2 July 2014

மனைவி சொல்லே மந்திரம்னு இருந்ததெல்லாம் அந்தக் காலமா ?

''இது என்னடி அநியாயமா இருக்கு ,உன் வீட்டுக்காரர் திடீர்னு நாத்திகரா மாறிட்டாரா ,ஏண்டி ?''
''நம்ம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குதேன்னு  சொல்லிக்கிட்டு இருந்தேன் ...அப்ப எதுக்கு  நான் தெய்வத்தை நினைக்கணும்னு  கேட்க ஆரம்பிச்சுட்டார்டி !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

குற்றமுள்ள நெஞ்சு குத்துதோ ?

''ரேசன் கடையைப் பூட்டுனோமா ,மாசமா இருக்கிற 

பெண்டாட்டியைப் போய் பார்த்தோமான்னு 

இல்லாமே ...கோவிலுக்கு தினசரி வந்து என்ன 

வேண்டீக்கிறே ?''

''எடைக் குறைஞ்சாலும் பரவாயில்லை ,குறைப் 

பிரசவம் ஆகிவிடக்கூடாதுன்னுதான் !''


சிரி'கவிதை!

கவர்ச்சி ஆடை அவசியம் ...நடிகைக்கு !

முழுக்கைச்  சட்டையில்...

கணவன்  அழகாய் இருப்பதாக சொன்னாள் ...

ஜன்னல் ஜாக்கெட்டில் இருந்த இளம் மனைவி !



45 comments:

  1. அனைத்தும் சூப்பர் ஜி...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் 'கலையாத கனவுகள் 'கதையில் வரும் புவனாவின் பேச்சும் சூப்பர் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. தங்களின் தகவல் தளம் பதிவுகளும் அருமை !
      நன்றி

      Delete
  3. சிரி கவிதை அருமை பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பதிவைப் போடுங்க கில்லர் ஜி !
      நன்றி

      Delete
    2. பகவான்ஜி பதிவை போட்டு 5 நாளாச்சு.

      Delete
    3. அந்த பதிவை படித்து நான் போட்ட கமெண்டை எந்த காக்காயோ தூக்கிட்டு போயிருச்சு போலிருக்கே !மறுபடியும் போட்டாச்சு கில்லர் ஜி !
      நன்றி

      Delete
  4. மூன்றுக்குமே மும்மூன்று "ஹா"

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி நன்றியும் மூன்று !

      Delete
  5. கொஞ்ச நாளைக்கு அப்படி இருந்துதான் பார்க்கட்டுமே..ஜீ

    ReplyDelete
    Replies
    1. இப்படி எல்லா ஆண்களும் தலையணை மந்திரத்தை மறந்து இருந்தாங்கன்னா பெண்கள் பாடு திண்டாட்டம் ஆயிடுமே !
      நன்றி

      Delete
  6. மூன்றும்
    முத்தான நகைச்சுவைகள்
    சிந்திக்க வைக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளி சிந்திக்க வைக்கும் சிந்தனை சிற்பியோ ?
      நன்றி

      Delete
  7. இந்த ஆளு உங்களுக்குத் தெரிந்தவரா அல்லது ?...
    (ஒரு வேள அது ஜீயாக் கூட இருக்கலாம் எதுக்குடி உனக்கு இந்தக் கேள்வி ?.:))))) )

    ReplyDelete
    Replies
    1. கேட்டதிலே தப்பே இல்லே )))))))..தசாவதாரம் படத்தில் வரும் கமலஹாசனின் வசனத்தில் எனக்கு மிகவும் பிடித்தது .....கடவுள் இல்லேன்னு சொல்லலே ,இருந்திருந்தா நல்லா இருக்குமேன்னு தான் சொல்றேன் !
      நன்றி

      Delete
  8. இப்படி உண்மையைச் சொல்ல நிச்சயம் ஒரு பெண்ணால் தான் முடியும்.

    மூன்று நகைச்சுவையையும் ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. #இப்படி உண்மையைச் சொல்ல நிச்சயம் ஒரு பெண்ணால் தான் முடியும்.யாரை என்னையா பெண்ணென்று சொல்லி இருக்கீங்க ?திருமதி .அம்பாளடியாள் அவர்களுக்கு போக வேண்டிய கமெண்ட் திசைமாறி இங்கே வந்த மாதிரி இருக்கே !
      நன்றி

      Delete
  9. ரசித்தேன்,நன்று!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து முதல் முறை கமெண்ட் போட்டதற்கு நன்றி யோகராஜா !

      Delete
  10. மூன்றுமே சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எப்பொழுதாவது இப்படி விபத்து ஆகி விடுகிறது சுரேஷ் ஜி !
      நன்றி

      Delete
  11. 1. இதனால தான் நாட்டில நிறைய பேர் நாத்திகரா இருக்காங்களா???

    கவிதை சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. 1 .....கலாம் !

      நீங்க இருக்கிற நாட்டிலே இந்த பிரச்சினையே இருக்காதே ,சொக்கன் ஜி !

      Delete
  12. Replies
    1. அருமைக்கு நன்றி !
      த ம 5 க்கு இன்னொரு நன்றி !

      Delete
  13. Replies
    1. அருமைக்கு நன்றி !

      Delete
  14. மூன்றுமே அருமை ஜி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிங் ராஜ் ஜி !

      Delete
  15. நல்ல நகைச்சுவை

    ReplyDelete
    Replies
    1. பத்து கேள்விக்கு பதில் சொன்ன சந்தோசத்தில் இதை சொல்லி இருக்கீங்க போலிருக்கே டீச்சர் !
      நன்றி

      Delete
  16. நாத்திகரானதற்கான காரணம்
    மிகச் சரியாகத்தானே இருக்கு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கடவுள் தான் நினைப்பதையே மனிதனையும் நினைக்க வைக்கணும் ,இல்லை ,மனிதனையாவது வேறொன்றை நினைக்க வைக்காமல் இருக்கணும் ...இரண்டையும் செய்யலைன்னா இவர் நாத்திகர் ஆகாமல் என்ன செய்வார் ?
      நன்றி

      Delete
  17. Replies
    1. ரசிப்புக்கு நன்றி !

      Delete
  18. மூன்றுமே சிரிக்க வைத்தாலும் அவற்றில் வாழ்வியல் உண்மையும் ஒளிந்திருப்பது வெகு சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. மன்னித்துக் கொள்ளுங்கள் பால கணேஷ் ஜி ,என் எழுத்தில் நான் திட்டமிடாமலே சில உண்மைகளை சொல்லி விடுகிறேன் போலிருக்கு !
      நன்றி

      Delete
  19. இது நாத்திகத்துக்கு விழுந்த வோட்டா ஜி ?
    நன்றி

    ReplyDelete
  20. ஆமாம் ஜி! வடையதான் காக்கா தூக்கிட்டு போகும்னு பாத்தா நாம போடற கமென்ட் எல்லாம் தூக்கிட்டு போட்யிடுதுங்க....ஒருவேளை காக்காக்களூம் நம்மள் போல ப்ளாக் எல்லாம் வைச்சுருக்கும் போல......கட் பேஸ்ட் பண்ணுதுங்களோ?!!!....

    ReplyDelete
    Replies
    1. வட போச்சேன்னு நாம வருத்தப்படக் கூடாதுன்னு வடையை தூக்குறதை விட்டு இருக்கும் !
      பிளாக் வச்சிருக்கிற 'பிளாக் 'காக்கைக் காட்டுங்க ஜி ,சுட்டு தள்ளிடுவோம் !
      நன்றி

      Delete
  21. ஹாஹா அருமையான ஜோக்ஸ்! ஜி! கடவுள் பாவம்ங்க.......ஹாஹஹ்

    ஜி இங்க பாருங்க.....கில்லர் ஜி க்கு நீங்க சொன்னதுக்கு நாங்க சும்ம ஒரு பதில் போட்டா அது அங்க விழாம எங்கேயோ கீழ வந்து விழுதுங்க...என்ன ப்ளாகரோ......

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. பாவப் பட்டியலில் கடவுளும் வந்து விட்டாரே !

      கில்லர் ஜியின் தளத்தில் இன்னொரு குறை ,எந்த இடத்திலும் தேதி இல்லை .அதையும் அவர் சரி பண்ணனும்! வேலூரில் இருந்து வெளியே வந்ததும் சரி பண்ணுவாரோ ?
      நன்றி

      Delete
  22. ஜி! இப்பல்லாம் நாங்க கமென்ட் அடிக்க்ம் போது அடிச்ச உடனே ரைட் க்ளிக் பண்ணி காப்பி செஞ்சுடறோம்......அதுக்கு அப்புறம்தான் பப்ளிஷ் பண்ணறோம் ஜி! ஏன்ன கமென்ட் போலனாலோ, இல்ல ப்ளாகர் க்ராஷ் ஆனாலோ திரும்ப அடிக்க வேண்டாம் இல்லியா....அதான்.....திரும்ப பாக்ஸ் வந்ததும்...பேஸ்ட் பண்ணி அனுப்பிடறோம்....இத நீங்களும் ட்ரை பண்ணுட்டிருப்பீங்கனு நினைக்கறோம்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் யோசனையை நானும் பின் பற்றி வருகிறேன் ஜி !
      தேவைதானே கண்டு பிடிப்பின் தாய் ?
      நன்றி

      Delete