24 October 2016

கெட்ட கணவன் அருகில் படுத்தால் ....:)

           ''உன் அருகில் படுத்தவுடன்  ஒரு நொடியிலே தூக்கம் வரக் காரணம்,உன் நல்ல மனசுதான்னு தோணுது !''
           ''எனக்கு தூக்கம் வராத காரணம் இப்போ புரியுதுங்க !''
காவல் துறையில்  'என்கவுண்டர் டீம்' உண்டுதானே  :)
           ''அவரை என்கவுண்டர் டீமில் இருந்து ஏன்  நீக்கிட்டாங்க ?''
         ''  இவர் சுடுவதற்குள் ரவுடிகள்  தப்பித்து  ஓடி விடுகிறார்களாம் !''

அவர் கோபத்திலும் நியாயம் இருக்கே :)
           ''கடன்காரங்ககிட்டே இருந்து அசலும் ,வட்டியும் 'கறந்து 'வாங்க முடியலேன்னு பாங்கை இழுத்து பூட்டிட்டு போயிடுவீங்களா ?''
           ''ஏன் இப்படி கேட்குறீங்க ?''
           ''நான் மாட்டு லோன் கேட்டா ,பால் கறக்கத் தெரியுமான்னு கேட்குறீங்களே !''

ஏன் படம் தயாரிக்கக் கூடாதா:)
       " மடாதிபதியை  சுற்றி ஏன் நடிகைகள் கூட்டம் ? "
       '" படாதிபதியாக போறாரோ  என்னவோ ? "

கற்பழிப்பைக் கூட  காவல் நிலையத்தில் சொல்லக் கூடாதா ?
(இந்த கூத்து நடந்தது சில வருடங்களுக்கு முன் )
தங்கள் வாகனம் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் செய்யப்படாமல்  தெருவில் நின்று கொண்டிருக்கிறது ...
இதனால் திருடு போக வாய்ப்புள்ளது ...
அவ்வாறு ஏதேனும் திருட்டு ஏற்பட்டால் தாங்களே முழுப் பொறுப்பாவீர்கள் !
இப்படியான  வாசகங்கள்  கொண்ட போஸ்டர்களை...
சேலத்தில் உள்ள ஒரு ஏரியா, வீடுகளில் ஒட்டியிருப்பவர்கள் யாரென்று தெரிந்தால் ...
மூக்கின் மேல் விரலை வைக்கத் தோன்றாது ...
நெற்றியில் அடித்துக் கொள்ளத் தோன்றும் ...
ஆமாம் ,அந்த ஏரியா காவல் நிலையத்தின் சார்பில்அந்த போஸ்டர் அடிக்கப் பட்டுள்ளது !
அடுத்ததாக ...
உங்கள் வீட்டை கொள்ளையில் இருந்து ...
உங்கள் கற்பை  கயவர்களிடம் இருந்து ...
உங்கள் உயிரை எதிரிகளிடம் இருந்து ...
பாதுகாத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு ,அதையும் மீறி அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் ...
காவல் நிலையத்தை அணுக வேண்டாம் !
 இப்படி வாசகங்களைக் கொண்ட போஸ்டரை இனி எதிர்ப்பார்க்கலாம் !

23 comments:

  1. அவனுகென்ன தூங்கிவிட்டான் ... அகப்பட்டவள் நான் அல்லவா...?!

    ‘துப்பாக்கி கையில் எடுத்து ரெண்டு தோட்டாவும் பையில் எடுத்து’ தூக்கி சுடுறதுக்குள்ள... முடியல... நவீன ரகத் துப்பாக்கித் தேவை... வீணாப்போன துப்பாக்கி வீண்...!

    இந்த ஆண்டுதான் அவசியம் நடக்குமாமே...! நான் ஜல்லிக்கட்டு மாட்டுக்கு லோன் கேட்டேன்...!

    ‘கண்ணத் தொறக்கனும் சாமி.. கையப்புடிக்கனும் சாமி...’ முதலீடு போட... எடுக்கக அவராலதான் முடியும்... கடவுள் அவர்ட்டதானே கண்ணத் திறந்திருக்கிறாரு...!

    உங்கள் உயிருக்கு உத்திரவாதம் நாங்கள் அல்ல... உங்கள் உயிர் உங்கள் கையில்...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்ட மாதிரி தெரியலையே :)

      எ கேசவனை டீமில் சேர்த்துக்கலாமா :)

      போன வருஷம் ஜல்லிக்கட்டு நடந்த மாதிரியா :)

      கடவுள் கண்ணைத் திறந்தாரா இல்லையான்னு தெரியலை ,மக்கள் கண்ணை மூடிட்டு அவரிடம் கொட்டுறாங்களே :)

      உங்களுக்கென்ன மயிர் பிடுங்கிற வேலையா :)

      Delete
  2. காவல் துறையின் போஸ்டரை அதிகமாக ரசித்தேன்.
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. நானும் முதலில் ஆச்சரியப்பட்டேன் :)

      Delete
  3. 01. அப்படீனாக்கா... கணவந் கெட்டவன்தான்.
    02. குண்டுகள் மிச்சம்
    03. நியாயமான கேள்வி
    04. சான்ஸ் பிடிக்கட்டும்.
    05. வரலாம்தான் ஜி

    ReplyDelete
    Replies
    1. தூக்கத்தைக் கெடுத்தாலும் கெட்டவர்தான்:)

      இவரல்லவோ பொறுப்பு மிக்கவர் :)

      பாங்க் வேலையே விட்டுட்டு ,முதல்லே கறக்கப் பழகச் சொல்லி விடலாமா :)

      cctvல் வந்தவருக்கே சான்ஸ் அடிக்குதாமே :)

      நாடு அப்படித்தானே போய்கிட்டு இருக்கு :)

      Delete
  4. தூக்கம் வராத காரணம் சரிதானா :)

    ReplyDelete
  5. எனக்கு தூக்கம் வராதற்கு காரணம் தெரியலையே.......

    ReplyDelete
    Replies
    1. அதே காரணம்தான் ,நல்ல துணைவி அருகில் இல்லாததுதான் :)

      Delete
  6. என்னருகில் நீயிருந்தால்.... பாட்டு நினைவுக்கு வருகிறது
    என்கௌண்டர் டீம் என்று ஒன்று இருக்கிறதா
    அது யாருடைய பேங்க்
    அப்பவும் நடிகையர் கூட்டம் இருக்குமா
    காவல் துறையினர் அப்படியும் போஸ்டர் அடிக்கிறார்களா

    ReplyDelete
    Replies
    1. என்னருகில் நீயிருந்தால் கண்கள் இரண்டும் சொருகுவதேன் என்று பாடலாமோ :)
      வெளிப்படையாக இல்லை ,ஆனால் இருக்கு :)
      பதிலைச் சொல்லுங்க ,கேள்வி கேட்காதீங்க :)
      இல்லாமல் போனால் அதிசயம் :)
      அடிச்சாங்களே அய்யா, அடிச்சாங்களே :)

      Delete
  7. வணக்கம்.

    இதுபோன்ற போஸ்டர் இங்கும் கண்டதுண்டு.

    ஸ்காட்லாண்டைப் பார்த்துக் கற்றுக் கொண்டார்களா எனத் தெரியவில்லை.

    தொடர்கிறேன் ஜி

    ReplyDelete
    Replies
    1. ஸ்காட்லாண்ட் போலீஸ்தான் நம்மிடமிருந்து இதையெல்லாம் கற்றுக்கணும் :)

      Delete
  8. ஹா... ஹா ரசித்தேன்..நன்றி

    ReplyDelete
    Replies
    1. தூக்கம் வராத காரணத்தையுமா :)

      Delete
  9. மடாதிபதி
    படாதிபதி போன்று அனைத்தும்
    ரசித்தேன் சகோதரா.
    ta.manam 11

    ReplyDelete
    Replies
    1. படம் பாடாவதியாய் போயிருமா :)

      Delete
  10. கறத்தல் ஹஹஹஹ

    மடாதிபதி படாதிபதியாதல் அஹ்ஹஹஹ்

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. பாலைக் கறக்க மெஷினும் இருக்கு ,ஆளைக் கறக்க அடியாளும் இருக்கோ :)
      இவரேகூட ஹீரோ வேடம் போடலாம்தானே :)

      Delete
  11. Replies
    1. பால் கறக்கத் தெரியுமான்னு கேட்பது தப்புதானே :)

      Delete