13 October 2016

பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா :)

இப்படியும் சில பேர் :)
         ''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''
           ''வெறும் கையோட வந்து சாப்பிடுறதும் இல்லாம ,புதுச் செருப்பு காலோட போறதே அவர் வழக்கமாம் !''
   நெருப்பென்றால் சுடும் ,ஆனால் ..?
           ''நெருப்புன்னா  வாய் வெந்துடாது என்பதை உங்க வாத்தியார் பொருத்தமாச் சொன்னாரா,எப்படி  ?''
        ''பட்டாசுக் கடையிலே நெருப்புக் கோழி புகுந்தாலும் ஒண்ணும் ஆகாதுன்னுதான் !''

பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா ?
              ''பேப்பரில் வந்த ,ஏசி  வசதியுடன் கூடிய   டாஸ்மாக் எலைட்  பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா ,எப்படி ?''
             ''போருக்கு போகாதவன் அரசனும் இல்லை .பாருக்கு வராதவன் குடிமகனும் இல்லைன்னுதான் !''

ஜெயிக்கப் போறது கொள்கையா ?காசு பணமா ?
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இருந்து வாக்காளர்களுக்கு ...
ஓட்டு போட்டதற்கான ஒப்புகைச் சீட்டை தேர்தல் கமிஷன் தரவிருக்கிறதாம்!
அதிலே எந்த கட்சிக்கு ஓட்டுபோட்டுள்ளார்கள் என்ற விபரமும் இருந்தால் பேமென்ட்டுக்கு வசதியாய் இருக்கும் என ஓட்டை விற்கும் இந்நாட்டு மன்னர்களும் ,கட்சிகளும் எதிர்ப்பார்க்கிறார்கள் !
இதுவரை குதிரை பேரம் MLA,MPகளுடன் தான் நடந்து கொண்டுள்ளது ...
இனிமேல்  வாக்காளர்களுடணும் நடக்கும் !வாழ்க 'பண'நாயகம் !

22 comments:

  1. 01. மொய் செய்வாரா ?
    02. ஸூப்பர் ஜி
    03. ஆஹா இந்த வசனத்தை பாடப்புத்தகத்தில் சேர்க்கணுமே...
    04. நல்ல யோசனை

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு சம்பந்தமில்லாதது மொய் :)
      இப்படியில்லே சொல்லித் தரணும்:)
      புதிய கலவிக் கொள்கையில் இதையும் சேர்த்துறலாம் :)
      பணனாயகத்தில் இதெல்லாம் சகஜமப்பா :)

      Delete
  2. என்னால் தமிழ் மணத்தை இணைக்க முடியவில்லையே ஜி ?

    ReplyDelete
    Replies
    1. அதான் ,நமக்கு வசதியாக தானாகவே திரட்டிக் கொள்கிறதே :)

      Delete
  3. செருப்பு பிஞ்சுடுமுல்ல...! வெறும் சாப்பாடு மட்டுமா போடுவாங்க... புது செருப்பு அடிக்கும்ன்னு இப்பத்தானே தெரியுது...!

    நெருப்புக் கோழிய நெருப்புல போட்டா ஒன்னும் ஆகாதுன்னு போட்டேன்...! வெந்து தணிந்தது...! தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்... தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்...!

    பாருக்கு போயி ரொம்ப போர் அடிச்சுப் போச்சு...! பேருக்குத்தான் பாரு... ஏ.சி. பாரு... ஓ.சி.யாவா குடுக்கிறாங்க... ஆ...ஊ...ன்னா... கூட்டம் கூட்டமா கிளம்பிடுறாங்களே...! ஆமா... அவ்வளவு கூட்டமா வருது...?!

    ‘கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியலே...!’ ஒப்புக்கு ஓட்டு போட்டதற்கு ஒப்புகைச் சீட்டா... இந்தச் சீட்ட வச்சு சீட்டாடவா முடியும்...?!

    த.ம.1



    ReplyDelete
    Replies
    1. அதுவும் அவர் களவாண்டு போட்டிருந்த செருப்பாலே அடிச்சாங்கலாமே :)

      நெருப்புலே வெந்ததை வயிற்றிலே போட்டீங்களா ,இல்லையா :)

      பாருலே அடிச்சு ரோட்டிலே கிடக்குற சுகம் ,ஏ சி யிலும்வராதுதான் :)

      பணம் கிளைம் பண்ணலாமே :)

      Delete
  4. வெறும் காலுடன் வருபவரின் டெடிகேஷனை மெச்சினேன்!

    ReplyDelete
    Replies
    1. காலடியே கதின்னு இருப்பவரை மெச்சத்தானே வேணும் :)

      Delete
  5. Replies
    1. பாருக்கு வராதவன் குடிமகனும் இல்லைன்னு சொல்வதை ஒப்புக் கொள்ள முடியுமா :)

      Delete
  6. Replies
    1. குதிரை பேரமும் தானே :)

      Delete
  7. ரசித்தேன் நண்பரே!
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. வெறும் கையையும், புதுச் செருப்பு காலையும் ரசிக்க முடியுதா :)

      Delete
  8. Replies
    1. பஞ்ச் டயலாக்குமா :)

      Delete
  9. சாப்பிட உட்காரும்போதே புது செருப்புக் காலோடா இல்லையென்றால் போகும் போதுதானே அடிக்க வேண்டும்
    நெருப்புக் கோழிக்கும் நெருப்புக்கும் சம்பந்தமில்லை என்பதை உணர்த்தவும் செய்கிறாரே
    இப்படியெல்லாம் விளாஅம்பரம் வருகிறதா
    இது ஒரு செய்திப்பகிர்வா

    ReplyDelete
    Replies
    1. காலில் எதுக்கு சாப்பிடும் போது ? கையே போதுமே :)
      நெருப்பை அது உண்ணுமா என்பதுதான் சந்தேகம் :)
      வந்தாலும் ஆச்சரியமில்லை தானே :)
      பணப் பகிர்வு ஆகாமல்,அப்படியே ஆகட்டும் :)

      Delete
  10. இதுதான் குடிமகனுக்கான உண்மையான பஞ்சு டயலாக்கு............

    ReplyDelete
    Replies
    1. பார்கள் அனைத்திலும் எழுதிடச் செய்வோமா :)

      Delete
  11. பஞ்ச் டயலாக் சூப்பர் ஜி!

    ReplyDelete
    Replies
    1. நிலைமை இப்படித்தானே இருக்கு :)

      Delete