2 March 2017

மனைவி முன் ஜாக்கிரதை முத்தம்மாவோ: )

 இதிலுமா போட்டி :)       
         '' அண்ணன் தம்பி உங்களுக்குள்ளே என்னடா தகராறு ?''
         ''காலண்டர் மன்த்லி சீட்டை அவன் கிழிப்பானாம்,தினசரித் தாளை நான் கிழிக்கணும்னு சொல்றாம்பா !''

வாட்டர்தெரபி தலைக்கீழாய் செய்தால் :)
            ''அதிகாலை ஐந்து  மணிக்கு வெறும் வயிற்றில் மூணு லிட்டர் தண்ணீர் குடித்தால்    நோயே  வராதுங்கிறது சரி  ,ஐந்து மணிக்கு எப்படி எந்திரிக்கிறது ?''
            ''இரவு தூங்கிற முன்னாலே மூணு லிட்டர் தண்ணீர் குடிச்சுப் பாரேன் !''
மனைவி முன் ஜாக்கிரதை முத்தம்மாவோ: )
           ''வேலைக் காரி என் ஜீன்ஸ் பேன்ட் .சட்டைப் போட்டுக்கிட்டு  வர்றாளே ,ஏன் கொடுத்தே ?''
            ''என் சேலையைக் கட்டிக்கிட்டு வந்தா ...நான்னு நினைச்சு அவகிட்டே நீங்க ஏடாகூடமா நடந்துக்க  கூடாதுன்னுதான் !''

வீட்டுக்கு வந்த ' நவக்கிரக நாயகி ':)
            ''உங்க மருமகளை 'நவக்கிரக நாயகி 'ன்னு சொல்றீங்களே ,ஏன் ?'' 
          '' தினமும் கோவிலுக்குப் போன  என் பையன் நவக்கிரகத்தைச் சுற்றுவதற்குப்  பதிலா ,இவளை சுற்றிக்கிட்டு  இருந்திருக்கானே  !''

இதுக்கு ரூம் போட்டு யோசிச்ச மாதிரி தெரியலே !
நகையை அடகு வைச்ச சீட்டை ரொம்ப பத்திரமா வச்சிக்கணும் போலிருக்கு ...
நகை திருப்புறதுக்கு முன்னாடியே மர்ம மனிதர்களிடம் கூட காட்ட வேண்டிய நிலைமை உண்டாகி விட்டது ...
இல்லையில்லை உருவாக்கி விட்டது ...
நான்கு நாட்களுக்கு முன்னால் மதுரை செக்கானூரணியில் ...
மூன்று வீடுகளில் கொள்ளை அடித்து உள்ளார்கள்...
ஒரு வீட்டில் இருந்த பெண்மணியிடம் நகை ,பணத்தைக் கேட்டு மிரட்டி உள்ளார்கள் ...
எதுவும் தன்னிடம் இல்லையென்று சொல்ல ...
கொள்ளையர்கள் நம்ப மறுத்து பாசத்துடன் ...
முறைப்படி திருமணம் நடந்ததா ,ஓடிப் போய் கட்டிகிட்டியா என்று கேட்க ...
முறைப் படிதான் நடந்தது என்று சொல்ல ...
அப்படின்னா ,கல்யாண ஆல்பத்தை காட்டு என ,அதைப் பார்த்து ...
கல்யாண கோலத்தில் அணிந்து இருந்த நகைகள் எங்கே என்று கேட்க ...
அடகு வைத்து இருப்பதாக அந்த பெண்மணி சொல்ல ...
நம்ப மறுத்த கொள்ளையர்கள் ...
அடகுசீட்டை பார்த்த பின்தான் ...
கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள் !
எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் இந்த கொள்ளைக்காரர்களும் !

17 comments:

  1. ரசித்தேன். குறிப்பாக வாட்டர் தெரபி.

    ReplyDelete
    Replies
    1. சரிதானே ,அவர் காலையில் எழுந்திரிக்கவில்லை என்றாலும் பிளாடர் எழுப்பி விட்டு விடுமே :)

      Delete
  2. ஒருத்தனும் ஒன்னும் கிழிக்க வேண்டாம்... ஒங்க அப்பனப் போல சும்மாவே இருங்க...!

    தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்...!

    என் ஜீன்ஸ் பேன்ட் சட்டைப் போட்டுக்கிட்டு வந்தா நான்னு நினைச்சு அவகிட்டே நீ ஏடாகூடமா நடந்துக்க மாட்டியா...?!

    கிரகம் விட்டிடுச்சுன்னு பெருமைப்படுங்க...! இப்ப கர்ப்பக்கிரகத்த சுத்துறான்...!

    அடகுக் கடை சீட்டை வாங்கிட்டு அங்கே புறப்பட்டு போயிட்டாங்களே...!

    த.ம. 2


    ReplyDelete
    Replies
    1. பஞ்சாங்கம் பார்த்து கிட்டா :)

      மிதக்க வைக்கலையே :)

      வில்லங்கம் அப்படி வருமா :)

      சீக்கிரமே அப்பனாகட்டும் :)

      பாக்கிப் பணத்தைக் கட்டச் சொல்வானே சேட்டு:)

      Delete
  3. வாட்டர் தெரப்பி - ராத்திரியில்! தூங்காமல் இருக்க வழியா! :)

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வயிறு முட்ட தண்ணீர் குடித்தால் அம்சமாய் தூக்கமும் வருமே ,அதிகாலையில் விழிப்பும் வருமே :)

      Delete
  4. ...நல்ல ஜோக்கு போங்க! சமயத்துல மூடு அவுட்டாக்கிடும்!

    ReplyDelete
    Replies
    1. நம்ம வயசுக்கு மூடு அவுட்டானால் பாதகமில்லை :)

      Delete
  5. அனைத்தும் நன்று பாராட்டுகள் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. ' நவக்கிரக நாயகி ' ரொம்ப சமர்த்து தானே :)

      Delete
  6. முதலில் படிச்சுக் கிழிக்கும் வேலையைப் பார்க்கட்டும் காலண்டர் கிழிக்க வீட்டுத்தலைவன் இருக்காரே
    இதுவும் நல்லாத்தானே இருக்கு
    ஜேம்ஸ் சார் சொன்னதே எனக்கும் தோன்றியது
    அம்பாளின் பக்தனாகவும் இருக்கலாம்
    அடுத்த இலக்கு அடகு சீட்டுக்கடைதானே


    ReplyDelete
    Replies
    1. தலைவனே பெரிய சோம்பேறியாச்சே:)
      காலையில் எழ நல்ல ஐடியாதானே :)
      வம்பு வந்தே தீருமோ :)
      எந்த அம்பாளின் :)
      சேட்டிடம் கைவரிசை காட்டுவானோ "_

      Delete
  7. Replies
    1. முன் ஜாக்கிரதை முத்தம்மாதானே :)

      Delete
  8. சிறிய வயதிலேயே அண்ணன் தம்பிக்குள் வந்த பாகப்பிரிவினை சண்டையை ரசிக்க முடியுதா :)

    ReplyDelete
  9. இன்கம் டாக்ஸ் காரன் கூட இப்படி கேக்க மாட்டான் போல இருக்கே.

    ReplyDelete
    Replies
    1. அவங்க எப்படி கேட்பாங்க ?வருஷா வருஷம் அவங்க கொள்ளை அடிக்கிறவங்களாச்சே:)

      Delete