தேவை ..இந்திய சாப்ட்வேர் மூளைகள் :)
கிட்னி பெயிலிராகி இருந்தால் :)
''எல்லோரும் அவரோட 'ஆஸ்துமா சாந்தி அடையட்டும் 'னு இரங்கல் தெரிவிக்கிறாங்களே ,ஏன் ? ''
''ஆஸ்துமா நோயால் காலமான அவருக்கு 'ஆன்மா 'நம்பிக்கை இல்லையாமே !''
சுவரிலே முட்டிக்கணும் போல இருக்கா :)
''நிலவில் இருந்து பூமியைப் பார்த்தா சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
''இதிலே என்ன அதிசயம் ,சீனப்பெருஞ்சுவரில் இருந்துப் பார்த்தாலும் நிலா தெரியுமே !''
பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி தீட்சீத்:)
தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை 2014/15 ஆண்டு ரூபாய் 26 295 கோடிக்கு விற்கப் படும் என்று கூறியிருக்கிறார் ...
தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் அவர்கள் ...
இது மிகப் பெரிய உலக சாதனை என்று தண்ணி அடிக்காமல் கொண்டாட்டம் போட நினைக்கும் நேரத்தில் ...
இன்னும் ஏன் தமிழகத்தில் ஒரு சம்பத் பால் தேவி தோன்றாமல் இருக்கிறார் என்று புரியவில்லை ...
அவருடைய 'குலாபி கேங் 'அமைப்பைப் பற்றி இங்கே விழிப்புணர்வு இல்லாதது ஏன் என்றும் புரியவில்லை ...
அந்த பெண்மணி உத்தரபிரதேச கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ...
பன்னிரண்டு வயதில் திருமணமாகி .இருபது வயதுக்குள் ஐந்து குழந்தைகளைப் பெற்றவர் ...
தினசரி குடிகார கணவனின் அடி தாங்காமல் நொந்து கிடந்தார் ...
இதைப் போன்றே பல பெண்களும் இருப்பதைக் கண்டு வெகுண்டு எழுந்தார் ...
பத்து பெண்களை சேர்த்துக் கொண்டு அனைவருக்கும் பிங்க் நிற சேலை அணிவித்தார் ...
கையில் பிரம்புகளுடன் கிளம்பிய அவர்கள் ...
குடிவெறியில் ஆட்டம் போடும் கணவன்மார்களை பின்னி எடுத்து விட்டார்கள் ...
பத்து பெண்கள் இன்று பல ஆயிரம் பெண்களுடன் ...
UP மாநிலம் முழுவதிலும் இந்த அமைப்பு பரவியுள்ளது ...
லஞ்ச பேர்வழிகள் ,அநியாயம் பண்ணும் போலீஸ்காரர்கள் ,சமூக விரோதிகள் மேலும் இவர்களின் பிரம்படி விழுகிறது ...
''காப்பாற்ற கிருஷ்ணபரமாத்மா வருவார் என்றிருந்தால் கிராமத்து பெண்கள் அம்மணமாய் தான் இருக்கணும் ,காக்கவேண்டியவர்களும் ,சட்டமும் பெண்களை பாலியல் பண்டமாகத்தான் பார்க்கிறது ,எங்களை சட்டம் காப்பாறாதபோது ,நாங்கள் எதற்கு சட்டத்தை மதிக்கணும் ?''...
என்று கர்ச்சிக்கும் இவரை மையப் படுத்தி பிங் கேங் படம் தயாராகிறதாம் ...
படத்தின் நாயகி 'சோளிக்குள்ளே என்ன இருக்கு 'பாடல் புகழ் மாதுரி தீட்சீத்தாம் ...
அவராவது பிங்க் நிற சோளிக்குள் இருக்கும் பெண்ணின் வீரத்தை ...
குடிகார கணவன்களுக்கு புரிய வைத்தால் சரி !
ரொம்ப முக்கியம் நடிகையோட வயசு :)
''தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறா பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்றீங்களே ,ஏன் லாயர் ?''
'' என் கனவுக் கன்னி நடிகையோட வயசைத் தெரிஞ்சுக்க முடியுமானு ஒருத்தர் கேட்கிறாரே !''
தேவை ..சாப்ட்வேர் இஞ்சினீயர் மூளைகள் :)
மட்டன் ஸ்டாலில் ...
ஆட்டு மூளைக்கு கிராக்கி ,ருசியாக இருப்பதால் !
அமெரிக்காவில் ...
இந்திய 'மூளைக்கு 'நல்ல கிராக்கி ,மலிவாக கிடைப்பதால் !
'போன'பின் ஆஸ்துமா என்ன, ஆத்மா என்ன! :))
ReplyDeleteஅட, என்னவொரு கண்டுபிடிப்பு!
பிங்க் மகாத்மியம்!
அதைத் தெரிஞ்சுகிட்டா அவர் கனவை விட்டு காணாமப் போயிடுவார்!
ம்ம்ம்... இப்போ சீன மூளையுமாமே...
ஆஸ்துமா இருந்தது மட்டும் உறுதியாய் தெரியும் :)
Deleteநாசமா போறவன் ,நாசாவுக்கு போகாமல் இங்கேயே கிடக்கானே :)
பிங்க் ,இங்கும் வராதோ :)
மனதில் வாழும் கனவுக் கன்னிக்கு என்றும் வயசாகாது :)
ஜனத் தொகையில் அவர்கள்தானே முன்னணி :)
என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் ‘ஆஸ்துமா சாந்தி...!’
ReplyDeleteகுட்டிச் சுவர்ல இருந்து குட்டி எட்டிப் பார்த்தாலும்... நிலா அது வானத்து மேலே தெரியுதே...! நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்... பல்லானது ஓடத்து மேலே... வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஓய் அது என்னா ஓய்...!
அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டான்... சம்பத் பால் தேவியின் 'குலாபி கேங் ' இங்கும் தோன்ற வேண்டும்... ‘தோன்றின் புகழோடு தோன்றுக; அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.’ பிரம்பால் யாரை அடிப்பது என்பதுதான் தெரியவில்லை...!
தகவல் அறியும் உரிமை சட்டம்ன்னா என்னா...? எனக்குத் தெரிஞ்சதெல்லாம்... ‘சட்டம் என் கையில்’ தான்... நடிகையான எனக்குத் தெரியாததைக் கேட்டால் எப்படி...? எனக்கு எங்க அப்பா யாருன்னு கேட்டாலே சொல்லத் தெரியாது...! எங்க அம்மாட்ட கேட்டாலும் அவங்களுக்கும் சொல்லத் தெரியாது...! வேற ஏதும் பதில் சொல்றமாதரி நல்ல கேள்வியா இருந்தாக் கேளுங்க...!
அமெரிக்காவில் மூலைக்கு மூலை இந்தியர்கள் மூளைதான்...! ஒன்னு கேட்டால் இன்னொன்றும் இலவசம்...! இங்கு நல்ல மூளைகளைத் தயார் செய்து ‘எக்ஸ்போர்ட்’ செய்கிறோம்... இதில ‘எக்ஸ்பர்ட்’ பார்ட்டி நாங்க...! பணம் என்னடா பணம் பணம்... பணம்தானடா நிரந்தரம்...!
த.ம. 2
மண்ணோடு கலக்கும் நாள் வரை நிலைக்கும் ஆஸ்துமா :)
Deleteநல்ல வேளை ,அமாவாசை நாளிலும் நிலா தெரியுமேன்னு சொல்லாமல் போனானே :)
அதானே ,குடும்பத்தில் யாராவது ஒருத்தர் குடிக்காம இருக்கணுமே:)
அப்பா யாருன்னு தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிஞ்சுக்க முடியுமா :)
அதே பணத்தை ,தாய் நாடு தந்தால் எதுக்கு அங்கே போகப் போறாங்க :)
சீனப் பெருஞ்சுவர் நிலா ஜோக் சூப்பர்
ReplyDeleteஎங்கிருந்து பார்த்தாலும் நிலா ஒன்றுதான்னு அவருக்கு பாடச் சொல்லிக் கொடுக்கணும் :)
Deleteஅருமை
ReplyDeleteதம+1
அருமை ,பிங்க் நிற சோளிகளின் சாதனையும்தானே :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
ஒவ்வான்றையும் படித்து சிரித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காலத்தின் தேவைதானே 'குலாபி கேங் ':)
Deleteஅமெரிக்காவில் ...
ReplyDeleteஇந்திய 'மூளைக்கு 'நல்ல கிராக்கி ,மலிவாக கிடைப்பதால் !///நகைச்சுவையாக இருந்தாலும் அவலச்சுவையை பொட்டில் அடித்த வரிகள்...அருமை பகவான் ஜீ
நம்மோட நல்ல மூளை அவர்களுக்கு ,kfc தரும் கெமிக்கல் மூளை நமக்கு :)
Deleteநன்று!
ReplyDeleteகுடிகார கணவன்மார்களுக்கு குலாபி கேங்,குலோப் ஜாமாய் இனிக்காது என்பதும் நன்றுதானே அய்யா :)
Deleteகிட்னி ஃபெயிலியரால் உயிர் போயிருந்தால் கிட்னி சாந்தி அடையட்டும் எனக் கூறுவார்களா
ReplyDeleteசீனப் பெருஞ்சுவர் பழையஜோக்
அந்தப் படம் தமிழில் எடுத்தால் யார் பிங்க் சோளியில் நடிக்கலாம்
அங்கு மலிவான மூளைகள் இங்கு போணி ஆகமாட்டேன் என்கிறது
வயசு தெரிந்தால் கனவுக் கன்னியாக இருக்க மாட்டார்.
இன்னும் என்னன்னா சாந்தி அடையுமோ தெரியலை :)
Deleteஅடியேனின் பழைய ஜோக்தான் :)
ஜாக்பாட் நிகழ்ச்சியில் கலக்கிய ,ஜாக்கெட்டுக்கு புகழ் பெற்ற அந்த நடிகைதான் :)
அதனால்தான் அங்கே பறக்கின்றனவோ :)
அதெப்படி மனதுக்கு தெரியும் :)
01. அடடே இது நல்லாயிருக்கே...
ReplyDelete02. நல்ல கண்டு பிடிப்புதான்
03. நல்லதொரு செயலே தமிழகத்திலும் இந்த அமைப்பு உருவாக் வேண்டும்.
04. அப்படியென்றால் இந்த சட்டேம் தேவையே இல்லை.
05. ஸூப்பர் சுப்புராயன் மூளைக்கு ?
அப்படின்னா நிச்சயம் ஆத்துமா சாந்தி அடைஞ்சிருக்கும் அப்படித்தானே :)
Deleteஇதைக் கண்டுபிடிக்க நிலவுக்குப் போகணுமா:)
குலாபி கேங் ஜிந்தாபாத் :)
நீங்க எப்பவும் அப்படித்தான் சொல்வீங்க :)
ஹாலிவுட்டில் திறமையைக் காட்டி நிர்ணயித்துக் கொள்ளட்டும்:)
தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறா பயன்படுத்தக் கூடாது என்பது சரிதானே :)
ReplyDelete