1 February 2016

செலவு செய்யாமல் காதலிக்க முடியுமா :)

டூ வீலர் பிரிமீயமா ,அப்படின்னா :)
                ''மூன்றாண்டு இன்சுரன்ஸ் பிரிமீயத் தொகையை ஒரே நேரத்தில்  கட்டினால் ,ஆயிரம் ரூபாய் மிச்சமாகும் ...இதை  ,டூ வீலர் வச்சிருக்கிற உங்க நண்பர்கிட்டே ஏன் சொல்ல வேண்டாம்னு சொல்றீங்க ?''
                   ''அவன் ,பத்து வருஷத்தில் மொத்த பிரிமீயத் தொகையையும்  மிச்சமாக்கியவன் ஆச்சே !''


 ஃகாலி பிளவரா ,'காலி 'பிளவரா :)          
               ''நான் வாங்கி வந்த  ஃகாலி ப்ளவரில்  பூச்சி இருக்குன்னா ,எடுத்துப் போட்டு நறுக்க வேண்டியதுதானே ?''

            ''அதைத்தாங்க நானும் செஞ்சேன் ,மீதி ஒண்ணுமே தேறலே ..உண்மையில் இதுதாங்க 'காலி ' ப்ளவர் !''

கணவன் கண் கண்ட தெய்வமா :)

              ''என்னடி ,கணவனை நீ தெய்வம் மாதிரி நினைக்கிறீயா ,ஏன் ?'' 

               ''எனக்கு பிடித்த சனீஸ்வரன் இல்லேன்னாலும் ,என்னைப் பிடித்த சனீஸ்வரனாச்சே !''
                                            
  1. செலவு செய்யாமல்  காதலிக்க முடியுமா :)

                    ''நம்ம காதல் தெய்வீக காதல்னு சொன்னா ,மனைவியான  நீயே கோவிச்சுக்கிறீயே ,ஏன் ?''
  2.                ''காதலிக்கும் போது ....பீச்சுக்குப் போனா  சுண்டலுக்கு காசு செலவாகும்னு ,கோவிலுக்கு  நீங்க வரச் சொன்ன காரணம் இப்போதானே புரியுது ?''
                                                                    
  1. கிணற்றில் குதித்த ஜோடி :)

                   ''டார்லிங் ,நீயும் நானும் கிணற்றில் குதிக்கிற மாதிரி கனவுகண்டேன் !''
             ''ஐயையோ ,அப்புறம் ?''
           ''நீயும்தானே குதிச்சே ,அப்புறம் நடந்தது உனக்குத்தான் தெரியுமே !''
  2.                                                                          
  3. படிச்ச மேதைகள் இவர்கள்தானா ...:)

  4. நூலக வருகையாளர் பதிவேட்டில் ...
    வரிசை எண் 13 காலியாகவே இருக்கிறது !
  5.                                                               

16 comments:

  1. நம்மூர் நூலகங்களில் இப்படி இருக்காதே... வெளிநாட்டில்தான் இந்த நம்பிக்கைகள் இருக்கும்.

    முதல் ஜோக் முதல் தடவை படிக்கும்போது புரியவில்லை! டியூப் லைட் நான்!

    அட, மீண்டும் இன்று தமிழ்மணம் சடார் சடார் என வாக்கு விழுகிறதே!

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறை ,இங்கேயே நான் பார்த்தேனே :)

      மூன்றாம் நபர் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகையால் தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டியுள்ளது :)

      என் வாக்கு என்னவோ ,தாமதம்தான் :)

      Delete
  2. அவன் போட்ட பிச்சையில்தான் இந்த வண்டியே ஓடுது... திருட்டு பய புள்ள...!

    அந்த காலிப்ளவர் கொடுத்த காலிப்பயல மொதல்ல காலிபண்ணிட்டு வர்றேன்... காளியாத்தா இது ஓமேல சத்தியம்...!

    வந்த சனீஸ்வரன் கைவிடமாட்டான்... எல்லாம் அந்த ஈஸ்வரன் மேல பாரத்த போடுங்க...! தப்பித்தவறி கணவன் மேல பாராங்கல்ல போட்டுடாதீங்க...!

    பேசாதே... வடமாலை சாத்த வர்றாங்க... வாங்கி சாப்பிடுவோம்... வா... அப்பத்தான் தெய்வத்தோட ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும்...!

    காதல் நிறைவேறலைன்னு தற்கொலைக்காக ஆத்துல குதிச்சு... என்னை ஏமாத்திட்டு நீ வெளிய வந்ததப் பாத்திட்டு நானும் கிணத்தில இருந்து வெளியே வந்திட்டேன் டார்லிங்... நம்ம காதல இனி யாரும் ஏமாத்த முடியாதில்ல...!

    காலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்...!

    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. என்னைக்கோ ஒருநாள் வண்டி மாட்டிக்கத்தான் போவுது :)

      நல்லதா பார்த்து வாங்கத் தெரியலே ,சவடாலுக்கு குறைச்சல இல்லே :)

      பர்லாங் கல்லே தூக்க முடியாது ,பாறாங் காலி எங்கே தூக்குறது :)

      வடையிலே உப்பு ஜாஸ்தின்னு மட்டும் சொல்லிடாதே ,சாமி கண்ணைக் குத்திடும் :)

      கில்லாடிங்க அவங்க ரெண்டு பேரும்:)

      அந்த காலி சேரிலதான் பேய்வந்துஅமர்ந்து , டிடெக்டிவ் நாவலைப் படிக்குது :)

      Delete
  3. எதையோ சொல்ல வர்றீங்கன்னு தெரியுது..
    ஆனா.. என்னான்னுதான் புரியலை!..

    ReplyDelete
    Replies
    1. சட்டத்தை ஏமாற்றி ,பத்து வருசமா வண்டியோட்டும் கில்லாடி, உங்களுக்கு தெரியலியா :)

      Delete
  4. காலி ஃப்ளவர் :)

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நறுக்கிப் பார்த்தால் காலி ஃபிளவரிலும் ஒன்றும் இருக்காது :)

      Delete
  5. 01. கணக்குப்புலிதான்
    02. ஹாஹா காலி
    03. உள் காரணம் இதுவோ..
    04. கோயிலில் பிரசாதம் ஃபரீதானே...
    05. இவங்கே இப்போதைக்கு மனுசங்கதானே...
    06. உண்மை நிலை.

    ReplyDelete
    Replies
    1. இல்லைன்னா காலம் தள்ள முடியாதே :)
      பெயருக்கேற்ற காய் :)
      ஏழரைதான்:)
      அதுக்குமா மொய் :)
      ஆவிங்க பேசிக்காதா :)
      வல்லரசு ஆவது கஷ்டம்தான் :)

      Delete
  6. காசேதான் கடவுள் என்று சொல்லியிருப்பதால் காசில்லாமல் காதலிக்க முடியாது என்பது அடியேன் கதாலிக்காதவனின் கருத்து...

    ReplyDelete
    Replies
    1. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்றும் சொல்லி இருக்காங்களே :)

      Delete
  7. கிணற்றில் குதித்த ஜோடி,,, ரொம்ப ரசித்தேன் ஜீ,,

    அனைத்தும் அருமை,,

    ReplyDelete
    Replies
    1. கிணற்றிலே நடந்தது என்ன என்று ஆராய்ச்சி செய்யச் சொல்லணும் :)

      Delete
  8. முதல் ஜோக் கொஞ்சம் மண்டையைக் குடையுதே..

    காலிஃப்ளவர்..ஹஹஹ் ரசித்தோம் ஜி..

    ReplyDelete
    Replies
    1. இன்சுரன்ஸ் பிரிமீயம் எதுவுமே கட்டாதவன் ,ஆயிரம் மிச்சம்னு நினைப்பானா :)

      நேற்றோடு காலியாப் போச்சே :)

      Delete