8 February 2014

ஜோதிடருக்கே நேரம் சரியில்லை என்றால் ?

''சித்த மருத்துவர் ஜோதிடரும் ஆனார் சரி ,ஜெயிலுக்கு ஏன் போனார் ?''
''ஜலதோஷ நிவர்த்தி மாத்திரை மாதிரியே ,என் கண்டுபிடிப்பான தோஷ நிவர்த்தி மாத்திரையும் வேலை செய்யும்னு ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டாராம்  !''

25 comments:

  1. வணக்கம்
    தலைவா...

    சரிதான்..... அவ்வளவுதான் வாழ்க்கை.......
    த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ செய்துவிட்டு விரைவில் வெளியே வர வாய்ப்பு இருக்கு !
      நன்றி

      Delete
  2. கொஞ்சம் கூடுதலாகத்தான் போயிட்டாரு
    அடுத்து யோசிச்சு சரிபண்ணிடுவாருன்னு
    நினைக்கிறேன்
    ஏன்னா மாற்றி யோசிக்கிறவங்க ஜெயிக்கிற
    காலமில்ல இது இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. (ஏ)மாற்றி யோசிக்கிறவங்க காலம்தான் இது !
      நன்றி

      Delete
  3. ஜெயில்லேருந்து வெளில வரதுக்கு பரிகாரம் கண்டு பிடிக்கலையா!

    ReplyDelete
    Replies
    1. பாவம் அவர் ஜெயிலில் கிடக்கிறார் ,உங்களுக்கு பரிகாசமா இருக்கா ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. நான் யோசிக்கிற மாதிரியே உள்ளே போனவரும் யோசிச்சா வெளியே வந்திடுவாரோ ?
      நன்றி

      Delete
  5. +1
    அதானே நடக்குது? மாத்திரைக்கு பதில் தீர்த்தம்!
    விரைவில மாத்திரை வந்து விடும்!

    ReplyDelete
    Replies
    1. தீர்த்த மாத்திரை என்பார்களோ ?
      நன்றி

      Delete
  6. நல்ல அருமையான ஜோக்!!!

    //ஜெயில்லேருந்து வெளில வரதுக்கு பரிகாரம் கண்டு பிடிக்கலையா!// சொல்ல நினைத்தது சொல்லிவிட்டார் ஸ்ரீராம் அவர்கள்!

    "தோஷ" நிவர்த்தி கண்டுபிடித்து ஏமாற்றியவருக்கு, வெளியில் வரவும் வழி கண்டுபிடிக்கத்தெரியாமலா போகும்! "கால" நிவர்த்தி என்று புதிதாக பெயர் வைத்தாலும் வைக்கலாம்!

    த.ம.+

    ReplyDelete
    Replies
    1. கலிகால நிவர்த்தின்னு சொல்லி ஏமாற்றலாம் ,ஏமாற்றுபவன் இருக்கையில் அவருக்கென்ன கவலை ?
      நன்றி

      Delete
  7. இதையெல்லாம் நம்பும் கூட்டம் சிறிது குறைந்து உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ குறைந்தால் சரி !
      நன்றி

      Delete
  8. ஏமாற்றிக் கோடிக்கணக்கில் சம்பாதித்தது
    சிறைக்குச் செல்வதற்கா?

    ReplyDelete
    Replies
    1. அங்கேயும் போய் 'உல்லாசம் உலகம் எனக்கே சொந்தம் 'னு பாடிகிட்டு இருக்காரே !
      நன்றி

      Delete
  9. ஏமாற்றாதே ஏமாறாதே

    ReplyDelete
    Replies
    1. புரட்சித் தலைவர் பாடிய அந்த பாடல் காலத்தை வென்று நிற்கிறதே !
      நன்றி

      Delete
  10. உங்களுக்கென்று ஒரு பாணி. அட இது கூட நல்லாயிருக்குங்கோ.

    ReplyDelete
    Replies
    1. உங்க பாணியில் எழுதினால் புத்தகம் ,மின்னிதழ் ஆகிவிடுகிறது பாஸ் ,என் எழுத்து வெறும் டைம் பாஸ் தான் !
      நன்றி

      Delete
  11. எப்படியெல்லாம் யோசிக்கறாங்க! :)

    ReplyDelete
    Replies
    1. ஏமாற்றி பணம் சம்பாதிக்கத்தானே ?
      நன்றி

      Delete