17 October 2016

ஆள் பாதி ,மேக்கப் மீதி :)

போதை படுத்தும் பாடு :)            
               ''ரத்தம் கொடுக்க வந்திருக்கிறவர் ,குடிகாரரா ,ஏன் ?''
                ''நாலு குவார்ட்டருக்கு காசு கொடுத்தா ,ஒரு குவார்ட்டர்  ரத்தம் தர்றேன்னு சொல்றாரே !''

பெயரை  மாற்றினால் நல்லது :)
             ''ரேஷன்  கடைக்கு வந்து  ,எதுக்கு சாக்பீஸ் இருக்கான்னு  கேக்குறீங்க ?''
             ''நான் வாங்கிட்டு போன அரிசியில் புழுக்கள் நிறைய இருக்கே ...போர்டிலே , புழுங்கலரிசின்னு  எழுதி இருக்கிறதை 'புழுக்களரிசி 'ன்னு மாற்றலாம்னு தான் !''

எறும்புக்கு வருமோ மலைப்பு :)
            "வீட்டுல லேசா சீனி சிந்தினாலே எறும்பு கூட்டம் வந்திருது ! ஸ்வீட் கடையிலே எறும்பு வர்றதே இல்லை ,ஏன் ?"
            "இவ்வளவு ஸ்வீட்டையும் எப்படி சாப்பிடறதுன்னு மலைச்சு நின்னுடுதோ ,என்னவோ !"

ஆள் பாதி ,மேக்கப் மீதி :)
              ''என்னங்க ,சிறந்த மேக்கப்மேனுக்கான  பரிசு வாங்கி இருக்கீங்க ,உங்க  பெண்டாட்டி நான் ....எனக்கு மேக்கப் போட்டால் என்னவாம்  ?''
            '' சுமாரா இருந்த முதல் பெண்டாட்டிக்கு மேக்கப் போட்டேன் ...அவளையும் ஒருத்தன் தள்ளிக்கிட்டு போய்விட்டானே !''

ஆடம்பர உலகம் இது :)
ஆழ்கடலின் அமைதியை ...
அலைகளின் ஆர்ப்பாட்டத்தால் உணர முடிவதில்லை !

14 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஒரு வாலுமில்ல நாலு காலுமில்ல... உயிரினும் மேலான ரத்தத்தின் ரத்தமே...!

    மெல்லினம் வல்லினமா மாறிடுச்சு... இதுக்குப் போயி அலட்டிக்கலாமா...?

    எறும்புக்குச் சர்க்கரை நோய் வந்திட்டா... யார்ட்ட போயி வைத்தியம் பார்க்கிறதுன்னு யோசிச்சு நிக்கிதோ...?

    மேக்கப் போட்டாலே எவனாவது பிக்கப் பண்ணிட்டு போயிடுறான்...!

    குறை குடம் கூத்தாடும்... நிறை குடம் தழும்பாதில்ல...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. ரத்தம் இவ்வளவு மலிவா போச்சே :)

      மெல்லினத்தை மெல்லலாம் ,வல்லினத்தை வெல்ல முடியலியே :)

      எறும்பு ஸ்பெசலிஸ்ட் யாருமில்லையோ :)

      கப்புன்னு காரியம் ஆயிடுதோ :)

      குடத்தைப் பார்த்து ஜொள்ளு வேணா தளும்பலாம்:)

      Delete
  3. அனைத்தையும் ரசித்தேன் ஜி...

    ReplyDelete
    Replies
    1. அவரால் குவார்ட்டரை மறக்க முடியவில்லை என்பதையுமா :)

      Delete
  4. Replies
    1. உங்க நாலுக்கு நன்றி :)

      Delete
  5. எங்க ஏரியாவுல சுமராக இருந்தாலும் தள்ளிட்டு போயிடுராங்க தலைவா....

    ReplyDelete
    Replies
    1. சம்மட்டிபுரம்தானே உங்க ஏரியா ?சம்மட்டியை கையிலே எடுக்க வேண்டாமா :)

      Delete
  6. 01. நியாயமானவருதான்
    02. இதுவும் நியாயம்தான்
    03. பொதுவாக கடைகள் ரோட்டோரமாக இருக்கும் அந்த வழியாக போனால் பஸ்ஸோ, லாரி ஏறிடும் இதனால்கூட இருக்கலாமே...
    04. என்னது முதல் பொண்டாட்டியை எவனோ, ஆட்டையப் போட்டுட்டானா ?
    05. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ஒண்ணுக்கு நாலா கேட்கிறாரே :)
      நியாய விலைக் கடையாச்சே:)
      தன் மேல் ஏறி லாரி ,பஸ் கவிழ்ந்தால் பாவமாச்சே என்று கூட எறும்பு நினைத்திருக்கலாம் :)
      அதுக்கு இவர் போட்ட மேக்கப் காரணமாம் ,நம்ப முடியுதா ?வேற ஏதோ கோளாறு இருக்கு :)
      கண்கள் கண்டதே கோலம் என நினைப்பது தவறுதானே :)

      Delete
  7. அனைத்தும் ரசித்தேன்.....

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. ஆடம்பர உலகத்தை ரசிக்க முடியுதா ஜி :)

      Delete