13 February 2016

இப்படியொரு பேரழகைப் பார்த்ததே இல்லை :)

 நிரந்தர வேலைன்னு சொல்லலாமா :)
                             ''காலாகாலத்தில் ஒரு நிரந்தர வேலையைத் தேடிக்கோன்னு சொன்னால், ஏண்டா எரிஞ்சு விழுறே ?''
                              ''இந்த உலகமே நிரந்தரமில்லைன்னு  அடிக்கடி நீங்க தானேப்பா  சொல்றீங்க?''
நாணயம் வேணும்தான் ,அதுக்காக  இப்படியா :)
            ''உங்க வீட்டுலே குடியிருக்கிறவர் ரொம்ப ,ரொம்ப நாணயமானவரா ,எப்படி ?''
             ''ஒண்ணாம் தேதி இராத்திரி 12மணிக்கே வாடகையோட 
வந்து கதவை தட்டுகிறாரே !''
பெண்டாட்டிக்கு வந்த ' 2 இன் 1 'ஐடியா :)
            ''இரும்புச் சத்தைக் கூட்டிக்கணும்னு டாக்டர் சொன்னதுக்கு நீ 
என்ன செய்யப் போறே ?''
          ''உங்க ஸ்கூட்டரை தள்ளுவண்டிக்காரன்கிட்டே   தள்ளிட்டு 
பேரீச்சம்பழம்  வாங்கிச் சாப்பிடலாம்னு  இருக்கேங்க !''
இப்படியொரு பேரழகைப்  பார்த்ததே இல்லை :)
பல்லாயிரம் முகங்களைப் பார்த்த 
புராதனக் கண்ணாடி ...
என் இனியவளின்  முகம் பார்த்ததும் 
சுக்கு நூறாய்  சிதறியது ...
பிறவிப் ப(ய)லன்  கிடைத்ததென்று !

22 comments:

  1. இப்படி எல்லாம் மகன்களுக்கு பதிலைச் சொல்லித் தரக் கூடாது சொல்லிட்டேன்!

    ராத்திரி 12 மணிக்கே சரி... எல்லாத்தையும் நாணயமா மாற்றி எடுத்து வராமப் போனாரே...

    :)))

    வேதனையில் வெந்தும் வேடித்திருக்கலாமோ!

    ReplyDelete
    Replies
    1. *வெடித்திருக்கலாமோ*

      Delete
    2. உலக வாழ்வு நிரந்தரம் இல்லைன்னு ,அவனா தெரிந்து கொள்ள நாள் இருக்கே :)

      அப்படி கொண்டு வந்திருந்தால்,முகத்திலேயே அடித்துத் துரத்தியிருப்பார் :)

      அரதப் பழசான ஜோக்கா:)

      அப்படியோர் கோணமும் இருக்கா :)

      Delete
  2. எனக்கு சுத்தி வலைச்சுப் பேசுறதெல்லாம் பிடிக்காது... நேரடியா கல்யாணம் பண்ணிக்கடான்னு நீங்க சொன்னா... நா மாட்டேன்னு... சொல்லுவேன்னு நினைக்கிறீங்களாப்பா...!

    இதுக்குத்தான் வீட்டுக்கு உரிமையாளர் வீட்டுக்காரரா இருக்கணுங்கிறது.... வீட்டுக்காரி இருந்தா இப்படித்தான்...!

    ஸ்கூட்டர் இரும்போட சத்தம்தான் கூடிக்கிட்டே போகுது...!

    அந்தச் சின்னப்பொண்ணு பாட்டி(லி)ல் ஆடுவார்...‘இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை.’

    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. கடன்காரா ,வக்கணையா பேச மட்டும் தெரியுது :)

      அவ்வ்வ்,அவரோட நாணயம் கேள்விக்குறியாகிப் போச்சே :)

      அதாவது ,பழுது பார்க்கிற சத்தம் (கூலி),அப்படித்தானே :)

      'சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்'சாலமன் பாப்பையாவின் குறளின் பொருத்தமான தெளிவுரைக் கண்டு அசந்து போனேன் :)

      Delete
  3. 01. அதானே அவரு எதுக்கு இப்படி சொன்னாரு ?
    02. இதுக்குப் பெயர்தான் நான் நயமா ?
    03. ஸ்கூட்டரும் இரும்புதானே ?
    04. அவ்வளவு லட்சணமா ?

    ReplyDelete
    Replies
    1. அவர் கடமையை முடிச்சுக்க ஆசைப்பட்டாலும், வேலை கிடைக்கணுமே :)
      ஒரு வேளை, மணவையார் சொன்னதுதான் உணமையா:)
      அதை அவிச்சா தின்ன முடியும் :)
      என்னவள்னு சொன்ன பிறகும் கிண்டலா :)

      Delete
  4. படத்தை பார்த்தவுடனே எனக்கு தெரிஞ்சு போச்சு..அவரு ஏன் முகம் சுக்கு நூறாய் சிதறியதுக்கு........

    ReplyDelete
    Replies
    1. பியர் உள்ளே போனால் உலகமே அழகாகி விடும் போலிருக்கே:)

      Delete
  5. படத்தை பார்த்தவுடனே எனக்கு தெரிஞ்சு போச்சு..அவரு முகம் ஏன் சுக்கு நூறாய் சிதறியதென்று.....

    ReplyDelete
    Replies
    1. உன்னழகை கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும் என்பது போல் எழுதினேன் ,ஆனால் ,படம்தான் நான் சொல்ல வந்த கருத்தையும் காமெடியாக்கி விட்டது:)

      Delete
  6. உலகே மாயம் வாழ்வே மாயம்னு பாட வேண்டியதுதான்
    வாடகையை நாணயங்களாகவே தருகிறாரா
    அந்த வண்டியில்தானே பெண்டாட்டியையும் தள்ளிக்கொண்டு போயிருப்பார்
    கண்ணாடிக்கே சகிக்காத முகமா பேரழகியின் முகம்

    ReplyDelete
    Replies
    1. அப்பன் பாடலாம் ,மகன் பாடினால் வேலைக் கிடைக்குமா :)
      அப்படிக் கொடுத்தால் அவரைவிட நாணயமான மனிதன் யார் :)
      தள்ளிட்டுப் போனதெல்லாம் அந்த காலம் :)
      அப்படியா இருக்கு :)

      Delete
  7. Replies
    1. சளி பிடிச்சிறாம பார்த்துக்குங்க :)

      Delete
  8. அனைத்தும் அருமை!

    நிரந்தரமில்லா உலகில் வேலை மட்டும் எப்படி நிரந்தரமாகும்?

    ReplyDelete
    Replies
    1. உழைக்கும் மக்களுக்கு இருந்த பென்சன் திட்டத்தைக் கூட ஒழித்துக் கட்டி விட்டது மத்தியில் ஆண்ட அரசு ,தற்போது ஆள்பவருக்கும் அதைப் பற்றி கவலையில்லை ! பென்சன் இருந்தாலாவது நிரந்தர வேலை என்று சொல்லலாம் :)

      Delete
  9. உலகத்தில் நிரந்தரமான வேலை எது ,வெங்கட் ஜி :)

    ReplyDelete
  10. நகைப்பணி தொடர்க
    படத்திலும் நகைச்சுவை?
    வாழ்த்துகள்
    தம +

    ReplyDelete
    Replies
    1. நான் ரசித்த படத்தை நீங்க ரசிக்க வேண்டாமா :)

      Delete