29 February 2016

படுக்கையிலுமா பத்தடி இடைவெளி :)

 பெயர் பொருத்தம் சரியில்லையே :)

                  ''இறுதி ஊர்வலம் போய்கிட்டு இருக்கு ,உனக்கென்னடா யோசனை ?''
                 ''மயானம் வரைக்கும் போற  இந்த வண்டியிலே நல்லவனும் போறான் ,கெட்டவனும் போறான் ...ஆனால் ,இந்த வண்டிக்கு எதுக்கு சொர்க்க ரதம்னுபெயர் வச்சிருக்காங்க ?''
படுக்கையிலுமா பத்தடி இடைவெளி :)

          '' டாக்டர் ,டிரைவர் நான் ...ரோட்டிலே  பாலோ பண்ற பத்தடி இடைவெளி  ரூல்ஸை வீட்டிலேயும் கடைப் பிடிக்கணுமா,ஏன் ?''

           ''ஐந்தாவது பிரசவத்துக்கு பெண்டாட்டியை கூட்டி வந்திருக்கீயே !''

நகைக் கடை 'வால்கிளாக்'காவது சரியாய் நேரம் காட்டுமா :)

           ''நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் ,யார் டைம் கேட்டாலும் ,பத்து நிமிஷம் குறைவாவே சொல்றீங்களே ...'டைம் இஸ் கோல்ட் 'ன்னு உங்களுக்கு தெரியாதா ?''

             ''நகைக்கடை வச்சுருக்கிற எனக்கும் அது தெரியும் ...சேதாரம் போக தோராயமா ஒரு டயத்தைச் சொல்றேன் ,தப்பா ?''
டாக்டர்களில் மட்டும்தான் போலி உண்டா :)

         ''என்ன சொல்றீங்க ,அந்த பெட்லே படுத்து இருக்கிறவர் போலி நோயாளியா ?''

          ''ஆமா ,அவர் கிட்னி விற்க வந்தவராச்சே !'

காதலுக்கு மரியாதை இதுதானா ?

பூண்டிலே ஒருதலைப்பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் ...
ஆனால் ,காதலில் ஒருதலைக் காதல் இருக்கே ,எந்தக் கொடுமையையும் செய்யத் தயங்காது என்று பஞ்சாப்பில் நடந்த கொடூரம் மூலம் மீண்டும் தெரிகிறது ...
திருமணத்திற்காக பியூட்டிப் பார்லரில் அலங்காரம் செய்துக் கொண்டிருந்த பெண் மீது ...
கூரியர் தபால்காரனைப் போல் உள்ளே வந்த கொடூரன் ...
ஆசிட்டை வீசியதில் ...
அந்தப் பெண்ணின் முகம் கழுத்து மார்பு வயிற்றுப் பகுதிகள் பாதிக்கப்பட்டன ...
C C TV கேமரா பதிவைக் கொண்டு அந்த கொடூரனை கைது செய்து விசாரித்ததில் ...
அந்தப் பெண்ணை தான் காதலித்ததாகவும் ,காதலை அவள் ஏற்றுக் கொள்ளாததால் ...
ஆசிட்டை வீசியதாகவும் கூறியுள்ளான் ...
உண்மையாக அந்தப் பெண் மீது அவனுக்கு காதல் என்றால் இப்படி செய்ய மனம் வருமா ?
தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்ற பொறாமையை எப்படி காதல் என்று சொல்ல முடியும் ?

15 comments:

  1. தத்துவம் நம்பர்?

    ஹா... ஹா... ஹா...

    செய்கூலின்னு டைம் சொல்வதற்கு ஒரு சார்ஜ் போடாம இருந்தாரே...

    வியாபார நோயாளின்னும் சொல்லலாம்!

    உண்மை. சரியான கேள்வி.

    ReplyDelete
    Replies
    1. மயானம் என்றாலே தத்துவம் ,வைராக்கியம் தானா :)

      கீப் டிஸ்டன்ஸ் ,நல்லதுதானே :)

      கொடுக்கிறவன் ஈனா வானாவா அதையும் கேட்பார் :)

      கிட்னி விற்கும் ஏழை பாழைகள் அதிகம் இருப்பதால் ,வில்லிவாக்க்கத்தை கிட்னிவாக்கம் என்றே சொல்கிறார்களே:)

      கொடுமை செய்வதற்கு பெயர் காதலாம்:)

      Delete
  2. ‘சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்... சொர்க்கத்தின் திறப்பு விழா’ ஏன் போகாத ஊருக்கு வழியக் காட்டுறீங்க...? நேரடியா கேக்க வேண்டியதுதானே...!

    ‘அஞ்சுவ தஞ்சாமை பேதைமை...’-ன்னு அய்யன் சொல்லி இருந்தாலும்... எனக்கு பத்து நெம்பர்தான் ராசியாம்... ஆண்டவன் கொடுக்கிறான்... நம்மலால ஆகக்கூடியது என்ன டாக்டர்...எல்லாம் அவன் செயல்...!

    தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் டயத்தினில் குறைவதுன்டோ...?

    டாக்டர்...நீங்கதான் கிட்னியத் திருடுறவராச்சே...! அது தெரியாம விக்க வந்திட்டாரு...!

    அறிவில்லாத மாக்கள்...! என் கவுன்டரில் போட்டுத் தள்ள வேண்டும்... கொஞ்சம் தள்ளுங்கள்...!

    த.ம.3



    ReplyDelete
    Replies
    1. இந்த வாகனத்தில் ஏறினாலே சொர்க்கம் தான் என்றால் ,வாழ்கையில் எவன்தான் யோக்கியனா இருப்பான் :)

      பத்தடி தள்ளியே இரு ,எந்த ஆண்டவன் ,எதைத் தருவான்னு பார்க்கலாமே :)

      அதானே ,வியாபாரி டயட்டையும் சேதாரம் போக தோராயமாக சொல்கிறார் :)

      விற்க வந்திருப்பவருக்கு ஓராண்டு கிட்னி இருக்கான்னு முதலில் செக் பண்ணனும் :)

      குறி பார்த்து சுடுங்க,இல்லேன்னா உங்களையும் சுட்டுத் தள்ள வேண்டியிருக்கும் :)

      Delete
  3. ஆசிட் கொடூரம் நண்பரே
    தம+1

    ReplyDelete
    Replies
    1. உயிரைக் கொடுக்கும் காதல் போய்,உயிரை எடுக்கும் காதலா இருக்கே :)

      Delete
  4. மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க.அனைத்தும் அருமை. கிட்னியை அதிகம்ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது அய்யா ,இனி உங்கள் தொண்டு தொடரட்டும் த ம வாக்கின் மூலம் :)

      Delete
  5. உங்க சோதனையில் ,த ம வாக்கு விழுந்து இருக்கும்னு நம்புகிறேன் :)

    ReplyDelete
  6. 01. நியாயமான சந்தேகம்தான்.
    02. இந்தக் காலத்துலயுமா ? அஞ்சு
    03. தொழில் புத்தி
    04. கிட்னியும் போலியா ?
    05. வேதனையானது ஜி

    ReplyDelete
    Replies
    1. கையில் இழுத்தால் சொர்க்கம் போய் சேர தாமதமாகும் என்று ரதத்தில் என்ஜினை மாட்டி விட்டார்கள் :)

      இதுக்குதான் பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் வேண்டாம்னு சொல்றது :)

      இதிலென்ன லாபம் கிடைக்குமோ :)

      இதுக்கு என்ன ISI முத்திரையா இருக்கும் :)

      கொடுரமனம் படைத்தவன் பெயர் காதலன் அல்ல :)

      Delete
  7. ஆசிட் அடித்திருக்கிறீர்கள்...சிரிப்பென்று ஒதுங்கிப்போக முடியாமல் ..சிந்திக்க வைத்துவிடுகிறிர்கள்...நன்றிகளும்,வாழ்த்துகளும் ஜி...

    ReplyDelete
    Replies
    1. சிரிக்க வைச்சா போதாது ,சிந்திக்க வைக்கணும்னு நண்பர் ஒருவர் சொன்னார் ,அதான் இந்த பதிவு :)

      Delete
  8. ஆசிட் வீச்சு - கொடுமையிலும் கொடுமை...

    ReplyDelete
    Replies
    1. காதல் கைகூடவில்லை என்றால் இப்படியுமா ?

      Delete