22 May 2017

மல்லிகைப் பூ கண்ணில் விழுமா :)

 புருஷனைப் புரிந்து வைத்திருக்கிற மனைவி :)            
                ''உங்க வீட்டுக்காரரும் குக்கர் மாதிரியா ,எப்படி /''
               ''பிரஷர் அதிகமானா கூப்பாடு போட ஆரம்பித்து விடுகிறாரே !''

வேண்டாம் என்பதற்கும்  பெரிய மனசு வேணும் :)            
              ''அந்த சர்வருக்கு தன்மானம் ஜாஸ்தின்னு ஏன் சொல்றே ?''

              ''வாங்க மாட்டேன் டிப்ஸ் என்று பேட்ஜ்  குத்தியிருக்காரே !''

மனுஷன் 'காக்கா 'பிடிச்சா ,காக்கா எதைப் பிடிக்கும் ?
          ''காக்காகிட்டே  இருந்து கத்துக்கணும்னு  சொல்வீங்களே ,ஆனால் ,இப்ப அதுங்களும் தனித்தனியா பங்கைப் பிச்சுகிட்டு பறக்குதுங்களே ,ஏன் ?''
        ''மனுசங்களைப் பார்த்து அதுங்க கத்துக்கிச்சோ என்னவோ ?''

மல்லிகைப் பூ கண்ணில் விழுமா :)
          ''அவர் போலி டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
         ''கண்லே பூ விழுந்து இருக்குன்னு சொன்னா ,மல்லிகைப் பூவா ,பிச்சிப் பூவான்னு கேட்கிறாரே !''
வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை :)                        
         ''டாக்டர் ,ஞாபக மறதிக்கு மருந்து கேட்டேன் ,பில்லிலே SMS சார்ஜ் முன்னூறு ரூபாய்னு போட்டிருக்கே,ஏன் ?''
        ''மருந்து சாப்பிடுங்கன்னு ஞாபகப்படுத்தி நாலு வேளையும்  SMS அனுப்புவோம் ,அதுக்குதான் !''
        ''அதுக்கு முன்னூறு  ரூபாயா ?''
        ''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460731செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

43 comments:

  1. ஹல்லோ வணக்கம் ஜீ :)

    ReplyDelete
    Replies
    1. வாவ் ,ஒரே நொடியிலா :)

      Delete
    2. ஜீ, நம்ம நேரம் 8.30 ஆச்சுன்னா, ஆட்டோமெட்டிக்காவே கை மொபைலை தேடி எடுத்து உங்க ப்ளாக்குக்கு வந்துடுது...

      அப்புறம் பாஸ், ஒரு பார்ட்டியில நிக்குறேன். லேட்டா வந்து மீதி கமெண்ட்ஸ் போடறேன். கோவிக்காதீங்க..!

      Delete
    3. பாட்டி"யை முடிச்சுட்டு வாங்க நண்பா.

      Delete
    4. #பாட்டி"யை முடிச்சுட்டு வாங்க நண்பா.#
      பாட்டியையா ,பாட்டிலையா :)

      Delete
    5. பாட்டிலை உடைத்து பாட்டியை முடித்து வரச்சொன்னேன் ஜி

      Delete
    6. ராஜீவன் ராமலிங்கம் ஜியும் நம்மைப் போலவே ஜென்டில்மேன் ,பாட்டிலில் மயங்க மாட்டார் !
      நம்ம ஆஷா போன்ஸ்லே அதிராவின் பாட்டினில் வேண்டுமானால் மயங்குவாறேன்று நினைக்கிறேன்:)








      :

      Delete
  2. தன்மானம் டிப்ஸ் வேணும்னு சொல்வதுபோல இருக்கே... ஜி

    ReplyDelete
    Replies
    1. சேச்சே ,அவர் நம்ம சகாயத்தோட அபிமானிங்க:)

      Delete
  3. மருத்துவ சேவை பிடிச்சிருக்கு
    அதுமாதிரியே ,குக்கர் கணவனும்,
    கண்ணுல பூவும்
    தொடர வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. இது மருத்துவ சேவையா ,அவங்க கண்ணுலே காசு மட்டும்தான் தெரியும் :)

      Delete
  4. டாக்டர் போலி டாக்டராக இருந்ததால்தான் அப்படி கேட்டு இருக்கிறார்... ஆனால் படித்த டாக்டராக இருந்தால் இப்ப்டி எல்லாம் கேள்வி கேட்காமல் ஸ்கேன் எடுத்து பார்த்துவிட்டு பெரிய பில்லை கையில் கொடுத்து இருப்பார்

    ReplyDelete
    Replies
    1. இதுக்கும் செகண்ட் ஒப்பினியன் கேட்டுத்தான் முடிவு பண்ணனும் போலிருக்கே :)

      Delete
  5. வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை :)
    என்று சொல்லி
    மருத்துவமே வணிகமாகிவிட்டதை நினைவூட்டுகிறீர்களே!

    ReplyDelete
    Replies
    1. மருத்துவ படிப்பே வணிகமாகி போச்சே :)

      Delete
  6. நேர்மையான சர்வர்!

    டாக்டர் ஜோக்!

    ரஸித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. சர்வர் கூட நேர்மையா இருக்கார் ,டாக்டர் இப்படியிருக்காரே :)

      Delete
  7. Replies
    1. மனிதக் குக்கரையும் தானே :)

      Delete
  8. Replies
    1. சர்வரின் பேட்ஜ் அருமைதானே :)

      Delete
  9. டாக்டர் ஜோக்.....

    பணம் போனாப்போகுது. மறதி நோய் குணமானதா?

    ReplyDelete
    Replies
    1. காசு செலவு என்றதும் சரியாய் போச்சு :)

      Delete
  10. வோட் வரும் முன்னே.... ஆஷா போஸ்லே யின் பாட்டு வரும் பின்னே[கடமைதான் நேக்கு முக்கியம்].

    //வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை :) //
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னா ஒரு கண்டுபிடிப்பூ:).. எழுந்து நிக்க முடியாத நிலைமை வரும்போதுதான் ...மனைவி தேவை என எண்ண வைக்குதுபோல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    ///வேண்டாம் என்பதற்கும் பெரிய மனசு வேணும் :) //
    வோட்ட் போடவும் பெரிய மனசுதான் தேவைப்படுது:).

    ReplyDelete
    Replies
    1. பாட்டு முக்கியமில்லை ,வோட்டுதான் முக்கியம் :)

      மருந்துக்கு பதிலா ,ஒரு நாள் பாயாசம் வச்சிட வேண்டியதுதானே :)

      வாங்கிப் பழகிட்டா இப்படித்தான் ,ஓசியிலே வோட் போட மனசு வராது :)

      Delete
  11. சர்வர் வாழ்க!

    பூ என்ன பூ என்ரு கேட்ட டாக்டரையும் ரசித்தொம்

    அனைத்தும் ரசித்தொம் ஜி

    ReplyDelete
    Replies
    1. பதிவர்களுக்கு சர்வர் ரொம்ப முக்கியமாச்சே:)

      ஃபூ இவ்வளவுதானேன்னு கண்ணை நோண்டாமல் விட்டாரே :)

      Delete
  12. ஜீ, வோட் போடும் லிங் ஐ கிளிக் செய்தால் மறுபடியும் இதே போஸ்டில்தான் வந்து நிக்குது. வாட் டு டூ?

    ReplyDelete
    Replies
    1. அர்த்த ஜாமத்தில் வேலை செய்ததால் இப்படியாகி விட்டது ,சரி செய்து விட்டேன் ஜி :)

      Delete
  13. போலி டாக்டர் ஜோக் - குபீர் சிரிப்பு :)

    இந்தக் காலத்துல இப்படி ஒரு சர்வரா?

    ரசித்தேன் சிரித்தேன் ஜீ

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை முகர்ந்து பார்க்காமல் போனார் :)

      இப்படி சொல்லப் படாது என்று டிப்ஸ் கொடுக்கத் தோணுதா ஜி :)

      Delete
  14. என்ன பூன்னு தெரிஞ்சாத்தானே சரியான மருந்து கொடுக்க முடியும்?!
    அருமை

    ReplyDelete
    Replies
    1. அது குஷ்பூன்னு தெரிஞ்சா என்ன செய்வாரோ :)

      Delete
  15. குக்கர் மாதிரி எல்லாம் இல்லை... அவர்தான் ‘குக்’கர்...!

    டிப்ஸ் அவர் கையால வாங்க மாட்டாராம்... அதான் பாக்கெட்ட காண்பிக்கிறார்...!

    ‘காக்க கூட்டத்தப் பாருங்க... அதுக்குக் கத்துக்கொடுத்தது யாருங்க...?’ இனி கேக்கமுடியாது...!

    பூ... இவ்வளவுதானா...? ’பூ’ன்னு ஊதித்தள்ள வேண்டியதுதானே...!

    சர்விஸ் சார்ஜ் விருப்பப்பட்டதானே கொடுக்கனுமுன்னு சொன்னாங்க...?!

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா கூப்பாடு போடத்தான் செய்வார் :)

      இவரும், வலது கையால்தான் டிப்ஸ் கொடுப்பாராம் இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு பின்னால் மடக்கிக்குவாராம் :)

      அதுங்க கத்துகிட்டது நம்மகிட்டே தானுங்க என்று வேண்டுமானால் பாடலாம் :)

      டாக்டர் வாயைத் திறந்தாலே நாறுது :)

      ஆதார் கார்டு அவசியமில்லை என்றுதான் சொன்னாங்க :)

      Delete
  16. சிகிச்சையில்ல....இது வேறையைா..............!!!!

    ReplyDelete
    Replies
    1. முறைப் படி செய்யணுமில்லே :)

      Delete
  17. ப்ரெஷர் அதிகமானால் அடுப்பை அணைத்து விட வேண்டியதுதான்
    டிப்ஸ் வாங்க மாட்டார் செர்வீஸ் சார்ஜ் வாங்குவார்
    காக்கா பிடிப்பவன் காலை வாரலாம் காக்கா வாராது
    கடைசி ஜோக் படித்திருக்கிறேன்
    நல்ல வேளை வாசம் பார்க்கவில்லையே

    ReplyDelete
    Replies
    1. அதானே ,எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கிடும்தானே :)
      அது கல்லாவுக்கே போயிடுமே :)
      காலை வாரும்போது நம்மால் பறக்கவும் முடியாதே :)
      நியாயமான சார்ஜ்தானா :)
      என்ன பூன்னு உங்களுக்குத் தெரிந்து இருக்குமே:)

      Delete
  18. Now its not a joke friend, in the passport/visa offices they collect RS 150 / 250 fir SMS advice!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ,இதுக்கா இம்புட்டு காசு :)

      Delete
  19. அருமையான இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. பூ விழுந்த கண் பார்வையுமா :)

      Delete