21 October 2016

படுக்கைமேல்,இப்படியும் ஒரு காரியம் செய்யலாமா :)

 இம்புட்டு அறிவாளியா இருக்கானே ,நம்மாளு  :)      
           ''இங்கே பொறந்ததுக்கு நாம  பெருமை படணுமா,ஏன் ?''
           ''வேறு எந்த நாட்டிலாவது இம்புட்டு அறிவாளியைப் பார்க்க முடியுமா ?''
         
பருப்பு விலை இன்னும் கூடுமாமே :)              
         ''என்ன சொல்றீங்க ,உங்க மனைவி  சமையலில்  கெட்டிக்காரியா ?'' 
        ''ஆமா ,பருப்பில்லாமலே சாம்பார் வைக்கிறாளே!''

குடிகாரனுக்கு நியாயம் கேட்க உரிமையிருக்கா :)                      
            ''ரிஜிஸ்டர் ஆபீஸில் போய்,இலஞ்சம் வாங்குவது கேவலம்னு சொன்னீயே ,என்னாச்சு  ?''
             ''மது வீட்டிற்கும் ,நாட்டிற்கும் கேடுன்னு போட்டிருக்கு,நீங்க குடிக்காமலா இருக்கீங்கன்னு  கேட்டு கேவலப் படுத்திட்டாங்க  !''

IQ இல்லைனா கல்தாதான் :)
            ''உணவு மந்திரிக்கு கல்தாவாமே ...ரேசன் கடையிலே இலவச வேட்டி சேலை வாங்க வந்த நெரிசல்லே சிக்கி நாலு பேர் இறந்தாங்களே ,அதுக்காக இந்த கல்தாவா ?''
           ''அதுக்காக இல்லை ...'கியூ ' பிரிவு  போலீசார் கியூவை  ஒழுங்குபடுத்தலைன்னு  கண்டனம் தெரிவித்தாராமே  !''

இந்த மொக்கைக்கு 'ஜல்பே 'பரவாயில்லைதானே :)
           ''உனக்கு ஜலதோஷம்  பிடிக்குமா?''
            ''எப்பவாவது  பிடிக்கும்!''
           ''அப்படின்னா, எப்பவும் என்ன பிடிக்கும்?'' 

படுக்கைமேல் ,இப்படியும்  ஒரு  காரியம் செய்யலாமா :)
(இது நடந்தது சில ஆணடுகளுக்கு முன் )
அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடைப் பிடிப்பான் என்பதை நிரூபித்துள்ளார் ...
திரிபுரா மாநில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சமர் ஆசார்ஜி என்பவர் !
அவர் செய்தது ,இருபது லட்ச ரூபாயை படுக்கையில் அடுக்கி ,அதன் மீது புரண்டு புரண்டு....
 அதனை  செல்போன் மூலம் வீடியோ வேறு எடுத்துக் கொண்டுள்ளார் ...
அவரது நண்பர் மூலமாகவே அந்த வீடியோ வலையுலகில் வெளியாகிவிட்டது ...
அவர் பேட்டியில் சொல்கிறார் ...
'இது எனது நீண்ட நாள் ஆசை,மற்ற தலைவர்கள் போல் நான் மறைக்க விரும்பவில்லை !'என்று !
கழிவறைக்குப் போகவே காசில்லாத பல கோடி ஏழைகள் வாழும் நாட்டில் ...
இவரைப் போன்றவர்கள் கழிவறைக் கட்டியே கோடிக் கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள்!

27 comments:

  1. இந்த சைக்கிள யாரும் எடுக்க மாட்டாங்க... ஆனா திருமணத்துக்கு வந்த இடத்தில செருப்ப யாரும் ஆட்டயப் போட்டுடக் கூடாதில்ல... சிலிப்பர் சிலிப்பாயிட விடமாட்டோமில்ல... நாங்க எப்பூடி...!

    அது சரி... அரிசிச் சோறு இல்லாமலே சாம்பாரை சாப்பிட்டிட்டு போகச் சொல்றாளே...!

    அவுங்கதான் விவஸ்தயில்லாம கேக்கிறாங்கன்னா... எங்க போய் எதை எதைக் கேட்டமுன்னு விவஸ்தயில்லையா...?அதெல்லாம் மானம் சூடு சுரணை உள்ளவப் பாத்துக் கேட்டகனும்... கேவலம்... அவங்கள்ட்ட போயி இந்தக் கேள்வியா...?

    அந்த நாலு பேருக்கு நன்றி... கோடியை அவர்களாவே இரந்து பெற்றுக்கொண்டு இறந்தவர்கள்...!

    ஜலம் பிடிக்கும்... திறந்துதான் விடமாட்டேன் என்கிறார்கள்...!

    கம்யூனிஸ்ட் திரிபு... ரா... ரா...ரா...!

    த.ம. 1




    ReplyDelete
    Replies
    1. சைக்கிள்லே பெடல் கட்டையைக் காணோம் ,அதயும் பாதுகாப்பா கழட்டி வச்சிருப்பாரோ :)

      சாம்பார் கூழ் மாதிரியா இருக்கு :)

      அதானே யார் கிட்டே என்ன கேள்வி கேட்கிறது :)

      இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் இறந்து போவதே நல்லதுன்னு நினைச்சிட்டாரோ :)

      ஜலம் இல்லைன்னு --ஜலம்கூட போகாமல் இருக்க முடியுமா :)

      ஆமாம் .இவர் கொள்கையை மறந்து திரிபுவாதம் செய்பவர்தான் :)



      Delete
    2. நகைப்போட்டி தொடர்க !

      த ம 11

      Delete
    3. உண்மையில் என்னை விட மணவையார் தான் நிறைய யோசிக்கிறார் :)

      Delete
  2. அனைத்தையும்..... அனைத்தையும் ரசித்தோம் யாம்!

    ReplyDelete
    Replies
    1. பலர் பாலாய் மாறி ,தாங்கள் ரசித்ததை யாமும் மெச்சினோம் :)

      Delete
  3. 01. நிச்சயமாக முடியாது ஜி
    02. இதுக்குப் பேருதான் ரசம்...
    03. நியாயமான கேள்வி
    04. இதுக்கும் கண்டனமா ?
    05. ஜலஜாவோட பிடிக்கும்
    06. ஆசை 100 வகை

    ReplyDelete
    Replies
    1. பல நாட்டுக்கும் நீங்கள் சென்று இருப்பதால் ,உறுதியாய் நம்பத் தோன்றுகிறது :)
      பருப்பு போட்டா சாம்பார் இல்லாட்டி ரசமா :)
      நியாயமான பதில்தான் கிடைக்கலே :)
      கல்தாவுக்கு நாம கண்டனம் தெரிவிப்போமா :)
      இது தலைப்புக்கு சம்பந்தமில்லையே :)
      இருந்தாலும் இவரோட ஆசை பேராசை :)

      Delete
  4. திரிபுரா கட்சித் தலைவர் போல எனக்கும் வீடியோ வெளியிட ஆசை. 20 லட்ச ரூபாய் பகவான்ஜியும் கில்லர்ஜியும் கொடுத்தால் செய்து பார்க்கலாம். அதன்பின் அந்தப் பணத்தை வைத்து ஒரு கார் வாங்கிக்கொள்வேன். விண்ட்ஷீல்டில் பகவான்ஜி கில்லர்ஜி துணை என்று போட்டுக்கொள்வேன். ஒரு போலீசும் காரை நிறுத்த மாட்டார்களே..! எப்போஜி தரப்போறீங்க துட்டு, துட்டு..!
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நமது டொபேட்டா பேங்க் செக் ஒன்று அனுப்பி வைக்கிறேன் அமௌண்ட் எழுதிக் கொல்'ளுங்கள்

      Delete
    2. ஊரை அடிச்சு உலையில் போட்டு 'உழைச்சு 'சம்பாத்திக்கணும் ,அடுத்தவன் காசிலே படுக்க நினைச்சா உடம்பிலே ஒட்டவே ஒட்டாது ஜி:)

      Delete
  5. அனைத்தையும் ரசித்தேன். சைக்கிளைச் சற்றே அதிகமாக.

    ReplyDelete
    Replies
    1. எங்கிருந்துதான் இப்படி ஐடியா வருமோ தெரியவில்லை :)

      Delete
  6. அனைத்து துணுக்குகளையும் இரசித்தேன்! தலைப்பையும் இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,ரசீத்தீர்கள் !பலருக்கு 'பல்பு'கொடுக்கும் தலைப்பாச்சே :)

      Delete
  7. அனைத்தையும் வாசித்தேன் /ரசித்தேன் என்ன கருத்திடுவது......?

    ReplyDelete
    Replies
    1. கழிவறைக் காசு நாறாதுன்னு சொல்லலாமே :)

      Delete
  8. காசு இருக்கிறவன் தண்ணி அடிக்கிறான்..

    ReplyDelete
    Replies
    1. போதைக்கு அடிமையானவன் திருடியும் தண்ணி அடிப்பான் :)

      Delete
  9. செருப்பு அருமையான யோசனை.
    அனைத்தும் ரசித்தேன் சகோதரா.
    tamil manam .10

    ReplyDelete
    Replies
    1. நீங்க இருக்கிற நாட்டிலாவது இப்படியோர் அறிவாளியைப் பார்க்க முடியுமா :)

      Delete
  10. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, நன்று, நன்று

    ReplyDelete
    Replies
    1. நல்ல யோசிக்கிறவர் சைக்கிள்காரரா ,பணம் மேல் புரண்ட தலைவரா :)

      Delete
  11. மிதிவண்டியின் பூட்டில
    பாத அணியையும் இணைத்தாச்சு
    எதைக் களவெடுப்பார்...

    ReplyDelete
    Replies
    1. இரண்டையும் தூக்கிட்டுப் போனால் என்ன செய்வார் :)

      Delete
  12. செருப்பு, சைக்கிள் இரண்டும் சேஃப்! :) என்னா ஐடியா!

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு எதாவது அவார்ட் கொடுத்தா நல்லது :)

      Delete