அழுகைக்கு , உண்மையான காரணம் :)
'' செத்த பெண்டாட்டிக்காக அழவே மாட்டேன்னு அடக்கி கிட்டிருந்தே ,இப்போ ஏண்டா அழறே?''
C C T V கேமராவை ' இங்கே ' யுமா வைப்பது :)
''தப்பு பண்றவங்களை கடவுள் நின்று கொல்லும் என்பதை கோவில் நிர்வாகியே நம்பலே போலிருக்கா ,ஏன் ?''
''கோவிலுக்குள்ளேயும் CCTV கேமராவை மாட்டி வைச்சுருக்காரே!''
''டாக்டருக்கு உன் பையன் பரவாயில்லையா ,ஏண்டி ?''
''பையன் எட்டணாவை விழுங்கிட்டான்னு டாக்டர் கிட்டே போனா, அவர் எட்டாயிரம் ரூபாயை விழுங்கிட்டாரே !''
''பையன் எட்டணாவை விழுங்கிட்டான்னு டாக்டர் கிட்டே போனா, அவர் எட்டாயிரம் ரூபாயை விழுங்கிட்டாரே !''
வாய்தா கோர்ட்டில் கேட்கலாம் ,வீட்டில் ..:)
|
|
Tweet |
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
வீட்டில் வாய்தா கேட்பதையுமா :)
Deleteகோயிலுக்குள் கேமரா. சிறந்த நகைச்சுவை.
ReplyDeleteமகாமகத்தை முன்னிட்டு நீங்கள் நிறைய கோவில்கள் பார்த்ததால் குறிப்பிட்டு சொல்லி விட்டீர்கள் ,நன்றி :)
Deleteமரித்த மரியா உயிர்த்தெழுவாள்ன்னு எழுதியிருக்கிறத பார்க்கலையா...? அவளுக்கு ஆயுசு கெட்டி... மகனே ஒன்ன என்ன பண்ணப் போறாளோ...?
ReplyDeleteகடவுள் நின்று கொல்றது அந்தக் காலம்... இப்ப எல்லாம் பாத்துதான் கொல்லும்... பூசாரி உட்பட...! ஏன்னா... நிரபராதி தண்டிக்கப்பட்டிடக் கூடாதில்ல...!
பையன்... செல்லாக் காசுன்னு நிருபிச்சிட்டான்...! ஆளுக்கேத்தமாதிரி காசு... பணம்... பண்றாங்க...! வசூல்ராஜா இல்லையா...!
வாய்...தா...ன்னு கேட்டா... கொடுக்க வேண்டியதுதானே... ஒன்று கேட்டால் என்ன கொடுத்தால் என்ன கொறஞ்சா போய்விடும்...!
கொழுப்பு அதிகமாயிடக்கூடாதின்னு நல்ல எண்ணத்திலதான்... தண்ணியும்... வெள்ளையாயிருக்கும் பால்ன்னு காட்டத்தான்... ரீ... மிக்ஸ் பண்ணி தண்ணிக்கு மேல தண்ணிய மிக்ஸ் பண்ணி கொடுக்கிறோம்...! தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்...!
த.ம.1
மரித்தும் எழுவாள் மரியான்னு இனி சொல்லணுமோ :)
Deleteகுற்றவாளியே தண்டிக்கப் பட்ட மாதிரி தெரியலியே :)
வசூல் ராஜா ,சீட் வாங்க ,போட்ட முதலை எப்படி எடுக்கிறதுன்னு கேட்கிறாரே :)
கேட்டுத் தருவதல்ல வாய்ன்னு அவருக்கு தெரியலையே :)
இந்த தண்ணிய நம்பினா பிழைக்க முடியாதே :)
அனைத்தும் அருமை பகவானே!
ReplyDeleteத ம 3
அதிலும் ,அந்த வக்கீல் ..வீட்டிலே வாய்தா கேட்பது அருமையோ அருமைதானே :)
Delete01. அவனோட அனுபவம்
ReplyDelete02. அதை வச்சு 4 பேருக்கு வேலை வாய்ப்பை கடவுள் உருவாக்கி இருப்பாரோ...
03. எட்டாயிரத்தை விழுங்கிய டாகடர்தானே திறமைசாலி
04. தொழில் புத்தி
05. நல்ல கண்டுபிடிப்பு
நிறையவே வாங்குபட்டிருப்பார் போலிருக்கு :)
Deleteஅவர் என்ன எம்பிலாய்மென்ட் எக்ஸ்செஞ்சா நடத்துறார் :)
அவர் திறமை யாருக்கு வரும் :)
வீட்டுக்கு ஆகாதே :)
அனுபவம் பேசுதோன்னு கேட்காமல் விட்டீங்களே,நன்றி ..கில்லர்ஜி :)
அவிங்களே...நம்பாதப்போ...மத்தவங்கள..நம்பச் சொல்லுறாங்கே......
ReplyDeleteநம்புறவனுங்க இருக்கிற வரைக்கும் அப்படித்தான் சொல்வாங்க :)
Deleteஅடப்பாவி புருஷா!
ReplyDeleteம்ம்ம்...
ஒரு ரூபாய் விழுங்கி இருந்தால் 16,000 பிடுங்கி இருப்பாரோ!!!
வாய்தான்!
ம்ம்ம்ம்...
இப்படியுமா நடிக்கிறது :)
Deleteகண்டுக்கக்கூடாது ,அப்படித்தானே :)
விகிதாச்சாரம் இதிலுமா :)
வாய்க் கொழுப்புதான் :)
வெளிய சொல்லிக்கக் கூடாதோ:)
எட்டணா எட்டாயிரம் ஆகா..கா......
ReplyDeleteஎல்லாம் நன்றாக உள்ளது சகோதரா..
வாழ்த்துகள்
(வேதாவின் வலை)
ஏணி வச்சாலும் எட்ட முடியுமா :)
Deleteகஷ்டம் தான்,,
ReplyDeleteஅப்புறம் ,இப்படி வாய்தா கேட்டா என்ன செய்வது,,
அனைத்தும் அருமை ஜீ,,,
எது கஷ்டம் ,எட்டணாவை வெளியே எடுப்பதா :)
Deleteவீட்டிலே ,வாய்தா கேட்டால் இப்படித்தான் :)
உங்களைத் தொடர்ந்து முதலாம் இடத்தில் வைக்க, த.ம. +1
ReplyDeleteஉங்களின் நல்ல 'எண்'ணத்துக்கு நன்றி :)
Delete