காய்ச்சல் பலவிதம் ,அதிலே இது ஒரு விதம் :)
''ஊரெல்லாம் டெங்கு காய்ச்சல் ...கடையிலே பாக்கெட் வாங்கக் கூட பயமா இருக்கு !''
''என்ன பாக்கெட் ?''
''புளிக் ' காய்ச்சல்' பாக்கெட்தான் !''
வாழும்போதே கணவனை சாகடித்த சாந்தி :)
''தூக்கு மாட்டிக்கிட்ட சாந்தியோட புருஷன்
...லெட்டர்லே என்ன எழுதி இருக்காராம் ?''
'' என் ஆன்மாக்கூட'சாந்தி 'அடையணும்னு யாரும்
வேண்டிக்காதீங்கன்னுதான் !''
வாலிப வயதை அறிந்த தந்தை :)
''என்னங்க .நம்ம பையன் பத்மாவையே சுத்தி சுத்தி வர்றானாமே ,எப்படியாவது அவனை வெளிநாட்டுக்கு அனுப்பப் பாருங்க !''
''செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ?''
வெள்ளையர்[ஹேர் ]க்கும் உண்டா ஹேர் டை ?
நடுத்தர வயதைத் தாண்டியவர்களின் தலைகள் கூட...
இப்போது 'கரு கரு 'வென்று ...
நன்றாய் தெரிகிறது ...
நாட்டிலே ஒரு வியாபாரம் நன்றாய் நடக்கிறது !
''ஊரெல்லாம் டெங்கு காய்ச்சல் ...கடையிலே பாக்கெட் வாங்கக் கூட பயமா இருக்கு !''
''என்ன பாக்கெட் ?''
''புளிக் ' காய்ச்சல்' பாக்கெட்தான் !''
வாழும்போதே கணவனை சாகடித்த சாந்தி :)
''தூக்கு மாட்டிக்கிட்ட சாந்தியோட புருஷன்
...லெட்டர்லே என்ன எழுதி இருக்காராம் ?''
'' என் ஆன்மாக்கூட'சாந்தி 'அடையணும்னு யாரும்
வேண்டிக்காதீங்கன்னுதான் !''
வாலிப வயதை அறிந்த தந்தை :)
''என்னங்க .நம்ம பையன் பத்மாவையே சுத்தி சுத்தி வர்றானாமே ,எப்படியாவது அவனை வெளிநாட்டுக்கு அனுப்பப் பாருங்க !''
''செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ?''
வெள்ளையர்[ஹேர் ]க்கும் உண்டா ஹேர் டை ?
நடுத்தர வயதைத் தாண்டியவர்களின் தலைகள் கூட...
இப்போது 'கரு கரு 'வென்று ...
நன்றாய் தெரிகிறது ...
நாட்டிலே ஒரு வியாபாரம் நன்றாய் நடக்கிறது !
|
|
Tweet |
அருமையான நகைச்சுவைகவளி
ReplyDeleteபடைப்பாளிக்கு பாராட்டுக்கள்...
பாராட்டுக்கு நன்றி :)
Deleteஅருமையான நகைச்சுவைகவளி
ReplyDeleteபடைப்பாளிக்கு பாராட்டுக்கள்...
நகைச்சுவைகவளி...வள் என்று விழ...தப்பு தப்பு .வர வேண்டியது இப்படியாகி விட்டது போலிருக்கிறது ,சரிசரி, ஓகே :)
Deleteஎன்னைப் பார் என் கண்ணைப்பார்... கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது... யாமிருக்க பயமே(ன்)...?!
ReplyDeleteஉன் உறவினில் ஏதடி சாந்தி... உன் பிரிவினில் தானடி சாந்தி... சாந்தி... சாந்தி... ஓம் சாந்தி...!
பத்மா பத்ரமாத்து தங்கமான்னு பையன் உரசிப் பார்த்தானாம்... பத்மா இப்ப மாசமா இருக்காளாம்...! பத்துமாசம் கழிச்சு... மூனு பேத்தையும்... பேத்தியா இருந்தாலும்... பேரனா இருந்தாலும் சேர்த்து ... வெளிநாட்டுக்கு அனுப்பிடலாமா...? அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு...! நல்லா யோசிச்சு சொல்லு... பத்து மாதம் இருக்கு...!
‘நரியும் வெளியில் வந்தது மழையில் கொஞ்சம் நனைந்தது... நீல சாயம் கரஞ்சது நரியின் வேஷம் கலஞ்சது... நீல சாயம் வெளுத்து போச்சு... ராஜா வேஷம் கலஞ்சு போச்சு...!’ என்னதான் இருந்தாலும் அதுக்காக ஒரு‘மை’யில திட்டக் கூடாது...! ஒங்க தலை‘மை’யில கூட்டம் போடலாம்... உரி‘மை’யில கேக்கிறேன்...!
த.ம. 2
கொசு சிறுத்தாலும் டெங்கு விடாது போலிருக்கே :)
Deleteஅதான் உயிர் பிரிந்த பின்பும் உச்சரிக்க வேண்டாம் என்கிறாரோ :)
ரெண்டு, மூணு ஆகிவிடக்கூடாதுன்னு அவங்க கவலை :)
மண்டையைப் பிய்ச்சிக்காம கட'மை'யைச் செய்யுங்கள் ,தலைக்குக் கரு'மை' தேவைப் படாமல் போகலாம் :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம =1
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தானே :)
Deleteஇது பயக்காய்ச்சல்!
ReplyDeleteசாந்தியால பயப்ராந்தி!
:))))
நான் இந்த வியாபாரத்தை நாடுவதில்லை!
பயம் வந்தாலே வராத காய்ச்சலும் வரத்தானே செய்யும் :)
Deleteபோன பிறகுமா :)
செக்கு மாடு சிற்றி வரலாம் ,ஊர் போய் சேருமா :)
வீட்டுத் தயாரிப்பா :)
செக்குமாட்டுக்கு வழியேதுமில்லையா....???
ReplyDeleteசெக்கில் பூட்டி இருக்கும் வரைதான் செக்கு மாடு ,இல்லையென்றால் அதுவும் ஊர் திரியும் மாடுதான் :)
Delete01. குளிக்க பக்கெட் வாங்க பயமில்லையே ?
ReplyDelete02. அவ்வளவு உயர்வான வாழ்க்கையா ?
03. விசா கிடைக்கவில்லையா ?
04. எல்லாம் விஞ்ஞான வளர்ச்சிதான் ஜி
குளிக்கத்தான் ,பயபிள்ளே சாவுறான் :)
Deleteஅதான் உயரமான இடத்தில் இருந்து சுருக்கு கயிறில் தொங்கிட்டார் :)
விஸா எதுக்கு ,உஷாவே போதுங்கிறானே :)
வழுக்கையிலும்கூட மயிரை நடுறாங்கலாமே:)
கரு கருவென்று இருந்தால் ரசிக்கத்தானே தோன்றும் :)
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஜி
புளிக் ' காய்ச்சல்' பாக்கெட்தான்...இது என்ன ஜி...
வயது வந்த பையன் நம்ம பத்மாவை சுத்தி சுத்தி வருவது.... இதுஒரு காதல் காலம் ஜி...
மற்றவைகள் ஒவ்வொன்றும் மிக அருமை ஜி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரெடிமேட் புளியோதரை மிக்ஸ் நீங்கள் கேள்விபட்டதில்லையா:)
Deleteபருவம் படுத்தும் பாடு .அவன் என்ன செய்வான் :)
அனைத்தையும் ரசித்தேன். சிரித்தேன் நண்பரே!
ReplyDeleteத ம 9
நீங்கதான் சொல்லணும் ...வெள்ளையர்க்கும் உண்டா ஹேர் டை ?
Deleteஅனைத்தையும் ரசித்தோம் ஜி அதானே வெள்ளையர்க்கும் உண்டா டை???!! ம்ம்ம் உண்டு நம்மூரில் அடிப்பது போல் கலர் கலராக..
ReplyDeleteஇங்கேயும்தானே பேஷன் என்ற பெயரில் ,அந்த கலர்கலர் கூத்து நடக்குது,நான் கேட்பது வெள்ளைநிற டை அடித்துக் கொள்வார்களா:)
Deleteபுளிக் காய்ச்சல் முதல் வெள்ளையர் ஹேர் டை வரை ரசித்தேன் ஜி.
ReplyDeleteநீங்க பார்த்ததுண்டா, வெள்ளை ஹேர் டை:)
Delete