15 March 2014

அவள் மேனி எழிலின் ரகசியம் இதுதானோ ?

''உப்பில்லா சோப்பு வேணுமா ,அப்படின்னா என்னம்மா ?''
''துணிக்கு போடுறது  உப்பு சோப்புன்னா, மேனிக்குப் போடுறது உப்பில்லா சோப்தானே?''

32 comments:

  1. கடை - காலையிலேயே களை கட்டி விட்டது!...

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கு வியாபாரம் ஓஹோதான் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. உங்க பேஸ்ட்டிலே உப்பு இருக்காங்கிற விளம்பரத்தைப் பார்த்து அதே பொண்ணு ,உப்புள்ள பேஸ்ட் கொடுங்க என்று கேட்டதும் கடைக்காரர் நொந்துதான் போயிட்டார் !
      நன்றி

      Delete
  3. :))))))))

    எனக்கு நினைவு வந்த ஒரு பழைய ஜோக்!

    ஒரு பழைய வி கே ராமசாமி ஜோக் : "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே"

    வி கே ஆர் : "அப்ப உப்புள்ள பண்டம் தொப்பையிலா?"


    ReplyDelete
    Replies
    1. இதுவும் நல்லா இருக்கே ! உப்பு பல பேரை பலவிதமா யோசிக்க வைக்கும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  4. ஹாஅஹாஹஹா கடைக்காரர் குழம்பி இருப்பாரே! பாவம்!

    ReplyDelete
    Replies
    1. கேட்டது சின்னப் பொண்ணுங்கிறனாலே பொறுமையா இருக்கார் !
      நன்றி !

      Delete
  5. எல்லாம் விளம்பரங்களின் அலங்கோலம்
    நாளை யாராவது உப்பு இருக்கிற பவுடர் கேட்டாலும் ஆச்சரியமில்லை

    ReplyDelete
    Replies
    1. பேஸ்ட்டில் உப்பு பல்லிற்கு கேடு என்பார்கள் ,இப்போ உப்பு இல்லாத பேஸ்ட்ட்டா..அது வேஸ்ட் என்பதுபோல் விளமபரம் ..மக்களை மடையனாக்கி நல்லா காசு பார்க்கிறார்கள் !
      ஏற்கனவே பௌடரில் கூல்கூல் என்று ஐஸை கலந்து விட்டார்கள் ,அடுத்து நீங்கள் சொல்வதுபோல் வரும் !
      நன்றி

      Delete
  6. Replies
    1. கேட்டதில் தப்பேயில்லே,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  7. உப்புள்ள பண்டம் தொப்பையிலா! :)))) ஸ்ரீராம் சார் கலக்கறீங்க....

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா போலிஸ் தவிர வேறுயாரும் உப்பை போட்டு சாப்பிடுற மாதிரி தெரியலையே !
      நன்றி

      Delete
  8. Replies
    1. அரிய கண்டுபிடிப்புக்கு அவார்ட் கொடுங்க ,சுரேஷ் ஜி !
      நன்றி

      Delete
  9. Replies
    1. அப்ப கடைக்குப் போய் இப்படியே கேட்டுற வேண்டியதுதான் !
      நன்றி

      Delete
  10. ஆபரேசன் தியேட்டர் ல கூட மசாலா கேட்குறாங்க னு வசூல்ராஜா கமல் சொல்லுவாரே
    அந்த பார்ட்டி தான் சோப் வாங்கிச்சானு எனக்கு தெரிஞ்சாகணும் பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் கொல்ல தயாரான பிறகு நோயாளி கடைசிஆசையை நிறைவேற்றிக் கொள்ள துடிப்பது நியாயம்தானே ?
      அந்த பார்ட்டி ,சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் வாங்குபவராய்இருந்தால் அவரேதான் இவர் !அவரைத் தெரியுமா ரெங்கன் ஜி ?
      நன்றி

      Delete
    2. நோ ரெங்கன் ஜி . dis is mythily !

      Delete
    3. இதனாலே நான் ரெண்டு விஷயம் தெரிஞ்சுகிட்டேன் ,நீங்கள் மேடம் மைதிலி என்பதும் ...இன்னொன்னு என் பதிலையும் படிக்கிறீர்கள் என்பதும் அதற்கு ஸ்பெஷல் நன்றி !

      Delete
  11. Replies
    1. கிராமத்து பாணியில் உப்பில்லா சோப் என்பது சரிதானே ?
      நன்றி

      Delete
  12. Replies
    1. iodise உப்பு போல் நழுவி ஓடுவதால் ,நீங்கள் சொல்வது சரிதான் !
      நன்றி

      Delete
  13. ரகசியம் தெரிஞ்சி போச்சு பகவான் ஜி.

    ReplyDelete
    Replies
    1. ரகசியம் தெரிந்து கொண்ட இரண்டாவது நபர் ஆயிட்டீங்க ,வேறு யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க,முரளி தரன் ஜி !
      நன்றி

      Delete
  14. நல்ல வேளைபா... மசாலா சோப்புன்னு கேக்காம வுட்டாய்ங்களே...!
    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. மசாலா நடிகைகள் பயன்படுத்தும் மசாலா சோப் என்று விளம்பரம் வரத்தான் போவுது !
      நன்றி

      Delete
  15. உப்பு சோப்புன்னா
    உப்பில்லா சோப்புன்னா
    அப்ப
    ஔவையின்
    சுட்ட பழம்
    சுடாத பழம் போன்றதா

    ReplyDelete
    Replies
    1. நம்ம கோவை ஆவிக்கு நஸ்ரியா நினைப்பு மாதிரி புலவர் உங்களுக்கு ஔவை நினைப்புதான் போலிருக்கிறது !
      நன்றி

      Delete