தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை 2014/15 ஆண்டு ரூபாய் 26 295 கோடிக்கு விற்கப் படும் என்று கூறியிருக்கிறார் ...
தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர்
அவர்கள் ...
இது மிகப் பெரிய உலக சாதனை என்று தண்ணி
அடிக்காமல் கொண்டாட்டம் போட நினைக்கும் நேரத்தில் ...
இன்னும் ஏன் தமிழகத்தில் ஒரு சம்பத்
பால் தேவி தோன்றாமல் இருக்கிறார் என்று புரியவில்லை ...
அவருடைய 'குலாபி கேங் 'அமைப்பைப் பற்றி இங்கே விழிப்புணர்வு
இல்லாதது ஏன் என்றும் புரியவில்லை ...
அந்த பெண்மணி உத்தரபிரதேச கிராமத்தில்
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ...
பன்னிரண்டு வயதில் திருமணமாகி .இருபது
வயதுக்குள் ஐந்து குழந்தைகளைப் பெற்றவர் ...
தினசரி குடிகார கணவனின் அடி தாங்காமல்
நொந்து கிடந்தார் ...
இதைப் போன்றே பல பெண்களும் இருப்பதைக்
கண்டு வெகுண்டு எழுந்தார் ...
பத்து பெண்களை சேர்த்துக் கொண்டு
அனைவருக்கும் பிங்க் நிற சேலை அணிவித்தார்
...
கையில் பிரம்புகளுடன் கிளம்பிய அவர்கள்
...
குடிவெறியில் ஆட்டம் போடும்
கணவன்மார்களை பின்னி எடுத்து விட்டார்கள் ...
பத்து பெண்கள் இன்று பல ஆயிரம்
பெண்களுடன் ...
UP மாநிலம் முழுவதிலும் இந்த அமைப்பு
பரவியுள்ளது ...
லஞ்ச பேர்வழிகள் ,அநியாயம் பண்ணும் போலீஸ்காரர்கள் ,சமூக விரோதிகள் மேலும் இவர்களின் பிரம்படி விழுகிறது ...
''காப்பாற்ற கிருஷ்ணபரமாத்மா வருவார்
என்றிருந்தால் கிராமத்து பெண்கள் அம்மணமாய் தான் இருக்கணும் ,காக்கவேண்டியவர்களும் ,சட்டமும் பெண்
களை பாலியல் பண்டமாகத்தான் பார்க்கிறது ,எங்களை சட்டம்
காப்பாறாதபோது ,நாங்கள் எதற்கு சட்டத்தை மதிக்கணும் ?''...
என்று கர்சிக்கும் இவரை மையப் படுத்தி
பிங் கேங் படம் தயாராகிறதாம் ...
படத்தின் நாயகி 'சோளிக்குள்ளே என்ன இருக்கு 'பாடல் புகழ்
மாதுரி தீட்சீத்தாம் ...
அவராவது பிங்க் நிற சோளிக்குள் இருக்கும்
பெண்ணின் வீரத்தை ...
குடிகார கணவன்களுக்கு புரிய வைத்தால்
சரி !
மேலும் விபரம் அறிய ...http://www.gulabigang.org/?page_id=196
|
|
Tweet |
எங்கும் இது போல், நல்லது நடந்தால் சரி...
ReplyDeleteவருகிற உலக மகளிர் தினமன்று வெளியாக உள்ள பிங்க் கேங் திரைப்படம் ,பெண் உரிமைக்காக போராடும் சம்பத் பால் தேவியை கொச்சைப் படுத்தாமல்
Deleteஇருந்தால் ,அது அவருக்கு பெருமை சேர்க்கும் !
நன்றி
சம்பத் பால் தேவி பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
ReplyDeleteஇவரது புகழ் வெளிநாடுகளிலும் பரவி, இந்திய நார்வேஜீய பெண்ணான நிச்ஷேதா ஜெயின் 2 ௦ 1 2 ல் ஒரு விவரணப் படத்தை வெளியிட்டு உள்ளார் ,மேலும் ..உலக அளவில் இந்தியாவில் இருந்து விழிப்புணர்ப்பு ஊட்டும் பெண்மணிகளில்
Deleteஒருவராகவும் இவர் தேர்வு செய்யப் பட்டுள்ளார் !
நன்றி
பெருகட்டும் இது போன்றோர் எண்ணிக்கை
ReplyDeleteநிச்சயமாக பெருகத்தான் செய்யும் ..எத்தனைக் காலம்தான் குட்ட குட்ட குனிந்துக் கொண்டே இருப்பார்கள் ,குட்டன் ஜி?
Deleteநன்றி
பாரதி கண்ட புதுமைப் பெண்ணை வாழிய வாழிய என்றே வாழ்த்துகிறது
ReplyDeleteமனமும் .அருமையான பகிர்வு! மன்னிக்கவும் சகோதரா இதுவரைத்
தங்களின் தளத்தில் என்னை இணைத்துக் கொள்ளத் தவறி விட்டேன்
இன்று தான் தெரிய வந்தது இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம்
தங்களின் ஆக்கத்தையும் வாசிக்கத் தவற மாட்டேன் .மிக்க நன்றி
பகிர்வுகளுக்கு .
மன்னிப்பா ?அது என் அகராதிலேயே இல்லாத வார்த்தை என்று நான் அலப்பறை செய்ய விரும்பலே ,பலரும் பெயரைப் பார்த்து ஜோக்காளி வெறும் காமெடி பீஸ் என்ற நினைப்பில் நீங்களும் வராமல் இருந்து இருப்பீர்கள் ...இந்த பதிவின் தலைப்பைப் பார்த்துகூட சிலர் முகம் சுளிக்ககூடும் ,நல்ல விஷயத்தை தேன்தடவிய மாத்திரைப் போல் தருவதில் தவறில்லை என நினைக்கிறேன் !
Deleteநன்றி
பின்க் வேட்டி விரைவில் தேவைப்படும், இன்றைய டாஸ்மாக் கடையின் வரிசைகளில் நிற்பவர்களை பார்க்கும்போது!
ReplyDeleteபிங்க் சிட்டி என்று ஜெய்ப்பூரை சொல்வார்கள் ,அங்கே கூட இந்த அநியாயம் நடக்காதுன்னு நினைக்கிறேன் !
Deleteநன்றி
நல்லது நடந்தால் சந்தோஷமே.
ReplyDeleteபெண்டாட்டி கையால் குடிகாரன் அடி வாங்குவது பென்டாஸ்டிக் !
Deleteநன்றி
பிரமாதம்! நம் ஊரில் இன்னும் அந்த அளவு யாரும் பொங்கி எழவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது!
ReplyDeleteதமிழகத் தாய்குலம் ரொம்ப பொறுமைசாலிங்க போலிருக்கே !
Deleteநன்றி
சம்பத் பால் தேவி-உங்க மூலமே முதல் அறிந்த நல்ல தகவல்.
ReplyDeleteகாலத்தின் தேவை ,ஒவ்வொரு குடிகாரன் வீட்டிலும் சம்பத் பால் தேவி இனி தோன்றுவார் !
Deleteநன்றி
இப்படிப்பட்ட பெண்கள் இருந்துவிட்டால் குடியை அறவே ஒழித்து விடலாமோ?! நல்ல பகிர்வு
ReplyDeleteகுடிகாரன் பெண்டாட்டியை அடிக்கிறதை வேணா நிறுத்துவானே தவிர குடிக்கிறதை நிறுத்துவானா ?
Deleteநன்றி
தம.
ReplyDeleteநன்றி
Deleteஎனக்கென்னவோ நம்ப பொண்ணுங்க slow ன்னு தோனலை. வீட்டுக்குள்ள silent revolution நடந்திட்டிருந்தாலும் இருக்கலாம்னு தோனுது. ஒருவேளை அதனாலத்தான் நம்ம ஆளுங்க வீட்டுக்கு போக பயந்துட்டு நல்லா குடிமகன்களா இருக்காங்களோ என்னவோ...?
ReplyDeleteநல்லதைச் சொல்லி யிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
அமைதிப் புரட்சி வெற்றி அடைந்தால் சரிதான் !
Deleteநன்றி
ஆ............ஆ ....அப்படியா? லத்தி அடி குடுக்கிறவங்களக்கே.........பிரம்பு அடியா..........ஆ.....
ReplyDeleteஅன்பாலே திருத்த முடியலேன்னு கம்பாலே திருத்துறாங்க போலிருக்கே !
Deleteநன்றி
அன்பு கம்பு வம்பு
ReplyDeleteஒரு ரைமிங் தெரியுதே?
இருக்காதா பின்னே ,டைமிங் காமெடின்னா ரொம்ப பிடிக்குமே !
Deleteநன்றி
"''காப்பாற்ற கிருஷ்ணபரமாத்மா வருவார் என்றிருந்தால் கிராமத்து பெண்கள் அம்மணமாய் தான் இருக்கணும் ,காக்கவேண்டியவர்களும் ,சட்டமும் பெண் களை பாலியல் பண்டமாகத்தான் பார்க்கிறது ,எங்களை சட்டம் காப்பாறாதபோது ,நாங்கள் எதற்கு சட்டத்தை மதிக்கணும் ?''...
ReplyDeleteஎன்று கர்சிக்கும் இவரை மையப் படுத்தி பிங் கேங் படம் தயாராகிறதாம்" என்ற பதிவே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்றால் திரைப்படம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமென நம்பலாம்.
அந்த ஹிந்தி படத்தை தமிழில் டப் செய்வார்களா .நம் கோலிவுட் புண்ணியவான்கள் ?ஏன் கேட்கிறேன் என்றால் பிறமொழி நல்ல படங்கள் தமிழில் வருவதில்லை என்பதால்தான் !
Deleteநன்றி
வாழ்க அவர்கள் வீரம் !வளர்க நாளும் நாடெங்கும்!
ReplyDeleteகணவன்மார்கள் நெஞ்சிலே ஈரமின்றி நடந்து கொண்டால் மனைவிமார்களுக்கு வீரம் வரத்தானே செய்யும் ?
Deleteநன்றி
குலாபி கேங் மற்றும் சம்பத் பால் தேவி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்..நீங்கள சொல்வதுசரிதான்..தமிழகத்திலும் ஒன்று வந்தால் பரவாயில்லை..படம் பற்றியத் தகவலுக்கு நன்றி!
ReplyDeleteநம் மாநிலப் பெயரைகூட குடிகாரர்கள் 'தேன் மதுரத்தமிழ்நாடு 'என்று மாற்றக் கோரிக்கை வைக்கும் சூழ்நிலை இருப்பதால் 'குலாபி 'கேங் கும் வரத்தானே செய்யும் ?
Deleteநன்றி
சாமி! தாங்கலே! பத்தி பிரிச்சு பட்டி பார்த்து பாரா (paragraph) பாராவா எழுதுங்கள்...இடமா இல்லை? இது என்ன கொடுமை இப்படி கண்ணுக்கு....
ReplyDeleteadvanced தமிழ்மணம் +1 வோட்டு ---மாற்றி எழுதுவர்கள் என்ற நம்பிக்கையில்
டாக்டருக்கு ரொம்ப சிரமம் கொடுத்துட்டேன் போலிருக்கு ,மன்னிக்கணும் !
Deleteடாஸ்மாக்கில் தொடங்கி உத்தரப் பிரதேசம் போய் பாலிவுட்டுக்கு வந்து மேட்டரைக் முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதால் இந்த குளறுபடி ...
என்றும் இந்த சீக்காளிக்கு ..தப்புதப்பு ...ஜோக்காளிக்கு டாக்டர் தயவு வேண்டும் என்பதால் சரி செய்து விட்டேன் ...இதற்கு பாராட்டாய் ,நாளை ஜோக்காளியில் வரப்போகும் வள்ளுவருக்கு வோட்டு போடும்படி கேட்டுக்கிறேன்!
நன்றி
இது போன்ற பெண்கள் ஒவ்வொரு ஊருக்கும் தேவை......
ReplyDeleteபிங் கேங் அமைப்பு ஊர்தோறும் வளரும் என்பதில் சந்தேகமே இல்லை !
Deleteநன்றி
This looks better idea. Ladies get a cane and start. Start the music.
ReplyDeleteA.R.ரகுமான் இசையில் PINK GANG என்று இசை ஆல்பத்தை வெளியிட்டு விழிப்புணர்வு உண்டாக்கலாம்!
Deleteநன்றி