8 May 2017

தூக்கத்தைக்.... கெடுத்ததும் ,கொடுத்ததும் பணம்தான்:)

தானாட விட்டாலும் ...:) 
             ''வெளியே தெரியாம இருந்த தலைவரின் 'கீப்'பு பெயர் , இப்போ எப்படி தெரிந்தது ?''
             ''வேட்பு மனுத் தாக்கலில் , தனக்கு மாற்று வேட்பாளரா  கீப்பை  நிற்கச் செய்திருக்கிறாரே  !''

தூக்கத்தைக்.... கெடுத்ததும் ,கொடுத்ததும் பணம்தான் :)
            ''நிறைய  பேருக்கு கடனைக் கொடுத்திட்டு ,தூக்கமே வரலேன்னு புலம்பிகிட்டே இருந்தீங்களே ,இப்போ எப்படி ?''

            ''நிம்மதியா இருக்கேன் ,கடன் கொடுக்கிறதை நிறுத்திட்டு ,வாங்க ஆரம்பித்து விட்டேனே !''

முதல் இரவிலேயே கணவனை புரிந்து கொண்ட மனைவி :)
          ''டார்லிங் ,மேனேஜரோட நான் ரொம்ப நெருக்கம்னு  உனக்கு எப்படி தெரிஞ்சது ?''
         '' உங்க ஆபீஸ் நண்பர்கள்  கொடுத்த பரிசுப் பொருளிலே நாலைந்து ஜால்ரா இருக்கே  !''
கட்டிக்கிட்டா ஒய்ப் ,வச்சுக்கிட்டா வைப்பா :)
          ''தலைவர் 'வைப்பு'க்கு வேலை வாங்கிக் கொடுத்து விட்டாராமே ,எந்த ஆபீசிலே ?''
          ''வைப்பு நிதி ஆபீசிலேதான் !''

ஆணுக்கு வளைகாப்பு 'கை விலங்கு'தான் !
கள்ள உறவில்  உருவாகும் பிள்ளைப் பேறை 
தொல்லைப்பேறென நினைக்கும் பெண்கள் ...
வளைகாப்பு இன்றியே பெற்ற 
பச்சிளம் குழந்தைகளை வீசியெறியும் அவலம் !
தொட்டில் குழந்தை அப்பனுக்கும் ...
காவல் துறை 'வளைகாப்பு 'செய்தால் அல்லவா அவலம் தீரும் ?

' த ம ' ன்னா வாக்களிப்பது  ஜனநாயக உரிமை ,அந்த உரிமையை மொபைல் போன் மூலம்  நிறைவேற்ற  இதோ லிங்க் >>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1458980

மன்னிப்பு கேட்கும் பூஜார் ,இவர்தான் :)

38 comments:

  1. கடன் வாங்கினால் இனி நிம்மதியாய் வாழலாம் போலயே...

    ReplyDelete
    Replies
    1. ஏமாந்த அனுபவத்தில் சொல்கிறேன் ,அதுதான் உண்மை :)

      எனக்கொரு சந்தேகம் கில்லர்ஜி .....சீச்சி ,இந்த பழம் புளிக்கும்னு சொல்லுமே அது நரியா ,பூனையா :)

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜாமத்தில வரும் சந்தேகங்களைப் பார்த்தா எனக்கே பயம்மாக்கிடக்கு:)..

      ஒரு டின்னருக்கு போயிட்டு வாறதுக்குள் அவதிப்பட்டு கடையை இழுத்து மூடிட்டார்.. ஹையோ இம்முறை மகுடம் கிடைச்சால் எனக்குத் தரமாட்டாரே பகவான் ஜீ... முதலாவதா வரேல்லை எப்படித்தரலாம் எனக் கேட்டிடப்போறாரே...:).. சரி பார்த்திடலாம் நாளைக்கு பிரித்தானியாவா கோவையா?:).. க்கும்:).

      Delete
  2. பணக் கதை உண்மைதான், கடன் கொடுத்தவரின் நிம்மதி போயிடும்.. வாங்கியவர் நிம்மதியா இருப்பார்... இம்முறை டயமண்ட் மகுடம் கிடைக்க வாழ்த்துக்கள் ப.ஜீ.

    ReplyDelete
    Replies
    1. கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் என்று பாடிய கம்பரே ,இன்று வந்தால் கடன் கொடுத்தார் நெஞ்சம்போல் என்று திருத்தி எழுதுவார் :)

      இந்த மண்டுக்கு டயமண்டு மகுடமே போதும்,அப்படித்தானே :)

      Delete
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்:) டயமண்ட் எல்லாம் அவ்ளோ சிம்பிளா போயிட்டுதோ இப்போ?:)..

      Delete
    3. நம்ம தகுதி என்னான்னு நினைச்சீங்க :)

      Delete
    4. ஓ வைரமகுடன் என்றெல்லாம் கூட இருக்கிறதா என்ன?!!!

      கீதா

      Delete
    5. பொன்னாடைன்னு சொல்றாங்க , ஏண்டா பன்னாடை ...எங்கடா பொன்னாடைன்னு கேட்க முடியுமா :)

      Delete
    6. ///நம்ம தகுதி என்னான்னு நினைச்சீங்க :)////
      அவ்வ்வ்வ்வ்வ் தெரியாம நினைச்சுப்புட்டேன் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுக்கோங்க ப.. ஜீ

      https://i.ytimg.com/vi/GNaAYKV5mIM/hqdefault.jpg

      Delete
    7. இந்த பூனையும் பால் குடிக்குமா என்று நினைக்க வைக்கும் ரேஞ்சுக்கு பூஜார் பாவமாய் இருப்பதால் மன்னிக்கப் படுகிறது .இருந்தாலும் வாலை சுருட்டிக்காதது சந்தேகத்தைத் தருகிறது :)

      Delete
    8. ஹா ஹா ஹா... அந்த சந்தேகம் எப்பவும் இருக்கக்கடவது:).

      Delete
    9. //மன்னிப்பு கேட்கும் பூஜார் ,இவர்தான் :)//
      ஹா ஹா ஹா மேலே இணைச்சாச்சோ?:) எதுக்கு என்னத்துக்கு எனத் தெரியாமல் ஊர் மக்கள்ஸ் எல்லோரும் என்னைத் தப்பா நினைச்சுக் கல்லெறியப் போகினமே:) ஹா ஹா ஹா:).

      Delete
    10. உங்களில் பாவம் செய்யாதவன் எவனோ ,அவனே பூஜார் மேல் முதல் கல்லை எறியக் கடவன்னு சொல்லிப் பிடுவோம் ,யார் கல்லெறிவார்கள் என்று பார்ப்பினம் :)

      Delete
    11. ஹா ஹா ஹா முதல்ல உங்களுக்கு கலேறியப் போகினம் ஓடிப்போய்க் கதிரைக்குக் கீழ ஒளிங்கோ..

      இலங்கைத் தமிழ்??:)பேசுறீங்களோ?:).. என்னோடு பேசும் எல்லோருக்கும் கொஞ்ச நாளில் தம் தமிழ் மறந்திடும்:).

      Delete
    12. வாட் கதிரை ?கழுதையைத் தெரியும் ,குதிரையைத் தெரியும் ,இரண்டுமில்லாம அதென்ன கதிரை ,சீக்கிரம் உங்க மியாவ் அகராதி போடுங்கோ :)

      Delete
  3. கடன் ஜோக் அனுபவப்பூர்வமான உண்மை!

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. உங்க அனுபவமும் அதேதானா :)

      Delete
  4. ‘கீப் இட் அப்’ அப்பு...!

    தூங்காதே தம்பி தூங்காதே...!

    பரம்பரை பரம்பரையா நாங்க ஜால்ரா செய்வதுதான் எங்க குலத் தொழில்...!

    ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லே...! வை ராஜா வை...!

    தொட்டிலில் அப்பன் படுத்துக் கிட்டானே...! எப்படியும் தொட்டில் குழந்தை திட்டத்தை ஒழிக்கப் போறானாம்...!

    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. upக்கு வேற யாரையாவது கொண்டு வரக் கூடாதா :)

      கடனைக் கொடுத்து விட்டு பின்னாலே ஏங்காதே :)

      செய்யலாம் தட்டத்தான் கூடாது :)

      ராங்கா போகும் படி விட்டதுமில்லை :)

      குடித்தே மதுவை எல்லாம் காலி பண்ணிடுவேன் என்றானாமே ஒருவன் :)

      Delete
  5. வணக்கம்
    ஜி
    நிம்மதி கிடைக்க வழி ஒன்று வந்து விட்டது...... ஜி....
    அனைத்தும் அருமைபடித்து மகிழ்ந்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இந்த வழியில் காலை வைத்து விட்டால் மானரோஷம் படக்கூடாது சரியா:)

      Delete
  6. கடன் ...ஆம் ஆம்!!! உண்மை உண்மை!!!

    காக்காய் பிடித்தல்/ சின்ஞ்சா ஹஹஹஹ்...

    ReplyDelete
    Replies
    1. உண்மையன்றி வேறொன்று அறியேன் பராபரமே :)

      பிடித்தலும் அடித்தலும் நமக்கு வராதே :)

      Delete
  7. தமிழ்மணம் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. மதுரைக்கு வந்து லேன்ட் ஆயிற்றா என்று தெரியவில்லை ஜி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ஃசேப்டியா லேன்ட் ஆயிடிச்சே :)

      Delete
  8. ரசித்தேன் அருமை

    ReplyDelete
    Replies
    1. ஜால்ரா சத்தம் காதை அடைக்குதா:)

      Delete
  9. ஆணுக்கு வளைகாப்பு - அதில்
    நற்சிந்தனை அழகாக இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. எரிவதை பிடுங்காமல் கொதிப்பது அடங்காதே :)

      Delete
  10. இப்போதெல்லாம் கடன் கொடுத்தவர்கள்தான் தூக்கம் இழந்து தவிக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. தவிக்கட்டும் ,நம்மை மாதிரி நல்லவர்களை நம்புறதில்லையே:)

      Delete
  11. கடன் தந்தார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று மாற்ற வேண்டியதுதான்.
    நன்று

    ReplyDelete
    Replies
    1. மல்லையாக்களுக்கு கடன் கொடுத்த வங்கி அதிகாரிகள் யாரும் கலங்குவதாக தெரியவில்லை ,சொந்தப் பணம் இல்லை என்பதால் ஆகியிருக்குமோ :)

      Delete
  12. Replies
    1. கடன் கொடுக்கிறதை நிறுத்திட்டு ,வாங்க ஆரம்பித்து விட்டேனே....சரிதானே ஜி :)

      Delete
  13. சால்ரா பரிசு ஹாஹாஹா....

    ReplyDelete