3 October 2016

இனிமேல் புருஷனுக்கு பால்கோவா கிடைக்குமா :)

இரயில்வேக்கு   ஒரு யோசனை :)         
              ''பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க  தாமதம் ஆகத்தான் செய்யும் ,என்ன செய்யலாம் ?''
             ''அதுக்கும் ரிசர்வேஷன் வசதியைக் கொண்டு வரலாமே !''  
  
இனிமேல் புருஷனுக்கு பால்கோவா கிடைக்குமா :)
             '' என்னங்க , தினசரி ஒரு பூனை  பால் குடிக்க வருமே ,அது ஏன் இப்போது வர்றதில்லே ?''
             ''நீ செய்த பால்கோவாவை  அது டேஸ்ட் பார்த்திருக்கும் ,அதான் !''

மயிர் பிளக்கிற ஆராய்ச்சின்னா  இதுதானா :)                         
               ''என்னடா ,ரொம்ப நேரமா 'ஏர் பட்ஸ் 'சோட  இரண்டு முனைப் பஞ்சையும்  பார்த்துகிட்டே இருக்கே ?''
                ''இதிலே எந்த பக்கத்தை எந்த பக்க காதுலே நுழைக்கிறதுன்னு தெரியாம யோசிச்சுகிட்டு இருக்கேன் !''

'சரஸ்வதி துணை ' பாஸாக  உதவுமா :)
                 ''பரீச்சை பேப்பர்லே , பிள்ளையார் சுழிக்குப்  பதிலா  'சரஸ்வதி துணை 'ன்னு ஏன் எழுதி இருக்கே ?''
                ''முன் டேபிள்லே உட்கார்ந்து பரீச்சை எழுதின பொண்ணு  பெயர்  சரஸ்வதி ஆச்சே !''

மழையில் நனைய ஆசை ,நிராசை ஆகிவிடுமா :)
வீட்டிலே நாலு வத்தல் வறுக்கும் போதே 
உட்கார முடியவில்லை ,தும்மல் வருகிறது ...
இரண்டாயிரத்து பதிமூணு கிலோ வத்தலைப் போட்டு ...
யாகம் செய்யப் போகிறார்களாம் , மழைவர வேண்டுமென்று !
வர்ற மழையையும் விரட்டி விடுவார்கள் போலிருக்கிறது ...
இப்படி சுற்றுச் சூழலைக் கெடுத்து ! 

26 comments:

  1. உலக சிரிப்பு தினமா! அப்படி ஒன்றா? அட! வாழ்த்துகள்.

    அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் உட்கார்ந்து கொட்ட கொட்ட முழித்து பதிவு போட்டதில் , ஏதோ குழப்பமாகி விட்டது ,மன்னியுங்கள் !உலகச் சிரிப்பு தினம் ,மே முதல் ஞாயிற்றுக் கிழமைதான் !எனவே அதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் :)

      Delete
  2. தம தகராறு செய்கிறது! இங்கு சுற்றிக் கொண்டே இருக்கிறது. எங்களின் இன்றைய திங்கற பதிவை இணைக்க தம வே வரவில்லை!

    ReplyDelete
    Replies
    1. தாமதமாய் வந்த உங்களின் உ கி கு மிளகாய் கறியை உண்டு மகிழ்ந்தேன் ,மொய்யும் வைத்தேன் ,எனக்கேதும் பிரச்சினை வரவில்லை :)

      Delete
  3. தொடர்வண்டியில டிக்கெட் எடுக்காம போறவரை வழியனுப்ப எதுக்கு பிளாட்பார்ம் டிக்கெட்...?

    அதான் அந்தப் பூனை செத்துக்கிடந்ததா...?

    எந்தக் காதில் நுழைத்தாலென்ன ஒனக்குத்தான் எந்தக் காதும் கேக்காதே...!

    சரஸு கொஞ்சம் உரசுன்னு சொல்லாம இருந்தாச் சரி...!

    மழை வராம வறுத்தெடுக்கப் போவுது...!

    தமிழ்மணத்திற்கு... ஒரே சிரிப்புதான்...உள்ளே இருந்து வெளியே தலைகாட்ட மாடேங்கிதே...!

    ReplyDelete
    Replies
    1. அதானே ,மூலவரே வழி காட்டிட்டார் :)

      செத்த பூனையைக் கடித்த எலியும் செத்து கிடக்கே :)

      கேட்காத காது இந்த பஞ்சை கேட்குதே :)

      அப்படி சொல்ல அவனென்ன சம்பத்தா :)

      உண்மையில் நீங்கள் சொன்னதே பொருத்தம் :)

      வெட்கம் வந்திருக்கும்,தாமதமாய் தலைகாட்டி இருக்கே :)

      Delete
  4. Replies
    1. உங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றிக்கு, நானும் மகிழ்கிறேன் :)

      Delete
  5. தங்களுக்கும் சிரிப்பு தின சிறப்பு நல்வாழ்த்துகள்..
    1) டிக்கெட்டுக்கும் டிக்கெட்டா?.. அநியாயம்!..
    2) கொடுத்து வெச்ச பூனை தப்பித்து விட்டது!.. இனிமேல் புருஷன் படு திண்டாட்டம் தான்..
    3) L..R.. போடலையா?..
    4) இது சரசுக்குத் தெரியுமா?..
    5) மரத்தையெல்லாம் வெட்டித் தள்ளிட்டு.. வத்தலை போட்டு கொளுத்துறானுங்களா!..
    6) வத்தலைப் போட்டுக் கொளுத்துறதுக்கு முன்னாலேயே மழை வந்து விட்டதா!..

    ReplyDelete
    Replies
    1. திக்கெட்டும் பரவட்டுமா இந்த சாதனை :)
      பூனையால் போனது பால்கோவா :)
      காதுலே பட்சாலே ஜீரோ வேணா போட முடியும் ,எட்டு போட முடியாதே :)
      சரசுவே அரைக்குறை ,இவன் உருப்படுவானா :)
      மரத்தையும் சேர்த்து கொளுத்தி விட்டு மழைக்கு வேண்டுதலாம் :)

      Delete
  6. எல்லாத்துக்கும் தினம் வந்தாச்சு... தினம் தினம் ஒரு தினம்...
    உலக சிரிப்பு தினமா...? அது சரி...
    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. டைவர்ச்சுக்கும் ஒரு தினம் மட்டும்தான் பாக்கி :)

      Delete
  7. ஹாஹா ஹா சிரிப்பு தின வாழ்த்துகள்
    ப்ளாட் ஃபாரத்துல இருக்கிறவங்க எல்லாரும் டிக்கட் வாங்கறாங்களா
    ஒரு வேளை இந்தப்பக்கம் போட்டு அந்தப் பக்கம் எடுக்கும் முயற்சியோ
    சரஸ்வதி துணை முன்பே படித்த நினைவு
    மழை ஸ்ரேயா இருந்துமா மழை இல்லை

    ReplyDelete
    Replies
    1. வாங்க காசிருந்தா அவங்க எதுக்கு பிளாட்பாரத்துக்கு வர்றாங்க :)
      வலது காதில் நுழைத்து வலது மூக்கில் எடுத்து தொலைக்கட்டும், விடுங்க :)
      இந்த ஞாபக சக்தியைக் கொடுத்ததும் சரஸ்வதிதானா:)
      ஸ்ரேயாவைப் பார்த்தால் மனதில்தான் மழைக் கொட்டும் :)

      Delete
  8. உலக சிரிப்பு தின வாழ்த்துகள் ஜி

    01. நல்ல யோசனைதான்
    02. காலை வாறியாச்சா ? பின்னே காலை பிடிக்க வேண்டியது வருமே...
    03. இவன் விஞ்ஞானியாக வருவான்
    04. இதுவும் பொருத்தமாதான்
    05. நிச்சயம் மழை ஏறிவிடும்

    ReplyDelete
    Replies
    1. ராயல்டி எனக்கும் கிடைக்கும்தானே :)
      பால்கோவாவால் வந்த கோபம் கோவா போனால் தீர்ந்து விடும் :)
      வருவான் என்ன ,வந்துட்டான் :)
      இதுதான் பொருத்தம் :)
      ஏறி ,ஏரி நிறையாமல் நின்று விடுமா :)

      Delete
  9. ஜி தம இன்டெர்னல் எரர் நு வருது...

    இன்று உலக சிரிப்புத் தினமா அட!!!! ஜோக்காளிக்கு வாழ்த்துகள்!!!! ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் நல்ல ஐடியா...ஆன்லைன் புக்கிங்க் கூட வந்துரும் ஜி...
    அனைத்தும் ர்சித்தோம் ஜி...

    ReplyDelete
    Replies
    1. வராமல் போனால்தான் அதிசயம் :)

      Delete
  10. மயிர் பிளக்கிற ஆராய்ச்சி தான்
    அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ,மயிர் பிளக்கிற ஆராய்ச்சி குற்றவாளியைக் கண்டு பிடிக்க உதவுமாமே:)

      Delete
  11. Replies
    1. ரசித்ததோடு நில்லாமல் வோட்டும் போட்டமைக்கு நன்றி ஜி :)

      Delete
  12. சரசு துணை! அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையிலும் சேர்த்துகொண்டால் அருமையிலும் அருமை :)

      Delete
  13. டேஸ்ட் பார்த்த பூனை.. திரும்பிி வராமலா இருக்கும்.....????

    ReplyDelete
    Replies
    1. ருசி பார்த்த பூனை வரும் ,சூடு பட்ட பூனை எப்படி வரும் :)

      Delete