25 March 2017

நடிகைகளின் ஓரவஞ்சனை நியாயமா :)

படித்ததில் இடித்தது :)
            ''வோட்டுக்கு ஐயாயிரம்  ரூபாய் தருவதாக  கேள்விபட்டேன்,ஆயிரம் ரூபாய்தானே கொடுத்து இருக்கீங்க ?''
             ''இது அட்வான்ஸ்தான்,எங்க கட்சிக்கு வாக்களித்த ஒப்புகைச் சீட்டைக் காட்டிட்டு மீதியை வாங்கிக்குங்க !''
   படித்த செய்தி ........ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு  ஒப்புகைச் சீட்டை வழங்கும் முறையை அமல்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!(இது மேற்படி முறைகேட்டுக்கு வழி வகுத்த மாதிரி அமைந்து விடாதா :)

 ஆசீர்வாதத்தை  தப்பாய் எடுக்கலாமா :)         
               ''நடிகைக்கு தீட்சை அளித்த குருவுக்கு கண்டனமா ,ஏன்  ?''
              '' முற்றும் துறந்த நிலையை விரைவில் அடைவாய்னு ஆசீர்வதித்தாராமே   !''

கைவிடக் கூடாதுன்னா  இதையா :) 
          ''என்னாலே நம்பவே முடியலே ,டாஸ்மாக் கடையிலே அவ்வையாரின் ஆத்திச் சூடி வரிகளா ?''
           ''ஆமா ,ஊக்க'மது' கைவிடேல்னு எழுதி இருக்காங்களே !''

 நடிகைகளின் ஓரவஞ்சனை  நியாயமா :)
          ''நடிகைகள் மலையாளப் படங்களில் ஆபாசமா நடிப்பதை  எதிர்த்து  வழக்கு போட்டு இருக்கீங்களே  ,நீங்க முற்போக்குவாதியா ?''
         ''அட நீங்க வேற ,தமிழ் படங்கள்லே காட்டாத கவர்ச்சியை அங்கே மட்டும்  காட்டுவது நியாயமான்னுதான் கேட்குறேன் !'' 

தனக்குத் தானே தண்டனை அளித்துக் கொள்பவர்கள் :)
கடவுளைக் கும்பிடும்போது 
கன்னத்தில் போட்டுக் கொள்வதற்கு ...
'என் தப்புக்கு நானே கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன் 
நீயும் அறைந்து விடாதே ' என்பதுதான் காரணமா ? 

19 comments:

  1. ஒப்புகை சீட்டு என்பது நம் வாக்கு விழுந்ததா இல்லையா என்பதை மட்டும்தான் சொல்லும் என்று நினைக்கிறேன். எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதைச் சொல்லாது என்று தோன்றுகிறது! ஆனால் நான் செய்தி படிக்கவில்லை!

    மொழிப்பற்றைக் காட்டும் இரண்டு ஜோக்குகள்!

    ReplyDelete
    Replies
    1. விழும் வோட்டெல்லாம் பி ஜே பிக்கே விழுந்தது என்று வேறு கட்சிகள் புகார் கொடுத்ததால் இந்த புதிய முறை என்கிறதே தேர்தல் கமிஷன்:)

      Delete
  2. ஒப்புகைச் சீட்டா ஒப்புக்குச் சீட்டா...? என்ன(டா) அங்க கூட்டம்...? ஒப்புகைச் சீட்டு அடிக்கிற மெஷினினா...? ஒரு சீட்டுக்கு நூறு ரூபாயா...? எத்தன வேணுமுனாலும் வாங்கிக்கலாமா...? என்ன என்னதான் பண்ணச் சொல்றீங்க சாண் ஏறினா முழம் வழுக்குதே...!

    முற்றும் துறந்த நிலையை இன்னுமா அடையல...? அப்புறம் தீட்சை எப்படிக் கிடைக்கும்...?!

    ஊக்கம் அது... மது விலக்கேல்...!

    கேரளத்துப் பெண்களுக்கு மூடப்பழக்கமில்லை...!

    நான் அறைந்தால்தான் மெதுவாக அறைந்துகொள்வேன்...!

    த.ம.3



    ReplyDelete
    Replies
    1. நேற்றைய பதிவான 'தூக்கம் போனதே உன்னால்தானடி'க்கு விழுந்த வாக்கு பதினொன்று என்றும் ,ஆனால் எண்ணிக்கை பத்து என்றே காட்டுகிறது த ம வாக்கு பெட்டி !வாக்கு எந்திரம் எல்லாமே இப்படித்தான் போலிருக்கிறது :)

      தீட்சைக்கு மயக்க சிகிச்சை அளிக்க வேண்டியிருக்குமோ :)

      இப்படித்தான்யா பல பேரு நினைச்சு பாழாய் போய்கிட்டிருக்கான் :)

      மற்றவங்களுக்கு அதைப் பார்க்காமல் விடும் பழக்கம் இல்லையோ : )

      வலிக்கும் அளவுக்கு அறைந்து கொள்ளவும் முடியாதே :)

      Delete
  3. குரு சரியாகத்தானே ஆசீர்வதித்தார் ஜி

    ReplyDelete
    Replies
    1. தீர்க்கதரிசியாச்சே ,தப்பாவா சொல்வார்:)

      Delete
  4. Replies
    1. வோட்டுக்கு காசு கொடுப்பதை ரசிக்க முடியுதா :)

      Delete
  5. எந்த கட்சிக்கு வாக்கு போட்டார் என்பது அதில் இருக்காது....

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இருக்கக் கூடாது ,அதானே வாக்காளனின் ரகசிய காப்பு பிரமாணம் ?ஆனால் ,வந்த செய்திகள் எதிரமறையாய் இருக்கே ஜி :)

      Delete
  6. பத்து விழுந்திட்டுது என்றீங்க.. அதனால்தான் நானும் ஒன்றைப் போட்டு மகுடம் சூட்ட வைக்கலாம் என ஓடிவந்தால் 7 தானே இருக்கு... சரி சரி எட்டாவது என்னோடதாக்கும்:).

    ReplyDelete
    Replies
    1. நான் சொன்னது நேற்றைய பதிவை !நீங்களே 'தூக்கம் கெட்டது உன்னால்தானடி 'பதிவுக்கு விழுந்திருக்கும் வாக்குகளை எண்ணிப் பாருங்கள் ,பதினோரு வாக்குகள் விழுந்த பின்னும் தமிழ்மணம் மகுடம் சூட்டப் படவேயில்லை !இதை எண்ணி எண்ணி தூக்கம் கெட்டதுதான் மிச்சம் :)

      Delete
  7. மலையாள கண்ணுக்கும் தழிழர் கண்ணுக்கும் வித்தியாசம் இருப்பதால்... இந்த ஒரவஞ்சனை....

    ReplyDelete
    Replies
    1. ஜொள்ளர்களின் கண்கள் , இனத்துக்கும் இனம் வித்தியாசமாவா இருக்கு :)

      Delete
  8. ''அட நீங்க வேற ,தமிழ் படங்கள்லே காட்டாத கவர்ச்சியை அங்கே மட்டும் காட்டுவது நியாயமான்னுதான் கேட்குறேன் !''//

    வழக்குப் போடுவார்களோ இல்லையோ, ரசிகர்கள் போராட்டம் நடத்தும்காலம் ஒரு நாள் வரும்!

    ReplyDelete
    Replies
    1. கவர்ச்சிக்கு காட்டுவது அங்கே ,காசு பார்ப்பது மட்டும் இங்கேயா ? போராட நானும் தயார் :)

      Delete
  9. ரசித்தேன் நண்பரே ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நடிகைகளின் ஓரவஞ்சனையையுமா:)

      Delete
  10. ஒரு தொகுதியில் 62 வேட்பாளர்கள் என்று சொல்லும்போதே என்னவோ இடிக்கிறதே ஓட்டுகளைச்சிதறச் செய்யும் முயற்சியோ இந்த ஒப்புகை சீட்டு தெரியாத செய்தி
    ஒரு குருவின்வழக்கு இன்னும்முடிவுக்கு வரவிக்கை போல் இருக்கிறதே
    மதுவினால் வரும் ஊக்கமோ
    மலையாளநடிகைகள்தானே பெரும்பாலும் தமிழிலும் ஓர வஞ்சனையா
    கடவுளைக் கும்பிடுபவர் தனக்குத் தானே தண்டனை கொடுக்கிறார்கள் எதற்கு கடவுளைக் கும்பிட்டதற்கா

    ReplyDelete