படித்ததில் இடித்தது :)
''மன்னர்கள் பாரி ,பேகன் ,சிபி ஆகியோர் இன்னைக்கு இல்லாம போனது நல்லதா போச்சா ,ஏன் ?''
'' அவங்க பண்ண காரியத்துக்கு,' மீம்ஸ்' போட்டு கழுவி கழுவி ஊத்தியிருப்பாங்களே !''
இடித்த செய்தி .....முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி!
மயிலுக்குப் போர்வையளித்த பேகன்!
''மன்னர்கள் பாரி ,பேகன் ,சிபி ஆகியோர் இன்னைக்கு இல்லாம போனது நல்லதா போச்சா ,ஏன் ?''
'' அவங்க பண்ண காரியத்துக்கு,' மீம்ஸ்' போட்டு கழுவி கழுவி ஊத்தியிருப்பாங்களே !''
இடித்த செய்தி .....முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி!
மயிலுக்குப் போர்வையளித்த பேகன்!
தன் தொடையை அறுத்து பருந்துக்கு அளித்த சிபி!
இப்படியும் டாஸ்மாக்கை மூடலாமே :)
''அந்த டாஸ்மாக் கடை ஷட்டர் பாதி மூடிய படியே இருக்குதே ,ஏன் ?''
''படிப் படியா மூடுறதா இருக்காங்களாம் !''
மனைவி காதில் எப்படித்தான் விழுமோ :)
''பையன்கிட்டே ,என்னைப் பற்றி என்ன சொல்லிக் கிட்டிருந்தீங்க ?''
''பாம்புக் காதுன்னா என்னான்னு கேட்டான் ...அதான் !''
வராக் கடன் 'மல்லையா 'க்களுக்கு மட்டும்தானா :)
''நான்தான் இந்த பாங்க் மேனேஜர் ,உங்களுக்கு என்ன வேணும் ?''
''வராக்கடன் கணக்கில் பத்து லட்சம் ரூபாய் கடன் வேணும் !''
மாமூல் படுத்தும் பாடு :)
''கொள்ளைக் காரங்களுக்கு போலீஸ்னா பயம் இல்லாமப் போயிடுச்சா,ஏன் ?''
'' நம்ம ஏரியாவிலே எந்தெந்த வீடு பூட்டிக் கிடக்குன்னு போலீஸ் ஸ்டேசனுக்கே போன்போட்டுக் கேட்கிறாங்களாமே !''
அதிகாலையில் எழுந்த சந்தேகம் :)
விடியலுக்கு வரவேற்பா ...
இரவுக்கு வழியனுப்பா ...
அதிகாலை நேரத்து பறவைகளின் கானம் ?
இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460991 செல் மூலமாய் 'தம'ன்னா வோட் போடுவோரின் வசதிக்காக :)
இப்படியும் டாஸ்மாக்கை மூடலாமே :)
''அந்த டாஸ்மாக் கடை ஷட்டர் பாதி மூடிய படியே இருக்குதே ,ஏன் ?''
''படிப் படியா மூடுறதா இருக்காங்களாம் !''
மனைவி காதில் எப்படித்தான் விழுமோ :)
''பையன்கிட்டே ,என்னைப் பற்றி என்ன சொல்லிக் கிட்டிருந்தீங்க ?''
''பாம்புக் காதுன்னா என்னான்னு கேட்டான் ...அதான் !''
வராக் கடன் 'மல்லையா 'க்களுக்கு மட்டும்தானா :)
''நான்தான் இந்த பாங்க் மேனேஜர் ,உங்களுக்கு என்ன வேணும் ?''
''வராக்கடன் கணக்கில் பத்து லட்சம் ரூபாய் கடன் வேணும் !''
மாமூல் படுத்தும் பாடு :)
''கொள்ளைக் காரங்களுக்கு போலீஸ்னா பயம் இல்லாமப் போயிடுச்சா,ஏன் ?''
'' நம்ம ஏரியாவிலே எந்தெந்த வீடு பூட்டிக் கிடக்குன்னு போலீஸ் ஸ்டேசனுக்கே போன்போட்டுக் கேட்கிறாங்களாமே !''
அதிகாலையில் எழுந்த சந்தேகம் :)
விடியலுக்கு வரவேற்பா ...
இரவுக்கு வழியனுப்பா ...
அதிகாலை நேரத்து பறவைகளின் கானம் ?
இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1460991 செல் மூலமாய் 'தம'ன்னா வோட் போடுவோரின் வசதிக்காக :)
|
|
Tweet |
ஆவ்வ்வ்வ்வ்வ்வவ் ,எனக்கு தூக்கம் தூக்கமா வருது ,யாராவது 1ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டுஊஊன்னு வரலாமில்லே :)
ReplyDeleteவந்துட்டேன் வந்துட்டேன் :) :)
ReplyDeleteஇதோ வந்து விட்டார் ,முதலில் வந்து வெற்றிக் கோப்பையை தட்டிச் சென்ற அவருக்கு வாழ்த்துக்கள் !
Deleteஆஆஆ தேங்கியூ ஜீ :)
Deleteஅதிகாலை கீதம் ஸூப்பர் ஜி
ReplyDeleteகில்லர் ஜீக்கு ஒரு 'ஹாய்'
Deleteஅது பூபாளராகம் என்றால் வரவேற்பு என்றுதானே அர்த்தம் :)
Deleteமுதலில் ஓட்டு போடுறேன். அப்புறமா படிக்கிறேன். :)
ReplyDeleteலிங்க் வசதியாக இருக்கும் ,இல்லையென்றாலும் மறந்து விடாதீங்க ஜி :)
Deleteமன்னர்கள் மீம்ஸ் - அட ஆமால்ல
ReplyDeleteபாம்புக் காது - ஹா ஹா
வராக்கடன் - இது புதுசால்ல இதுக்கு? :)
மாமூல் போலீஸ் - அடப்பாவிகளா?
அதிகாலை சந்தேகம் - ச்சோ ச்சுவீட் :)
மொத்ததுல கலக்கிட்டீங்க ஜீ
தெர்மகோல் திட்டத்தை போல் இவையெல்லாமே கிண்டலுக்கு உள்ளாகி இருக்கும்தானே :)
Deleteகண்ணுக்கு தெரியாத காது ரொம்ப ஷார்ப் தானே :)
ஏமாற்றிக் கொண்டு இருப்பவர்களுக்கு பழசு :)
எதுவாய் இருந்தாலும் அதிகாலை ஸ்வீட் தான் :)
அப்புறம் ஜீ, ரொம்ப நாளா கேட்கணும்னு நெனைச்சேன். உங்க பேருல இருக்குற KA அப்டீனா என்ன?
ReplyDeletek என்பது குடும்பப் பெயரின் முதல் எழுத்து ,a என்பது தந்தைப் பெயரின் முதல் எழுத்து :)
Deleteஅடுத்து ஒரு சந்தேகம் வருதா ஜி :)
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி!
ReplyDeleteமயிலுக்குப் போர்வையளித்த பேகன்!
தன் தொடையை அறுத்து பருந்துக்கு அளித்த சிபி!
இந்தக் காலத்தில்
இப்படி எவராச்சும் உதவும் உள்ளங்கள் இருப்பின்
கடவுளே நேரில வந்து கைகுலுக்குவாரே!
இந்த காலத்தில் மட்டுமல்ல ,இதுவரையிலும் இல்லையே :)
Deleteடாஸ்மாக் ஜோக் அதிகம் ரசித்தேன்!
ReplyDeleteஅரசு இந்த மாதிரி ஏமாற்றிவிடக் கூடும் என்று தெரிந்துதான் மக்கள் அடித்து நொறுக்குகிறார்களே:)
Delete//நம்ம ஏரியாவிலே எந்தெந்த வீடு பூட்டிக் கிடக்குன்னு போலீஸ் ஸ்டேசனுக்கே போன்போட்டுக் கேட்கிறாங்க//
ReplyDeleteதிருடப் போறவனுக்குப் பாதுகாப்புத் தராம இருந்தா போதும்!!!
திருடிக்கொண்டு போறதுக்கு கட்டைப் போடவில்லையே :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
ஷட்டர் பாதி மூடிய டாஸ்மாக் கடையை ரசிக்க முடியுதா :)
Deleteஅன்றைக்கு அவுங்க கொடுத்திட்டு போயிட்டாங்க... இன்றைக்கு நாம கஷ்டப்பட வேண்டியயிருக்கு...!
ReplyDeleteஅடி மேல் அடி வைத்தால்... அடியில் மட்டும் படட்டும் என்பதற்காகவா...?!
‘காது கொடுத்துக் கேட்டால் குவா குவா சத்தம்’ன்னு சொன்னேன்... அது தப்பா...?!
பேங்கில் வேலை பார்ப்பவர் எல்லாம் ‘தனக்கு மிஞ்சிதானே தானம் தர்மம்’ன்னு அதுமாதிரிதான் வாங்கிட்டு... இப்ப பாருங்க எல்லா சீட்டும் காலியா இருக்கு...!
போலீஸ் ஸ்டேசன் எல்லாம் போலி ஸ்டேசனாத்தானே இருக்கு...!
‘கத்தும் குயிலோசை எந்தன் காதில்விழ வேண்டும்...!’
த.ம. 8
என்னதான் ராஜான்னாலும் ஒரு அளவு வேணாம் :)
Deleteஅடியில் பட்டால் கதையே முடிஞ்சி போயிடுமே :)
நீ அண்ணன் ஆகப் போறேன்னு நேரடியா சொல்லி இருக்கலாமே :)
தாராளமா வாங்கிக்கோ ,கமிசனை வெட்டிட்டு :)
இன்னிக்கு நடந்த கூத்து ,ராணுவத்துக்கு ஆள் சேர்க்கிறேன்னு ஏமாற்றியிருக்கான் :)
கூவும் குயிலோசை வேண்டாமா :)
ரசித்தேன் ஜி...
ReplyDeleteபடிப் படியா மூடும் லட்சணம் தெரியுதா ஜி :)
Deleteமீம்ஸ் செம
ReplyDeleteமீம்ஸ் என்றால் என்ன அர்த்தம்னு கேட்கும் GMB அய்யாவுக்கு நீங்கள் விளக்கம் தந்தால் சரியாகயிருக்கும் சகோ :)
Deleteபாம்புக்கு காது இல்லேன்னா சொல்லிருப்பார்...????
ReplyDeleteஇல்லேன்னு எப்படி சொல்வார் ,பாம்பு மாதிரி மனைவியின் மகுடிச் சத்தத்துக்கு இவரே ஆடுறாரே :)
Deleteநாந்தேன்ன்ன்ன்ன்ன்ன்ன் லாஸ்ட்டூஊஊஊஊஊ:)... ஆனா வோட்டில் லாஸ்ட் இல்லையாக்கும்:)..
ReplyDelete////**யாராவது** 1ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டுஊஊன்னு வரலாமில்லே :)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இங்கின நீங்க தப்பு பண்ணிட்டீங்க பகவான் ஜீ.. சரி அடிச்சுக் கேட்டாலும் அது என்ன தப்பு எனச் சொல்லவே மாய்ட்டேன்ன்ன்ன்:).
துண்டு போட்டு இடம் புய்ப்பதெல்லாம் ஓல்ட்டூ பாஷன் ஆம்ம்.. நீங்க உங்கட உந்தக் கறுப்புக் கண்ணாடியைப் போட்டு வையுங்கோ எனக்காக.. லேட்டா வந்தாலும் முதலாவதா கொமெண்ட் போட வசதி எல்லோ எனக்கு...:)
ஏன் பகவான் ஜீ.. எங்கின போனாலும் வி ஐ பி க்களுக்கென.. றிசேவ் பண்ணி வைச்சிருப்பினம்.. இங்க மட்டும் ஏன்ன் நீங்க அப்பூடி எனக்கொரு முதலாம் இடம்:) றிசேவ்ல வைக்கக்கூடாது?:).. ஒண்ணும் அவசரமில்லை:) உங்கட கோபம் தணிஞ்சபின்பு வந்து பதில் போட்டால்ல்ல் போதும் ஹா ஹா ஹா:).
சூடா பாலைக் குடிக்க வெச்சுட்டேன் போலிருக்கு ,மன்னியுங்க பூஜார் ,நாக்கு வெந்திருந்தால் :)
Delete#யாராவது 1ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்டுஊஊன்னு வரலாமில்லே :)#
நல்லாப் பாருங்க ,உங்களுக்காகத்தான் கண்ணாடியை கழட்டி இடம் போட்டிருந்தேன் ,நீங்கதான் மிஸ்ஸிங் :)
pஅடித்ததில் இடித்தது எதுவெனப் புரியவே இல்லை.. சரி விட்டிடுவோம்ம்..
ReplyDelete//இப்படியும் டாஸ்மாக்கை மூடலாமே :) // மூடலாமே... எப்பூடியாவது மூடினால் போதுமே..
//அதிகாலையில் எழுந்த சந்தேகம் :)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரொம்ப முக்கியம்.. இதுக்குத்தான் சொல்றது அதிகாலையில் எழும்பாதீங்க என.. என் பேச்சை இங்கின ஆரு கேய்க்கிறா?:)..
ராஜாக்கள் செய்தது டூ மச் தானே ,அதுதான் இடித்தது :)
Deleteஎங்கே மூடினாங்க ,அரைகுறையா ஷட்டரை இழுத்துட்டு வியாபாரம் அமோகமா நடக்குதே :)
தினசரி உங்க அக்கப்போரை முடிக்கவே ஒரு மணி ஆயிடுது ,அப்புறம் எங்கே விடியவும் எழும்புறது :)
டாஸ்மாக் செம அஹஹ்ஹ்ஹ..அனைத்தும் ரசித்தோம் ஜி..
ReplyDeleteடாஸ்மாக்,நெடுஞ்சாலையில் வேண்டாம்னு நடு ஊரிலே திறப்பது நியாயமா ஜி :)
Deleteஅதிகாலை ராகம் அருமை!!
ReplyDeleteகீதா: தம சுத்துது. ஒரு வேளை தேம்ஸ் குக்குப் போய்ட்டு வரும் போல....வ்யுந்துச்சானு தெரியல ஜாமீ....ஆஹா தேம்ஸ் காத்து எனக்கும் அடிச்சுருச்சு!!!
ராகம் அருமைதான் ,ஆனால் எழத்தான் மனச்சில்லா:)
Deleteபூசார் புண்ணியத்தால் பலருக்கும் தேம்ஸ் காற்று அடிக்கிது இல்லையா :)
படிப்படியா மூடுறதுன்னா இதுதானா
ReplyDeleteமனைவிமார்கள் எல்லோருக்கும்
பாம்புக் காதுதான்
அதனால்தான் ஆண்கள் பல சமயங்களில்
மௌனத்தால் ஜெயிக்கிறார்கள்
மனம் கவர்ந்த நகைச்சுவைத் துணுக்குகள்
வாழ்த்துக்களுடன்...
நிலைமையைப் பார்த்தா அப்படித்தான் தோணுது :)
Deleteமௌனம் போல் இன்னொரு துருப்புச் சீட்டு இல்லவே இல்லை :)
டாஸ்மாக்கும் வாராக் கடனும் நல்லா இருந்துச்சு. (16)
ReplyDelete(16) ஆஹா ,இந்த பதினாறும் நல்லாயிருக்கே, மேடம் :)
Deleteஅதிகாலையில் எழுந்த சந்தேகம் ஜோக்காங்க ? கவிதை மாதிரி இருக்குதே !
ReplyDeleteஎல்லோரும் கேட்டுக்குங்க .... கவிஞரே சொல்லிட்டார் ,இனி நானும் ஒரு கவிஞன் ,கவிஞன் :)
Deleteஇந்த மீம்ஸ் என்றால் என்ன அர்த்தம்
ReplyDeleteஉடையுங்கள் முழுவதும் மூடப்படும்
பாம்புக்கு காது உண்டா, படத்தில் இருக்கும் பட்டன் காது போலா
வராக் கடன் என்று தெரிந்தா மல்லையாவுக்குக் கொடுத்தார்கள்
சில இடங்களில் திருட்டில் கால்காரருக்கும் பங்கு உண்டாமே
அதிகாலை நேரத்தில் பறவைகளின் ஓசை கேட்கிறதா
பிரபலமான ஒரு விஷயத்தைப் படம்போட்டுக் கலாய்ப்பதே மீம்ஸ் என்படுவது :)
Deleteஇன்றைய ட்ரென்ட் இதுதான் :)
இந்த கேள்வியை பாம்பை அறுத்து சாப்பிடும் சைனாக்காரரிடம் கேட்கணும் :)
தள்ளுபடி ஆகும் என்றுதானே பாதி பேர் லோனே வாங்குகிறார்கள் :)
கறுப்பாடுகள் இல்லாத இடமும் உண்டா :)
பதிவர்களுக்கு கேட்க பெரும்பாலும் வாய்ப்பில்லை:)
அனைத்தும் சுவை தேன்!
ReplyDeleteசுவை(த்)தேன் என்று எடுத்துக்கலாமா அய்யா:)
Delete