27 March 2017

கணவனை இப்படியும் நம்பலாமா :)

இதுதான் ரொம்ப முக்கியம் :)
                 ''ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்கீங்க ...தண்ணி  வேணுமா ,பாத் ரூம் ,டாய்லெட் போறீங்களா ?''
                  ''முதல்லே ,பட்டை டைப் செல் சார்ஜர் இருக்கா சொல்லுங்க !''

திருடர்களுக்கு எச்சரிக்கை :)       
              ''அந்த வீட்டு வாசல்லே ,திருடர்களுக்கு  எச்சரிக்கை வாசகம் எழுதி இருக்காங்களா ,எப்படி ?''
              ''பணம் ,நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் பத்திரமாய் உள்ளது ,வீணாய் முயற்சித்து ஏமாற வேண்டாம்னுதான் !''
                                                            
கணவனை இப்படியும் நம்பலாமா :) 
               ''எப்போ பார்த்தாலும் உன் வீட்டுக்காரர் கத்திகிட்டே இருக்காரே ,எப்படி அவர்கூட வாழ்ந்து கிட்டிருக்கே ?''
               ''குரைக்கிற நாய் கடிக்காதுங்கிற   நம்பிக்கையிலேதான் !
                                                            
நடிகைன்னா எந்த கூச்சமும் இருக்காதா :)
             ''எனக்கு கூச்சம் அதிகம்னு...அந்த கவர்ச்சி நடிகை பேட்டியில் சொல்லியிருப்பது , உண்மைதானா ?''
            ''பல் கூச்சத்தைப் பற்றி சொல்லி இருப்பாங்க !''
                                                                                                   
திருமணம் தந்த  மாற்றம் :)
              ''உனக்கு கல்யாணம் ஆயிடுச்சே,ஏதாவது மாற்றம் இருக்கா ? ''
              ''என் பாக்கெட்டில் இருந்த பணம் ஜாக்கெட்டில் போனதுதான் ,பெரிய மாற்றம் !''

26 comments:

  1. நான் சிரிச்சுட்டுப் போறேன் என ஜோக்காளியிடம் சொல்லிடுங்கோ பிளீஸ்ஸ்:).

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தோழி ஏஞ்சலின் வந்தால் தான் அரட்டைக் கச்சேரி ஆரம்பிப்பார்கள் போலிருக்கே :)

      Delete
    2. அதிரா நீங்க எப்பவுமே சிரிச்சுக்கிட்டெ தானே இருப்பீங்க..அப்புறம் என்ன சிரிச்சுட்டுப் போறேன்னு ஜோக்காளிகிட்ட..ஹிஹிஹி....ஜோக்காளி கன்ஃப்யூச் ஆகிடப் போறார்...

      கீதா

      Delete
    3. நேரில் அந்த மாதிரி சிரித்தால் தானே கன்'ஃப்யூஸ்'ஆவேன் :)

      Delete
  2. அது முக்கி'யம்தான்.

    ReplyDelete
    Replies
    1. முக்குவது முக்கியமில்லை செல்லில் மூழ்குவதே முக்கியம் என்கிறாரே :)

      Delete
  3. நிஜத்தில் இது போலத்தான் நடக்கிறது!


    பெரும்பாலான நேரங்களில் ஒன்றுமில்லாத ஏமாற்றத்தில் குத்திச் சாய்த்துவிட்டுப் போய்விடுகிறார்கள்..


    என்ன ஒருமரியாதை! ன்ன ஒரு நம்பிக்கை!


    ஹா.... ஹா... ஹா...


    ஹா... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கீங்களான்னு கூட கேட்காம இதென்ன கேள்வியோ:)

      அப்படி எதுவும் நடந்து விடக் கூடாதுன்னுதானே இந்த எச்சரிக்கை :)

      தாம்பத்தியம் என்றால் இதுவல்லவா தாம்பத்தியம் :)

      பல் கூசுதுன்னுகூட வெளியே சொல்லிக்க முடியாது போலிருக்கே :)

      உலகம் நமது பாக்கெட்டிலேன்னு பாடிக்கிட்டு திரிய வேண்டியதுதானா :)

      Delete
  4. Replies
    1. பட்டை டைப் செல் சார்ஜர் படுத்துவதையும்தானே :)

      Delete
  5. வணக்கம்
    ஜி
    இருக்கிற இடத்தை தெளிவாக சொல்லியுள்ளார்கள்
    கணவனுக்கு மனைவி சொல்வது வழமைதான்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அங்கே போய் கொள்ளை அடிக்கச் சொல்கிறார்களோ :)
      நாளும் கிழமையும் இதான் வழமையா:)

      Delete
  6. வந்தததும் வராததுமா பட்டையைக் கிளப்புறீங்களே...!

    பணம், நகைகள் எல்லாம் பேங்க் லாக்கரில் வச்சுட்டீங்களா...? அப்ப ஒங்க வாழ்க்கைய ‘லாக்’பண்ணி ‘அப்’ல அனுப்ப வேண்டியதுதான்...!

    அந்தக் கழுதை அப்படித்தான் கத்தும்...! கழுதைக்குத் தெரியுமா... கற்பூர வாசனை...!

    தொட்டால் பூ மலரும்... தொடாமல் நான் மலர்ந்தேன்... ‘எனக்குத்தான் கூச்சம் அதிகமே...!’

    பணம் என்னடா பணம் பணம்...?!

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. சார்ஜரை இல்லையென்றால் திரும்பி பார்க்காமல் போய் விடுவார் போலிருக்கே :)

      அப்படி ஒரு வம்பு தும்பு வேணாம் என்றுதானே இப்படி எழுதியிருக்கோம் :)

      கழுதை வேறையா :)

      அப்படித்தான் எல்லா பூவும் மலருதா :)

      அது இருந்தால்தானே குணம் நிரந்தரம் :)

      Delete
  7. பல் கூச்சம்..?
    தம

    ReplyDelete
    Replies
    1. அதுவும் இருக்ககூடாதா :)

      Delete
  8. பட்டை டைப் செல் சார்ஜர்
    இது தான் ரொம்ப முக்கியம்...
    திருடர்களே ஏமாறாதீர்கள்
    பணம் ,நகைகள் பேங்க் லாக்கரில தான்...
    கத்திகிட்டே இருக்கிற கணவனை நம்பலாமா
    குரைக்கிற நாய் கடிக்காது தான்...
    நடிகைன்னா எந்த கூச்சமும் இருக்காதா
    பல் கூச்சம் இருக்காமே...
    திருமணம் தந்த மாற்றம் தான்
    பாக்கெட் பணம் ஜாக்கெட்டில் போகுதே...
    ஜோக்காளி பக்கம் வந்தால்
    யோசிக்க வைக்க இத்தனையும் இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. ரசிக்க வைக்குதா இல்லையா :)

      Delete
  9. பல்கூச்சம் பலே!

    ReplyDelete
    Replies
    1. பல்லே பாலே டான்ஸ் ஆடப் போகுதா :)

      Delete
  10. 1 இப்ப இது சர்வ சகஜமாகிவிட்டதே!!!

    2. இது இன்னும் டேஞ்சராச்சே...

    பல் கூச்சம் ஹஹஹஹ்ஹ்

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக வீட்டில் நுழைந்ததும் இதையா கேட்பது :)

      லாக்கர் சாவியை கேட்டு வாங்கிக் கொண்டு மிரட்டுவார்களோ :)

      டாக்டர் கூச்சப் படாம பல்லைப் பிடுங்குவாரா:)

      Delete
  11. ''குரைக்கிற நாய் கடிக்காதுங்கிறது” சரிதான் இருந்தாலும் பல்லைப் பார்த்தால் பயம் வருகிறதே......

    ReplyDelete
    Replies
    1. நாய் பல்லை பார்த்தால் பயம் ,நடிகை பல்லைக் காட்டினால் ரசிக்கத் தோணுதா :)

      Delete
  12. அனைத்தையும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. பாக்கெட் டு ஜாக்கெட் சரிதானே :)

      Delete