22 March 2014

துணை (எழுத்து ) எவ்வளவு முக்கியம்னு இப்ப புரியுதா ?

''என்ன மெக்கானிக்  ,பஸ்ஸை எடுக்கவர்ற என்கிட்டே வேப்பிலைக் கொத்தைக் கொடுக்கிறீங்களே ,ஏன் ?''
''பிரேக் பிடித்தால் வண்டி முன்னால் 'பேய் 'நிற்கிறது என்று புகார் நோட்டிலே நீங்கதானே எழுதி இருந்தீங்க ,அதான் !''



58 comments:

  1. ஹா....ஹா...ஹா...

    நானும் படித்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. பிரேக் பிடிக்கலேன்னு சிம்பிளா எழுதி இருந்தா இந்த வம்பு துப்பு எல்லாம் இருக்கா ?
      ஸ்ரீ ராம்ஜி பல வருடங்களுக்கு முன் நான்தான் ஜூனியர் விகடனில் துணுக்கு வடிவத்தில் இதை எழுதி இருந்தேன் ,இப்போ அதை கொஞ்சம் ரீமிக்ஸ் பண்ணி ஜோக்காகி ஆகிவிட்டேன் .எப்பூடி ?
      நன்றி

      Delete
    2. ஹா... ஹா... ரீமிக்ஸ் சூப்பரு....!

      Delete
    3. ரீமிக்ஸ் என்ன இசை அமைப்பாளர்களுக்கு மட்டும்தான் சொந்தமா ?அதிலும் நான் வேறு யார் படைப்பையும் ரீமிக்ஸ் செய்யவில்லை .இது என் ஒரிஜினல் படைப்பையும் மிஞ்சி விட்டதாக தெரிகிறது ,பதிவிட்ட முக்கால் மணி நேரம் ஆவதற்குள் ஆறு வோட்டை அள்ளிடுச்சே !
      நன்றி

      Delete
  2. ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ண விடமாட்டீங்க போலிருக்கே!! ஹஹஹா..

    ReplyDelete
    Replies
    1. சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் சில நேரங்களில் இப்படி பேயாட்டம் போடுவதை ரசிக்கத்தானே வேண்டும் ?
      நன்றி

      Delete
  3. ரொம்ப நல்ல ஜோக்.

    இப்படித்தான் ஒரு பெண்மணி தன் மாமியாருக்கு கடிதம் எழுதினார். "அத்தை மைத்துனருக்கு பேன் பார்த்து விட்டீர்களா?" என்று. தமிழ் புதிதாய் கற்றுக்கொண்ட அவரது கடிதத்தை வைத்துக் கொண்டு இன்றளவும் குடும்பத்தார் சிரித்து வருகின்றனர். அதற்குப் பின் மைத்துனருக்கு பார்த்து திருமனம் முடித்த "பேன்"(பெண்") னும் சிரிப்பைப் பகிர்ந்து கொண்டார்.

    எப்படி சாமி தினம் ஒரு ஆப்பிள் ங்கர மாதிரி தினம் ஒரு ஜோக்? உண்மையாலுமே நீங்க அதிர்ஷ்டசாலிதான். you have a lot of humor sense.

    God bless you.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னதும் நல்ல ஜோக்கடிதம் படித்த மைத்துனர் நம்ம தலையிலே நமக்கு தெரியாம எப்படி மண்டையைப் பிய்த்துக் கொண்டிருப்பார் (பேன்வந்து இருக்காது)ன்னு
      நினைக்கிறேன் !

      உங்கள் பாராட்டுக்கு நன்றி ,இன்றோடு 995 பதிவுகள் போட்டாகிவிட்டது ,இன்னும் ஐந்தை போட்டதும் உங்கள் கையால் 'ஆயிரம் ஜோக் எழுதிய அபூர்வ ஜோக்காளி' என்கிற பட்டத்தை வாங்கிக்குறேன் ,முடிந்தால் பொற்கிழி தரவும் !
      நன்றி

      Delete
  4. Replies
    1. உங்க பசங்க இப்படி செய்கிற விசயத்தை ஒரு பதிவிலே அவுத்து விடுங்க வாத்தியாரே !
      நன்றி

      Delete
  5. Replies
    1. எப்படி பஸ்ஸை ஓட்டுறது இப்படி பேய் நடுரோட்டிலே வந்து மறிக்குதேன்னு யோசிக்கிறீங்க போல இருக்கே !
      நன்றி

      Delete
  6. வணக்கம் சகோதரர்
    ப்ரேக் பிடிக்காத வண்டிக்கு புகார் எழுதும் போது விட்ட ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு வேப்பிலை நல்லா தான் இருக்கு நம்ம டெக்னிக்.

    ReplyDelete
    Replies
    1. இப்ப அடிக்கிற வெயிலுக்கு வேப்பிலை கொத்து இருந்தா நல்லதுதான் ,வண்டி நிற்கும் போது விசிறிக் கொள்ள டிரைவருக்கு தேவைப் படுமே !
      நன்றி

      Delete
  7. அந்த பூசாரி நீங்க தானா!..
    எதுக்கும் -
    உடுக்கை - இல்லை.. இல்லை - உலக்கை -
    இல்லை.. இல்லை - உடுக்கை -
    அட.. ஏதோ ஒண்ணு அதையும் கைவசம் வச்சுக்க சொல்லுங்க!..

    ReplyDelete
    Replies
    1. சாரி ,அந்த பூசாரியும்நான் இல்லை சாமியும் நான் இல்லை !நான் வெறும் ஆசாமிதான் !
      இங்கே மதுரையில் பாண்டிகோவில் இருக்கிறது,டவுன் பஸ்ஸில் வரும் பக்தைகள் மூன்று கிலோமீட்டர் முன்பு இருந்தே சாமியாட ஆரம்பித்து விடுகிறார்கள் .இந்த லட்சணத்தில் உடுக்கை சத்தம் வேறா ?வேற வினையே வேணாம் பஸ்ஸே சாமியாட ஆரம்பிச்சிடும் !
      நன்றி

      Delete
  8. நல்ல நகைச்சுவை. ரசித்து சிரித்தேன்.
    .

    ReplyDelete
    Replies
    1. உடுக்கை ,வேப்பிலை அடித்து பேயை ஓட்டிகிட்டே ,டிரைவர் எப்படி வண்டியையும் ஓட்டுவார்னு தெரியலே !
      நன்றி

      Delete
    2. டிரைவருக்கு கல்யாணம் ஆகி இருந்தா எப்படியும் சமாளித்து ஓட்டி விடுவார்.. ஏன்னா.. பாவங்க அவரு...

      Delete
    3. அது சரி ,மாசாமாசம் PAYயை பிடுங்கிக்கிற அந்த பேயை சமாளிக்கிறவருக்கு இந்த பேய் ஜுஜுபிதான் !
      நன்றி

      Delete
  9. நல்ல வேளை பேய் ஓட்டுறேன்னு நாலு போடாம இருந்தாரே! :)

    ReplyDelete
    Replies
    1. RTO ஆபிசில் எட்டு போட்டு டிரைவருக்கு செலக்ட் ஆனவர் ரெண்டு நாலு வேணா போடுவார் !
      நன்றி

      Delete
  10. அய்யோ....பேய் இங்கேயும் வந்துருச்சா..............!!!

    ReplyDelete
    Replies
    1. அது தானே ,பாழடைஞ்ச பங்களாவிலே தானே அது இருக்கணும் ?போராட மக்கள் வர வேண்டிய நடு ரோட்டுக்கு கண்ட கண்ட பேய்கள் எல்லாம் வரலாமா ?
      நன்றி

      Delete
  11. கால் இல்லையென்றால்தானே பேய்?

    ReplyDelete
    Replies
    1. நீங்க சினிமாப் பேயை பார்த்து சொல்றீங்க ,நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க காலுள்ள பேயைப் பற்றி உங்களுக்கு தெரியாதா ?
      நன்றி

      Delete
    2. எப்படிங்கன்னு பாய்கிட்டே கேட்டா பதில் கிடைக்காது ,பேய்கிட்டேதான் கேட்கணும் !
      நன்றி

      Delete
    3. காலுள்ள பேய்!..
      அதை ஏங்க இந்த நேரத்தில நினைவு படுத்திக்கிட்டு!?...

      Delete
    4. தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பேயே தேவலை ,இல்லையா ?
      நன்றி

      Delete
  12. டிரைவர் google tamil input இல் டைப் அடிச்சு குடுத்திருப்பார்னு நினைக்கிறேன்.போய் னு அடித்தால் பொய், பேய் பாய்னு ன்னுதான் முதல்ல வருது.அவர் என்ன செய்வார் பாவம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா...google translate இன்னும் நல்ல தமாஷ்

      Delete
    2. நான் அடிச்சுப் பார்த்தேன் ,பேய்ன்னு அடிச்சா பேய்தான் வருது ,சாத்தான் ,பூதம் எல்லாம் வரமாட்டேங்குதுதே!எதுக்கும் உங்க சிஸ்டத்தை காசு காசுன்னு அலையிற சர்வீஸ் பேய்கிட்டே காட்டுங்க !
      நன்றி

      Delete
    3. உங்க சிஸ்டத்திலேயும் பேய் இருக்கா ?
      இங்கே நான்தான் ராத்திரி பகல்னு பார்க்காம பேயா டைப்பித்துகிட்டிருக்கேன் !
      நன்றி

      Delete
  13. உங்கள் நகைச்சுவைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு நான் அறிமுகம் ஆனதே ஜூவியில் இது பிரசுரமாகி இருந்த போதுதானே ?உங்களுக்கும் இது நினைவில் இருக்குமென நினைக்கிறேன் !
      தங்களின் தென்றல் வலைப்பூ பதிவுகளை விரும்பி படித்து வருகிறேன் ,ரசிக்கும் படியான பல தகவல்கள் தருவதற்கு நன்றி சார் !

      Delete
  14. பேயிக்குத்தான் கால் இல்லையே!

    ReplyDelete
    Replies
    1. நம்மாளுங்க தொல்லை தாங்க முடியாமதான் பறந்து அலையுதோ என்னமோ ?
      நன்றி

      Delete
  15. கல கல நகைச்சுவை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கல கலன்னு பேய் சிரித்தாலும் நல்லாத்தான் இருக்கு ,இல்லையா சுரேஷ் ஜி ?
      நன்றி

      Delete
  16. ஜூனியர் விகடனில் எழுதினீங்க, சரி. அப்புறம் ஏன் தொடரவில்லை?

    ReplyDelete
    Replies
    1. குமுதம் ,குங்குமம் ,முத்தாரம் ,ஆனந்த விகடன் ,தினமலர் வாரமலர் போன்ற வெகுஜனப் பத்திரிகைகளில் தொடர்ந்து பிரசுரமாகி வந்தது .படைப்புகளை அனுப்பி வைத்து காத்துக் கிடப்பது ,காதலிக்கு காத்துக் கிடப்பதை போன்று இனிமையானதாய் இல்லை !
      வலைப் பூவில் தினசரி எழுதிக் கிடப்பதே சுகமாக இருக்கிறது !
      நன்றி

      Delete
  17. வாவ் சூப்பர் ஜோக்.

    ReplyDelete
    Replies
    1. அதென்ன வாவ் ,பேயைப் பார்த்த மாதிரி ?
      நன்றி

      Delete
  18. கோவலனுக்கு கால் போடாமல் கேவலன் என்றெழுதிய மாணவன் அவர் கேவலமா நடந்ததால காலை ஒடச்சேன்னு சொன்னானாம் ! அதுமாதிரி இதுவும் கால் ஜோக் (மீதி முக்கால் எங்க சார்?)

    ReplyDelete
    Replies
    1. கேவலமா நடந்துகிட்டதுக்கு பெண்டாட்டியே கவலைப் படலே,உனக்கு யார்ரா காலை ஒடிக்க அந்த அதிகாரம் கொடுத்ததுன்னு கேட்டு இருக்கலாமே !
      பனுமாதி என் பெண்டாட்டி ,காலை எங்கே வேணும்னா போடுவேன்னு சொன்ன ஆளை நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீங்களே !அவரும் நம்ம முக்கால் தோஸ்த்துதான் !
      நன்றி

      Delete
  19. கால் இல்லையென்றால்தானே பேய்?

    அஜீஸ் அவர்களை உங்களின் நிரந்தர வாசகராக மாற்றியமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கால் இல்லா கண்றாவியை யார் பார்த்தா ?

      சென்ற பதிவர் சந்திப்பில் உங்களுடன் வந்து இருந்த அவர் ,ஒரு மார்க்கமாய் பேசியதால் தோஸ்து ஆனது உங்களுக்கும் தெரியும்தானே ?
      நன்றி

      Delete
  20. பதிவும் பின்னூட்டங்களும் நகைத்து ரசிக்கவைக்கின்ற்ன..
    பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. பதிவு நாலு வரி ,பதிலுரை நாற்பது வரி பாணியை ரசித்து வருவதற்கு நன்றி !

      Delete
  21. மெக்கானிக் ரொம்ப முன்னெச்சரிக்கைப் பேர்வழியோ?
    வீட்டிலிருந்து வரும்போதே லன்ச் பாக்சோடு வேப்பிலையும் கொண்டு வந்துவிட்டாரோ?

    ReplyDelete
    Replies
    1. வேப்பங்குச்சியில் பல்லுகூட விளக்காத அந்த மெக்கானிக் ,இதுக்காக ஒரு மரத்தையே மொட்டை அடித்து விட்டதாக தெரிகிறது !
      நன்றி

      Delete
  22. 'கால் இல்லாத பேய்' என்று வாசகர்கள் எழுதியதைப் படித்ததும் பேயைப் பற்றி நான் எழுதிய பதிவு ஞாபகம் வந்தது. இதோ:

    "பேய்க்குப் பயப்படலாமா?"
    http://nizampakkam.blogspot.com/2009/09/blog-post_06.html

    ReplyDelete
    Replies
    1. ஐந்து வருசத்திற்கு முன்னாடி இருந்து நீங்க பேயை ரசிப்பது தெரிஞ்சுகிட்டேன் !
      நன்றி

      Delete
  23. ஹிஹி...! எனக்கு ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது...
    டிரைவர் பெயர் தாவீது... புகார் நோட்டுல...
    "கியர் போட்டா வண்டி துள்ளுது... தாவுது..." ன்னு போட்டுருக்கார்...

    ReplyDelete
    Replies
    1. எந்திரபலத்தை குதிரை சக்தியில் (HP)சொல்வது வழக்கம் .அதுக்காக பஸ்சும் குதிரை மாதிரி தாவுதுன்னு சொன்னா நியாயமா ?
      நன்றி

      Delete