இதுக்குமா டப்பிங் வாய்ஸ் :)
'' அந்த நாய், நடிகை வீட்டு நாயா இருக்கும்னு ஏன் சொல்றே ?''
'' குரைக்குது ,ஆனால் சத்தம் வரலையே !''
எதுவுமே பிடிக்கலேன்னா என்ன பண்றது :)
''முப்பத்திரண்டு வகை பவுடரை காட்டியும் 'வாசனையே இல்லை'ன்னு இந்தம்மா சொல்றாங்க, நான் என்ன செய்றது முதலாளி ?''
'' எறும்பு பவுடரை வேணா காட்டிப் பாரு !''
வள்ளுவரை நினைக்க வைத்த மனைவி :)
''உனக்கு சூடு வச்சது உன் பெண்டாட்டி ,திருவள்ளுவரை ஏண்டா திட்டிக்கிட்டிருக்கே ?''
''அவர் அனுபவப்பட்டிருந்தால் 'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் 'னு எழுதி இருப்பாரா ?''
மழைக் குறைய காரணம் கண்டுபிடித்த மதுரை மேதை :)
கடந்த சில ஆண்டுக்கு முன் , மதுரையில் ஒரு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது ...
எதற்காக ?...
ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என அறிவித்து தண்டிக்க வேண்டும் என்பதற்காகவா...
கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதற்காகவா ...
இலங்கைச் சிறையில் இருக்கும் மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவா ...
இப்படிப்பட்ட கோரிக்கைக்காக அல்லவாம் ...
பாரம்பரியமாக நரியை பரியாக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்று வருகிறதாம் ...
அதில் உண்மை நரியை பயன்படுத்த காவல்துறை தடை விதித்து விட்டதாம் ...
பொய் நரியை பயன்படுத்தியதால் மழைப் பொய்த்துவிட்டதாம்...
(என்னே ஒரு அரிய கண்டுபிடிப்பு பாருங்கள் ,புவி வெப்பமயம் ஆவதால் இயற்கைச் சுழற்சி மாறிவருகிறது என்பதைச் சொல்வோரெல்லாம் தலைகுனியனும்!)
ஆகவே உண்மை நரியை பயன்படுத்த அனுமதி தரணும்னு தான் கையெழுத்து இயக்கமாம் ...
சரி ,உண்மை நரியை உண்மை பரியாக்கி காட்ட இவர்களால் முடியுமா ?
இப்படி ஒரு மூட நம்பிக்கையை வளர்க்கும் இயக்கத்திற்கு கௌன்சிலர் ஒருவர் தலைமையாம் ...
இவர்களால் வர வேண்டிய மழையும் வராது போலிருக்கே !
உண்ணக் கொடுக்கும் தாய்க்கே துரோகமா :)
பூமித் தாய் படைத்த உணவினை உண்டபின் ...
மனிதன் வீசியெறிந்த பிளாஸ்டிக் பைகளை
'ஜீரணிக்க 'முடியவில்லை ...பூமித்தாயால் !
|
|
Tweet |
01. நாயில் இப்படி வகையும் இருக்கா ?
ReplyDelete02. எறும்பு பவுடர் மணக்குமா ?
03. அவரு நினைப்பு இதுக்கா வந்தது
04. மழை வருவதை நிறுத்தி விடுவார்கள் போலயே...
05. ஸூப்பர் ஜி
குறைக்காத நாயும் இருக்கான்னு கேளுங்க ,அது நியாயம் :)
Deleteமணப்பது எல்லாம் நாறும் மூக்குக்கு மணக்கும் :)
அனுபவத்தில் வராதது எப்போ வரும் :)
அது வேண்டுமானால் நடக்கும் :)
வாழை இலைக்கூட இல்லை என்றாகி விட்டது :)
குரைக்கிற மாதிரி நடிக்கக் கத்துக்கிடுச்சு...சீக்கிரம் பெரிய ஆளா ஆயிடும்...!
ReplyDeleteபல் முப்பத்திரண்டு காணாப் போகப் போகுது... அவுங்க கேட்டது டூத் பவுடர்...!
சூடு பட்ட பூனையா இருந்தா தெரிஞ்சிக்கும்...!
வாராது வந்த மாமணி கௌன்சிலர்... நரியும் பரியாய் போன கதை... நாரதர் பெண்ணாய் ஆன கதை... நம் காலத்தில் மழை வேண்டி வயலின் வாசித்த கதை... எல்லாம் அறிந்த கதையல்லவா...? ‘மாமழை போற்றுதும்... மாமழை போற்றுதும்...!’ இல்லை இல்லை... மாமழை தூற்றுதும்...! மாமழை தூற்றுதும்...!
‘நெகிழி’ யை நினைத்து நினைத்து... பூமித்தாயவள் நெகிழ்ந்து விட்டாள்...!
த.ம. 1
நடிகை வீட்டு நாயும் நடிக்கும்..இது புதுமொழி :)
Deleteஅதிலும் ப்ளு டூத் பவுடர் வேணுமாம் :)
நல்ல மனுசன் ஏன் சூடு வாங்கப் போறார் :)
cowன்சிலருக்கு தேவையா நரியும் பரியும் :)
ஆனாலும் ,நெகிழிதான் கிழிய மாட்டேங்கிறது:)
எறும்பு பவுடர் கடைக்காரருக்கு மணமாகப் போயிடுத்து போல:))
ReplyDeleteபரவாயில்லை...இப்படியாவது திருவள்ளுவரும், திருக்குறளும் நினைவு வருகிறதே...சரி தான்...
தம் 2
கஸ்டமர் அவரை அப்படிக் கஷ்டப் படுத்துகிறாரே :)
Deleteஇதுக்குத்தான் சொல்றது ...அடி உதவுற மாதிரி .....:)
நடிகையின் நாய்மட்டுமா சத்தம் போடாமல் இருக்கு.... புருஷனும் தான்...ஹா...
ReplyDeleteஅவருக்கும் டப்பிங் வாய்ஸ் இருந்தால் நல்லது :)
Deleteஅனுபவதானே..பலருக்கு கை கொடுக்கிறது.....
ReplyDeleteஉண்மைதான்,மனைவியின் கையில் சூடு வைக்க கரண்டியையும் கொடுப்பதும் அனுபவம்தான் :)
Deleteபூமித்தாயால் ஜீரணிக்க முடியாத ப்ளாஸ்டிக்.... இன்னும் தொடர்வது கொடுமை.
ReplyDeleteஆயிரம் கால் பூதத்தை சுலபமாக அழிக்க முடியாதுதான் :)
Deleteசிரிப்பும் படமும் அருமை!
ReplyDeleteத ம 8
கொடுத்து வைத்த நாய் ,அப்படித்தானே ஜி :)
Deleteஅது எப்படி குறைக்கும்ன்னேன்.... அது இருக்க இடம் அப்படி... கொடுத்து வச்ச நாய் போங்க... :)
ReplyDeleteநாயைப் பார்த்து மயங்கி... உண்மையா நாயைத்தான் ஜி... அப்புறம் எல்லா ஜோக்ஸையும் ரசித்தேன் ஜி.
அந்த நாய்க்கு ,எந்த வேலை செய்தாலும் சத்தம் வராமல் செய்யணும்னு கட்டளையாமே :)
Deleteநீங்க சொல்றதை முழுக்க முழுக்க நம்புறேன் ,ஒரு ரசிகர் ..நாயா பிறந்தாலும் நமீதா வீட்டிலே நாயா பிறக்கணும்னு சொன்னாரே :)
பாவம் வள்ளுவர் !
ReplyDeleteவலியில் துடிக்கும் போதும் ,வள்ளுவர் ஞாபகம் வந்திருக்கேன்னு சந்தோசப் படுவோம் :)
Deleteவிவேக் ஒரு படத்துல கழுதைக்கு கல்யாணம் செஞ்சு வைப்பார்.
ReplyDeleteகல்யாணம் செய்து வைத்த 'சின்னக் கலைவாணர்' என்ன ஆனார்ன்னு தெரியலியே :)
Delete