28 July 2014

புதுமணத் தம்பதியர் சிறப்பாய் நடத்தும் 'குடி'த் தனம் ?

---------------------------------------------------------------------------------
சீக்கிரமே இந்த நிலை வந்து விடும் !

''உங்க காதிலே என்ன பிரச்னைன்னு கேட்டா , செல்போனில் கேளுங்கன்னு எதுக்கு ஜாடை காட்டுறீங்க ?''
''நேரிலே யார் பேசுறதும் காதுக்கு கேட்கலே ,செல்போன்லே பேசுறது மட்டும்தான் கேட்குது டாக்டர் !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

சிறப்பாய் 'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் !

''யோவ் தரகரே ,உங்களுக்கே இது நியாயமா ?''
''எது ?''
''நான் குடிகாரங்கிறதை மறைத்து  கல்யாணத்தை முடிச்சு வைச்சீங்க சரி ...பொண்ணு குவாட்டரை ஒரே மூச்சிலே ராவாவே குடிப்பான்னு ஒருவார்த்தைகூட ஏன் சொல்லலே !''



'சிரி'கவிதை!

 கொசு இனத்தை கூண்டோடு ஒழிக்க ...!

கடிக்கிற கொசு சாகிறமாதிரி..
 நம் உடம்பிலும் கரெண்ட்டை
மிகச் சிறிதாய் சார்ஜ் பண்ணிக்க முடிந்தால் ...
சந்தோசமா கரெண்ட்டிலே கையை வைக்கலாம் !





24 comments:

  1. ஆகா குவாட்டரை ராவா குடிக்கிற பெண்ணா
    தம 1

    ReplyDelete
    Replies
    1. நாம் இப்படி ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்கிறோம் ,மனைவியே இப்படி தெரிந்ததும் அந்த புருசனுக்கு எப்படி இருந்திருக்கும் ?
      நன்றி

      Delete
  2. குவாட்டர் அடிக்கற பெண்.... இப்பல்லாம் நிறைய பேர் உண்டு! :)

    ReplyDelete
    Replies
    1. ஆணுக்கு நிகராய் முன்னேறி வருகிறார்களோ ?
      நன்றி

      Delete
  3. ''செல்'' போணில்தான் ''சொல்'' நுளையுமோ ?
    தரகர் நியாயமாணவரோ ?
    முதல்ல கரண்டு வரட்டும் தமிழ்நாட்டுக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் செல் வழியே மட்டும்தான் சொல் நுழையும் !
      ஆமாம் ,ஜோடிப் பொருத்தம் சூப்பர்ன்னு சேர்த்து வச்சிருக்காரே !
      ஆமாம் ,நீங்கள் சொல்வதே உண்மை ,காற்றாலை இன்னும் எத்தனை நாளைக்கு கைக் கொடுக்குமோ தெரியாது !
      நன்றி

      Delete
  4. அப்ப டாக்டர் ச்ன்னது மட்டும் எப்படி காதுல விழுந்துச்சாம்? (ஆனால் இது போன்ற பிரச்சினைகள் உள்ள நபர்கள் இருக்கின்றார்கள் ஜி! ..நேரில் பேசும் போது அந்த சப்தம் விரிந்து சிதறுவதால்...கேட்க கஷ்டமாக இருக்கும். ஆனால் செல்ஃப்ப்ன் என்பது காதிற்கு அருகில் வைத்து. அது குவுந்து அந்த சப்தம் காதிற்குள் செல்வதால் கேட்பது எளிதாக இருக்கும்...)

    பொண்ணுங்களும் அடிக்கறாங்க ஜி! ஒரு வேளை இவரு, ரெண்டு பேரும் சேர்ந்து அடிச்சிருக்கலாமெனு நினைச்சிருப்பாரா இருக்கலாம்....

    ReplyDelete
    Replies
    1. செல் மூலமாய் காதுக்குள் செல்லும் ஒலியின் டெசிபல் அளவு அதிகம் என்பதால் காதுக்கு கெடுதலை செய்யக்கூடும் என்கிறார்கள் !
      தரகருக்கு ரொம்ப நல்ல மனசு இல்லையா ஜி ?
      நன்றி !

      Delete
  5. 1) ஹா...ஹா... உண்மையிலேயே இந்நிலை சீக்கிரம் வரக்கூடும்.

    2) "டிட்டோ"

    3) அதுக்கு நாம இரும்புக்கை மாயாவியா இருக்கணும் பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. பாதிப்புகள் பற்றிய ஆராச்சி நடந்து கொண்டிருகிறதாமே?

      புருஷன் எவ்வழி ,பெண்டாட்டி அவ்வழியா ?

      கொசுக்கடி படுத்தும் பாடு ,கொசுவை இரும்புக்கரம் கொண்டுதான் அடக்கணும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  6. வர வர குடி தனத்துக்கே அர்த்தமில்லாமல் போச்சு ஜீ

    ReplyDelete
    Replies
    1. இப்படியெல்லாம் நடக்கும்ன்னு தெரிஞ்சுதான் குடித்தனம் என்று சொல்லி இருப்பாங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  7. செல்போன்லே பேசுறது கேட்குதா - அப்ப
    ஏதோ சிக்கல்...
    'குடி'த்தனம் நடத்தும் தம்பதியரா
    கரெண்ட்டிலே கையை வைக்கலாமா
    எப்படீங்க
    இப்படி எல்லாம் எழுதுறீங்க...
    எழுதுங்க எழுதுங்க

    ReplyDelete
    Replies
    1. எழுதுவதன் ரகசியம் வேறொண்ணுமில்லே....சிந்தனைக்கு விருந்து ,சோமபலுக்கு மருந்துன்னு விளம்பரம் பண்ணி விக்கிற மருந்தை சாப்பிட்டா ,இப்படியெல்லாம் எழுத தோணும் !
      நன்றி !

      Delete
  8. செல்லில் வரும் சொல்லே கேட்கிறது என்றால்.....அவர் 'செல்' 'வாக்கான ஆசாமிதான்?!.

    ReplyDelete
    Replies
    1. ஓ ..ஹாட் லைன் வச்சுகிட்டு இருப்பாரோ ?
      நன்றி

      Delete
  9. வித்தியாசமான நோயா இருக்கே! குடிமகன் பாடு திண்டாட்டம் தான்! விபரீதமான யோசனை! வாழ்த்துக்கள்! மால்வெர் குறித்து எச்சரித்தமைக்கு நன்றி! சரி செய்துவிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. இந்த நோயும் போக போக பழகத்தான் போகுது !
      குடித்தனத்தில் ரெண்டு பெரும் குடித்தால் திண்டாட்டம் வராமலா போகும் ?
      தீயென்று சொன்னால் சுடவா போகிறது ?
      நன்றி

      Delete
  10. வணக்கம்
    தலைவா..
    இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மனமொத்த தம்பதிகளின் குடித்தனத்தைதானே?
      நன்றி

      Delete
  11. என்னது க்வாட்டர் அடிக்கும் பெண்ணா? சரிதான் அவருடைய ஹாபுக்கு பங்குக்கு வந்துட்டாப்ல.........

    ReplyDelete
    Replies
    1. பெட்டர் ஹாப்புன்னா சும்மாவா ?
      நன்றி

      Delete
  12. அவங்க தான் உண்மையிலேயே பெட்டர் "ஹாப்".. ஹஹஹா ;)

    ReplyDelete
    Replies
    1. ஹௌஸ் பாஸை அப்படித்தானே அழைக்கணும் ?
      நன்றி

      Delete