27 February 2016

'இச் ' சினால் பலன் இல்லாமல் போகுமா ...)

 இவர் எல்லாம் எதுக்கு ஃ பிரிட்ஜ் வாங்கணும் :)                
                   ''என்னங்க ,ஃபிரிட்ஜ்ஜிலே  வச்சு இருந்ததெல்லாம் கெட்டு போயிருக்கே ,என்ன செய்ஞ்சீங்க ?''
                  ''நேற்று ராத்திரி ஃபிரிட்ஜ்சை  திறந்தப்போ,உள்ளே லைட் வேஸ்ட்டா  எரிந்து கொண்டே இருந்தது ... நான்தான்  ஸ்விட்ச்சை ஆப் செய்தேன் !''

படித்த செய்தி .....
இக்சி முறையில் எந்த வயதினரும் செயற்கை முறையில் கருத்தரித்து, அழகான குழந்தைகளைப் பெற முடியும் என்பதை  55 வயதுப் பெண் நிரூபித்து, குழந்தைகள் இல்லாத எண்ணற்ற தம்பதியினருக்கு பெரும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார் !
தோன்றிய  மொக்கை ....
               ''டாக்டர் ,உங்க மருத்துவமனையில்  தம்பதிகளுக்கு  'இக்சி 'முறையில் பிள்ளைப் பிறக்க வைக்கிறீர்களாமே ,அதெப்படி ?''
               ''உங்களுக்கு எதுக்கு அதெல்லாம் ? உங்களுக்கு  'இச் 'முறையிலேயே  எல்லாமே கிடைச்சுப் போவுதே !''
இப்படி இக்கு வைக்கும் காரணம் என்ன :)
                    ''தலைவர் வெளியிட்டு இருக்கிற வேட்பாளர் பட்டியலை 
பார்த்துட்டு ,அவர் முன்னாள் ரயில்வே அதிகாரியான்னு ஏன் கேட்கிறே ?''
               ''இந்த பட்டியலில் உள்ளவர்கள் கடைசி நேர  மாறுதலுக்கு 
உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''
அரைகுறை அகராதியால் என்ன பயன் :)
            ''என் அகராதியிலே 'மன்னிப்பு 'ங்கிற  வார்த்தையே கிடையாது !''
            ''பிறகெதுக்கு அந்த அரைகுறை அகராதியை வச்சுக்கிட்டு இருக்கீங்க ?''

நாம் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள் :)
 பாண்டுரங்க சுவாமிக்கு கோயில் கட்டும்
 பேறு பெற்றவர் நடிகை பண்டரி பாய் ...
 நாம் பெற்ற பேறு ...
 நடிகைகளுக்கு கோயில் கட்டும் காலத்தில் வாழ்வது !

16 comments:

  1. ப்ரிட்ஜ்...
    இச்...
    ரயில்...
    மன்னிப்பு...
    நடிகை...

    ரசித்தேன்... இச் ரொம்ப சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. 'இச்' தரும் சந்தோசத்துக்கு நிகர் இல்லைதானா :)

      Delete
  2. உங்களுக்கு என்ன மரை கழன்டு போச்சா... லைட்ட அணைக்காதிங்க... லைட்டா அணைக்காதிங்க...!

    'இச்சுத்தா இச்சுத்தா, கன்னத்தில் இச்சுத்தா... பிச்சுத்தா பிச்சுத்தா காசிருந்தா பிச்சுத்தா...!'

    வேட்பாளர் பட்டியல் மாறு ‘தள்ளு’க்கு உட்பட்டது...!

    இனிமேலும் இதுமாதிரி அகராதியா பேசாதிங்க... என் அகராதியிலே 'மன்னிப்பு'ங்கிற வார்த்தையே கிடையாதுன்னு கால்ல விழுந்திட்டீங்க... விழுவது தவறல்ல... விழுந்தவுடன் எழுந்திருக்காமல் இருப்பதுதான் தவறு... மன்னிச்சிட்டேன்... எழுந்திருங்க...!

    நடிகைக்கு... கோயில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்... குடி குடியைக் கெடுக்கும்...!

    த.ம.1




    ReplyDelete
    Replies
    1. இவர் எதைதான் கேட்டார் :)

      இக்சி சிகிச்சைன்னு போனா பிச்சுதரவே வேண்டியிருக்காது ,மொத்தம் மொத்தமா தர வேண்டியிருக்கும் :)

      'தள்ளு'தலில் இருந்து தப்பிக்க தள்ள வேண்டியதைத் தள்ளினால் போச்சு :)

      இவ்வளவு சொல்லியும் சனியன் எழமாட்டான் போலிருக்கே,தொட்டுத் தூக்கட்டும்னு நினைகிறானோ :)

      இப்படி கோவில் இருக்கிற ஊரில் இருக்கவே வேண்டாம் :)

      Delete
  3. ரசித்தேன் பாஸ். அரைகுறை அகராதி சிரிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. அரைகுறை அகராதி கூட சிரிக்க வைக்குதா :)

      Delete
  4. 01. அதானே கரண்டு மிச்சம்தானே..
    02. இன்னும் எதுவெல்லாம் வரப்போகுதோ...
    03. பயக்க வயக்கத்துல சொல்லிட்டாரோ...
    04. நியாயமான கேள்வி
    05. பாக்கியம்தான்.. ஜி

    ReplyDelete
    Replies
    1. கட்டியவளுக்கு இது கூட புரிய மாட்டேங்குதே :)
      ஏன் அங்கலாய்க்கிறீர்கள் ,தேவைப் படுபவர்களுக்கு இதெல்லாம் வரப் பிரசாதம்தானே :)
      ஆனால் இது பல பேரை மயக்கத்திலே கொண்டு போய் விட்டிருச்சே :)
      இது அந்த அகராதிக்கு புரிய வேண்டுமே :)
      பெரும்பாக்கியம் :)

      Delete
  5. Replies
    1. ஹிஹி யா ,ஜிஜியா :)

      Delete
  6. நல்ல சிக்கனவாதிதான்! ஹாஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. வாழைப் பழம் அழுகி விடும் என்று சிக்கனவாதி அதையும் உள்ளே வைக்காமல் போனால் சரிதான் :)

      Delete
  7. வணக்கம்
    ஜி
    அனைத்தும் அருமை இரசித்தேன் ஜி... த.ம6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசிக்கும் பேறு பெற்ற நீவீர் வாழ்க வாழ்க :)

      Delete

  8. ஃபிரிட்ஜ்சை திறந்தப்போ,
    உள்ளே லைட் வேஸ்ட்டா எரிந்து கொண்டே இருந்தது...
    அது தான் ஸ்விட்ச்சை ஆப் செய்தாராம்...
    அதால பாருங்கோ
    ஃபிரிட்ஜ்ஜிலே வச்சு இருந்ததெல்லாம் கெட்டு போயிருச்சாம்...
    அப்படி என்றால் பாருங்கோ
    லைட் வேஸ்ட்டா எரியாமலும்
    ஃபிரிட்ஜ்ஜிலே வச்சது கெட்டுப்போகமலும்
    உணவுகளைப் பேண வழியிருக்கே
    வற்றல் ஆக்கிப் பேணுவதே அது

    ReplyDelete
    Replies
    1. ஆப்பிளை வற்றல் ஆக்கினால் நல்லாவாயிருக்கும் :)

      Delete