முப்பத்திரெண்டும் விழுந்தவனை என்ன சொல்வது :)
''ஒரு மனிதன் எப்போது முழு மனிதன் ஆகிறான் ?''
''முப்பத்திரண்டு பல் முளைத்ததும் !''
தம்பி ஏதோ பிளான் பண்ற மாதிரி இருக்கே :)
'' ஏண்டா தம்பி ,நான் இராணுவத்தில் சேர்த்தே ஆகணும்னு சொல்றே ?''
''தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு சொல்றாங்களே ! ''
மிஞ்சின்னு பேர் வைத்தவன் தீர்ககதரிசி :)
''கால் விரல் அணிகலனுக்கு மிஞ்சின்னு பேர் வைத்தவன் தீர்க்கதரிசியாத்தான் இருக்கணும்னு ஏன் சொல்றீங்க ,மாமா ?''
''என் மகளுக்கு போட்ட நகைங்களில் வேற எதுவும் மிஞ்சியிருக்கிற மாதிரி தெரியலையே ,மாப்பிள்ளை !''
மனைவியிடம் வாய்தா கேட்டால் இப்படித்தானாகும் :)
''உன் வீட்டுக்காரர் வக்கீலாச்சே ,அவரை ஏன் டைவர்ஸ் பண்ணிட்டே?''
''எதைக் கேட்டாலும் அடுத்த மாசம் பார்ப்போம்னு 'வாய்தா 'கேட்கிறாரே !''
தலைவலி தனக்கு வந்தா தான் தெரியும் :)
''என் பொண்ணு வீணை கத்துக்கிறதுலே,என்னைவிடநீங்கதான் சந்தோசமா இருக்கீங்க ,ஏன் சார் ?''
''காலி பண்ண மாட்டேன்னு சொன்ன பக்கத்து போர்சன்காரங்க சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்களே !''
''இவ்வளவு நல்லது பண்ண எங்களுக்கு நீங்க என்ன செய்யப் போறீங்க ?''
''இனிமேலும் வீணையை விடலேன்னா நீங்களும் வீட்டைக் காலி பண்ண வேண்டியிருக்கும் !''
பெண் மனது மட்டும் ஆழமில்லே :)
கடலில் மூழ்கியவர்களைக் கூட காப்பாற்றி விடலாம் ...
டாஸ்மாக் கிளாஸில் மூழ்கியவர்களை
ஒன்றும் செய்ய முடியாது !

|
|
Tweet |
ரசித்தேன் ஜி. கால் மெட்டியைக் கழற்றுவது அந்தக் கணவனுக்குக் கடினமாக இருந்திருக்கும்! இல்லா விட்டால் அது மட்டும் 'மிஞ்சி' இருக்குமா!
ReplyDeleteகாலில் மிஞ்சியிருக்கும் இதையுமா கழட்டுறேன்னு காலணியால் கேட்டிருப்பார் மனைவி :)
Deleteதம
ReplyDeleteசுற்றிக் கொண்டே இருக்கிறது
மீண்டும் வருகிறேன் நண்பரே
இரண்டு நாளாவே தமிழ் மணத்துக்கு காய்ச்சல் அடிக்குதே :)
Deleteமிஞ்சியாவது மிஞ்சியதே...
ReplyDeleteசாதனை செய்த மாப்பிள்ளைக்கு பாராட்டு விழா எடுக்கலாமா :)
Deleteபாவத்திற்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்தானாம்...!
ReplyDeleteநீ மட்டும் எல்லாச் சொத்தையும் வச்சுக்கலாமுன்னு பார்க்கிறியா...?!
மாமா... இன்னிக்கு காலையில ஒங்கள மக காலைப் பாக்கலையா...?! பாத்தா இப்படிப் பேச மாட்டீங்க...!
'வாய் தா 'ன்னுதானே கேட்டாரு... கொடுக்க வேண்டியதுதானே...! இதுக்கா அவரைத் தள்ளி வைக்கலாமா...?
பொண்ணுக்கு காயத்திரின்னு பேரு வச்சதினால வீணை கத்துத் தாரிங்களா...? வேண்டாம் இந்த வீண் வேலை...!
டாஸ்மாக் கிளாஸில் மூழ்கியவர்களை ஒன்றும் செய்ய முடியாது காப்பாத்தணும் என்றுதான்... தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் கடை வைக்க விடமாட்டேங்கிறிங்களே...! எங்களுக்கு மானம் முக்கியமில்ல... வருமானம்தானே முக்கியம்...! ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறிங்க...!
த.ம. 5
விற்கப் போனா மாட்டோட பல்லைத்தானே பார்க்கிறார்கள் :)
Deleteவா ரெண்டு பேருமே போவோம் :)
மிஞ்சிக்கும் ஆப்பா :)
அவர் ஆசைக்கு எல்லாம் செய்ய முடியுமா :)
தாடி வச்சவன் தாகூராக முடியுமா :)
உயர்நீதி மன்றமும் இதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குது :)
மிஞ்சியில் ஏதும் தேறாதோ
ReplyDeleteஎல்லோருக்கும் 32 பல் முளைக்கிறதா என்ன பலரும் விஸ்டம் இல்லாமலேயே இருக்கிறார்கள் முளைத்தவை விழுந்தால் புத்திசாலித்தனமும் போச்
வாய்தா கேட்பவரெல்லாம் வக்கீல்களா
வீணைவாசிக்கும் சரஸ்வதியால் இந்த கதியா
தேய்ந்து போனதால் குவார்டருக்கும் தேறாது :)
Deleteவிதிவிலக்கை விடுங்கள் :)
வேறு யாரெல்லாம் கேட்கிறார்கள் :)
மீட்டினால் பரவாயில்லை ,வாட்டினால் :)
வாய்தா போட்டு இழுத்தடிக்கும் நீதி மன்றத்தை டைவர்ஸ் பன்ன முடியவில்லையே........
ReplyDeleteநம்ம ஊர் சட்டதிட்டம் அப்படி :)
Deleteஅனைத்தும் ரசித்தோம் ஜி! மெட்டி மிஞ்சியானதை ரசித்தோம்!!
ReplyDeleteஇரண்டுமே ஒன்றுதானே :)
Deletevote பண்ணினேன், உங்கள் புளொக்கில் உடனே காட்டாது, கொஞ்சம் ரைம் எடுத்தே எண்ணிக்கை கூடுது:(, என் புளொக்கில் உடனேயே காட்டுது ஏன் எனத் தெரியவில்லை.
ReplyDeleteமூணு நாளா கோமாவுக்கு போயிடுத்தே தமிழ்மணம் :)
Deleteவீணை கத்துக்க போய்
ReplyDeleteவீண் வம்பு வந்ததுவோ!
வீணையில் அவர் வல்லமையைக் காட்டினால் ஏன் வம்பு வரப் போகிறது :)
Delete