31 October 2016

மனைவி சொல் மிக்க மந்திரமில்லை :)

இதை விடவா பொருத்தமான காரணம் இருக்க முடியும் :)
      ''சேமிப்பு  உண்டியல்  என்றாலே பன்றி வடிவத்திலே இருக்கே ,ஏன் ?''
     '' தன் குட்டியைத் தானே தின்னும் பழக்கம் பன்றிக்கு இருக்காமே !''
மனைவி சொல் மிக்க மந்திரமில்லை :)
             ''பசி மயக்கத்தில் இருந்ததால் ,நீ  வெங்காயம் நறுக்கித் தரச் சொன்னது, என்  காதுலே விழலே !''
             ''டிபன் ரெடின்னா மட்டும், நல்லா விழுதே எப்படி ?''

திறமைக்கேற்ற பரிசு இது :)
          ''கபாலி ,உன் வீட்டிலேயே கொள்ளை அடிச்ச  கொள்ளைக்காரனை கண்டுபிடிச்சிட்டோம் ..அவனை விட்டுவிடுங்கன்னு ஏன் சொல்றே ?''
           ''அவனுக்கு என் பொண்ணைக் கொடுக்கலாம்னுதான் ''

குண்டு மனைவியை  இப்படியா கிண்டல் பண்றது :)
            ''என்னங்க ,குக்கரைப் பார்க்கும் போதெல்லாம்  என் ஞாபகம் வருதா ,ஏன்  ?''
           ''அதுவும் வெயிட்டை  தூக்க  முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே  'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுதே  !''

என்றும் சிறைக் கஞ்சா சிங்கம்:)
         ''ஜெயிலுக்குப்போன  தலைவர் ,கஞ்சாவிற்கு அடிமை ஆயிட்டாராமே ,ஏன்?''          
         ''அவர் வெளியே இருந்தா 'சிறைக்கு அஞ்சா சிங்கம் ',உள்ளே போனா 'சிறை கஞ்சா சிங்கம் 'ஆச்சே!''

இது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை ...
           அய்யோ பாவம் எனத் தோன்றியது!
அவர் புலி வேஷம் கட்டி ஆடுபவர் ...
            இவருக்கென்ன கஷ்டமோ ?
நாலு ஆடுகளில் ஒன்று தப்பியதால் விரக்தி ...
            அதனால் இவருக்கென்ன விரக்தி ?
புலிவேஷம் போட்டு கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார் ...
             அது அவர் ஆசை ,அப்புறம் ?
நாலு ஆடுகளை பல்லால் கவ்வி எறிய ஆரம்பித்தார் ...
             இதென்ன கூத்து ?
மூன்று ஆடுகளை எறிந்து விட்டார் ...
              உலக சாதனை தான் ,அடுத்து ?
ஒரு ஆடு மட்டும் தப்பித்து விட்டது ...
             கொடுத்து வச்ச ஆடு ,அப்புறம் ?
ஆடு தப்பியது தெய்வகுற்றம் என நினைத்து விஷம் குடித்து இறந்தார் ...
              எந்த தெய்வம் இவரை புலிவேஷம் போடச் சொன்னது ?ஆடுகளை பல்லால் கவ்வி எறியச்சொன்னது ?இப்படி மூடச் செயல்களை செய்து கொண்டு இவரைப் போன்றவர்கள் வாழ்வதை விட போய் சேர்வதே நல்லதுதானே !

23 comments:

  1. 01. சேமிக்கும் மனிதனே செலவுக்கு எடுத்துக் கொள்கிறானோ...
    02. காரியக்கார கணவன்
    03. யோசனை மஞ்சிவாடு
    04. குக்கரும், மனைவியும் ஒண்ணா ?
    05. ஸூப்பர் பட்டம்
    06. போனதுவரை சரிதான்

    ReplyDelete
    Replies
    1. உண்டியல் நிறையும் முன்பே , எடுத்து செலவு செய்து தன உண்டியலை நிரப்பிக் கொள்கிறானே :)
      மெஜாரிட்டி இப்படித்தானே :)
      இனம் இனத்தோடு :)
      செய்கையில் ஒன்று :)
      பல்கலைக் கழகம் கூட யோசிக்காதது :)
      அவருக்கும் ஆட்டு மூளையோ :)

      Delete
  2. ''சேமிப்பு உண்டியல் என்றாலே பன்றி வடிவத்திலே இருக்கே ,ஏன் ?''

    பன்னி பல குட்டிகள் போடும் அதனால்தான் என்னவோ நாம் சேமிக்கும் பணமும் பலவாக பெருகும் என்ற நம்பிக்கையில்தான் அதில் இப்படி சேமிக்கிறார்களோ என்னவோ

    ReplyDelete
    Replies
    1. .மதுரைத் .தமிழன்..... நல்ல பதில்.

      Delete
    2. வட்டி வேண்டுமானால் குட்டி போடும் , உண்டியல் சேமிப்பு எப்படி குட்டி போடும்னு தெரியலே :)

      Delete
    3. ஸ்ரீராம்ஜி ,நல்ல பதில் மட்டுமல்ல ,சரியான காரணம் அதுதான் :)

      Delete
  3. ‘பன்றி எப்பவும் கூட்டமாத்த வரும்...’... தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாய்ந்து விடக்கூடாதென்றுதான்...!

    டி... பண்னு ரெடின்னு சொன்னமாதிரி விழுந்திச்சு... ஆனா டிபனே ரெடியா... சமத்துடி...!

    ‘கொள்ளைக்காரனுக்கு... என் சாம்ராஜ்யத்தில பாதியும்... என் மகளையும் பரிசாக கொடுக்கத் தயார்...!’ கபாலி காஷ்மோரோ.

    குக்கர் தன்னோட வெயிட்டை தூக்கிட்டேங்கிற சந்தோசத்தில விசில் அடிச்சு மகிழ்ச்சியத் தெரிவிக்கிது...!

    காத்து கருப்பு அண்டுறதுக்குப் பதிலா கஞ்சாக் கருப்பு அண்டிடுச்சுன்னு நெனைக்கிறேன்...!

    ‘குட்டி ஆடு தப்பிவந்தால்... குள்ளநரிக்குச் சொந்தம்...! சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்...!’ கண்டுபிடிச்சுப் போய் சேர்ந்திட்டாரு...! போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

    த.ம. 2




    ReplyDelete
    Replies
    1. சிங்கம் மட்டும் சிங்கிளாவா வரும் ?பஞ்ச் டயலாக் சொல்ல வேண்டுமானால் நல்லாயிருக்கும் :)

      சாப்பாடு ரெடின்னு சொன்னா ,சமத்துன்னு ஐஸ் வைக்கிறதா :)

      ஏகபோக உரிமையை இப்படி விட்டுத் தர எப்படி மனசு வந்ததோ :)

      ஆனா உடம்பு தூக்க முடியாம மக்கர் பண்ணுதே :)

      கஞ்சாவுக்கு அடிமை ,ஆனால் ,அன்புக்கடிமை நெஞ்சம்னு பாடுவார் :)

      அதுக்காக ,சாவை தேடிப் போவதா புத்திசாலித் தனம் :)

      Delete
  4. தன் குட்டியைத் தானே தின்னும் பழக்கம் நாய்க்குத்தானே உண்டு? குண்டு மனைவி - குக்கர் - ஹா... ஹா.... ஹா....

    ReplyDelete
    Replies
    1. விசுவாசத்துக்கு பெயர் போன நாயா இப்படி செய்கிறது :)

      Delete
  5. தந்திரமே..மந்திரமாகி போச்சு.....

    ReplyDelete
    Replies
    1. அதாவது ,வேலையிலிருந்து தப்பிக்கும் தந்திரம் :)

      Delete
  6. தந்திரமே..மந்திரமாகி போச்சு.....

    ReplyDelete
    Replies
    1. சோம்பேறிக்கு ஆகத்தானே செய்யும் :)

      Delete
  7. பணத்தை முட்டியில் இட்டாலும் கூட
    செலவுக்கு எடுப்பதால் நெடுநாள் வாழாது
    "உடையும் சேமிப்பு உண்டியல்!"

    ReplyDelete
    Replies
    1. உண்டியல் என்பது தமிழ்ச் சொல் இல்லையா ?அதென்ன முட்டி :)

      Delete
    2. உண்டியல் என்பது தமிழ்ச் சொல் தான்!
      பணத்தை முட்ட முட்ட நிரப்ப உதவுவதால் 'முட்டி' எனக் காரணப் பெயர் எனலாம். சல்லி முட்டி, காசு முட்டி, பணமுட்டி எல்லாம் உண்டியல் என்பதற்கு மாற்றுப் பெயர் எனலாம்.

      கள்ளு முட்டிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை ஐயா!

      Delete
    3. பழனி பரம்பரை சித்த வைத்தியர் சொல்ற 'முட்டி'யை ஏன் விட்டு விட்டீர்கள் :)

      Delete
  8. பதிவில் வரும் விஷயங்களும் செய்திகளூம் ஆதார பூர்வ உண்மையாக இருக்கவேண்டும் என்னைப் போன்றவர்கள் எளிதில் நம்பிவிடுவார்கள்
    அது காதில் விழுந்துதானே ஆகவேண்டும்
    கபாலி என்றாலேயே கொள்ளைக்காரன் என்று அர்த்தமா
    குக்கர் தன் வெயிட்டைத் தூக்கி விபத்து நேராமல் காக்கிறது மனைவி அப்படியா
    நல்ல வார்த்தை விளையாட்டு
    நல்ல பக்திமான்

    ReplyDelete
    Replies
    1. பொய்யென்றால் மறுப்பு வந்து விடுகிறதே !உண்மைத் தேடலை துவங்க வேண்டியதுதானே :)
      விழவில்லைஎன்றால் ஆபத்து ,பசி வந்திட பத்தும் பறந்து போய்விடுமே :)
      ஜிம்மி என்றால் நாய் மட்டும்தானா :)
      தன் மேல் மனைவி விழுந்தாலும் விபத்துதான் என்று அவர் நினைக்கிறாரே :)
      உண்மையை மறைக்க அஞ்சா சிங்கமென்று சொல்கிறார்களோ :)
      மோட்சம் உறுதிதானா:)

      Delete
  9. கபாலியின் சமயோசித புத்தியையும் தானே :)

    ReplyDelete
  10. பன்றி உருவ உண்டியல்.... :)

    ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு உருவத்துக்கும் இரண்டு பக்கம் உண்டல்லவா ?நான் பார்த்த பக்கமிது :)

      Delete