19 March 2017

பெண்ணின் எடையைத் தாங்க முடியலைன்னா இப்படியா :)

               ''அவங்க ஏன் எடை மெஷினை கோபமா பார்த்துகிட்டு இருக்காங்க ?''
               ''சீக்கிரம் இறங்குங்க ,என்னாலே முடியலைன்னு வாசகம் வருதாமே !''
இது நடக்கிற காரியமா :)                   
               ''அவர் ,வாங்கின கடனை  திருப்பித் தரமாட்டார் போலிருக்கா ,ஏன் ?''
              '' மல்லையா  இந்தியா வர்ற அன்னைக்கு தர்றேன்னு சொல்றாரே !''

திருடனுக்கும் தெரிஞ்சு போச்சா :)            
             ''என்னங்க ,அந்த திருடன் ,உங்களை 'நீயெல்லாம் ஆம்பளை 'யான்னு கேட்டானே ...ஏன் ?''

            '' பீரோ சாவி  என்னிடமும்,லாக்கர் சாவி உன்னிடமும் இருக்குன்னு  சொன்னேன் !''

மாமனாரிடமே ஒப்பீடா :)
           ''மாப்பிள்ளே ,நான் வாங்கித் தந்த ஃபிரிட்ஜ் எப்படி இருக்கு ?''
           ''சத்தம் போடாம அருமையா வேலை செய்யுது ,உங்க மகளைத்தான் அந்த டைப்பிலே நீங்க வளர்க்கலே !''

வாழ்வாங்கு வாழும் பெற்றோர்கள் :)
வாழும்போதே பிள்ளைகளால் 
கைவிடப்பட்ட பெற்றோர்கள்கூட 
இறந்த பின்னும் வாழ்கிறார்கள் ..
வாக்காளர் பட்டியலில் !

25 comments:

  1. முதல் இரண்டும் செம ஹஹஹஹஹ்

    அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. இப்படி வாசகம் வந்தால் அதிர்ச்சியா தானே இருக்கும் :)
      மல்லையாவால் இவருக்கு இப்படியும் தொல்லை வரலாமா :)

      Delete
  2. Replies
    1. வந்த வாசகம் சரிதானே :)

      Delete
  3. ஹா.... ஹா... ஹா...

    என்ன ஒரு மறைமுக பதில்!

    பாவம்!

    ஹா... ஹா... ஹா... அது வளர்த்தது இல்லே, வாங்கினது!

    பாவம்.

    ReplyDelete
    Replies
    1. முன்பெல்லாம் ராசி அட்டை வரும் !

      மல்லையா ரசிகரோ :)

      திருடனும்தானே:)

      வாங்கினதே நல்லாயிருக்காம் :)

      லாபம் அரசியல்வாதிக்கு :)

      Delete
  4. "வாழும்போதே பிள்ளைகளால்
    கைவிடப்பட்ட பெற்றோர்கள்கூட
    இறந்த பின்னும் வாழ்கிறார்கள் ..
    வாக்காளர் பட்டியலில்!" என்ற
    உண்மையை - அந்த
    ஆண்டவனும் அறியாரே!
    ஆண்டவனுக்கே கயிறு விடும்
    அரசுகளால் தான் இந்நிலையோ!

    ReplyDelete
    Replies
    1. எமனுக்கே தண்ணீ காட்டுறாங்களோ:)

      Delete
  5. Replies
    1. திருடனின் கேள்வியுமா :)

      Delete
  6. Replies
    1. பாவம் அந்த மெஷின்தானே:)

      Delete
  7. ஃப்ரிட்ஜை வாங்கியது போல மகளை வாங்கி இருக்கலாமோ ?

    ReplyDelete
    Replies
    1. இவரல்லவோ மாமனாரிடம் விலை போனார் :)

      Delete
  8. '' மல்லையா இந்தியா வர்ற அன்னைக்கு தர்றேன்னு சொல்றாரே !''//

    மல்லைய்யாவைவிட இவர் புத்திசாலியாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. மல்லையாவின் சரக்கைக் குடித்ததால் இந்த புத்தி வந்திருக்குமோ :)

      Delete
  9. எடை மெஷினின் கூப்பாடு சரிதானே
    காந்தி கணக்கு போல் இதுவும் பெயர் பெற்று விடும்
    திருடனுக்கு நிஜமான ஆண்பிள்ளை நீ தான் என்றேன்
    பெண்போடும் சத்தத்தில் ஃப்ரிட்ஜ் சத்தம் போடுகிறதா என்றே தெரியவில்லை
    அதுவும் பிள்ளைகளின் தவறா

    ReplyDelete
    Replies
    1. அந்த பெண்ணின் பாடுதான் கஷ்டம் :)
      பாவம் ,இப்படியாவது காந்தி பெயர் மாறட்டுமே:)
      திருடன் கூட நம்புவதாய் இல்லையே :)
      அவர் கூல் ஆகட்டும் கேட்டுக்குவோம் :)
      அதெப்படி ஆகும் இருக்கும் போதே கை கழுவிவிட்டார்களே:)

      Delete
  10. இதுதான் எடைத் தேர்தலா...?!

    எத்தனை பேரிடம் மல்லுக்கட்டுவது...?!

    இதைத்தானே அவளும் கேட்டாள்...!

    எல்லாமே சத்தம் போட்டால் என்னாவது...?!

    அப்பத்தானே அவர்கள் பேரில் ரேஷனில் எல்லாம் இலவசமாக வாங்க முடியும்... கொடுத்து வைத்தவர்...! ‘செத்தும் கொடுத்தார்... சொத்தும் கொடுத்தார்...!’

    த.ம. 9

    ReplyDelete
    Replies
    1. இடையை மறைக்கும் தேர்தலும் கூட :)

      மல்லையா என்றால் மல்லு கட்டித்தானே ஆகணும் :)

      அதான் திருடனுக்கும் தெரிஞ்சு போச்சான்னு நான் கேட்டேன் :)

      மனைவி மட்டும் அடக்கி வாசிக்கணுமா என்ன :)

      இருப்பவன் தான் எல்லாம் கெடுத்தான் :)

      Delete
  11. ரசித்தேன். என்னால முடியலை! பாவம் மெஷின்.

    ReplyDelete
    Replies
    1. அதிகபட்ச தாங்கும் திறன் இருநூறு கிலோன்னு மெஷினில்போட்டிருந்ததை கவனிக்கலையா :)

      Delete
  12. இந்த எடை கருவிக்கும் செயற்கை அறிவு இருக்குமா ஜி :)

    ReplyDelete
  13. ரசித்தேன். என்னால முடியலை! பாவம் மெஷின் உடைஞ்சுட போகுது

    ReplyDelete
    Replies
    1. மெஷினுக்கு இன்சுரன்ஸ் கட்டியிருந்தால் தப்பிப்பார் :)

      Delete