இதுவும் நல்ல ஐடியாதானே :)
''யாருமே ஜாமீன் கேட்கிறதே இல்லையா ,ஏன் ?''
''இப்படியொரு சட்டம் போட்டா எப்படி கேட்பாங்க ?''
பாரதிநேசன் இப்படி மோசம் செய்யலாமா :)
''என்னங்க ,நம்ம வீ ட்டிலே குடியிருக்கிறவர்... பாரதியார் கவிதைகளை ரொம்பவும் விரும்புவராச்சே ,அவரைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க ?''
''நாம் இருக்கும் வீடு நமதென்று அறிந்தோம் 'என்று சொல்லுறாரே !''
micr osoft ல் பணிபுரிபவர்கள் விரும்பும் பிரியாணி :)
''பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
''My crow soft பிரியாணி கடைதான் !''
மாமனாருமா லட்டுக்கு ஆசைப்படுவது :)
''வரப் போற மருமகளுக்கு கூந்தல் நீளம்,திருப்பதிக்குப் போனா அஞ்சு லட்டு தேறும் அளவிற்கு இருக்கணுமா,ஏன் ?''
''நீளமான முடிக் காணிக்கை செலுத்தினா அஞ்சு லட்டு இலவசமா தர்றாங்களாமே !''
மீசையில் ஒட்டிக்கொண்டால் வராது என்பதற்கு ...
ஒட்டிக்கும் என்று பயந்து கூழைக் குடிக்காமல் இருக்கமுடியுமா ?
கூழுக்கும் ஆசைப்படலாம் ...பசித்தால் !
மீசைக்கும் ஆசைப்படலாம் ...ஆண் என்றால் !
''யாருமே ஜாமீன் கேட்கிறதே இல்லையா ,ஏன் ?''
''இப்படியொரு சட்டம் போட்டா எப்படி கேட்பாங்க ?''
பாரதிநேசன் இப்படி மோசம் செய்யலாமா :)
''என்னங்க ,நம்ம வீ ட்டிலே குடியிருக்கிறவர்... பாரதியார் கவிதைகளை ரொம்பவும் விரும்புவராச்சே ,அவரைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க ?''
''நாம் இருக்கும் வீடு நமதென்று அறிந்தோம் 'என்று சொல்லுறாரே !''
micr osoft ல் பணிபுரிபவர்கள் விரும்பும் பிரியாணி :)
''பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
''My crow soft பிரியாணி கடைதான் !''
மாமனாருமா லட்டுக்கு ஆசைப்படுவது :)
''வரப் போற மருமகளுக்கு கூந்தல் நீளம்,திருப்பதிக்குப் போனா அஞ்சு லட்டு தேறும் அளவிற்கு இருக்கணுமா,ஏன் ?''
''நீளமான முடிக் காணிக்கை செலுத்தினா அஞ்சு லட்டு இலவசமா தர்றாங்களாமே !''
நம்ம ஊர் கூந்தல் அழகியை மட்டும் ரசித்தால் போதுமா ? பதிவு வெளியான பின் ,இப்போது நான் பார்த்த ரஷ்ய கூந்தல் அழகிகள் .....
கூல் ஆகணும்னா கூழ் குடிங்க :)
கூழ் என்ன கோந்தா ?மீசையில் ஒட்டிக்கொண்டால் வராது என்பதற்கு ...
ஒட்டிக்கும் என்று பயந்து கூழைக் குடிக்காமல் இருக்கமுடியுமா ?
கூழுக்கும் ஆசைப்படலாம் ...பசித்தால் !
மீசைக்கும் ஆசைப்படலாம் ...ஆண் என்றால் !
|
|
Tweet |
நீதிபதியின் இந்த ஆணையைப் படித்ததும் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன். எனவே இதில் நோ ஜோக் ப்ளீஸ்!
ReplyDeleteஹா.... ஹா... ஹா... வீட்டையே நாடாக நினைச்சுட்டார் போல!
மிச்ச பேர்களுக்கு எல்லாம் கோழி கத்தறா மாதிரியும் ஆடு மே ன்னு சொல்றா மாதிரியுமா இருக்கும்!
யார் அந்த அஞ்சு?!!
தத்துவம் நம்பர்...
நானும் வரவேற்றுதானே இதுவும் நல்ல ஐடியா என்று சொல்லியிருக்கேன் :)
Deleteவீட்டை விற்று வாடகை தருகிறேன் என்று கூட சொல்வார் :)
மனசுதான் காரணம் :)
அஞ்சாதே அஞ்சுன்னு கிரைம் நாவலில் வந்தாரே அவரே :)
குளிர்ச்சித் தத்துவம் :)
கூழு குடித்து விட்டு ஊரணியில் முங்கி குளித்தால் போச்சு இதுக்குப்போயி....
ReplyDeleteஊரணி இல்லா ஊரில் கூழ் குடிக்கக் கூடாதா ஜி :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம+1
கூந்தல் அழகிகளையும் தானே :)
Deleteஅந்தக் காலத்தில் அடுப்பு எரிய சீமை கருவைதான் கை கொடுத்தது... கேஸ் வந்த இந்தக் காலத்தில் கேஸ் போட்டு வெட்ட வைக்கிறார்கள்...! அரசியல்வாதிகள் மக்களின் உழைப்பை உறிஞ்சுவதுபோல் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால்...அரசியல்வாதிகள் முதலில் பத்து ஏக்கர் சீமைக்கருவையை வெட்டிவிட்டு... பிறகு வெட்டி வேலை செய்யட்டும்...! கேஸ் நிலுவையில் இருப்பவர்களெல்லாம்... ஆளுக்கு ஆயிரம் மரங்களை வெட்டிவிட்டு வந்தால்தான் உங்கள் கேஸ் எடுத்துக் கொள்ளப்படும்... இல்லையென்றால் நீங்களாவே கேஸை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் கேஸ் குறைந்துவிடும்...!
ReplyDelete‘காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்’ எண்ணிய முடிதல் வேண்டும் என்று வேண்டிய பொழுதே வேண்டுதல் பலிக்கும் என்று எண்ண வேண்டாமா...?!
‘காக்கை குருவி எங்கள் ஜாதி..... நோக்க நோக்க களியாட்டம்...!’ சாரி... கழியாட்டம்...!
முடி சூடா மா ம(ன்)னாரோ...?! கண்ணா... லட்டு திங்க ஆசைப்பட்டு... பட்டுன்னு போயிடப்போறாரு...!
‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாதானே...!’ அத்தை கூழுக்கு ஆசை... சித்தப்பாவுக்கு மீசைக்கு ஆசை...!
த.ம. 2
சீமை கருவேல மரம் என்று சொல்லும்போதே தெரிகிறதே ,இதன் தாயகம் நம்ம ஊர் இல்லையென்று!
Deleteஇதன் கொடுமை தெரியாமல் ஊரெல்லாம் விதைகளைத் தூவியது ஒரு காலம் ,இப்போது ஆயிரங்கால் பூதமாய் வளர்ந்த பின் ஒழிப்பது நடக்கிற காரியமா ?
அன்று பராசக்தி ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தாரா :)
காக்கை குருவி எங்கள் ஜாதின்னு கோழி சொன்னால் பொருத்தமாய் இருக்கும் :)
இவ்வளவு யோசிப்பதால் அவர் முடிசூடா மன்னராகி விட்டாரோ :)
அத்தப்பான்னு ஏன் சொல்லக் கூடாது :)
வணக்கம்
ReplyDeleteஇரசித்தேன் ஜி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கூந்தல் அழகிகளையும்தானே
Deleteஎன்னே தத்துவம் ஜி...!
ReplyDeleteஎல்லாம் அந்த திருப்பதி லட்டு செய்யும் மகிமை ஜி :)
Deleteஜாமீன் கேட்பவர்களுக்கு தண்டனை கொடுத்து மாதிரி தெரிகிறது..
ReplyDeleteஉண்மை ,குற்றவாளிகளுக்கு வேண்டுமானால் இந்த தண்டனைத் தரலாம் :)
Deleteஎவரும் ஜாமீன் கேக்காட்டி
ReplyDeleteசிறைப் பராமரிப்பென
அரசுக்கு நட்டமே!
அந்த வருமானத்துக்காக ஜாமீன் கொடுத்துதான் தீரணுமோ:)
Deleteஅருமை
ReplyDeleteபாரதியார் பாடாத பாடலும்தானே
Deleteமருமகளையே திருப்பபதிக்கு கொடுத்தா..பத்து லட்டு கிடைக்கும் என்றால் என்ன செய்வரோ..இந்த மாமா..னாரு
ReplyDeleteமகனைத் திண்டாட விட்டுடுவார் :)
Deleteகூழ் தத்துவம் கூல்!
ReplyDeleteமை க்ரோ சாஃப்ட்...மை கோட் சாஃப்ட்...மை ஹென் சாஃப்ட்....மை சிக் சாஃப்ட்...ஜி இப்படியும் சொல்லிக்கலாமோ...அட பேர் கூட நல்லாருக்குல்ல..
அனைத்தும் ரசித்தோம் ஜி
இந்த பெயர்களில் எல்லாம் கடை திறக்கப் பட்டாலும் ஆச்சரியமில்லை :)
Deleteமுதலாவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று இல்லையா நல்ல ஜட்ஜ்மென்ட்
ReplyDeleteசட்டத்தில் இடமிருக்கா என்று கேட்கிறாரே நம்ம வலிப்போக்கன் :)
Deleteகூந்தல் அழகுதான் அனைத்தும் நன்று
ReplyDeleteஎங்கிருந்தாலும் கூந்தல் அழகுதான் :)
Deleteகூந்தல் படம் நன்றாக இருக்கிறது
ReplyDeleteநடுப் படம் நடுங்க வைக்குதே :)
Delete