28 February 2016

'சின்ன வீடு' இங்கே இருப்பதும் நல்லதுதான்:)

கணவரின் தப்பை கண்டுக்காம விட முடியுமா :)

          ''டாக்டர் ,என் வீட்டுக்காரர்  கடந்த ஒரு மாசமா ,அரிசியில் கிடக்கிற கல்லை மட்டும் பொறுக்கி தின்கிறார் !''
                '' முன்னாடியே  ஏன் கூட்டிட்டு  வரலே ?''
                 ''ஐம்பது கிலோ மூடையாச்சே ,இன்னைக்கிதான் முடிச்சார் டாக்டர்  !''      

'சின்ன வீடு' இங்கே இருப்பதும் நல்லதுதான்:)

            ''அந்த அம்மாவை  வீட்டைக் காலி பண்ண வேண்டாம்னு எல்லோரும் தடுக்கிறாங்களே ,அவங்க  என்ன பெரிய சமூக சேவகியா ?''

          ''அட நீங்க வேற ,மந்திரியோட சின்ன வீடா அவங்க இங்கே இருக்கப் போய்தான், தொகுதி பக்கம் மந்திரி தலையைக் காட்டிகிட்டிருக்கார் !''

இசையால் இயற்கையை இசைய வைக்க முடியுமா :)

         ''அவர் , அமிர்தவர்சினி ராகத்தை வாசிச்சு ,மழைப் பெய்ய வைக்கிறேன்னு சவால் விட்டாரே ,என்னாச்சு ?''

          ''அவர் மேலே செருப்பு மழைதான் விழுந்தது !''

இதிலே வர்ற வருமானம் I T யிலும் கிடைக்காது :)

           ''என்னடா ,பிச்சையெடுக்க வரமாட்டேங்கிறே ?''

           ''கேட்டு வாங்கி சாப்பிடுறதெல்லாம் ஒரு பிழைப்பான்னு ,கேட்காம எடுக்கிற பிக் பாக்கெட் தொழில்லே  இறங்கிட்டேன் !''

சில வருடத்துக்கு முன் ...ஊட்டி புலி தந்த கிலி !

தமிழகத்தின் உச்சபட்ச உயரமான தொட்டபெட்டா பகுதியில் உலா வந்து ...

மக்களுக்கு அதிகபட்ச  கிலியைக்  கொடுத்துக் கொண்டிருந்த புலியை ...

ஒருவழியாக சுட்டுக் கொன்று விட்டார்கள் என்பதை அறிந்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் ...

3 2 ரவுண்டு சுட்டுப் பிடித்த புலியை ...

'ஆரம்பி 'வன விடுதிக்கு கொண்டு வந்தார்களாம் ...

இந்த 'ஆபரேசன் டைகர் ' புலி வேட்டையை ஆரம்பிக்க ஏன் இவ்வளவு தாமதம் செய்தார்கள் என்று தெரியவில்லை ...

இதற்குள் மூன்று உயிர்கள் பலியாகி விட்டன ...

யாரும் ஒருவாரம் வேலைக்கு செல்ல முடியவில்லை ...

பள்ளிக்கும் எந்த குழந்தையும் போகவில்லை ...

முற்றிலும் வியாபாரம் பாதிக்கப் பட்டது ...

மாமூல் வாழ்க்கை ஸ்தம்பித்தது ...

இவ்வளவு மோசமாக நிலைமை ஆகும் வரை அரசு தாமதித்த காரணம் ...

முறத்தால் புலியை எந்த வீரத்  தமிழச்சியாவது

விரட்டி விடுவாள் என்ற புராதன நம்பிக்கையாக இருக்குமோ ?

17 comments:

  1. அடப்பாவி...

    சமூக சேவை இப்படியும் செய்யலாம் போல!

    அதற்கு ஏதும் ராகம் உண்டா பாஸ்?

    இதுக்கு தண்டனை கிடையாது... அதுக்கு உண்டே பாஸ்?

    இருக்கும்... இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அடிப் பாவியும் கூட :)

      ஊரெல்லாம் கரெண்ட் கட்டான போதும் ,அந்த ஏரியாவில் கரெண்ட் கட்டாகவில்லையாமே :)

      மூக்கைச் சிந்தினால் வருமே :)

      மாமூல் கொடுத்தா ,தண்டனை போச்சே :)

      அங்கே,வீட்டுக்கு ஓரு விலையில்லா முறம் தரப் போவதாக தகவல் :)

      Delete
  2. Replies
    1. மந்திரி அடிக்கடி வர்ற ரகசியம் ,அருமைதானே :)

      Delete
  3. பரவாயில்லை... கல்லைத் தின்றாலும் கரையிற வயசு...! உன் புருஷன் பொறுக்கின்னு நிருபிச்சிட்டாரு...!

    சின்னவீட்டை உடனே காலி பண்ணச் சொல்லி வீட்டுக்காரம்மா ஏன் ஒத்தக் கால்ல நிக்கிறாங்கன்னுதான் தெரியல...!

    உன் இசை... மழையில் நனைய... ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதே... மழையே ஏமாற்றி விடாதே...!

    மயிலே மயிலே இறகு போடுன்னா... போடுமா...? அதான்... எடுத்துக்க வேண்டியதுதான்...!

    ஊட்டி வளர்ந்(த்)த புலியல்லவா...? அதனால் முறத்தை... தமிழச்சி விரட்டி விட்டாளோ என்னமோ...?!

    த.ம. 5








    ReplyDelete
    Replies
    1. வீட்டிலேதானே பொறுக்கின்னு அந்த அம்மா அவசரம் காட்டலே போலிருக்கே :)

      ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க ,வீட்டுக்கார அம்மாவையே காலி பண்ணிடப் போறாங்க :)

      செயற்கை மழையை வர வைக்கலாம் ,இயற்கை மழையை வரவைக்க எந்த கொம்பனாலும் முடியாதே :)

      மயிலுக்கு நீங்க பேசுறது புரிஞ்சா இறகு போடும் :)

      ஊட்டி வளர்த்ததை எப்படி விரட்டி விட மனம் வருமோ :)

      Delete
  4. /ஒருவேளை மனைவியை அவரு 50kg தாஜ்மஹாலா பார்த்திருந்தா..!!?/

    /இனிமே வாக்காளர்களே அவங்கவங்க MLAக்கு அவங்கவங்க தொகுதியில ஒன்னோ ரெண்டோ ஏற்பாடு செஞ்சு குடுத்திரனும் போல..!!/

    /முறம் எல்லாம் லெமூரியா கண்டத்தோடு வழக்கொழிஞ்சு போச்சே...!!/

    ReplyDelete
    Replies
    1. தாஜ் மகாலுக்கு சலவைக் கல்லே போதும்னு நினைச்சிட்டாரா :)

      இது ஒண்ணுதான் பாக்கி :)

      பண்பாட்டைக் காக்க ,முறம் வழங்கும் விழாவை நடத்தலாமா :)

      Delete
  5. மந்தியோட சின்னவீடு சேவை.. தெருவுக்கு தெரு இருந்தால்...எப்படி இருக்கும்......!!!!

    ReplyDelete
    Replies
    1. தெருவெல்லாம் சுத்தமாகி ,தொகுதியே தேவலோகம் ஆகிவிடுமா :)

      Delete
  6. 01. ரைட்டு ஒரு வேலை முடிஞ்சுருச்சு.
    02. தொகுதிக்கே சேவகிதான்.
    03. ஏதோ மழை விழுந்துச்சே...
    04. நள்ள கொள்கைதான்.
    05. இந்த நம்பிக்கையேதான் ஜி

    ReplyDelete
    Replies
    1. கஷ்டமான வேலை ,கூலியை உடனே கொடுத்துடுங்க :)
      தொகுதிக்கு ஒரு செவகிதானா :)
      மக்கள் தாகம் தீரலையே :)
      தன்மானக்காரர் போலிருக்கு :)
      பொழைப்பைக் கெடுக்குதா :)

      Delete
  7. வணக்கம்
    ஜி
    அனைத்தும் அருமை இரசித்தேன் த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நல்லதும் செய்யும் சின்ன வீடுன்னு சொல்லலாமா :)

      Delete
  8. செருப்பு மழை
    சின்னவீடு என்று அனைத்தும் ரசித்தேன் சகோதரா.
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. நமக்கு எதுக்கு ,செருப்பு மழையும் ,சின்ன வீடும் :)

      Delete
  9. அவர் பிக் பாக்கெட் அடிப்பதையுமா :)

    ReplyDelete