ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் !
'' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''
''வெளியே வந்த பேஸ்ட்டும் ,பேச்சும் மீண்டும் உள்ளே போகாதுங்கிறாரே !''
ஓடிப் போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா ?
''நம்ம ரெண்டு பேரும் 143ன்னு சொல்லிக் கிட்டாலும்,அதுக்கு ரெண்டு பேர் வீட்டுலேயும் 144போட்டுட்டாங்க ...அடுத்து என்ன செய்றது ?''
''123 ஜூட்னு சொல்லிட்டு ஓடிறவேண்டியது தான் ,வேற வழி ?''
(அதென்ன 144,143 என்று தெரியாதவர்கள் நேற்று முந்தின நாள் பதிவைப் பார்க்கவும் :)
எல்லோருமே 'அசைவ 'தீவிரவாதிகள் தான் !
நாம் உண்ணும் கேப்சூல் மாத்திரையின் மேலுறை...
புரதப் பொருட்களால் ஆனதாம் ...
அது மிருகங்களின் கொம்பு ,குருத்து எலும்புகளை
கரைத்து எடுத்து தயாரிக்கப் படுகிறதாம் ...
அதன் பெயரும் 'ஜெலாட்டின் 'தானாம் !
மனைவி அமைவதெல்லாம் ..........?
''உங்களுக்கு உங்க மனைவியை பிடிக்கலையா ?''
''ஆமா ,எப்படி கண்டுப்பிடிச்சீங்க ?
''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரம்னு பாடிக்கிட்டு இருந்தீங்களே !''
வீட்டில் எப்பவும் கொண்டாட்டம்தான் !
நாம் ,வீட்டில் இருந்தால்
கொசுவுக்கு கொண்டாட்டம் !
இல்லாவிட்டால்
கொள்ளைக்காரனுக்கு கொண்டாட்டம்!
|
|
Tweet |
அனைத்தையும் ரசித்தேன் ஜி. தம இன்னும் சப்மிட் ஆகவில்லையே....
ReplyDeleteசப்மிட் ஆனபிறகு தங்களின் வாக்குரிமையை பயன்படுத்தியதற்கு நன்றி :)
Delete‘கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா
ReplyDeleteஉடைந்துபோன சங்கினோசை யுயிர்களு முடற்புகா
விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே.’-என்று சொல்லாமல் போனாரே...!
‘சாட் பூட் திரி, காயா? பழமா?, ஒத்தையா? ரெட்டையா?’ போட்டுப் போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதானே...!
முடவன் கொம்புத் தேன்... குருத்து எலும்புக்கு ஆசைப்படலாம்... ' ஜெலாட்டின் ' உள்ளே போயி வெடிக்கிது... ‘ஜெலட்டின்’ வெளியே வெடிக்கிது...!
‘இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானோ தேவன் அன்று...?’ ஆமா... அவனுக்கு வேற வேலையே இல்லையா...?
எப்படியும் நம்ம பொழப்பு திண்டாட்டம்தான்...!
த.ம. 1
புகா தொன்மைக் கண்டு அசந்தேன் :)
Deleteசொல்லாமல் கொள்ளாமல் ஓடிட்டே இருக்க வேண்டியதுதான் :)
வெடிப்பது ,ரெண்டுக்கும் பொதுதானா:)
வெட்டி வேலை செய்றவனுக்கு என்ன பெயர் வைக்கலாம் :)
ஒருத்தருக்கு கொண்டாட்டம் ,இன்னொருத்தருக்கு திண்டாட்டம் தானே :)
த.ம.+1
Deleteதம இன்னும் சப்மிட் ஆகவில்லையே....
ReplyDeleteஇனிமேல் பதிவில் தாமதம் இருக்காது ,வழமைபோல் வாக்களிக்கலாம் :)
Deleteரசித்தேன்.
ReplyDeleteவெறும் தேன்தானா :)
Deleteதம +1
ReplyDeleteகாத்திருந்து வாக்களித்த உங்க ஜனநாயக உணர்வுக்கு நன்றி :)
Deleteபேச்சு பேஸ்ட் ஹஹஹஹ்
ReplyDeleteஅந்த நம்பர் எல்லாம் தெரியுமே ஜி!!! ரசித்தோம்
இந்த பேஸ்ட் வேஸ்ட் இல்லையே :)
Deleteபத்து நம்பருக்குள் ஒன்று தெரியாமல் போகுமா :)
01. உண்மைதான்
ReplyDelete02. ஜூட் ஸூப்பர்
03. ஆம் அனைவருமே அசைவம் உண்ணுகிறோம்
04. நல்ல கவிஞர்
05. என்ன செய்வது இரண்டையும் சமாளிப்போம்
தத்துவ உண்மை :)
Deleteஜூட் சொல்ல நேரமிருக்கா :)
தெரிந்தோ தெரியாமலோ :)
யதார்த்த உண்மை சொல்லிட்டாரே :)
வேறு வழி:)
சரிதானே
ReplyDeleteஓடும்போது எங்கும் தடுக்கி விழக்கூடாது
ஜெலாட்டின் உள்ளே போய் வெடிக்குமா
விதிக்குத் தக்கபடி மனைவி அமைவாள் என்பார்கள் சிலர்
நாம் இல்லாதபோது கொசுவத்தி எரியுமா
யோசிச்சு பிதுக்கணும் ,பேசணுமோ :)
Deleteஇப்படி ஓடும் போது விழ மாட்டார்கள் :)
பேட்டரி கனெக்சன் கொடுத்துப் பார்க்கணும் :)
விதியை நம்புபவர்களுக்கு அது சரி :)
ஏன் எரியாது ?எரிய நாம் தேவையில்லையே :)
அனைத்தும் அருமை!
ReplyDeleteத ம 7
இப்படி சொன்னா எப்படி ? 1 2 3 ன்னு ரேங்க் போடுங்க :)
Deleteஓடிப்போயி கல்யாணம் கட்டிக்கிறவர்களுக்கு சாதி வெறி ஆவணக் கொலைக்காரர்கள் சாதிப் பெருமையை காக்க கொலைக் கருவிகளுடன் அலைகிறார்கள் எச்சரிக்கை......
ReplyDeleteஉங்க எச்சரிக்கையும் நல்லதே :)
Deleteரசித்தேன் ஜி.
ReplyDelete