11 July 2014

இளநீராய் இனித்த காதல் ,இப்போ ?

     என்னது ,ஒரே நாளில் அடுத்த பதிவா ?என்று நீங்கள் கேட்பது புரிகிறது ...என்ன செய்றது?சென்ற வருடம் இதே நாளில் வந்த பதிவை இன்றைக்கு போட்டு தானே ஆகணும்?                                  

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

இளநீராய் இனித்த காதல் ,இப்போ ?

''நீ காதலிக்கு வாங்கிக் கொடுத்த இளநீரால் காதலே முறிஞ்சுப்போச்சா ,ஏன் ?''
''அவ குடிச்ச இளநீர் வழுக்கையையும்  கீறி நானே சாப்பிட்டது  அவளுக்குப் பிடிக்காமப் போச்சே  !''

'சிரி'கவிதை!

நல்ல சமையலை நள[ன்]பாகம் என்பதால் ...

இடதுகைப் பழக்கமோ ,வலது கைப் பழக்கமோ ...
சமையல் தெரிந்தால் போதும் என்பதே 
இன்றைய மணமகளின் எதிர்பார்ப்பு !


24 comments:

  1. வணக்கம்
    தலைவா
    அசத்தி விட்டீங்கள்... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    த.ம 1வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இது நல்லாத்தான் இருக்கும் ,காதல்தான் வழுக்கையால் வழுக்கிகிட்டுப் போயிடுச்சே !
      நன்றி

      Delete
  2. 1) அல்பக் காதலாய் இருக்கும் போலவே...! :)))


    2) அவசியம்தான்!

    ReplyDelete
    Replies
    1. 1.அல்பம்னு இப்போதே தெரிந்து விட்டதால் காதலி தப்பி விட்டாளே!

      2 அதை ரகசியமாய் வைத்துக் கொள்ளாமல் ,திருமணத்திற்கு முன்னரே கைமணத்தை ஒரு முறை நேரடியாக சமைக்கச் சொல்லி பார்த்து விடுவது நல்லது !
      நன்றி

      Delete
  3. வழுக்கையான காதலோ ? அதான் வழுக்கிடுச்சு....

    ReplyDelete
    Replies
    1. இளநியோட சனியன் விட்டதேன்னு சந்தோசப் படுவதாய் தகவல் !
      நன்றி

      Delete
  4. இளநீக்கே காதல் புட்டுக்கிச்சு என்பதால் அது இளமைக்காதலாக இருக்குமோ? கவிதை உண்மைதான்!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் பிரி மெச்சூர்டு காதல்தான் இது !

      திருமணத்திற்கு பின் சமையல் கற்றுக்க வேண்டிய நிலையில் , பல பொண்ணுங்க இருப்பது உண்மைதானே ?
      நன்றி

      Delete
  5. //இடதுகைப் பழக்கமோ ,வலது கைப் பழக்கமோ ...
    சமையல் தெரிந்தால் போதும் என்பதே
    இன்றைய மணமகளின் எதிர்பார்ப்பு !//

    ReplyDelete
    Replies
    1. ஹலோ பிரியா ,எனக்கு கேக்குது ...சொல்ல நினைச்சதை சொல்லுங்க !
      நன்றி

      Delete
  6. மணமகளின் எதிர்பார்ப்பு
    சமையல் தெரிந்தால் போதுமாம்
    இளநீர் வழுக்கையைச் சாப்பிட்டதால்
    காதலே முறிஞ்சுப்போச்சா
    சிந்திக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வாங்க ,யாழ் பாவாணன் அவர்களே !
      நன்றி

      Delete
  7. நல்லது ஜி... உங்களிடம் பேச வேண்டும்... தொடர்பு கொள்க...

    ReplyDelete
    Replies
    1. இப்போதுதான் உங்கள் விருப்பம் அறிந்தேன் .என் செல் நம்பரை தங்களுக்கு SMS செய்துள்ளேன் ,மிக அவசரம் என்றால் தொடர்பு கொள்ளுங்கள் பாஸ் .இந்நேரம் நீங்கள் படுக்கைக்கு சென்று இருப்பீர்கள் என்பதால் தொடர்பு கொள்ளவில்லை ,காலையில் தொடர்பில் வருகிறேன்.
      நன்றி

      Delete
  8. இந்த காலத்துல பொண்ணுங்க ரொம்ப விவரமாத்தான் இருக்காங்க. பையன்கள் தான் பாவம்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு கீறலிலேயே காதலில் கீறல் விழுந்து போச்சே !
      நன்றி

      Delete
  9. காதலி விஷயத்தில் கொஞ்சம்
    ஜாக்கிரதையா இருக்கவேணாமோ ?

    ReplyDelete
    Replies
    1. அதுதானே ,திருமணம் ஆகும் வரையாவது நடிக்க வேண்டாமா ?
      நன்றி

      Delete
  10. Replies
    1. கேட்டரிங் படித்த மாப்பிள்ளை தேவைன்னு கூட கேட்பாங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  11. இன்று தான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன்... சிரித்தேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளி தமிழ்மணத்தில் முதலிடம் வந்தபின் , முதல் முறையா வந்த உங்களுக்கு நன்றி .தொடர்ந்து படித்து கருத்திடலாமே ?

      Delete