19 February 2014

மழைக் குறைய காரணம் கண்டுபிடித்த மதுரை மேதை !

கடந்த ஞாயிறு அன்று மதுரையில் ஒரு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது ...
எதற்காக ?...
ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என அறிவித்து தண்டிக்க வேண்டும் என்பதற்காகவா...
கச்சத்தீவு  மீட்கப்பட வேண்டும் என்பதற்காகவா ...
இலங்கைச் சிறையில் இருக்கும் மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவா ...
இப்படிப்பட்ட கோரிக்கைக்காக அல்லவாம் ...
பாரம்பரியமாக நரியை பரியாக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்று வருகிறதாம் ...
அதில் உண்மை நரியை பயன்படுத்த காவல்துறை தடை விதித்து விட்டதாம் ...
 பொய் நரியை பயன்படுத்தியதால் மழைப் பொய்த்துவிட்டதாம்...
(என்னே ஒரு அரிய கண்டுபிடிப்பு பாருங்கள் ,புவி வெப்பமயம் ஆவதால் இயற்கைச் சுழற்சி மாறிவருகிறது என்பதைச் சொல்வோரெல்லாம் தலைகுனியனும்!)
ஆகவே உண்மை நரியை பயன்படுத்த அனுமதி தரணும்னு தான்  கையெழுத்து இயக்கமாம் ...
சரி ,உண்மை நரியை உண்மை பரியாக்கி காட்ட இவர்களால் முடியுமா ?
இப்படி ஒரு மூட நம்பிக்கையை வளர்க்கும் இயக்கத்திற்கு கௌன்சிலர் ஒருவர் தலைமையாம் ...
இவர்களால் வர வேண்டிய மழையும் வராது போலிருக்கே !





28 comments:

  1. இப்படியுமா ஒரு நம்பிக்கை - கொடுமை...!

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கைக்கும் ஒரு வரையறை இல்லையா ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. என்ன சிரிப்பு ,நரி எப்படி பரி ஆகுமென்றா ?
      நன்றி

      Delete
  3. எத்தனை பெரியார் வந்தாலும் இதுகள் திருந்தாது.

    ReplyDelete
    Replies
    1. பெரியார் ஆயிரம் ஆண்டுக்கு மேல் வாழ்த்திருந்தாலும் இவர்களைத் திருத்த முடியாதுதான் !
      நன்றி

      Delete
  4. இப்படியும் சிலர் கிளம்பிட்டாங்களா

    ReplyDelete
    Replies
    1. இன்னும் கொஞ்ச பேர் இருக்காங்க ,கழுதைக்கு கல்யாணம் பண்ணி வச்சு மழைப் பொழிய வைப்பாங்க !
      நன்றி

      Delete
  5. நல்ல பகுத்தறிவு சுவை

    ReplyDelete
    Replies
    1. மழைதான் ஏமாத்துதுன்னா இவர்கள் ஏமாற்றுவதில் சமத்தான நரியை பரி ஆக்குவார்களாமே?
      நன்றி

      Delete
  6. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! தமிழனின் விஞ்ஞான வளர்ச்சி?!! புல்லரிக்க வைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,இம்மாதிரி திருவிளையாடலை வேறெங்கும் பார்க்க முடியாது !
      நன்றி

      Delete
  7. நாட்டுக்கு இது ரொம்ப முக்கியம் :))நீங்கள் சொல்வது போல்
    வர இருக்கும் மழையும் இதனால் வராது சகோதரா .

    ReplyDelete
    Replies
    1. மனிதன் இயற்கைக்கு விரோதமாய் செய்யக்கூடாத வேலைகளை செய்வதால் மழை இல்லை ...இதில் இப்படி ஒரு திருவிளையாடல் தேவையா ?
      நன்றி

      Delete
  8. இதுலே எத்தன பேரு கையெழுத்து போட்டானுங்கன்னும் சொல்லுங்கஜி!
    அத்தன பேரயும் ராஜஸ்தான் பாலைவனத்துலே நரியோட விட்டுவிட்டு வந்தாத்தான் சரிபடுவானுங்க!

    ReplyDelete
    Replies
    1. அவர்களின் எண்ணிக்கை அனேகமா நாலு ரயில் கொள்ளளவு இருக்கும்னு நினைக்கிறேன் !
      ஸ்பெசல் டிரெயின் ஏற்பாடு பண்ணிவிட வேண்டியது தான் !
      நன்றி

      Delete
  9. எது மூட நம்பிக்கை?
    பெரிய புராணத்தில் உள்ள நரியைப் பரியாக்கியது என்ன நம்பிக்கை.; கடவுள் நம்பிக்கை! இந்த நம்பிக்கையை ஆத்திகர்கள் கொண்டாடலாம்; அதை எதிர்த்து கேள்வியும் கேட்கலாம்.

    ஆனால், கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கேள்வி கேட்டால், "எங்க மனது புண்படுது என்ற கீறல் உழுந்த ராகம்"

    [[[உண்மை நரியை பயன்படுத்த காவல்துறை தடை விதித்து விட்டதாம் ...
    பொய் நரியை பயன்படுத்தியதால் மழைப் பொய்த்துவிட்டதாம்.]]

    ஏன் இது தெய்வ குத்தம் தானே! தெய்வம் எப்படி வேண்டுமானலும் தண்டிக்கும்...மழை பெய்யாது...சுனாமி வரும்; வெயில் ஆளை கொள்ளும்...

    புராணத்தில் சொன்னபடி நரியை வைத்துப் பாருங்கள் ; மழை பெய்யும்; பெரியபுராணத்தை நம்பாத காவல் துறையினர் மீது ஆத்திகர்கள் வழக்கு போடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களே சொல்லி விட்டீர்கள் ,அது நடந்தது புராணத்தில் என்று !
      நிஜத்தில் இன்னும் தொடர்வதால் மழைப் பெய்யுமா ?

      பூசாரி என்று சொல்லிக்கொண்டு ஒருவர் கருவறையிலே பக்தைகளை மயக்கி சல்லாபம் செய்கிறார் ,இன்னொருவர் ஆன்மீகத் தேடலை நடிகையின் உடலில் செய் கிறார் .அப்போது எல்லாம் புண் படாத மனது இப்போது ஏன் புண் படப்போகிறது ?

      எந்த தெய்வம் இம்மாதிரி திருவிளையாடல்களை வேலைவெட்டி இல்லாமல் ரசிக்கிறதோ ?
      கருணையே வடிவான தெய்வம் இப்படி மனிதனை தண்டிக்குமா ?
      வழக்கு போடட்டும் ,நியாயம் ஜெயிக்கும் .அந்த தீர்ப்புக்கு காத்திருப்போம் !
      நன்றி

      Delete
  10. அடக் கடவுளே! இதுவும், உம் திருவிளையாடலா!

    ReplyDelete
    Replies
    1. நவீன திருவிளையாடலாய் இருக்கும் !
      நன்றி

      Delete
  11. இது என்னய்யா கொடுமை!? விலங்கு ஆர்வலர்கள் என்ன செய்கின்றார்கள்? ஜி?!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் ஆட்சேபம் தெரிவித்த விபரம் தெரியவில்லை ,ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உண்மை நரியை அனுமத்திக்கவில்லை என்பது ஆறுதலான செய்தி !
      நன்றி

      Delete
  12. இவர்களால்தான் மதுரையில் நாலு நாளுக்கு ஒருதடவை தண்ணீர் வருது......

    ReplyDelete
    Replies
    1. அதை மறைக்கத்தான் இப்படிப்பட்ட திருவிளையாடல்களை அரங்கேற்றம் செய்கிறார்கள் போலும் !
      நன்றி

      Delete
  13. Replies
    1. இதை பார்த்து சிரிக்க முடியாது தான் ,சிந்திக்க வேண்டிய விஷயமாச்சே!
      நன்றி

      Delete