6 October 2016

மனைவி கை குட்டுபடவுமா கொடுத்து வைச்சிருக்கணும்:)

நேற்று ஜோக்காளியின் ஐந்தாவது பிறந்த தினத்துக்கு , தமிழ் மணத்தில்  இரட்டை இனிப்பைக் கொடுத்த வலையுலக உறவுகளுக்கு நன்றி :)
தமிழ்மணம் மகுடம்
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
வாசகர் பரிந்துரை
                கால்கட்டு போட்டால்தான் காலோட அருமை தெரியும் :)
                                                                8Who Voted?Bagawanjee KA

இவர் வீட்டுக்கு வரலேன்னு யார் அழுதா :)
           ''இது உங்க வீடு மாதிரி ....ஒவ்வொரு முறையும் ,வர்றேன்னு ஏன் முன்கூட்டியே  போன்லே சொல்றீங்க ?''
            ''சொன்னாதானே ,நீங்க டாய்லெட் எல்லாம் கிளீன் பண்ணி வைப்பீங்க !''

மனைவி கையால்  குட்டுபடவுமா கொடுத்து வைச்சிருக்கணும்:)
            ''என்னது ,என் நல்லதுக்குதான்  வைர மோதிரம் கேட்கிறீயா?''
             ''ஆமாங்க ,குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டு பட்டேன்னு சொல்லிக்கலாம் இல்லையா ?''
இதுவல்லவோ நாணயம்:)
           ''அவர்  சொன்ன  வார்த்தையை   காப்பாத்துறதிலே  நாணயமானவரா , எப்படி?''
           ''ரெண்டே நாள்லே  திருப்பி தர்றேன் ...இல்லைன்னா  பேரை  மாத்திக்கிறேன்னு கடன்  கேட்டார் ..சொன்ன மாதிரி  நாணயமா பெயரை  மாத்திக்கிட்டாரே !''
(பிரசுரம்  செய்த தினமலர் வாரமலருக்கு நன்றி !)

இவர்கள் லஞ்சம் வாங்குவதும் 'நாட்டு நலன் 'கருதித்தான்!
            ''நாட்டு நலன் கருதி பல கோடி செலவில் வாங்கிய நீர் மூழ்கி கப்பல்களை ராணுவத்தில் ஒப்படைக்கும் விழா நடந்ததே ...மந்திரி ,எம்பிக்கள் நீர்மூழ்கி கப்பலில் இறங்கிப் பார்த்தார்களா ?''
             ''கடுமையான நிதி நெருக்கடி நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த முடியாதுங்கிற 'நாட்டு நலன் 'கருதி அந்த ரிஸ்க்கை யாரும் எடுக்கலே !'' 

பயணிகள் மட்டுமல்ல ,பதிவர்களும் தெரிஞ்சுக்க வேண்டியது :)
வெளிநாட்டிற்கு செல்லும் சீனர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது சீன அரசு ...
அது அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ...
எல்லா  நாட்டு மக்களுக்கும்  பொருந்தும் !
நம் பதிவர்களுக்கு எப்படி பொருந்தும் என்றால் ...
      பொது கழிப்பிடங்களில் நீண்டநேரம் இருக்க வேண்டாம் !
[பதிவைப் பற்றி வெளியே வந்து யோசிங்க ]
      கழிப்பிடங்களை அசுத்தம் செய்யாதீர்கள் !
[உங்களின் பதிவு படிப்பவர் மனதில் வக்கிர எண்ணங்களை உருவாக்கக் கூடாது ]
      பொது இடங்களில் மூக்கை நோண்டக்கூடாது !
[பதிவுக்கு மண்டையை குடைந்துக்கலாம் ,மூக்கை நோண்டிக்கக்கூடாது ]
      நூடுல்சோ ,சூப்போ உண்கையில் சத்தம் வரக்கூடாது !
[நம் பதிவு  படிப்பவரின் பொறுமையை 'உறிஞ்சி'டக் கூடாது ]
     விமானங்களில் தரப்படும் உயிர் காப்பு உடைகளை திருடாதீர்கள் !
[சிந்தித்து எழுதுபவன் பதிவர் ,காப்பிபேஸ்ட் செய்வதும் திருட்டுதான் ]
மிக மிக முக்கியம் ...
     நீச்சல் குளத்தில் சிறுநீர் கழிக்காதீர்கள் !
[பதிவைப் போட முடியவில்லையென  பதட்டமோ ,பயமோ இருந்தால் மேற்கண்ட காரியம் தானாகவே நடந்து விடும் !] 

20 comments:

  1. தமிழ்மண மகுடத்துக்கு வாழ்த்துகள் ஜி.

    பணத்தைத் திருப்பிக் கொடுக்கறதுக்கு பெயரை மாத்திக்கறதே பெட்டர் போலன்னு நினைச்சுட்டார் போல!

    ReplyDelete
    Replies
    1. மகுடம் சூடும் பதிவுகள் கூட அரிதாகி விட்டதே :)

      இனிமேல் இவரை நம்பி யாராவது கடன் தருவார்களா :)

      Delete
  2. நீங்க வரச் சொன்னாத்தானே வரனும்... அதானே முறை...! நாம முறைதவறி நடக்கிறோமுன்னு வெளியே யாரும் பேசிடக் கூடாதில்ல...!

    அப்படிச் சொல்லாதே... குத்துப்பட்டாலும்... இனி வைர மோதிரக் கையால் குத்துப்படனுமுன்னு சொல்லு...!

    பெயரை மாத்திக்கிட்ட பிறகு கூப்பிட்டாலும் திரும்பிப் பார்க்க மாட்டேங்கிறாரே...! என்ன பேரைச் சொல்லி கூப்பிடறது...?

    கடல்ல பிடிச்சுத் தள்ளிவிட வேண்டியதுதானே...! ‘தரை மேல் பிறக்க வைத்தான்... எங்களைத் தண்ணீரில் மிதக்க வைத்தான்...’னு பாடிக்கிட்டே போய்ச்சேர்வார்கள்தானே...!

    ‘மானிட ஜாதியில் தனி மனிதன்... மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்...!’ சீன அறிஞரும் இந்தியாவில் புனிதப் பயணம் மேற்கொண்டவருமான யூவான் சுவாங் வருகிறார்... வருகிறார்... பராக்... பராக்...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. தனியா இருக்கும்போது உங்களை மட்டும் வரச் சொன்னாதான் தப்பு :)

      குட்டு படணும்னு முடிவான பிறகு ,எப்படி பட்டால் என்ன :)

      அதானே ,நூறு பேருக்கு மேல் ஏமாற்றி ,பெயரும் நூறைத் தாண்டி விட்டதே :)

      இந்த பாடலை அறியாதவர்கள் ,என்ன பாட்டு பாடுவார்களோ :)

      சீனாவுக்கு வரும் வெளிநாட்டினரும் இதைக் கடைபிடிக்க வேண்டுமென்று சொல்லாமல் சொல்கிறார்களோ :)

      Delete
  3. Replies
    1. த.ம. +1...? நானும் ரசித்தேன் :)

      Delete
  4. 'நாட்டு நலன்' கருதி
    லஞ்சம் வாங்கினால்
    கவனம்
    நாட்டிலா
    லஞ்சத்திலா

    ReplyDelete
    Replies
    1. நாட்டில் என்றால் ஏன் லஞ்சம் வாங்கப் போகிறார்கள் :)

      Delete
  5. ஜோக்காளியின் ஐந்தாவது பிறந்தநாளுக்கும், தொடர்ந்து மகுடம் சூடுவதற்கும் வாழ்த்துக்கள்.
    வழக்கம்போல் இன்றைய ஜோக்குகளை ரசித்தேன்.
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. பதிவு போடாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்று என் இதயம் சொல்லத் தொடங்கி ஐந்தாண்டுகள் ஆகி விட்டது என்றால் நம்ப முடியவில்லை :)

      Delete
  6. ஐந்தாவது பிறந்த நாளினைக் குதுகலத்துடன் கொண்டாடும் வேளையில் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அன்புக்கு தலை வணங்குகிறேன் :)

      Delete
  7. ஒரே கையில் ரெண்டு மாங்காய்........

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு கையிலும் பிடிக்கக் கூடிய அளவுக்கு ஒரே மாங்காய் என்றால் எனக்கு பிடிக்கும் :)

      Delete
  8. ஜோக்காளியின் ஐந்தாவது பிறந்தநாளிற்கும், தமிழ்மகுடத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

    டாய்லெட் ஹஹஹ்ஹஹ்...அனைத்தும்ரசித்தோம் சீன வெளியீடான விதிமுறைகள் அனைத்தும் சிறப்பானவை..

    ReplyDelete
    Replies
    1. இன்று ,ஒரே நாற்றமா ஆகிப் போச்சே :)

      Delete
  9. யார் வீட்டுக்கு யார் வருகிறார்கள் யாராவது வந்தால்தான் டாய்லெட் க்ளீன் ஆகுமா
    எப்படியானால் என்ன குட்டுப்படப் போவது உறுதியாகி விட்டது
    வாங்கிய பணம் கொடுக்க வேண்டாமென்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் பெயரை மாற்றிக் கொள்ளலாமே
    சுய நலத்தில் நாட்டு நலனும் இருந்தால்
    பதிவர்களுக்கான அறிவுரைகள் அனுபவத்தின் பேரில் எழுதியதா

    ReplyDelete
    Replies
    1. யார் வந்தாலும் போனாலும் சுத்தம் முக்கியம் இல்லையா :)
      கொடுத்து வைத்தவர்தானா :)
      அதுதானே காசா ,பணமா :)
      இருக்கிற மாதிரி தெரியலியே :)
      அப்படியா தோணுது :)

      Delete
  10. வாழ்த்துகள் ஜி

    01. முன்னெச்சரிக்கை நன்று.
    02. இப்படியுமா ?
    03. தினமலருக்கும் வாழ்த்துகள் ஜி
    04. யாருக்கும் தைரியம் இல்லை.
    05. பதிவர்களுக்கு வேண்டியவையே.....

    ReplyDelete
    Replies
    1. சொல்லிக்கிட்டு வர்றாரே :)
      எப்படி என்றாலும் வலிக்கும் :)
      இதெல்லாம் அன்றைக்கு வந்தது :)
      இவர்கள் லட்சணம் அப்படி :)
      முக்கியமா எனக்கு :)

      Delete