ...ட்ரியோ...’ நாடு பாடா பாடுபட்டுக்கிட்டு இருக்கேன்... ஒங்களுக்கு பாட்டு வேற... இதுக்கு மேல இது வளரக்கூடாது... அடிச்சு சத்தியம் பண்ணுறேன்... எங்கே அடிக்க எதுவும் காணாம்...!
ஓ... பன்னீர் வேற தெளித்து இருந்ததாம்...!
போனாத்தானே திருப்பம் வரும்... ! அந்தத் திருப்பம் வேணாம்...!
வாழ்க்கையின் சீக்ரெட் அறியாதவன்...! ‘நா ஒரு முட்டாளுங்க... நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க...!’
த.ம. 9
மெத்தைக்கு பதிலா தூக்க மாத்திரை வாங்கியிருந்தால் தூக்கம் வந்திருக்குமோ :)
Deleteமுடிஞ்சா யாகத்தீ வளர்த்து அதில் சத்தியம் பண்ணலாமே :)
ஊதுபத்தி வைக்கலையா :)
யாருக்கு வேணும் திருப்பம் ,அப்பமே போதும் :)
பெர்னாட்ஷா சொன்னது ...சிகரெட்டின் ஒரு முனையில் நெருப்பு ,இன்னொரு முனையில் முட்டாளின் வாய் :)
ஆக சொத்து தூக்கத்துக்கு முதலீடு அல்ல ஆனால் அயர்ந்து தூங்கும் பெண்ணுக்கு அவளே சொத்து அல்லவா
ReplyDeleteதலைவர் சிறையிலேயே இருக்க வேண்டி யாகம் செய்யக் கூடாது என்று பொருள் கொள்க.
தியானத்தின் பலன் உடனே தெரிகிறதாமோ
உருண்டாலும் திரும்பவேண்டுமே
அற்பாயுளில் சாகிறவர் எல்லாம் புகை பிடிப்பவர் என்று கருதக் கூடாது
நிம்மதியாய் தூங்கவிட்ட கணவன்,அவளுக்குக் கிடைத்த சொத்து என்றும் சொல்லலாம் :)
Deleteஇனிமேல் பொது சேவைக்கே வரக்கூடாதுன்னு என்றும் கொள்ளலாம் :)
கையை மூடி செய்தாலும் கைமேல் பலன் :)
உண்மைதான் ,பூலோக சொர்க்கமே என்றாலும் திரும்பித்தான் ஆகணும்:)
ஆயுளைக் குறைத்துக் கொள்கிறார்கள் ,சரிதானே :)
என்னிடமும் சொத்து இல்லை ஜீ! நகைச்சுவை ரசித்தேன்.
ReplyDeleteவலைத் தளம் இருக்கே ,அதுவே நமக்கு சொத்துதானே ஜி :)
Delete