9 July 2014

ரெண்டு பெண்டாட்டிக்காரன் பாடு திண்டாட்டம்னு யார் சொன்னது ?

---------------------------------------------------------------------------------
இதுக்கு பேசாமலே இருந்து தொலைக்கலாம் !

''பிரிட்ஜ்  வாங்கப் போன இடத்திலே உன் புருஷன்  மானத்தை வாங்கிட்டாரா ,என்ன கேட்டார் ?''
''ஃபிரிட்ஜ் கதவை எப்ப திறந்தாலும் லைட் எரிஞ்சுகிட்டே இருக்கு ,அணையவே அணையாதான்னு கேட்கிறாரே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

நிம்மதி ...இரு மனைவிகள் தந்தது !

''என்னடா சொல்றே ,ரெண்டாவது 

கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் தான்  நிம்மதியா 

இருக்கியா ,எப்படி ?''
''
''அவங்க ரெண்டு பேரும் போட்டுக்கிற சண்டையிலே 

என்னை மறந்துட்டாங்களே !''


'சிரி'கவிதை!

இரத்தம் தேவைப் படுவோர்க்கு தருவதில்லை ...ஆனால் ?

இரத்ததானம் செய்வதில் ...
நாம்தான் முதல் இடம் என்று பெருமைப் படமுடியாது ...
நம் விருப்பமின்றி உறிஞ்சப்படும் இரத்தத்தால் 
கொசுக்கள் மட்டுமே வாழ்கின்றன !

40 comments:

  1. உங்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. 1. பல்ப் 40 வாட்ஸ் தானே!..
    2. சமாதானக் கொடி பறக்க வழியே இல்லையா!..
    3. கொசுவுக்கும் கொண்டாட்டம்!..

    ReplyDelete
    Replies
    1. 1.இப்போதெல்லாம் பல்பு கூட பரவாயில்லை ,எலக்ட்ரானிக்ஸ் சோக் மாட்டிவிட்டால்,போட்டவுடன் டக் என்று எரிந்து விடுகிறது !
      2.ஏன் இல்லே .மூணாவதா ஒன்னைக் கொண்டு வந்த போச்சு !
      3.உண்மைதான் ,எதுக்கும் மசியற மாதிரி தெரியலே !
      நன்றி

      Delete
  3. என்னது, நீங்கள் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஐடியா கொடுக்குறீங்களா.
    எங்கே உங்கள் வீட்டம்மா, அவர்களிடம், உங்களுக்கு பூரிக்கட்டை அடியை உங்களுக்கு பரிசாக கொடுக்கச் சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இப்படி எல்லாம் நடக்கும்னுதான் பூரிக்கட்டையை ஒளித்து வைத்திருக்கிறேன் !
      நன்றி

      Delete
  4. அப்படி ஒரு வசதி இருக்குறது
    சில வருஷத்துக்கு முன்னால் தெரியாமப் போச்சே

    ReplyDelete
    Replies
    1. ரெண்டே வருசத்திலே ,இப்போ என்ன வயசாகிப் போச்சா ?
      நன்றி

      Delete
  5. இரண்டு பேரிடமும் ஆப்பு உண்டு... ஹிஹி....

    ReplyDelete
    Replies
    1. ஆப்பில் இருந்து தப்பிக்க,மூணாவதா ஒண்ணை கட்டிகிட்டா ,போலீசின் வளைக்காப்பும் உண்டு !
      நன்றி

      Delete
  6. இன்றைய வாழ்க்கை நமக்காக வாழும் வாழ்க்கையில்லை... அடுத்தவர்களுக்காக வாழும் வாழ்க்கையால் தேவைகள் பெருகுது...+ ஆசைகளும் பெருகுது...++ துன்பங்களும் பெருகுது...+++

    மேலும் : http://dindiguldhanabalan.blogspot.com//2014/07/Civilisation.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவை ரசித்து படித்தேன் ஜி !
      நன்றி

      Delete
  7. ரெண்டாவது சம்சாரத்துல இப்படியொரு ? சமாச்சாரம் இருக்கா ? மொதவே தெரியாமே போச்சே பகவான்ஜி,,,,
    தற்போது,,, ''எனக்குள் ஒருவன்''

    ReplyDelete
    Replies
    1. எனக்குள் ஒருவன்னு யோசிக்க ஆரம்பிச்சாச்சு ,இனிமே எதுக்கு இன்னொருத்தி ?
      நன்றி

      Delete
  8. மதுர எனக்கொரு பொண்ணு பாரய்யா இது தெரியாமா வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. மதுரைத் தமிழனுக்கு ஒரு பூரிக்கட்டை போதாதா(ம்)?!!!!! அப்ப ஜி பாத்துக் கொடுங்க.....

      Delete
    2. நீங்க நம்மூர்காரராச்சே விசாரித்தேன் ,அமெரிக்க பையனானு வேண்டாங்கிறாங்க ,எதுக்கும் வூட்டுக்கார அம்மாகிட்டே இருந்து ஒரு NOC லெட்டர் வாங்கி அனுப்புங்க ...பூரிக் கட்டை அடி வாங்கி நீங்க பொழச்சி கிடந்தா பார்ப்போம் !
      நன்றி

      Delete
    3. ஒரு பூரிக்கட்டை அடியில் இருந்து தப்பிச்சு அவர் வரட்டும் ,பார்த்து முடிச்சிறலாம் துளசிதரன் ஜி !
      நன்றி

      Delete
    4. வாழ்க்கை வேஸ்ட் ஆனது தமிழனுக்கா? இல்லை அப்பாவி மிஸ்ஸஸ் தமிழனுக்கா/!!??

      Delete
    5. சபாஷ்,சரியான கேள்வி !இதுக்கு பதில் சொல்லப் போறது அப்பாவியா ,இல்லை வேறெந்த பாவியா ?
      நன்றி

      Delete
  9. இரு மனைவிகள் எண்ணம் இருந்தால்
    இப்பவே கைவிடச் சொல்லுறியள்...
    கொசுக்கள் வாழ்வதாகச் சொல்லுறியள்...
    பிரிஜ் வாங்கப் போன இடத்திலே
    இத்தனையும் இருக்கா?

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் சொல்லலாம் ,இல்லேன்னா இருபக்க இடியை வாங்க வேண்டி இருக்குமே !
      கொசுக்களை இரத்தம் கொடுத்து வாழ வைப்பதும் ,சுற்றுச் சூழலைக் கெடுத்து வாழ் வைப்பதும் நாம்தானே ?
      அவரை பிரிஜ்ஜின் உள்ளே தள்ளி லைட் எரியுதான்னு பார்க்க சொல்லி இருக்கலாமே !
      நன்றி

      Delete
  10. ஹாஹாஹா....அப்பா இரண்டு பூரிக்கட்டைன்னு சொல்லுங்க....சிரிகவிதை அருமை! அப்ப கொசுக்கள் ரத்த தானம் செஞ்சா?!!! ஜி?!!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. மத்தளத்துக்கு மட்டுமா இருபக்கம் இடி ,இவங்களுக்கும் தான் !
      கொசுக்களிடம் இருந்து ரத்தத்தை பிரிச்சி எடுக்க முடியுமான்னு யாராவது ஆராய்ச்சிசெய்ஞ்சா நல்லாயிருக்கும் !
      நன்றி

      Delete
  11. சாமி சத்தியமா...நான் சொல்லல தலைவா.....

    ReplyDelete
    Replies
    1. வெறுமனே சாமி சத்தியமா என்று சொன்னால் எப்படி ?அந்த ரெண்டு பெண்டாட்டிக்கார சாமி மேலே சத்தியமா என்று சொல்லுங்கள் ,நம்புகிறேன் !
      நன்றி

      Delete
  12. தம.6.
    லைட் எரிஞ்சுகிட்டே இருக்கே மின்சாரம் சிக்கனம் செய்யலாமேனு நினைச்சிருப்பார். அதபோயி சம்சாரம் தப்பா நினைச்சுட்டாங்களே.?!

    ReplyDelete
    Replies
    1. சிக்கனம் பண்ணனும்னு பல்பையே கழட்டி வைக்க சொல்வாரோ ?
      நன்றி !

      Delete
  13. எனக்கு ஒரு சுஜாதா ஜோக் நினைவுக்கு வருது!
    அறை நண்பனிடம் அவன் சொன்னான் "டே நம்ம ரூம்ல எதோ பேய் இருக்குடா.
    ஏன் அப்படி சொல்லுற?
    இல்லைட நான் பாத்ரூம் கதவை திறந்ததும் தானா லைட் எரிந்தது. கதவை மூடியதும் தன்னால லைட் அனைஞ்சுருச்சு
    அட பாவி! நம்ம பிரிட்ஜ் ஐ நாரடித்துது நீதானா?:)))

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி ,சம்பந்தப் பட்ட விசயத்தை சரியா சொல்ல முடிகிறதே !
      சுஜாதா 'ஜோக் 'கிலும் கிங்குதான் !
      நன்றி

      Delete
  14. இப்போ நானும் ஏழு .தம வை சொன்னேன்:))

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி ,ஏழாவது வோட்டை சரியா போட்டுட்டீங்களே !
      நன்றி !
      உங்களுக்கான என் நன்றியைக் காண்க >>>http://www.jokkaali.in/2014/07/blog-post_8.html

      Delete
  15. அவர் ரொம்பத்தான் கருமியோ?!

    ReplyDelete
    Replies
    1. கிருமி நுழைந்து காய்கறிகள் கெடாமல் இருக்க ,அந்த அம்மா பிரிட்ஜ் வாங்கப் போனா ,இந்த கருமி இப்படி எதையாவது கேட்டு வாங்காமலே வந்து விடுவார்னுதான் படுது நம்பி ஜி !
      முதல் வருகைக்கும் ,கருத்துரைக்கும் நன்றி !

      Delete
  16. ஜோக்ஸ் ரெண்டும் சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இரத்தம் உறிஞ்சுவதால் கொசுவை உங்களுக்கும் பிடிக்கலைப் போலிருக்கே !
      நன்றி !

      Delete
  17. முதலாவது சிரிப்பு மிகவும் அருமை...
    வாழ்த்துக்கள் ஜி.

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஆளுக்கு பல்பை கழட்டிவிட்டு ஃபிரிட்ஜை விற்று இருப்பாரோ ?
      நன்றி

      Delete
  18. ரசித்தேன்....

    துளசிதரன் சார்..... இரண்டு பூரிக்கட்டை - தாங்காது சாமி!

    ReplyDelete
    Replies
    1. அது சரி உடம்பென்ன இரும்புலேயே செய்து இருக்கு ?
      நன்றி

      Delete