இப்படியா கேலி செய்வது :)
''நடிகர் நாடாளத் துடிக்கிறார் ,ஆட்சிப் பொறுப்பு என்பது தலையில் வைத்துக் கொள்ளும் விக் அல்ல ,அது ஒரு முள் மகுடம் என்பதை அவருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் !''
சாலை விபத்தா ,இல்லற விபத்தா :)
''அந்த கல்யாண மகால் பொருத்தமான இடத்திலே அமைந்துருக்கா ,எப்படி ?''
''அடிக்கடி விபத்து நடக்கும் இடம் ஜாக்கிரதைன்னு ,அந்த இடத்திலே போர்டு இருக்கே !''
தலை எழுத்து என்று தப்பிக்கமுடியுமா ,கணவனால் :)
''குடியை விடலேன்னா டைவர்ஸ்தான்னு உன் மனைவி சொல்றாளா ,என்னடா செய்யப் போறே ?''
''அது சரி ,என் தலையிலே எனக்கு ரெண்டு பெண்டாட்டின்னு எழுதி இருந்தா யாராலே மாற்ற முடியும் ?''
மனைவியின் சமையலை மட்டம் தட்டலாமா :)
'' TV ல் 'செய்து பார்ப்போம் 'நிகழ்ச்சியில் காட்டின மாதிரி 'இந்த 'கேப்பை பாத் 'தை செஞ்சுருக்கேன் ,எப்படிங்க இருக்கு ?''
''இனிமேலே 'செய்து சாப்பிடுவோம் 'ன்னு நிகழ்ச்சி வந்தா பார்த்துட்டு செய் !''
அக்மார்க் அரசியல்வாதி :)
நியாயவிலைக் கடைகளை மூட வேண்டும் என்றதும் ...
ஏழைகளின் வில்லனென செருப்பை வீசிய கூட்டம் ..
நியாய 'எடைக்' கடைகளை திறக்க வேண்டும் என்றதும்
ஏழைகளின் தெய்வமென பூமாலைகளை சாற்றியது !
|
|
Tweet |
tha.ma.3
ReplyDeleteமுதலில் வந்து செய்த நல்ல காரியத்துக்கு நன்றி :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னும் உங்கள் இணைப்பு சரியாகவில்லை போலிருக்கே :)
Deleteமுள் மகுடத்தை மக்களுக்காக என் தலையில் சுமக்கச் சித்தமா இருக்கிறேன்...! மக்களுக்கு வழி காடட இந்த வலி எனக்கு ஒரு பொருட்டல்ல... என்ன மக்களே நான் சொல்றது... சரிதானே... அப்புறம் என்ன...? ஆகா... மறந்து போச்சே...!
ReplyDeleteஅடிக்கு அடி... விபத்து நடக்கும்... தெய்வம் நின்று கொள்ளும் இடம்...!
‘குடி... குடியைக் கெடுக்கும்...’ தெரியாம சொல்லிட்டாங்க... எனக்கு மற்றொரு புது வாழ்வைக் கொடுக்கப் போவுது...! அரசே வாழ்க...!
விருந்து... இருந்து சாப்பிட்டுப் போங்க... இல்லைன்னா... சாப்பிட்டு இருந்திட்டுப் போங்க...!
அரசியல்வாதியின் பேச்சு நியாய(மாய)மான பேச்சு...!
த.ம.4
தங்களின் சித்தமே மக்களின் பாக்கியம் :)
Deleteஅந்த போர்டை முதல்லே தூக்கச் சொல்லணும் :)
நாசமாப் போறதுக்கு வாழ்த்து வேற :)
தூங்கி எந்திரிச்சு போகவும் ஆசைதான் :)
பேச ,சொல்லியாத் தரணும்:)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம+1
ரெண்டு பெண்டாட்டிக்காரரையுமா :)
Deleteஅக்மார்க் அரசியல் வாதி செம...
ReplyDeleteகல்யாண மண்டபம் விபத்து நடக்கும் இடத்தில்...ஹஹஹஹ் அனைத்தும் ரசித்தோம் ஜி
இப்போ எடைக்கல்லே இல்லை ,கால் கிலோ கூட காட்டுகிறது ரேசன் கடை டிஜிட்டல் தராசு ,ஆனால் உண்மையில் அரைக் கிலோ குறைகிறது :)
Deleteஇருக்கக் கூடாது தானே, அந்த இடத்தில் மண்டபம் :)
ரசித்தேன் ஜி.
ReplyDeleteவழுக்கை விளம்பரத்தையும் தானே :)
Deleteகண்டிப்பா..மனைவியின் சமையலை மட்டம் தட்டக்கூடாது..
ReplyDeleteஅப்புறம் புவ்வாவுக்கு லாட்டரிதான் என்பது உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா :)
Delete01. ஸூப்பர் ஜி
ReplyDelete02. கல்யாணமும் வி10ஆ.....
03. ஆஹா இப்படியொரு எண்ணமா ?
04. காலை வாறியாச்சா ?
05. இதுதான் இன்றைய நிலை
தலைவர் தலையில் முடியே இல்லையே :)
Deleteசிலருக்கு :)
வாய்ப்பான்னு கேளுங்க :)
சமையல் எப்படி இருந்தாலும் ஆஹோ ,ஓஹோ என்று சொல்ல புருஷன் என்ன tv காம்பியரா:)
கல்தராசு இல்லாவிட்டாலும் ஏமாற்றத்தான் செய்கிறார்கள் :)
அனைத்தும் அருமை ஜி!
ReplyDeleteத ம 9
வழுக்கைத் தலையில் விளம்பரம் செய்தால் பலன் கிடைக்குமா :)
Delete