11 May 2017

ஒளியிலே தெரிவது தேவதையா :)

பேரனுக்கு நேர்ந்துகிட்டு இப்படியா கணக்கு பார்க்கிறது :)                  
             ''பேரன்  உடம்புக்கு முடியாம எடை குறைஞ்சதுக்கு  சந்தோசப் படுற தாத்தா , எங்க அப்பாதானா ... என்னங்க சொல்றீங்க ?''
             ''எடைக்கு எடை வெல்லம் தர்றேன்னு நேர்ந்துகிட்டிருக்கேன் ,இப்பவே செய்திடுவோம்னு சொல்றாரே !''

தேர்தல் கமிசன் இதுக்கு என்ன செய்யப் போவுது :)
             ''வீட்டுக் கதவிலே 'அட்வான்ஸ் புக்கிங் செய்யப் படும்'னு  அவர் ஏன் எழுதியிருக்கார் ?''

             ''அவர் வீட்டிலே இருக்கிற ஆறு வோட்டையும் ,அதிகப் பணம் தர்ற கட்சிக்கு மட்டுமே போடுவாராம் !'' 

நல்லாத்தான்யா பயமுறுத்தி வைச்சிருக்காரு :)
          ''பொறந்த வீட்டை நீ மறக்கலைன்னா விபரீதம் ஆயிடும்னு  , உன் வீட்டுக்காரர் மிரட்டுறாரா .ஏண்டி  ?'' 
          ''உனக்கு பொறந்த வீடு ,புகுந்த வீடுன்னா  ,எனக்கும் இருக்கும் வீடு ,இருக்கப் போற வீடுன்னு  ஆயிடுங்கிறாரே !''

ஒளியிலே தெரிவது தேவதையா :)
          ''விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் அழகுதான்னு   என்ன அர்த்தத்திலே ஷேக்ஸ்பியர் சொல்லி இருப்பார் ?''
          '' அதானே ,அடிக்கடி ஃபியூஸ் பிடுங்கிற  EB ஆபீசர் ஒருத்தர் ,பக்கத்து வீட்டிலேதான் இருக்கார் ,அவரிடம் கேட்டுச் சொல்றேன் !''
மரமண்டைக்கு புரியவே புரியாது :)
           ''அரிசிக் கடைக்கு வந்து மர  வியாபாரமும் உண்டான்னு ஏன் கேட்கிறீங்க ?''
           ''உடனடி 'டோர் 'டெலிவரி செய்யப்படும்னு போட்டு இருக்கீங்களே !''

இந்த லிங்க் >>>> http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1459344  செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

37 comments:

  1. ஆவ்வ்வ் மீதான்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ :)

    ReplyDelete
    Replies
    1. ஹையோ ரோபோக்கு பதில் சொல்லி வருவதுக்குள்... உயிரே நிண்டு போச்சு:) கில்லர்ஜீ நித்திரை ஹா ஹா ஹா:).

      Delete
    2. நம்ம பண்ற சதிக்கு பயந்து படுத்துட்டாரோ ,கில்லர்ஜி :)

      Delete
    3. ”கொடுத்தவரே பறித்துக் கொண்டாரே”... என்னத்தைப் பறிச்சிட்டார்ர் என ஆரும் நோ குறொஸ் குவெஷன் பிளீஸ்ஸ்ஸ்.. பிறகு நான் வாய்மாறிச் சொல்லிப்போடுவன்:).. அது பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுதே....:)

      ஊசிக்குறிப்பு:
      பகவான் ஜீ மகுடம் சூடிட்டீங்க வாஆஆஆழ்த்துக்கள்..... போன தடவை 15 ஐ தாண்டி வைரம் பதிச்சீங்க இம்முறை என்னாகுமோ..

      அதெப்படி எனக்கு சூடும் மகுடம் மட்டும் டக்கென மாயமா மறையுது டவுட்டு:)... ஹா ஹா ஹா ஏதும் செய்வினையா இருக்குமோ:).

      Delete
    4. என்னைப் பாடச் சொல்லாதே பாடல் தானே அது :)

      செய்வினையும் கிடையாது ,செயப் பாட்டு வினையும் கிடையாது ,'தம'ன்னா மகுடம் .பதிவு வெளியான நேரத்தில் இருந்து அதிகபட்சம் 48 மணி நேரம் தான் தலையில் நிற்கும் ,வேறு போட்டி இல்லையென்றால் :)

      Delete
  2. 'டோர் டெலிவரி' எடைக்கு எடை' என எல்லா ஜோக்குகளுமே பிரமாதம். கலக்குறீங்க ஜீ

    ReplyDelete
    Replies
    1. பதிவு ,எடைக்கு எடை வெல்லம் போல் இனிக்குதுன்னு சொல்லாம போனீங்களே :)

      Delete
  3. தம போட்டாச்சு ஜீ :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல காரியம் பண்ணினீங்க ,உங்க ஹீரோ மக்ரோன் ஜெயித்து விட்டாரே ,அதையும் பதிவாய் போடுங்க ஜி :)

      Delete
  4. இன்றைக்கு ஒரு ஜோக் சூப்பர். எதுன்னு சொல்லமாட்டேன்.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    ReplyDelete
    Replies
    1. இப்போ சொல்லணும்னு அவசரமில்லை , புகுந்த வீட்டில் (நியூஜெர்சி)இருந்து பிறந்த வீட்டுக்கு (சென்னை)வந்த பிறகு சொன்னா போதும் :)

      Delete
  5. வெல்லம் அவ்வளவு காஸ்ட்லியா என்ன!

    மர வியாபார ஜோக்கையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இதிலும் மிச்சம் பண்ண நினைக்கிற தாத்தாதான் கஞ்சப் பிசினாறி:)

      இப்படி ஆளு மரக்கடைக்கு போய் என்ன கேட்பாரோ :)

      Delete
  6. Replies
    1. ஜனநாயகம் எவ்வளவு கேலிக் கூத்தா போச்சு ,'அட்வான்ஸ் புக்கிங்'காம் ரசிக்க முடியுதா ஜி :)

      Delete
  7. டோர் டெலிவரி ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. இவர் எந்தக் கடையில் அரிசி வாங்குறார்னு தெரியலே ,இப்படிக் கேட்கிறாரே :)

      Delete
  8. வெள்ளந்தியான தாத்தா இல்லையா...?!

    தேர்தல் நடைபெறவில்லை என்றால் வாங்கிய பணம் வாபஸ் கிடையாது... அடுத்து நடைபெறும் தேர்தலில் தொகை கழித்து மீண்டும் வாங்கப்படும்...!

    அது சரி... அதுக்கு உயிர் இருந்தாத்தானே...!

    அய்யோ... நம்ம வீட்ல பீயூஸ் போயிடுச்சு... பக்கத்து வீடுன்னு நெனச்சு நம்ம வீட்ல கை வச்சிட்டாரா...?!

    டெலிவரி இலவசமா பார்ப்பீங்களா...?! ‘டோர்’ இருக்கு... எங்கே ‘பெட்’டக் காணோம்...?!

    த.ம. 6



    ReplyDelete
    Replies
    1. நல்ல மனசை யார் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்களே :)

      எவ்வளோ பெரிய மனசு உங்களுக்கு :)

      உயிர் இருக்கப் போய்த்தானே அய்யா ரொம்பவும் துள்ளுறார் :)

      மாமூல் வாங்க இப்படி செய்திருப்பார் ,அழுது தொலைங்க :)

      ‘பெட்’இருக்கு ,அப்புறம் இன்னொண்ணைக் காணாம்னு கூட கேட்பீங்க போலிருக்கே :)

      Delete
  9. ''விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் அழகுதான்னு//

    எல்லாப் பெண்களும்னா.....பல் போன குடுகுடு கிழவிகளுமா?!?!?

    ReplyDelete
    Replies
    1. கிழவனுக்கு கிழவி அழகுதானே :)

      Delete
  10. அருமையான ஜோக்குகள் .

    ReplyDelete
    Replies
    1. ஆம்பளைக்கு புகுந்த வீடுன்னா எதுன்னு உங்களுக்கும் புரிஞ்சிடுச்சே ஜி :)

      Delete
  11. அனைத்தும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் அழகுதான்னு அவர் சொல்றார் ,இன்னொருவர் 'ஒளியிலே தெரிவது தேவதையா'ன்னு கேட்கிறார் ,இரண்டுமே ரசிக்க வைக்குதா ஜி :)

      Delete
  12. ஒளியிலே தெரிவது தேவதையா ..? கொள்ளிவாயி பிசாசா...ன்னு எனக்கு தெரியலையே பாஸ்...

    ReplyDelete
    Replies
    1. பாவம் நீங்க ,இரண்டு அனுபவமும் உங்களுக்கு இல்லையா :)

      Delete
  13. டோர் டெலிவரி!இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. டெலிவரி கூட எவ்வளவு ஈஸியா போச்சு ,பார்த்தீங்களா ,இந்த சந்தோசத்தைக் கொண்டாட (டாக்டர் )அண்ணியார் இல்லையேன்னு வருத்தமா இருக்கு :(

      Delete
  14. மிகக் குறிப்பாக
    டோர் டெலிவரி சூப்பர்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சில 'மர'மண்டைங்க செய்ற வேலை ,நமக்கு சந்தோஷத்தைத் தருது ,இல்லையா ஜி :)

      Delete
  15. வணக்கம்
    ஜி
    இரசித்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசிக்க வைத்தது , ஷேக்ஸ்பியர் சொல்லி இருப்பதும்தானே :)

      Delete
  16. டோர் டெலிவரி...கஹஹ....அனைத்தும் ரசித்தோ. ஜி

    ReplyDelete
    Replies
    1. உங்க 'தம'ன்னா வோட்டை டெலிவரி பண்ண,பதிவில் வருகிற 'லிங்க்' வசதியா இருக்கா ,சொல்லுங்க ஜி :)

      Delete
  17. அனைத்தும் ரசித்தேன்.

    த.ம. 16

    ReplyDelete
    Replies
    1. 'தம'ன்னாவை ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆக்கிவிட்டதை நானும் ரசித்தேன் :)

      Delete