5 July 2014

நினைவுக்கு வருதா,மனைவியின் முதல் வார்த்தை ?

 உண்மையை மறைக்காத நண்பன் !
''தூங்கும் போது குறட்டை விடுற விலங்கு கரடி மட்டும்தான்னு நீ ஆராய்ச்சி செய்ஞ்சு கண்டுபிடிச்சதுக்கு காரணம் நானா ,எப்படிடா ?''
''குறட்டை விட்டு நீ தூங்குறதைப் பார்த்தா அப்படித்தானே இருக்கு ?''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

அதிசயப் பிரசவத்தில் பிறந்த அதிசயப் பிறவிகள் !

''என்னடி சொல்றே .உனக்கு பொறந்த 

இரட்டைக்குழந்தை மாதிரி உலகத்திலே இதுவரைப் 

பொறக்கலையா .எப்படி ?''

''முதல் குழந்தைப் பிறந்த மூன்று மாதம் கழித்து 

அடுத்த குழந்தைப் பிறந்தானே !''


'சிரி'கவிதை!

மனைவியின் முதல் வார்த்தை ?

அம்மா என்பது குழந்தையின் முதல் வார்த்தை ...
 தனிக்குடித்தனம் என்பது இளம் மனைவியின் முதல் வார்த்தை !






27 comments:

  1. சிரி கவிதை அருமை பகவான்ஜீ, அனுபவபாடம்.....

    ReplyDelete
    Replies
    1. என் அனுபவம்தானே எல்லோர் அனுபவமும் ?
      நன்றி

      Delete
  2. முதல் வார்த்தை சரியானதே!
    குறட்டை தான் பிழையானதே!
    அதிசயப் பிரசவம் வேறானதே!
    வாசித்தது மூளைக்கு வேலையானதே!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,இத்தளத்தில் வருவதெல்லாம் கோளாறானதேன்னு சொல்லாமே விட்டீங்களே!
      நன்றி

      Delete
  3. மேலே ஜீ ஐயா சொன்னது சரி ஜி...

    ReplyDelete
    Replies
    1. பகவான்ஜி சொன்னதை கில்லர்ஜியும் ,கில்லர்ஜி சொன்னதை தனபாலன் ஜியும் வழி மொழிவதால் இக்கருத்து முற்றிலும் உண்மை என்று ஏகமனதாக தீர்மானிக்கப் படுகிறது !
      நன்றி

      Delete
  4. கரடி விடுகிறாரோ நண்பர்?

    2. அதெப்படி?

    அடிப்பாவி என்பது மாமியாரின் வார்த்தை!

    ReplyDelete
    Replies
    1. கரடித் தூக்கம் என்பது குறட்டை விட்டு தூங்குவதுதான் போலிருக்கு !

      2.இந்த கேள்வியை எழுப்பினால் அவர்கள் அதிசயப் பிறவிகள்தானே ?

      உண்மைதான் !
      நன்றி

      Delete
  5. 1. ஹாஹா....மனிதர் கரடி போல இருப்பாரோ?!!1

    2. அதெப்படி ஜி?!!!! புரியலயே என்ன நடக்குதுன்னு.!!!

    3. இது தொடரும் சங்கதிதான்......அம்மா னு சொல்ற அதே குழந்தைதானே...கல்யாணம் ஆனவுடன்......

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. 1.கரடிக்குப் போட்டியா ஒரு சிலருக்கு உடம்பு பூரா முடி இருப்பதும் உண்மை !கரடி குறட்டை விடுவதும் உண்மை !
      2.ட்வீன்ஸ் ரெண்டில் ஒன்று வளர்ச்சி அடைய தாமதமாகி விட்டதாம் !
      3.வாயை மூடிகிட்டு சும்மா இருங்கன்னு சொல்லுதோ ?
      நன்றி

      Delete
  6. உண்மையை சொல்றவர்தான் உண்மையான நண்பர்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி என்றால் நீங்கள் என் நண்பர்தான் !
      நன்றி

      Delete
  7. கவிதை அருமை உண்மையும் கூட.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் உண்மையன்றி வேறில்லை !
      நன்றி

      Delete
  8. ஜோக்ஸ் ஆஹா! சிரி கவிதை சிந்திக்க வைத்த உண்மை!

    ReplyDelete
    Replies
    1. ஆஹாவிற்கும்,உண்மையை சிந்தித்ததற்கும் நன்றி !

      Delete
  9. என்னது கரடி குறட்டவிடுமா?
    அப்ப எங்க வீட்டுலயும் ஒரு கரடி இருக்கு........

    ReplyDelete
    Replies
    1. கரடி குறட்டை விடுகிறது என்பது உண்மையான செய்திதான் !
      நேற்று பேப்பரில் விவசாயி வீட்டில் கரடி ஒன்று புகுந்து பலாப் பழத்தை கடித்து தின்றதாக செய்தி வெளியாகி உள்ளது,உங்க வீட்டு கரடிக்கும் பலாப் பழம் பிடிக்கிறதா என்று வாங்கிக் கொடுத்துப் பாருங்களேன் !
      நன்றி

      Delete
  10. ரசித்தேன்....

    த.ம. ஏழாம் வாக்கு!

    ReplyDelete
  11. பாரதியின் ஏழாவது மனிதனாய் வந்து வாக்களிததற்கு நன்றி !

    நைனிடாலுக்கு அப்புறம் பதிவைப் போடவில்லையே ,சீக்கிரம் போடுங்க ஜி !

    ReplyDelete
  12. Replies
    1. அதி காலையில் வந்து விடுவாரே ,இன்னும் காணாமேன்னு தேடிக்கிட்டு இருந்தேன் ,வந்துட்டீகளே,நன்றி !

      Delete
  13. வணக்கம்
    ஜீ
    ஆகா...ஆகா... நன்றாக உள்ளது.. நகைச்சுவையும் கவிதையும் பகிர்வுக்கு நன்றி
    த.ம 9வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பகிர்வை ரசித்தமைக்கும்,வாக்களித்தற்கும் நன்றி ரூபன் ஜி !

      Delete
  14. முதல் வார்த்தையை ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தனிக் குடித்தனம் நமக்கு பிடித்தாலும் பெற்றவங்களுக்கு பிடிக்காதே !
      நன்றி

      Delete