11 October 2016

ராசியில்லா தொடை மச்சம் :)

 முத்தலிப்  என்ற  பெயர் கொண்டவர்கள்  மன்னிக்கவும் :)           
                 ''ஏண்டா ,உன் பெயரை மாற்றிகிட்டே ?''
                 ''தமிழும் இல்லாமல் இங்கிலீசும் இல்லாமல் ,அதென்ன  'முத்த  லிப் ' னுதான் !''

கொடுமையிலும் கொடுமை , அதை விட இது அதிகம் !                   
             ''என்னடா சொல்றே , பக்கத்திலே  பள்ளிக்கூடம் இருந்தால் தான்  டாஸ்மாக் கடைகள்  திறக்கப் படணுமா ?''
             ''அப்படியாவது பள்ளிகள்  எண்ணிக்கை பெருகுமே !''
கொசு ஒழிக்க திட்டம் ..ஆனா மக்கள் ஒத்துழைப்பு ???
            ''தண்ணி தேங்கிற இடத்தில் ,கொசு முட்டையை  சாப்பிடுற மீன்களை விட்டும் கொசு குறையலையே ,ஏன்?''
             ''அந்த மீன்களை எல்லாம் பிடித்து மக்கள் தின்னுட்டாங்களே !  ''

திருமணமாகாத பெண்களுக்கு ஆயுள் குறைவு !
அமெரிக்க கலிபோர்னியா பல்கலைகழகம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது ...
திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் ...
திருமணம் முடித்த பெண்கள் ...
இருவரில் அதிக நாள் உயிரோடு இருப்பது திருமணமான பெண்கள்தானாம் !
காரணம் ,அவர்களின் கையில் பணப் புழக்கம்  கூடுவதால் ஏற்படும் மகிழ்ச்சிதானாம்  !
நம் ஊரிலும் பல்கலை கழகங்கள்இருக்கின்றன ...
இதுபோல் ஆண்களை ஆய்வு செய்து முடிவை வெளியிட்டால் ...
ஆண்கள் தங்கள் ஆயுளை கூட்டிக்கொள்வதா...
குறைத்துக் கொள்வதாவென்று ....
திருமணம் சம்பந்தமாய் ஒரு முடிவுக்கு வர வசதியாய் இருக்கும் !

ராசியில்லா தொடை மச்சம் :)
வளர்ந்த பிறகு 
அங்க அடையாளத்தை காட்டு என்று 
யாராவது கேட்கும் போதுதான் ....
சிறிய வயதில்  பள்ளிச் சேர்க்கையில் ...
தொடையில் மச்சமென்று  பதிந்த  அப்பாவையும்  ... 
மச்சத்துடன் கிள்ளி எறிய வேண்டும் போல் இருக்கிறது !

20 comments:


  1. 01. டூ இன் ஒன்
    02. உண்மை நிலை
    03. டாக்டருக்கு வருமானம்
    04. நல்ல யோசனை
    05. இது ஆணுக்கா ? பெண்ணுக்கா ?

    ReplyDelete
    Replies
    1. டூ இன் ஒன்றுன்னு சொல்லணும் :)
      இழிந்த நிலையம் கூட :)
      தின்னிப் பண்டாரங்கள் :)
      யோசனை யாருக்கு வேணும் :)
      நீங்க ரொம்ப மோசம் :)

      Delete
  2. Replies
    1. கில்லர்ஜீயின் ஐந்தாவது கேள்வியையுமா :)

      Delete
  3. பள்ளிக்கூடம் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு குறுக்கு வழி! முத்தலிப் என்ற பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்! மீனைச் சாப்பிட்டுவிட்ட மக்கள்!!!!!

    ReplyDelete
    Replies
    1. நேர் வழியில் நடக்கவில்லையே :)
      நேற்றுதான் அந்த நண்பரை சந்தித்தேன் :)
      ஏப்பம் விட்டு விட்டார்கள் :)

      Delete
  4. ‘முத்தப்பன்’னு பெயரை வைத்த எங்க அப்பனக் கேட்கனும்...! ‘முத்தம் தர ஏற்ற இடம் முகத்திலே எந்த இடம்...?’

    ‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ன்னு அப்பத்தானே படிக்க முடியும்...!

    ‘மீனவ நண்பன்’ நாமல்லவோ...?

    நம்மூர் திருமணமான ஆண்களுக்கு ஆயுள் குறைவுதான்...கையில் பணப் புழக்கம் இல்லையே... பெண்கள் கையில்தான் லாக்கர் சாவி லாக் ஆயிடுச்சே...!

    ‘மடல்வாழைத் தொடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க படைத்தவனின் திறமை எல்லாம் முழுமை பெற்ற அழகி என்பேன்...!’ ‘பாஞ்சாலி... அது மச்சமா...? வச்சுக்கோ...!’

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. சபாஷ் சரியான் போட்டி..!

      Delete
    2. அப்பன் பெயர் முத்தாத்தனா :)

      அப்பன் டாஸ்மாக்கே கதின்னா ,பிள்ளை பாஸ்மார்க் வாங்குவானா :)

      நண்பன் செய்ற காரியமா இது :)

      இன்னொரு சாவி இல்லையா :)

      பாஞ்சாலியின் சேலையை உருவியே முடியலே ,எப்படி ...:)

      Delete
    3. ஜேம்ஸ் ஜி ,ஜாக்கிரதை !நமக்கிடையே ஒரு வில்லன் :)

      Delete
  5. Replies
    1. திருமணமாகாத பெண்களுக்கு ஆயுள் குறைவு என்பதை உங்களால் நம்ப முடியுதா :)

      Delete
  6. முத்தத்துக்கான லிப்போ
    பள்ளிக்குச் ச்டெல்வார்களா டாஸ்மாக்கில் விழுந்து கிடப்பார்களா
    மீண்டும் கொசுவா
    திருமணமாகாத பெண்களுக்கு ஏக்கம் அதிகமோ அதனால் ஆயுசு குறைவோ
    மச்சத்துடன் அப்பாவைக் கிள்ளி எறியவா ...?

    ReplyDelete
    Replies
    1. அதை அவரிடம்தான் கேட்கணும் :)
      அப்பன் ஒரு இடம் பிள்ளை ஒரு இடம் :)
      கடி தாங்க முடியலையோ :)
      இடையணி மேகலை கழன்று விழுந்தால் ஆயுசு குறையுமோ :)
      கோபம் வராதா பின்னே :)

      Delete
  7. அப்போ எங்கு இருந்தால் ராசி.....??????

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக காட்சிப் பொருள் ஆகுமா தொடை :)

      Delete
  8. Replies
    1. திருமணம் சம்பந்தமாய் ஒரு முடிவுக்கு வர வசதியாய் இருக்கும் ,என்பதையும்தானே :)

      Delete
  9. திருமணமாகாத பெண்களுக்கு ஆயுள் குறைவு!
    அருமையான தகவல் ஆச்சே!

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் தாலி கட்டிக்கத் தயார் ,ஆம்பளை எங்கே போனானோ :)

      Delete