19 July 2014

இந்த சுதந்திரம் 'அப்படி 'வந்ததுதானா ?


வட இந்திய டூர் - பாகம் 6

பள்ளிப் பாடங்களில் படித்த ,ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த இடத்தை....
சமீபத்தில்(சிலநாட்களுக்கு முன் &அருகிலும் )சென்று பார்த்தேன்... இது பொற்கோவில் அருகிலேயே ,நடக்கும் தூரத்திலேயே உள்ளது. தற்போது நினைவிடமாய் மாறியிருக்கும் அந்த இடம்...இதோ ...

இந்த வாசலைத்தாண்டி  உள்ளே சென்றால் ,கண் முன்னே தெரிகிறது ..பசுமையாய் தோன்றும் தோட்டத்தின் நடுவே தியாகிகள் நினைவுத் தூண் !




இந்த தூணுக்கு பின்னால் இருக்கும் நிஜமான சோக வரலாறு .....
1919ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய  கொடுமையான 'ரௌலட் 'சட்டத்தை  எதிர்த்து சுமார் இருபதாயிரம் மக்கள் கூடிஇருக்கிறார்கள் ...
இதைக்கூட சகித்துக் கொள்ளமுடியாத ஜெனரல் டயர் சுடும் உத்தரவை பிறப்பித்தவுடன் ....
1650 குண்டுகள் சீறிப் பாய்கின்றன ...
மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள் ...
வெளியேற இருப்பதோ ஒரே வாசல் ...
வேறு வழியின்றி உயிர்ப் பிழைக்க அங்கிருந்த ....
இந்த கிணற்றில்தான் விழுந்து உயிர் துறந்துள்ளார்கள்...
இந்த படுகொலை சம்பவத்தில் இறந்தோர் எண்ணிக்கை 379என்றும் ,காயப்பட்டவர்கள்  1500 என்று ஆவணங்கள் சொன்னாலும் .சிகிச்சை  அளித்த ஆங்கிலேய மருத்துவரே இறந்தோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் என்று சொல்லியுள்ளார் ...
    அந்த கொடூர சம்பவத்தின் எச்சங்களாக குண்டு பாய்ந்த இடங்கள் இன்றும் கட்டம் கட்டி சுவற்றில் ...இதோ ...

 இந்த இடத்தைப் பார்த்ததும் என் மனதில் எழுந்த கேள்வி ...கத்தியின்றி இரத்தமின்றி கிடைத்ததா நமது சுதந்திரம் ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------

கிணற்றுப் படம் மட்டும் கூகுளில் சுட்டது !



36 comments:

  1. "ம்..........ஹூம்"

    பெருமூச்சுதான் வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு வந்தது இந்த சுதந்திரம் ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  2. நல்ல கேள்வி தான்...ஆனால் பதில் யாரிடமும் இல்லை.....

    ReplyDelete
    Replies
    1. கஞ்சிக்கில்லாமல் அல்லாடும் மக்கள் இந்த கேள்விக்கு பதில் சொல்வார்கள்

      Delete
  3. தங்களது கேள்வியின் ஆழம் புரிகிறது நண்பரே,,,

    ReplyDelete
    Replies
    1. அந்த கிணற்றில் கேட்ட மரண ஓலம்தான் இந்த கேள்வியின் ஆழம்!
      நன்றி

      Delete
  4. தம.2.
    சுதந்திரத்தின் இன்னொரு முகம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த இன்னொரு முகத்தின் கதாநாயகன் உத்தம்சிக்கைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா ?
      நன்றி

      Delete
  5. சும்மா வரவில்லை சுதந்திரம். . எத்தனை முறை இந்த செய்தியைக் கேட்டாலும், படித்தாலும், ஒவ்வொரு முறையும் மனம் பதைபதைத்துத் தான் போகிறது.

    ReplyDelete
    Replies
    1. கண்ணிலே அந்த இடம் பச்சைப் பசெலேன்று தெரிந்தாலும் ,கண்முன் ரத்த வெள்ளம் பாய்வதை தடுக்க முடியவில்லை !
      நன்றி

      Delete
  6. ஜாலியன் வாலாபாக் படுகொலை! எப்போது படித்தாலும் ஒரு சிலிர்ப்பை வரவழைத்துவிடும்! படங்களுடன் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இதைப் போன்று எத்தனை கொடூரங்களோ ?ஆனால் இவையெல்லாம் பின்னுக்கு தள்ளப பட்டு அஹிம்சையினால் வந்த சுதந்திரம் என்று சொல்லப் படுவது நியாயமில்லை !
      நன்றி

      Delete
  7. உண்மை தான் நமக்கு சுதந்திரம் சும்மா ஒன்றும் கிடைத்துவிடவில்லை. எத்தனை பேரோட உயிர் தியாகம் இதில் அடங்கியிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உயிர்த் தியாகம் செய்து வாங்கிய சுதந்திரத்தின் பலன் இன்னும் எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்பது கண்முன்னே நாம் காணும் உண்மை !
      நன்றி

      Delete
  8. பதிவு நல்ல பதிவு...அதுவும் ஜாலியன் வாலாபாக் எப்பொது நினைத்தாலும் அந்தக் காட்சி மனதில் விரியும்..மனம் ஏதோ செய்யும்...

    சுதந்திரமா?!! அது காந்தி காலத்துல வந்துச்சுல? இப்ப எதுல இருக்குங்க? பணம் கொடுத்தால்தான் கல்வி, பணம் கொடுத்தால்தான் வேலை, பணம் கொடுத்தால்தான் அரசு அலுவலகங்களில் பொது மக்களுக்கு சேவை கிடைக்கும், எகிறும் விலையோ உங்கள் மணிபர்சை வற்றச்க் செய்கின்றது இல்லையா?.......இதையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்தால் பதில் உண்டா? சுதந்திரம் அப்படின்னா என்னங்க?

    ReplyDelete
    Replies
    1. அங்கே துப்பாக்கி சூடு நடத்திய ஜெனரல் டயர் ,இன்னும் துப்பாக்கியில் ரவைகள் இருந்து இருந்தால் அத்தனைப் பேரையும் கொன்று இருப்பேன் என்று அப்போது சொன்னது இன்றும் மனதில் கொந்தளிப்பை உண்டாக்கும் !

      சுதந்திரம் இன்னும் பலருக்கும் சோற்றுக்கில்லா சுதந்திரம்தான் !
      நன்றி

      Delete
  9. நாங்களும் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த பார்த்து விட்டு மனம் குமறிதான் வந்தோம்.
    எங்கும் ஓலமும் கூச்சலும் கேட்பது போலவே மனதை சங்கடப்படுத்தியது.

    ReplyDelete
    Replies
    1. ஜெனரல் டயர் அவர் கடமையைத் தானே செய்து இருக்கிறார் என்று காந்திஜி சொன்னாராம் ,அதுகூட மனதை உறுத்தத்தான் செய்கிறது !
      நன்றி

      Delete
  10. இரத்தமின்றி கிடைத்ததா நமது சுதந்திரம் ?---இல்லவே இல்லை ஜீ காட்டிக் கொடுத்து வாங்கப்பட்டது ஜீ......

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் இந்த பதிவில் நானும் காட்டிக் கொடுத்து விட்டேனா?
      நன்றி

      Delete
  11. என்று நினைத்தாலும் மனம் பதறும் சம்பவம்....

    ReplyDelete
    Replies
    1. 150 போலீஸ் ஒரே நேரத்தில் சுடுகிறார்கள் ,மக்கள் எப்படியெல்லாம் அலைபாய்ந்து இருப்பார்கள் ,நினைத்துப் பார்க்கவே முடியவில்லை !
      நன்றி

      Delete
  12. கத்தியின்றி ரத்தமின்றி என்பதெல்லாம் கவிதைக்கு மட்டுமே ஏற்ற வரிகள்! சம்பவம் நடந்த இடத்தைப் படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!
    த.ம.9

    ReplyDelete
    Replies
    1. சுதந்திரம் பெற்றதிலும் மறைக்கப் பட்ட வரலாறு இருக்கத்தான் செய்கிறது !
      நன்றி

      Delete
  13. பார்க்கும் போதே உயிருக்காக ஓடியவர்கள் மனதுக்குள் ஓடுகிறார்கள்..
    மனசை வாட்டும் சம்பவம்...

    ReplyDelete
    Replies
    1. இதிலென்ன கொடுமை என்றால் சுட்டவனும் நம்மாள்,செத்தவனும் நம்மாள்!
      நன்றி

      Delete
  14. வணக்கம்
    தலைவா.
    இரசித்தேன் நன்றாக உள்ளது
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. படங்களை ரசிக்கலாம் ,ஆனால் அந்த கொடூர சம்பவத்தை எப்படி மறக்க முடியும் ?
      நன்றி

      Delete
  15. இந்தக் கிணற்றில அத்தனை உயிர்களுமா?
    எத்தனை பெரிய துயரம்!

    ReplyDelete
    Replies
    1. அத்தனை உயிர்களும் கிணற்றில் விழவில்லை ,துப்பாக்கி சூட்டிற்கு பயந்து குழந்தைகளுடன் பலரும் கிணற்றில் குதித்து மாண்டு போய் இருக்கிறார்கள் !
      நன்றி

      Delete
  16. நிச்சயமாய் கத்தியின்றி ரத்தமின்றி கிடைத்தல்ல இந்த சுதந்திரம் ஏராளமான உயிரிழப்புகளின் பின்னேயே பெறப்பட்டது..... காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தின் முன்னும் பின்னும் புதைக்கப்பட்ட உயிர்கள் பல லட்ச்சம்

    ReplyDelete
    Replies
    1. பகத் சிங் ,சுகதேவ் ,நேதாஜி ,உத்தம்சிங் போன்றவர்கள் சென்றது வன்முறை பாதையென்று அவர்களின் தேசபக்தியை குறைத்து மதிப்பிடப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை !
      நன்றி

      Delete
  17. எப்படியோ பல இன்னல்களுக்கிடையே கிடைத்த அந்த சுதந்தரத்தை நாம் எப்படி பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். கையாலாகாத கயவர்களிடம் நாட்டைக்கொடுத்து விட்டு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வெள்ளையனிடம் இருந்து தப்பித்து கொள்ளையர்களிடம் மாட்டிக்கிட்டோம் என்பது சரிதான் !
      நன்றி

      Delete