10 July 2014

சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டா ?

                                                                                                                                                                 
இவருக்கு தேச பக்தி  ஜாஸ்தி !

''உன் வீட்டுக்காரருக்கு புட் பால்னா   

பிடிக்காதுன்னு  சொல்றே,பிறகேன் மேட்ச் 

பார்க்க பிரேசிலுக்கு போயிருக்கார் ?''

'' நூறு கோடி ஜனத்தொகை உள்ள இந்தியாவில் 

இருந்து விளையாடத்தான் ஆள் இல்லை 

வேடிக்கைப் பார்க்கவுமா   ஆள் இல்லேன்னு 

யாரும் கேட்டுறக் கூடாதுன்னு தான் ! ''
 சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்..
  
தின 'சிரி ' ஜோக்!

ஊரே டாஸ்மாக் 'தண்ணி 'காடாயிடுச்சே !

''ஊர்லே மழை எல்லாம் எப்படி பெய்யுது ?''
''தண்ணியா தான் !''




'சிரி'கவிதை!


கன்னியை கடவுளாய் காண்கிறாரோ கவிஞர் ?


'சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா ,
கண்டவர்கள் சொன்னதுண்டா 'ங்கிற பாடலைக் கேட்கையில் நினைவுக்கு வருவது ...
கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் !



  •                                                                                                          









                                                                                                                                                                                                                                                                                                                          

40 comments:


  1. நல்ல தேசபக்திதான்
    சிரி கவிதை அருமை பகவான்ஜி,

    ReplyDelete
    Replies
    1. உலக அளவில் கால் பந்து விளையாட இந்தியாவுக்கு தகுதி இல்லை என்பது உறுத்திக் கொண்டே உள்ளது ,அதான்.. தேச பக்தியுடன் இந்த பதிவு !

      நீங்களும் 'அதை' கண்டதுண்டு போலிருக்கே ,கில்லர் ஜி !
      நன்றி

      Delete
    2. காணாதார் உண்டோ,,, கன்னிகளை ?

      Delete
    3. பிரம்மச்சாரிகளுமா?
      நன்றி

      Delete
  2. ஹா.... ஹா... எல்லாமே சூப்பர் ஜி.

    ReplyDelete
    Replies
    1. கால்பந்து ,மழை,சேலை வாசம் எல்லாமே உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி !
      நன்றி

      Delete
  3. கண்டவர் விண்டிலர்
    விண்டவர் கண்டிலர்!
    தமிழில் படித்த பின்
    இப்ப
    ஜோக்காளி தளத்தில் படிக்கிறேன்.
    வேடிக்கைப் பார்ப்பது
    தேச பக்தி ஆகுமா?
    தண்ணிக் கதை - வெறும்
    கண்ணீர்க் கதை தான்!

    ReplyDelete
    Replies
    1. கடவுளைக் கண்டவர்கள் சொன்னதில்லை ,சொன்னவர்கள் கண்டதில்லை என்பதே அதன் அர்த்தம் ,கவிஞர் பெண்ணுக்கு அதை பொருத்தி பார்த்து இருப்பதை ரசித்தேன்,அதைதான் உங்களுடன் ஜோக்காளியில் பகிர்ந்து கொண்டேன் !

      தேச பக்தி இல்லைதான் ,இந்தியாவின் சார்பில் செய்ய முடிந்தது இதுதானே ?

      டாஸ்மாக் கண்ணீர்க் கதையை எழுத ஆரம்பித்தால் ,தமிழ் மணத்தில் கடைசிஇடத்திற்கு போய் விடுவான் ஜோக்காளி !
      நன்றி

      Delete
  4. Replies
    1. அருமை ,கால்பந்து ,மழை,சேலை வாசம் மூன்றும்தானே அய்யா ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. என்ன புரிஞ்சதுன்னு இப்படி சிரிக்கிறீங்க ,தனபாலன் ஜி ?
      நன்றி

      Delete
  6. சேலை கட்டிய பெண்ணை கண்டே பல வருஷம் ஆகிவிட்டதுங்க

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சோகம் ,ஆனால் உங்களுக்கு இப்படியொரு சோகமா ?
      லீவு போட்டு இங்கே வந்துட்டுப் போங்க ,ஆனால்...இங்கேயும் அதே சோகம்தான் .எங்கு பார்த்தாலும் சல்வார் கமிஸ்தான்,பட்டிக்காட்டிலும் தமிழ் பாரம்பரிய சேலையைப் பார்ப்பது அபூர்வமாய் ஆகி விட்டது ,பத்துக்கு ஒண்ணு பழுதில்லே...வாங்க பார்ப்போம் !
      நன்றி

      Delete
  7. ஹாஹாஹா....என்னங்க ஜி! இப்படி ஆளுக்காள் சேலை கட்டிய பெண் ஃபீவர் ஆரம்பிச்சுட்டீங்க...இப்பதான் கொஞ்ச நாள் முன்னாடி மதுரைத் தமிழன் சொன்னாரு....இப்ப லேட்டஸ்டா கூட 4 பெண் பதிவர்கள் பேசிக்கறதா சொல்லியிருந்தாரு....ம்ம்ம்ம்ம் சேலை எல்லாம் எக்ஸ்டிங்க்ட் லிஸ்டில்...இனி பழம்பெரும் தமிழ் அருங்கலையகம்னு ம்யூசியத்துல பார்க்கலாம்ங்க......ஒருவேளை பட்டுப் புடவை வாங்கித் தந்தாத்தான் நாங்க சேலை உடுப்போம்னு அடம் பிடிக்கிறாங்க போல.......பட்டு விக்கிற விலைல சுடிதார், பேண்ட் பரவாயில்லைல....அப்படினு கணவன்மார்கள் நினைத்திருக்கலாம்....

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. இந்த சேலைக் கட்டிய பெண் பீவர் எனக்கு வந்தது போன வருஷம் ,இப்போ பூரண நலமடைந்து விட்டேன் !
      காணாமல் போனது சேலை மட்டுமா ,தாவணியும் தான் ,நம்ம கலெக்டர் சகாயம் சாரை கோ ஆப்டெக்ஸ்க்சில் உட்கார வச்சுங்டாங்க ,அங்கேயும் போய் மனுஷன் சும்மாவா இருக்கார் ?வேட்டிதினம் ,சேலை தினம்னு கொண்டாடி ,நம்ம பாரம்பரியத்தைக் காப்பாற்ற முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காரே ..அவருக்கு வாழ்த்துக்கள் !
      சேலை ஏன் காணாமப்போச்சுன்னு அழகா பதிவு பண்ணி இருக்கீங்க ,உங்களுக்கும் வாழ்த்துக்கள் !
      நன்றி

      Delete
  8. மாதம் மும்மாரி பொழியுதோ இல்லையோ,,,, டாஸ்மாக்கில் எந்த நாளும் தண்ணீர்மழைதான்.

    ReplyDelete
    Replies
    1. கொடுமை என்னான்னா ,நாம மது விலக்கு அமுலாகாதான்னு எதிர்ப் பார்க்கிற நேரத்தில் ,அவங்க விற்பனை இலக்கு என்று பல கோடிகளை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறார்கள் !
      நன்றி

      Delete
  9. பூவில் கட்டியுள்ள நார்ம் ம் வாசம் பெறுவதில்லையா..அதுபோல சேலைக்கும் வாசம் உண்டு தலைவா.........

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பத்தில் வாசம்னு சொல்றீங்க ,நாளானா நாற்றம்னு சொல்றீங்க ,ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே ?
      நன்றி

      Delete
  10. தேசபக்தி ஜோக் சூப்பர்! கண்டவர் விண்டிலர்தான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. விண்டவர் கண்டிலர் என்பதும் உண்மைதானே ,சுரேஷ் ஜி ?
      நன்றி

      Delete
  11. வணக்கம்
    ஜி
    மிக அருமையான தேச பக்தி... எப்படிஎல்லாம் சிந்தனை வருகிறது... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கிரிக்கெட் என்றால் மட்டும் தான் நம் ஆட்களுக்கு தேசபக்தி பொங்கி வழியுமே !
      நன்றி

      Delete
  12. 1. என்னவொரு தேசபக்தி! ஆனால் என்ன செய்ய, கை தட்டித் தட்டியே வளர்ந்த நாடாச்சே..!

    2. சிரிச்சேன். எப்படிங்கறீங்களா... வாயெல்லாம் பல்லாத்தான்!

    3. A கிளாஸ் ஜோக்!

    ReplyDelete
    Replies
    1. 1.tஎல்லாவற்றையும் அடுத்த நாட்டுக்கு விட்டுக் கொடுக்கும் தியாக பூமி இதாச்சே!

      2.ஏன் பல்லெல்லாம் வாயா சிரிக்க கூடாதா ?

      3.நல்ல வேளை,,A ஜோக்னு சொல்லாம விட்டீங்களே !
      நன்றி

      Delete
    2. 3. ஹிஹிஹி... அதைத்தாங்க சொல்லியிருக்கேன்! :))))

      Delete
    3. அப்ப,கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் என்பது அடல்ட்ஸ் ஒன்லி டயலாக்கா?
      நன்றி

      Delete
  13. குவைத்தில் நடுப்பகல் (12.10).
    வேலை முடித்து விட்டு இப்போது தான் வந்தேன்.. உச்சந்தலை கொதிக்கின்றது. இருந்தாலும் கணிணியைத் திறந்து கொண்டு உட்கார்ந்து ஜி - பக்கங்களுக்கு வந்தால் - ,
    1, 2, 3 - இளநீர் குடித்த மாதிரி இருக்கின்றது!..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது , இளநீரின் வழுக்கையை நீங்கள் கீறிக் கொடுத்து ,அதை நான் சுவைத்தது போல் இனிக்கிறது !
      நன்றி

      Delete
  14. தேசபக்தி முடியல பாஸ்:)))
    இன்னக்கும் ஏழு .நான் தம வை சொன்னேன்!!!!

    ReplyDelete
    Replies
    1. ஏழு எனக்கு மட்டுமல்ல ,உங்களுக்கும் ராசிதான் போலிருக்கு ,ஏழுடன் அரை சேராமல் இருந்தால் சரிதான் !
      நன்றி

      Delete
  15. ரொம்ப ஓவராக அல்லவா இருக்குது தேசபக்தி.....

    ReplyDelete
    Replies
    1. இருக்காதா ,நூறு கோடி மக்களின் ஏக பிரதிநிதியாச்சே !
      நன்றி

      Delete
  16. ''..விளையாடத்தான் ஆள் இல்லை


    வேடிக்கைப் பார்க்கவுமா ஆள் இல்லேன்னு


    யாரும் கேட்டுறக் கூடாதுன்னு தான் ! ''
    அச்சா பதில்...ஐயா..ha!..ha!.......
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. விளையாட்டைப் பொருத்தவரை இப்படி கேவலமான நிலையில்தானே எங்கட நாடு இருக்கு ?
      நன்றி

      Delete
  17. //''ஊர்லே மழை எல்லாம் எப்படி பெய்யுது ?''
    ''தண்ணியா தான் !'' //

    athane

    ReplyDelete
    Replies
    1. சினிமா தியேட்டரில் சந்திக்கும் நண்பர்கள் 'என்ன படம் பார்க்க வந்தீங்களா 'னு கேட்டுக்கிற மாதிரி தான் இதுவும் ,இல்லையா பிரியா ?
      நன்றி

      Delete
  18. தண்ணியா தான்.... - :))))

    மூன்றுமே ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மழை ஆசிட் மாதிரி கொட்டுது என்று சொல்லும் காலம் வந்து விடும் போலிருக்கே !
      நன்றி !

      Delete