10 February 2016

சேஷ்டைக்கார நடிகருக்கு வந்த பயம் :)

                 ''அந்த நடிகையோட நெருங்கி நடிக்க திடீர்னு உங்களுக்கென்ன பயம் ?''

                 ''நூறு கிலோ எடையை அவர் தூக்கினதா தகவல் ,வைரலா  பரவிட்டு வருதே !''
இன்னும் சில மாதங்களில் இது நடக்கும் :)              
                 ''ATM கார்டை காட்டிட்டு  உள்ளே போங்கன்னு  ஏன் சொல்றீங்க ,வாட்ச்மேன் ?''
                 ''வெயிலுக்கு  AC  சுகமா இருக்குன்னு  சும்மாவாச்சும்  சில பேர் உள்ளே   நுழைய  ஆரம்பிச்சிட்டாங்களே !''

பணம் தேவைன்னு இப்படியுமா நடந்துக்கிறது :)

         ''அடகு கடையிலே வந்து ஒரு முழத்துக்கு எவ்வளவு தருவீங்கன்னு கேட்கிறீங்களே ,ஏன் ?''

        ''பொன்னை வைக்கிற இடத்தில் பூவையும் வைக்கலாம்னு சொன்னாங்களே !''

  1. விசுவாசமுள்ள 'வீட்டோட' மாப்பிள்ளை :)

                         ''ஊரே 'மாமதுரை போற்றுவோம் 'ன்னு விழா கொண்டாடிக்கிட்டு இருக்கு !நீ மட்டும் 'மாமா  துரையைப்   போற்றுவோம் 'ன்னு  தனி ஆவர்த்தனம் வாசிக்கிறியே ,ஏன் ?''
                       ''பொண்ணை கொடுத்து ,வீட்டோட மாப்பிள்ளையா ஆக்கிகிட்ட ,என்னோட மாமா  துரையைப்  போற்ற வேண்டியது என் கடமையாச்சே !''
  2.               (சில  வருடத்துக்கு முன் , அரசின் சார்பில்  'மாமதுரை போற்றுவோம் ' என்ற  தலைப்பில் ஒரு வார விழா கொண்டாடிய போது  உண்டான மொக்கை இது :)

மெய் போனாலும் மொய் போகாது :)

திருமண ஆல்பத்தைப் புரட்டுகையில் ...
சிரிப்புடனே காட்சி தரும் பெருசுகளைப் பார்க்கையில் ....
பாவமாய்த்தான் இருக்கிறது 'போய் விட்டார்களே 'என்று !
மொய் வைத்தவர்களை மறக்க முடியுமா ?

30 comments:

  1. ரசித்தேன். குறிப்பாக ஏ.டி.எம் ஜோக்.

    ReplyDelete
    Replies
    1. ஜில்லென்று இருந்ததா :)

      Delete
  2. திருமண ஆல்பத்தைப் பார்க்கும் போது மகிழ்ச்சியும் வருத்தமும் உண்டாவது இயற்கையே!..

    எதுக்கு மகிழ்ச்சி!.. எதுக்கு வருத்தம்?..

    இதிலேயிருந்து அடுத்த நகைச்சுவை (!) பிறக்கும் என்று நினைக்கின்றேன்..

    ஆனாலும் -

    >>> மெய் போனாலும் மொய் போகாது <<<

    கவித்துவமான வார்த்தைகள்..

    ReplyDelete
    Replies
    1. மொய்யை நினைத்து கவலைப்படாமல் அவர் ஆன்மா சாந்தி அடைவதாக :)

      Delete
    2. நான் கேட்டதற்குப் பதிலில்லையே?..

      திருமண ஆல்பத்தைப் பார்த்ததும் - எதுக்கு மகிழ்ச்சி!.. எதுக்கு வருத்தம்?..

      Delete
    3. தாலி ஒரு வேலி என்பார்கள் ,அதைக் கட்டியதால் மகிழ்ச்சி ,
      அந்த வேலியில் போறதைக் மடியிலே கட்டிகிட்டு குடையுதேன்னு இப்போ வருத்தப் பட்டு என்ன செய்ய:)

      Delete
  3. எதையும் தாங்கும் இதயம்...!

    நாங்களாவது சும்மாவாச்சும் நுழைந்து வெளிய வந்திடுறோம்... இது பரவாயில்லை... நீங்க உள்ளேயே உக்கார்ந்துக்கிறிங்களே...!

    பொன்னை வைக்கும் இடத்தினிலே பூவை வைத்து பார்ப்பதற்கு அண்ணன் அன்றி யாருமுண்டோ...? இன்னக்கி ஒரு முழப்பூவு... இந்தத் தம்பி ஒங்களுக்காக வாங்கிட்டு போறான்... இதுக்கு காசு ஏதும் கேக்க மாட்டிங்க... இதுதான் என்னால செய்ய முடியும்...!

    மாமா துரை மாமதுரையில் நீடுழி வாழ்க...! போற்றிப் பாடடி பொண்ணே… தேவர் காலடி மண்ணே…!

    பேரிழப்பை அவர்களால் தாங்க முடியாது... நினைக்கிறப்ப எனக்கு... எனக்கு பேச்சு வரமாட்டேங்கிது... துக்கம் தொண்டைய அடைக்கிது...!

    த.ம.3





    ReplyDelete
    Replies
    1. கெட்ட எண்ணத்துடன் நெருங்கினால் ,எதையும் தூக்கி எறியும் இதயமாகி விடும் :)

      உட்கார்ந்தாலும் பரவாயில்லை ,தூக்கம் வேறு:)

      இவன் பொருளாதாரம் ,தாரத்துக்கு பூவை மட்டும்தான் வைத்து பார்க்க முடிகிறது :)

      அவர் ,பெரிய துரைதான் போலிருக்கு :)

      அடைச்சாலும் பரவாயில்லை ,பட்ட கடனை அடைக்க மறக்காதீங்க :)

      Delete
  4. நல்ல மருமகன் தான்,,,

    அனைத்தும் அருமை ஜீ,,

    ReplyDelete
    Replies
    1. விசுவாசமிக்க மருமகனும் கூட :)

      Delete
  5. அவரை இவர் தூக்க வேண்டாதவரை பாதகமில்லை
    ATM கார்டுடன் எத்தனை பேர் நுழைய முடியும்
    தாரத்துக்குச் சொன்னதை அடகுக்கு உபயோகிக்கலாமா
    நீங்கள் போற்றுவது மாமதுரையையா மாமா மதுரையையா
    பெரிசுகள் மட்டும்தான் போகிறார்களா என்ன

    ReplyDelete
    Replies
    1. இந்த நடிகை 'தூக்கி அடிச்சிருவேன் 'என்று சொன்னாலும் நம்பத்தான் வேண்டும் :)
      ரூம் கொள்ளும் அளவுக்கு :)
      யாரோட தாரம் ,பூவே போதும்னு சொல்லும் :)
      அவர் ,என் வீட்டோட மாமனாராய் இருந்தாரே :)
      இதில் எங்கே சீனியாரிட்டி இருக்கு :)

      Delete
  6. மனசு கொஞ்சம் பாரமாக இருந்தால் உங்கள் பக்கத்துக்கு வந்து போகலாம்....என் நண்பர்களுக்கும் சொல்லியிருக்கிறேன்... ஜோக்காளி பக்கம் வந்துபோங்கள் கவலை மறக்கும்... நான் கியாரண்டி...

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,உங்கள் நண்பர்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் இல்லை ,தப்பித்தேன் :)

      Delete
  7. 01. உண்மைதானே இவன் ஏதாவது........ அவ கோபப்பட்டு தூக்கி அடிச்சிட்டா ?
    02. ஹாஹாஹா அனுபவமா ஜி ?
    03. மொக்கைராசு ஸூப்பர்தான் ஜி
    04. போய் விட்டார்களே காரணம் இதுதானோ..

    ReplyDelete
    Replies
    1. அதென்ன கோடிட்ட இடம் :)
      எனக்கெதுக்கு ஒசியிலே ஏசி:)
      மேல் மருவத்தூர் மொக்கை ராஜோ :)
      கடனாளி ஆக்கிட்டு போயிட்டாங்களே :)

      Delete

  8. ஏடிஎம், பொன் வைக்கும் இடத்தில் பூ, மாமா துரை ரசிக்க வைத்த சிரிப்புகள்.
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் மதுரைதானே ,மாமா துரையைபார்த்து இருப்பீங்களே :)

      Delete
  9. நடிகருக்கே பயம் வந்துவிட்டதா...???

    ReplyDelete
    Replies
    1. தாங்கும் திறன் ,நூறு கிலோ என்றால் சும்மாவா :)

      Delete
  10. //விசுவாசமுள்ள 'வீட்டோட' மாப்பிள்ளை :)//

    January 9 ·
    தமாஷ்... 9.
    "தலைவர் அந்த ஆளுக்கு, வர்ற எலெக்ஷன்ல சீட்டையும் கொடுத்து, தன் பொண்ணையும் கொடுக்கப்போறாரம்!"
    "அப்ப, 'ஸீட்டோட மாப்பிள்ளை'னு சொல்லு!"
    -வி. சாரதி டேச்சு

    ReplyDelete
    Replies
    1. இந்த டைமிங் ஜோக்கும் நல்லாயிருக்கே :)

      Delete
  11. வணக்கம்
    ஜி

    அனைத்தும் அருமை அதிலும் ATM நகைச்சுவை நன்று.. ஜி.த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நீங்க இருக்கிற மலேசியாவில் ,ac காற்று வாங்க, இடத்துக்கு பஞ்சமிருக்காதே :)

      Delete
  12. ஏ,டி,எம் நிஜமாய் நடப்பது தானே, நாங்கல்லாம் வெயில் அடித்தால் சூப்பர் மார்க்கெட்டுக்குள் இந்தக்கதவால் போய் அந்த கதவால் வருவோம்ல,அந்த குளுமை ஆஹா ஆஹா ஓஹோ என இருக்கும்ல!

    பொன் வைக்கும் இடத்தில் பூ! இப்படி சொல்லி சொல்லி?

    கல்யாண அல்பம் அதெப்படி மொய் போகும் அவங்க பசங்க இருப்பாங்களே! கணக்கெல்லாம் அவங்க வீட்டு நோட்டுப்புத்தகத்தில் பக்காவா இருக்கும், கவனமாய் இருந்துக்கணும்!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் மார்கெட்டை தேடி போகணும் .atm ஊர் பூராயிருக்கே ,எங்களுக்கு இது போதும் :)

      ஏமாற்றுகிறார்களா ஆணாதிக்கவாதிகள் :)

      அப்பன் வைத்து விட்டு சொத்துக்களில் இந்த நோட்டும் முக்கியம் :)

      Delete
  13. ரசித்தேன் ஜி.. மாமா துரையைப் போற்றுவோம் வார்த்தை விளையாட்டையும், மொய் வைத்த பெரியவர்கள் பற்றிய கருத்தையும்.

    ReplyDelete
    Replies
    1. மெய் சிலிர்த்து போனதா :)

      Delete
  14. ஏடிஎம் ஹஹஹ ஆனால் நிறைய பேர் மால்களில் தஞ்சம் புகுவதாகத்தான் தெரிகின்றது...

    100 கிலே வெயிட்டா..ஹஹ் அப்போ அவர் வெயிட் லிஃப்டிங்க் போட்டிக்குப் போகலாமோ ஆனா அங்க ஹீரோயினத் தூக்க முடியாதெ ஹிஹிஹி

    திருமண ஆல்பம்??!!! ஹிஹி அது எதுக்கு மீண்டும்...

    ரசித்தோம் ஜி...

    ReplyDelete
    Replies
    1. மால்களில் இப்படியுமா கோல்மால் பண்ணுவது :)

      பிப்டி கேஜ் தாஜ் மகாலை வேண்டுமானால் தூக்குவார் :)

      அன்னைக்கு தான் சுனாமி நாளா :)

      Delete