''அங்கே ஊழியர்கள் போராட்டம் நடக்குதே , ஓய்வு பெறும் வயதை 62 ஆக்க வேண்டாம்னு கோஷம் போடுறாங்களா ?''
''நிரந்தர வேலைன்னு சொன்ன பிறகு 62 வயதில் ஓய்வு தருவது நியாயமான்னு கேட்கிறாங்க !''
''நிரந்தர வேலைன்னு சொன்ன பிறகு 62 வயதில் ஓய்வு தருவது நியாயமான்னு கேட்கிறாங்க !''
|
|
Tweet |
அதுசரி...!!!
ReplyDeleteமத்திய அரசு ஊழியர்களின் ஒய்வு வயதை 62 ஆக உயர்த்த இன்று மசோதா தாக்கல் செய்கிறதாம் ,,,நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் இது சரியான முடிவாகத் தெரியவில்லை ...கிழட்டுச் சிங்கங்கள் இப்படி போராடினாலும் ஆச்சரியமில்லை !
Deleteநன்றி
நியாயமான கோரிக்கைதான்
ReplyDeleteநடித்துக் கொண்டிருக்கும் போதே உயிர் போய்விட வேண்டுமென்று நடிகர்கள் சொல்வதைப் போல , உயிர் போகும் வரை சர்வீசில் இருக்கணும்னு நினைக்கிறது ,அடுத்த தலைமுறைக்கு பாதிப்பைதான் தரும் !
Deleteநன்றி
என்ன காரணம் தெரிந்தால் சிரிப்பாகவருகிரது... இன்றைய வாக்காளர்களில் 24 சதவீதம் இந்த வயதினர் இவர்களின் ஓட்டுக்களுக்கு வலை வீசும் முன் பார்த்து இருக்கவேண்டியது வேலை இல்லா பட்டதாரிகள் 54 சதவீதம் ... 24 பெரிதா 54 பெரிதா என தெரியாத மத்திய அரசு ... இன்னும் என்ன என்ன கூத்துக்கள் வருமோ காத்திருந்து பார்ப்போம் .
ReplyDeleteஅதுதானே ,இளைய தலைமுறை வாக்காளர் அதிகரித்து இருக்கும் சூழ்நிலையில் இப்படி அறிவிப்பை வெளியிட்ட நோக்கம் என்னவாக இருக்கும் ?ஒருவேளை ,அடுத்து ஆட்சிக்கு நாம் வரப் போவதில்லை ,வருபவர்கள் சம்பளம் தர இயலாமல் மல்லு கட்டட்டும் என்று நினைத்து விட்டார்களா ?
Deleteநன்றி
ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்தணும்
ReplyDeleteஏனென்றால்
சென்னை மெரீனா கடற்கரையில
அறுபதுக்காரர் நடைபயின்று
ஆயிளை நீட்டிக்கொள்வதாலே...
பிஞ்சுகள் பாடு திண்டாட்டமோ?
ஓய்வு பெறும் வயதை 55 ஆக்க
போராடுறாங்களோ...
மேலே "ஆயிளை" என்பதை "ஆயுளை" என்று கருதுக.
Deleteமெரினாவில் அவர்கள் நன்றாக நடக்கட்டும் ,அவர்களால் ஆபீஸில் துரிதமாக வேலை செய்ய முடியுமா ?
Deleteநன்றி
நியாயம்தானே.......
ReplyDeleteஅரசியல்வாதிகள் மட்டும் சாகுறவரை பதவியில் இருக்கும் போது
அரசு ஊழியர்கள் இருக்கக்கூடாதா....?
அரசியல்வாதிகள் மக்களுக்கு நேரடியாக ஆக வேண்டிய காரியம் ஒன்றுமில்லை ,அவர்கள் செய்வதுமில்லை !
Deleteகம்ப்யூட்டர் கீயை நடுக்கத்துடன் தடவி தடவி வேலை செய்கிறார் ஒருவர் ,வரிசையில் நாம் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அவர்மீது எரிச்சல் வரத்தானே செய்யும் ?இளரத்தம் வேலை செய்கிற வேகம் முதுமைக்கு வருமா ?
நன்றி
நன்றி
ReplyDelete(அ)நியாயமான போராட்டம்.
ReplyDeleteஉண்மைதான் அவர்களுக்கு நியாயமான போராட்டம் ,நமக்கு ,,,,?
Deleteநன்றி
அர்த்தமற்ற போராட்டம் .இளையவர்களே வேலை தேடி அலையும் போது
ReplyDeleteதொடர்ந்தும் நடுங்கி நடுங்கி சாதிக்க என்ன இருக்கு ?..
ஒரு பெருசு வாங்கும் சம்பளத்தில் நாலு இளசுகளை வேலைக்கு அமர்த்தலாம் ,அவர்களும் வாழ்க்கையில் செட்டில் ஆக உதவுமில்லையா ?
Deleteநன்றி
நல்ல ஜோக்! பணி ஓய்வு பெறும் வயது 60 என்பதுதான் சரி! அதற்கு மேல் என்பது ஊழியர்களுக்கு சம்பளத்தை விட மருத்துவ செலவுகளுக்கே நிர்வாகம் அதிகம் செலவிட வேண்டி இருக்கும்.
ReplyDeleteஅரசியல்வாதிகளுக்கும் அரசியல் ஓய்வு பெறும் வயதை நிர்ணயித்தால் நல்லது!
அறுபது என்பதுக்கூட அதிகம்தான் ,,இந்த வயதில் வேலைக்கு செல்வது கணவனுக்கு நிம்மதியா ,மனைவிக்கு நிம்மதியா என்று பட்டிமன்றம் நடத்தலாம் !
Deleteமகாத்மாவின் வாரிசுகளுக்கு ஓய்வு கொடுத்தால் நாடு என்னாவது ?
நன்றி
த.ம.7
ReplyDeleteஇவங்கள்ள நிறயப் பேரு ரிடையர் ஆன பிறகு பழைய தலைமுறை சேனல் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தாங்களாம். மாட்டிக்கிடுவோம்னு அரசு பயந்துருச்சு.
ReplyDeleteகோபாலன்
இதுக்கு பயந்து போய்த்தான் ஒரு மந்திரி ,மிடீயாவை நசுக்குவோம்னு சொல்லி இருக்காரா ?
Deleteநன்றி
நீட்டிக்கலாம் தவறில்லை! ஏனென்றால் இப்போதெல்லாம் பெரியவர்கள் மிகவும் ஆரோக்கியமாகவும் இளைஞ்ர்கள் மிகவும் எளிதில் சோர்வடைபவர்களாகவும் இருப்பதால்!
ReplyDeleteத.ம.
எந்த விஷயத்தில் என்று சொல்லுங்கள் இளைஞர்கள் அதில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்!
Deleteநன்றி
நல்லாத்தான் கேக்குறாங்க!
ReplyDeleteஇந்த கோரிக்கையின் பின்னணியில் மனைவிமார்கள் இருப்பதாகச் சொல்லப் படுதே.உண்மையாக் இருக்குமோ ?
Deleteநன்றி
எதிலும் அரசியல்......
ReplyDeleteஇதிலும்!
அது சரி ,எங்கே இல்லை அரசியல் ?
Deleteநன்றி
அரசே. உங்கள் இந்தப் பணி இன்னும் தொடரட்டும். முதியோர் இல்லங்கள் மூடப்படட்டும்.
ReplyDeleteபேச்சாளர் கோபாலன்
ஆகா ,உங்கள் நிதி சீர்திருத்த நடவடிக்கை தொடரட்டும் மன்னா !
Deleteநன்றி