5 October 2016

கால்கட்டு போட்டால்தான் காலோட அருமை தெரியும் :)

முதலில் எல்லோரும் ஜோரா கையைத் தட்டுங்க ...
இன்று ,ஜோக்காளியின்  ஐந்தாவது பிறந்த நாள் !
ஜோக்காளியின்  ஒரு முக்கிய குறிப்பு.......
இது வரையில்  வந்த உங்கள் பின்னூட்டங்களும் , அதற்கு நான் தந்த  மறுமொழிகளின் எண்ணிக்கையும் =  31690  
வெளியான பதிவுகள் எண்ணிக்கை =      1935
(நேற்றைய இரவு சரியாக பன்னிரண்டு மணி நிலவரம் )

கால்கட்டு போட்டால்தான் காலோட  அருமை தெரியும் :)      
            ''ஏண்டா  ,பம்பின்  கால் பம்பறியும்னு  எழுதியிருக்கே ?''
            ''நீங்கதானே சொன்னீங்க ,பாம்பின் கால் பாம்பறியும்னு !''
டாக்டர்களுக்கு தன்னடக்கம் கூடாது :)
          ''என் பிள்ளை உயிரைக் காப்பாத்தின நீங்க, தெய்வம் டாக்டர் !''
         ''அதுக்காக ,ஃபீஸை கோவில் உண்டியலில் போட்டுறாதீங்க!''

திருடனுக்கும் இது தெரிஞ்சுப் போச்சா ?               
             ''என்னங்க ,நேற்று நம்ம வீட்டுக்கு வந்த திருடன் ,உங்களை 'நீயெல்லாம் ஆம்பளை'யான்னு கேட்டானே ...ஏன் ?''
           '' பீரோ சாவி  என் கிட்டே இருக்கு ,லாக்கர் சாவி உன்கிட்டே இருக்குங்கிறதைச் சொன்னேன் !''

ஜோக்காளியின் முதல் கன்னிப் பதிவு ,இதோ....
அன்னிய நேரடி முதலீடு நாட்டுக்கு ...வீட்டுக்கு ?  
         ''உங்க அண்ணன் கல்யாணம் ஆனவுடனே சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சுட்டானே ,எப்படி ?
         ''எல்லாம் அண்ணியின் நேரடி முதலீடு தான் !''

143 ன்னா I LOVE YOU ,144 ன்னா...?
          ''நீ அந்த பொண்ணு கிட்டே 143 ன்னு சொன்னதுக்கு ,அவங்க வீ ட்டிலே அவளுக்கு 144  போட்டுட்டாங்களா, என்னடா சொல்ற ?''
           ''ஐ லவ் யு ன்னு சொன்னேன் , அவளை வீட்டை  விட்டு வெளியே போகக்கூடாதுன்னு  தடை உத்தரவு போட்டுட்டாங்களே !'' 

இசை கேட்டால் புவி அசைந்தாடுமா ?
மன்னர் அக்பர் அவையில் இசைக் கலைஞராக இருந்த தான்சேன்
தீபக் ராகத்தை  பாடியபோது ...
மெழுகுவர்த்திகள் தானாக எரிந்தனவாம் ...
மேக் மல்ஹார் ராகத்தைப் பாடி மழையை வரவழைத்தாராம்...
நம்ம சிவாஜியும் தான்சேன் வேடமணிந்து பாடி ...
கோமா நிலையில் இருந்த ராணியை உயிர்த்தெழ வைக்கிறார் ...
இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற அந்த பாடல் அமைந்த  ராகத்தின் பெயர் ...
'எமன் 'கல்யாணியாம்,நம்ப முடிகிறதா ?  

22 comments:

  1. ஜோக்காளியின் நான்காவது பிறந்த நாள் வாழ்த்துகள்!
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

    பாம்பின் கால் பாம்பறியும்னு
    பாம்பைக் கையில வைச்சிருக்காங்க

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கணக்கில் தவறு
      தங்கள் பதிவுகள் 2012, 2013, 2014, 2015, 2016 எனக் காட்டுகிறதே
      அப்ப
      ஜோக்காளியின் ஐந்தாவது பிறந்த நாள் வாழ்த்துகள்!
      தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

      Delete
    2. காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது என்பதால் கையில் பிடித்திருக்கிறார்கள்:)

      கவிதையில் மட்டுமல்ல ,நீங்கள் கணக்கிலும் புலி என்பதை நிரூபித்து விட்டீர்கள் !வாழ்த்துக்கு நன்றி :)

      Delete
  2. ஜோக்காளிக்கு இனிய வாழ்த்துகள்.


    அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. இன்றுதான் கேள்விபட்டேன் ,இன்றுதான் சோ அவர்களின் பிறந்த நாளுமாம் :)

      Delete
  3. நீதிபதி ஜோக்காளி சாமி நான்காவது பிறந்த நாள் என்று கணக்கத் தப்பா போட்டிட்டாரோ?! கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்குச் சரியா வருமா...?! பரவாயில்லை... வாழ்த்துகள்...!

    படம் எடுத்த பாம்பு...! ‘சீறிவரும் பாம்பை நம்பு சிரித்துவரும் பெண்ணை நம்பாதே...!’ பாம்பிற்குப் பல்லில் மட்டும் விஷம்...!

    பீஸை கொடுத்திட்டு நகருங்க... ஒத்தக் கால்ல நிக்குறீங்களே டாக்டர்...! வாழ வைத்த தெய்வம் இன்று நேரில் வந்தது... நீங்க தெய்வம் மாதிரி... தெய்வம் நின்று கொல்லும்ன்னு கேள்விப்பட்டு இருக்கேன்... இன்றுதான் நேரில் பார்க்கிறேன்...!

    லாக்கர் சாவி ஒங்கிட்ட லாக்கிடுச்சில்ல...! உள்ள ஒன்னும் இல்லைன்னு பார்க்காத அவனுக்குத் தெரியலை...!

    ஒங்க அண்ணி வந்த நேரம்... நம்ம எல்லாத்துக்கும் நல்ல நேரம்... நாம் பிழைத்துக் கொண்டோம்...!

    அடிமைப் பெண்ணா? ஆயிரத்தில் ஒருத்தி அம்மா...! பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! பெண் சிறுத்தையே வெளியில்வா! விடுதலை சிறுத்தை இருக்கிறேன்...!

    நம்ம குன்னக்குடி வைத்தியநாதனும் மழையை வரவழைக்க பீச்சில் வயலின் வாசித்து(ம்) பார்த்தார்...?!

    த.ம. 1





    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளிக்கு ஆணி பிடுங்கிற வேலை கூடிப் போச்சு ,இராத்திரி ஒரு மணிக்கு மேல் உட்கார்ந்து பதிவு போட்டால் ,கணக்கு தப்பாதானே வரும் :)

      பெண் என்பதில் மனைவி வரமாட்டாரா :)

      பீஸைக் கொடுக்காட்டிக் கொல்லத்தான் போறார் :)

      அதுக்கும் அடி கொடுக்கப் போறான் திருடன் :)

      வாழ வைத்த அண்ணிக்கு ஜே:)

      சிறுத்தையை விலகிப் போகச் சொல்லுங்க ,அதுக்கு பயந்துதான் உள்ளேயே இருக்கேன் :)

      வயலின் சத்தம் குப்பத்தைத் தாண்டியே போகலே ,மேகத்துக்கா போகும் :)

      Delete
  4. வாழ்த்துக்கள் நண்பரே
    தம+1

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ,வாக்குக்கு மிக்க நன்றி :)

      Delete
  5. ஜோரா கையைத் தட்டிட்டேன் நண்பரே... வாழ்த்துகள்!!!

    ReplyDelete
    Replies
    1. வைகையின் தெற்கில் இருந்து நீங்கள் கை தட்டிய ஓசை ,வைகையின் வடக்கில் இருக்கும் எனக்கு கேட்டது ,நன்றி :)

      Delete
  6. பிறந்தநாள் வாழ்த்துகள் மேலும் சிகரம் வாழ்த்துகள் ஜி.

    01. துணையெழுத்து இல்லாத்து பிரச்சினையா ?
    02. அதானே கவுண்டரில் கட்டணும்.
    03. புத்திசாலி கணவன்
    04. நல்ல மனைவி
    05. பதிலுக்கு பதில்
    06. பொருத்தம் கஷ்டமாகத்தான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. பிரச்சினைதானே ?பம்பை பாம்பு என்று சொல்ல முடியாது அல்லவா :)
      ப இன்றி தெய்வத்துக்கும் ஆராதனை இல்லை :)
      அதான் அடி வாங்குறான் :)
      நல்ல பிள்ளையையும் பெறட்டும் :)
      ஒண்ணுதான் வித்தியாசம் :)
      எமனை விரட்டும் ராகமா :)

      Delete
  7. கைதட்டலுடனும் த ம நுழைவிற்கான வாக்குடனும் வாழ்த்துக்கள் பகவானே!

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே தமிழ் மண மகுடத்தில் நேற்றைய என் பதிவு இருக்கும் நிலையில் ,நீங்க தந்திருப்பது ,கரும்பு தின்ன கூலி !நன்றி :)

      Delete
  8. வாழ்த்துக்கள் ஜி! முதல் ஜோக் புரியவில்லை! மற்றவை ஜோர்!

    ReplyDelete
    Replies
    1. 'கால் 'எழுத்து பாம்பு மட்டுமே அறியும் ,எனக்கு தெரியாதுன்னு சொல்றான் பயபிள்ள :)

      Delete
  9. "எமன் கல்யாணி ?"
    தகவல் அருமை
    தம +
    இன் எப் பி

    ReplyDelete
    Replies
    1. கருத்து + வாக்கு + முகநூல் ...முக்கனி போல் இனிக்கிறதே :)

      Delete
  10. Replies
    1. வாழ்த்துக்கு தாமதமான நன்றி ஜி :)

      Delete